ad

University entrance Guide in Tamil - Art stream - UGC Registration



கலை பிரிவு கற்றவர்களுக்கான  பல்கலைக் கழக நுழைவுக்கான பாடநெறிகள் விபரம்


இலங்கையில் காணப்படுகின்ற பாடத்திட்டங்களுக்கு அமைய க.பொ.த உயர் தரப் பிரிவில் அதிக பாடத் தெரிவுகளைக் கொண்டுள்ள ஒரே பிரிவு கலைப் பிரிவாகும்.  அந்த வகையில் பல்கலைக்கழக நுழைவின் போது கலை எனும் பாடநெறிக்கய சென்ற வருடம் 6985 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றனர். 2022 ஆம் ஆண்டு மொத்தமாக இணைத்துக்கொள்ளப்பட்ட 42519 மாணவர்களில் கலைத்துறைக்காக இணைததுக்கொள்ளப்பட்ட மாணவர்களின் வீதம் 16.43 ஆகும். இது தவிர கலைத் துரையில் பயின்றவர்களுக்கு விண்ணப்பிக்க முடியுமான மேலும் 45 பாடநெறிகள் காணப்படுகின்றன

கலைப் பிரிவில் பயின்றவர்கள் பயில முடியுமான பாடநெறிகள் குறித்த விபரங்களையும் அவற்றைப் பயில்வதற்கு உயர் தரத்தில் பயின்றிருக்க வேண்டிய பாடச் சேர்க்கைகளையும் உயர் தரப் பரீட்சையில் பெற்றிருக்க வேண்டிய பெறுபேறுகளையும் இந்தப் பதிவில் ஆரயவிருக்கின்றோம். 


கலை (Arts) (கற்கைநெறி இலக்கம் - 019)
(உத்தேச மொத்த அனுமதி 6985)
இந்த கலை எனும் பாடநெறியானது கற்கைநெறி இலக்கம் 19 இன் கீழ் இலங்கையில் உள்ள 9 பல்கலைக்கழகங்களில் காணப்படுகின்ற இந்த 9 பல்கலைக்கழகங்களிலும் காணப்படுகின்ற கலைப் பாடநெறிகளுக்காக 2022 ஆம் ஆண்டில் மொத்தமாக 6985 பேர் இணைத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றனர்.  இந்தப் பாடநெறிக்காக பல்கலைக்கழக நுழைவினைப் பெற்றுக்கொள்வதற்கு போதுமான தகைமையினைப் பெற்றுக்கொள்வது முக்கியமானதாகும்.

பல்கலைக்கழக நுழைவுக்கான தகைமைகள்.


கலைப் பிரிவில் கல்வி கற்றவர்கள் பல்கலைக்கழக நுழைவுக்காக கீழ்வருகின்ற தகைமைகளைப் பெற்றிருக்க வேண்டும். 

உயர் தரக் கலைப்பிரிவில்  காணப்படுகின்ற மூன்று படங்களுக்கு குறைந்தது சாதாரண சித்தியை (S) பரீட்சார்த்தி பெற்றிருக்க வேண்டும்.  


க.பொ.த. (உயர்தர) கலைப்பிரிவைப் பொருத்த வரையில் அது அதிக அளிவிலான பாடங்களைக் கொண்டிருக்கின்றது. எனவே அந்த பாடங்கள் நிர்வாக வசதிகளுக்காக  4 தொகுதிகளாகவகைப்படுத்தப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் உயர் தரப் பாடத் தொகுதிகள் குறித்தும் அவற்றின் கீழ் வருகின்ற பாடங்கள் குறித்தும் கீழே தரப்படுகின்றது.  கலைப் பிரிவின் பல்கலைக்கழக அனுமதிக்காக கீழ்க் குறிப்பிடும் பாடத் தொகுதிகளில் 3 பாடங்களில் உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றியிருக்க வேண்டும். 


தொகுதி 01 - சமூசு விஞ்ஞானங்கள் / பிரயோக சமூக கற்கைகள்:

  1. பொருளியல்
  2. புவியியல்
  3. வரலாறு
  4. மனை பொருளியல்
  5. விவசாய விஞ்ஞானம் / கணிதம் இணைந்த கணிதம்
  6. தொடர்பாடலும்
  7. ஊடகக் கற்கைகளும்
  8. தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பவியல்
  9. பாட தேவை டுகள் மற்ற UITL
  10.  கணக்கீடு/வணிகப் புள்ளிவிபரவியல்
  11. அரசியல் விஞ்ஞானம்
  12.  அளவையியலும் விஞ்ஞான முறையும்
  13.  தொழில்நுட்ப பாடங்களிலிருந்து ஒரு பாடம்
    1. குடிசார் தொழில்நுட்பம்
    2. மின், இலத்திரனியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் 
    3. விவசாயத் தொழில்நுட்பம் 
    4. பொறிமுறை தொழில்நுட்பம் 
    5. உணவுத் தொழில்நுட்பம் 
    6. உயிர் வள தொழில்நுட்பம்

தொகுதி 01 இல் பாடங்களைத் தெரிவுசெய்வதற்கான வழிகாட்டல்

  கலைப் பிரிவில் உயர் தரப் பரீட்சைக்க்கு தோற்றுகின்ற மாணவர்கள்  மேலே குறிப்பிட்ட தொகுதி 1 இல் குறிப்பிடப்பட்டுள்ள பாடங்களில் ஒன்றையேனும் தொிவு செய்திருப்பது கட்டாயமாகும். 

மாணவர்கள் விரும்புமிடத்து தொகுதி 1 இல் காணப்படுகின்ற பாடங்களில் தனது உயர் தரத்துக்கான  3 பாடங்களையும் தெரிவு செய்யலாம். 

எனினும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள தொகுதி 1 இல் குறிப்பிடப்பட்டுள்ள பாடங்களில் எதனையும் தெரிவு செய்யாமலிருப்பதற்கு கீழ்க்குறிப்பிடும் குறழுவினருக்கு மாத்திரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

01. இங்கு தொகுதி 1 என்பதாக குறிப்பிடப்பட்டது போன்று தொகுதி 4 எனும் பகுதிகியில் மொழிகள் எனும் பாடங்கள் உள்ளடக்கப்ட்டுள்ளன.  இந்தத் 4 வது  தொகதிகயிலிருந்து மூன்று தேசிய மொழிகளான சிங்களம் தமிழ் ஆங்கிலம் ஆகிய பாடங்களை தெரிவு செய்திருப்பவர்கள் தொகுதி 1 இல் காணப்படுகின்ற பாடங்களை தெரிவு செய்வது அவசியமில்லை. 



2. மேலே குறிப்பிட்டப்பட்ட தேசிய மொழிகள் மற்றும் அரபு, பாலி, சமஸ்கிருதம் ஆகிய  சாஸ்திரிய மொழிகளின் சேர்க்ககையினைத்  தெரிவு செய்யும் மாணவர்களும் தொகுதி 1 இலிருந்து எந்தப்  பாடத்தினையும் தெரிவுசெய்ய வேண்டியதில்லை. 


உதாரணமாக : மாணவர்கள் தங்களது உயர் தரத்துக்கான பாடங்களாக சிங்களம். பாளி மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மூன்று பாடங்களையும் தெரிவு செய்ய முடியும். இம்மாணவர்கள் தொகுதி 01 இலிருந்து எந்தவொரு பாடத்தினையும் தெரிவுசெய்ய வேண்டியதில்லை.

ஆனால் சமர்ஸ்கிருத மொழிகளாக குறிப்பிடப்பட்ட மூன்று பாடங்களையும் மாணவர்கள் ஒன்றாகத் தெரிவு செய்ய முடியாது.  மாணவர்களுக்கு சமர்ஸ்கிருத மொழிகளில் ஆகக் கூடிய அளவாக இரண்டு பாடங்களையே தெரிவு செய்யலாம். 

3. உயர் தரம் கலைப் பிரிவில் மாணவர்கள் தங்களது உயர் தரப் பாடங்களை  தொகுதி 04 எனும் மொழித் தொகுதியிலிருந்து இரண்டு மொழிகளுடன்  இரண்டாவது பாடத் தொகுதியான சமயங்களும் நாகரீகங்களும் எனும் தொகுதியிலிருந்தோ அல்லது அழகியற் கற்கைகள் எனும் மூன்றாவது தொகுதியிலிருந்தோ (தொகுதி 02 மற்றும் 03) தெரிவு செய்யின் தொகுதி 01 இலிருந்து எந்தவொரு பாடத்தையும் தெரிவுசெய்ய  வேண்டியதில்லை.
.
.

தொகுதி 02 - சமயங்களும் நாகரீகங்களும்:

தொகுதி 02 ஆகது கீழ்க் குறிப்பிடப்படுகின்ற 9 பாடங்களை உள்ளடக்கியுள்ளது. 
  1. பௌத்தம்
  2.  இந்து சமயம்
  3. கிறிஸ்தவம்
  4.  இஸ்லாம்
  5.  பௌத்த நாகரீகம்
  6. இந்து நாகரீகம்
  7.  கிறிஸ்தவ நாகரீகம்
  8.  இஸ்லாமிய நாகரீகம்
  9.  கிரேக்க உரோம நாகரீகம்
தொகுதி 02 இல் காணப்படுகின்ற பாடங்களைத் தெரிவுசெய்கின்ற போது

ஒரு மாணவர் தனது உயர் தரத்திற்காக ஆகக் கூடியது இரண்டு பாடங்களைத் தெரிவு செய்யலாம். 

எனினும் ஒரு சமயப் பாடத்தினைத் தெரிவு செய்து அந்தப் பாடத்துடன் தொடர்புடைய நாகரீகத்தைத் தெரிவு செய்ய முடியாது. உதாரணமாக பௌத்த மதத்தைத் தெரிவு செய்த ஒருவர் பௌத்த நாகரீத்தை அடுத்த பாடமாகத் தெரிவு செய்ய முடியாது. 

 வழிகாட்டல்
சங்கீதம்
தேசிய மொழிகளாவன :
சிங்களம்,

தொகுதி 03 - அழகியற் கற்கைகள்:

அழகியற் கற்கைகள் பின்வரும் 4 பிரிவுகளைக் கொண்டுள்ளது அவைகளிலும் உப பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது அந்தப் பிரிவுகளும் அவற்றினது உட்பிரிவுகளும் கீழே தரப்படுகின்றது. 

  1.  வரைதல்
  2.  நடனம்
    1.  சிங்களம்
    2. பரதம்
  3. சங்கீதம்
    1. கீழைத்தேய
    2. கர்நாடக
    3. மேலைத்தேய
  4. நாடகமும் அரங்கியலும்.
    1. சிங்களம்
    2. தமிழ்
    3. ஆங்கிலம்

உயர் தரத்திற்காக மாணவர்கள் பாடங்களைத் தெரிவு செய்யும் போது தொகுதி  தொகுதி 03 இல் காணப்படுகின்ற 4 பாடப் பிரிவுகளிலிருந்து  ஆகக்கூடுதலாக இரண்டு பாடங்களை மாத்திரம்  தெரிவு செய்ய முடியும். எனினும் ஒரு பாடப்பிரிவிருந்து இரண்டு பாடங்களைத் தெரிவு செய்ய முடியாது. உதாரணமான சிங்கள நடனம் பரதம் ஆகிய இரண்டையும் தெரிவு செய்ய முடியாது. 



தொகுதி 04 - மொழிகள்:

இத்தொகுதியானது  3 பாடப் பிரிவுகளின் கீழ் கிளைக் பாடங்களைக் கொண்டுள்ளது.  
  1.  தேசிய மொழிகள்
    1. சிங்களம்
    2. தமிழ்
    3. ஆங்கிலம்
  2. சாஸ்திரிய மொழிகள்
    1. அரபு
    2. பாளி
    3. சமஸ்கிருதம்
  3.  வெளிநாட்டு மொழிகள்
    1. சீன மொழி
    2. பிரெஞ்சு
    3. ஜேர்மன்
    4. ஹிந்தி
    5. ஜப்பான் மொழி
    6. மலாய்
    7. ரசியன் மொழி
    8. கொரியன் மொழி



உயர் தரத்திற்கான தொகுதி 04 இல் உள்ள பாடங்களைத் தெரிவுசெய்யும் போது 

இத்தொகுதியிலிருந்து ஆகக் கூடுதலாக இரண்டு பாடங்களைத் தெரிவு செய்ய அனுமதிக்கப்படுவர். 

உதாரணமாக மாணவர்கள் மூன்று பாடங்களை தெரிவு செய்கையும் போது  தொகுதி 4 இல் இருந்து சீனம் மற்றும் பிரெஞ்சு ஆகிய பாடங்களை தெரிவு செய்து மூன்றாவது பாடத்தை ஏனைய தொகுதியிலிருந்து தெரிவு செய்யலாம்.

இருப்பினும் இதற்கு விதிவிலக்கான சந்தர்ப்பங்களும் உண்டு. அவை தொகுதி 01 இல் பாடங்களைத் தெரிவு செய்வதற்கான வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அ) ஒரு மாணவர் மூன்று தேசிய மொழிகளை தெரிவு செய்யலாம் 
உ-ம்: சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம்
ஆ) மாணவர் ஒருவர் குறைந்தபட்சம் ஒரு பாடத்தினை தேசிய மொழிகளிலிருந்தும் மிகுதி இரண்டு பாடங்களை சாஸ்திரிய மொழிகளிலிருந்தும் தெரிவுசெய்யலாம்.

எனினும் மாணவர்கள் மாணவர்கள் மூன்று சாஸ்திரிய மொழிகளை அல்லது மூன்று வெளிநாட்டு மொழிகளை தெரிவு செய்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

மேலே தரப்பட்ட வழிகாட்டுதல்கள்  உயர் தரத்தின் பின்னர் விண்ணப்பம் கோரப்படுகின்ற சகல பல்கலைக்கழகங்களிலும் உயர்கல்வி நிறுவனங்களிலும் கலைப்பிரிவில் காணப்படுகின்ற வெவ்வேறுபட்ட பட்டக் கற்கைநெறிக்கான பாட இணைப்புக்களை தெரிவுசெய்ய உதவியாக அமையும் என்பதனை மாணவர்கள் கவனத்தில் கொள்ளவும்.

எனினும்  சில பல்கலைக்கழகங்கள்  கலைப் பிரிவின் கீழ் உயர் தரம் கற்றவர்களுக்குத் தெரிவு செய்வதற்காக வழங்குகின்ற சில கற்கைநெறிகளின்
அனுமதிக்காக மேற் குறிப்பிடப்பட்ட தகைமைகள் தவிர்ந்த வேறு பாட இணைப்பினையும் எதிர்ப்பார்க்கின்றன. 

மேற்படி பாடநெறிகளைக் கற்கின்ற மாணவர்கள் தங்களுக்கான தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொள்ளல் மற்றும் சமூகத்தின் எதிர்ப்பார்ப்புகளுக்கு அமைவாக கற்கைநெறிகளின் தரத்தினையும் சார்புத்தன்மையினையும் அதிகரித்த்ல் என்பன அவ்வாறான வேறுபட்ட பாட இணைப்புக்கள் எதிர்ப்பார்க்கப்படுவதற்கான காரணங்களாகும். 

பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களினால் வழங்கப்படும் அவ்வாறான 10 கற்கைநெறிகள் காணப்படுகின்றன. 
 அவைகள் கீழே தரப்படுகின்றன அவைகள் குறித்த விளங்களை குறித்த படநெறிகளின் மீது கிளிக் செய்யும் போது வருகின்ற இணைப்பில் பார்வையிடலாம். 

01. கொழும்புப் பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாளி வளாகத்தினால் வழங்கப்படும் அரங்கேற்றக் கலை பட்டம் மற்றும் வெகுசன ஊடகப் பட்டம் (ART(SP) பாடநெறி இலக்கங்கள்  

    1. வெகுசன ஊடகப் 20
    2. அரங்கேற்றக் கலை 41​
இந்த இரண்டு பாடநெறிகளுக்கும் தலா 110 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவர். 

இந்த பாடநெறி தொடர்பான விரிவான விபம் பெற இங்கு கிளிக் செய்யவும்

02.  சபரகமுவப் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் கலை கற்கைநெறி
[ARTS - (SAB)] (கற்கைநெறி இலக்கம் - 021) (உத்தேச அனுமதி 309)



இந்தக் கற்கைநெறியில் இரண்டுவகையான பட்டப் பாடநெறிகள் அமையப் பெற்றுள்ளது. 

(அ) கலை இளமாணி கெளரவ நான்கு வருட காலம்
(ஆ) கலை இளமாணி மூன்று வருட காலம்

இந்தப் பாடநெறிகளுக்காக 309 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவர். 

இந்த பாடநெறி தொடர்பான விரிவான விபம் பெற இங்கு கிளிக் செய்யவும்

03. கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தினால் வழங்கப்படும் தொடர்பாடல் கற்கைநெறி


தொடர்பாடல் கற்கைகள் (கற்கைநெறி இலக்கம் 029)
(உத்தேச அனுமதி 200)

இந்த பாடநெறி தொடர்பான விரிவான விபம் பெற இங்கு கிளிக் செய்யவும்


04. களனிப் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் சமாதானமும் முரண்பாடு தீர்த்தலும் கற்கைநெறி​

 (கற்கைநெறி லக்கம் - 031)
(உத்தேச அனுமதி - 36)

இந்த பாடநெறி தொடர்பான விரிவான விபம் பெற இங்கு கிளிக் செய்யவும்

05. இலங்கை தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் இஸ்லாமியக் கற்கைகள்


 (கற்கைநெறி லக்கம் - 063)
(உத்தேச அனுமதி - 278)

இந்த பாடநெறி தொடர்பான விரிவான விபம் பெற இங்கு கிளிக் செய்யவும்
 

06. இலங்கை தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் அரபு மொழி கற்கை நெறி


நெறி (கற்கைநெறி இலக்கம் 084)
(உத்தேச அனுமதி -225)

இந்த பாடநெறி தொடர்பான விரிவான விபம் பெற இங்கு கிளிக் செய்யவும்

07. களனி, ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகங்களினால் வழங்கப்படும் ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாக கற்பித்தல் கற்கைநெறி


(கற்கைநெறி இலக்கம் -105)

(உத்தேச அனுமதி - 81)

இந்த பாடநெறி தொடர்பான விரிவான விபம் பெற இங்கு கிளிக் செய்யவும்


 8. கட்புல அரங்கேற்றக்கலைகள் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் சங்கீதம், நடனம், நாடகமும் அரங்கமும் மற்றும் கட்புலக் கலை ஆகிய கற்கைநெறிகள்

கற்கைநெறி இலக்கம்
 சங்கீதம் - 068;
 நடனம் - 069; 
நாடகமும் அரங்கியலும் - 071
கட்புலக்கலை - 085


அனுமதி - 

 சங்கீதம் - 300;
 நடனம் - 300; 
நாடகமும் அரங்கியலும் - 74
கட்புலக்கலை - 120

மொத்தமாக 794 மாணவர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர். 


இந்த பாடநெறி தொடர்பான விரிவான விபம் பெற இங்கு கிளிக் செய்யவும

09.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலைக் கல்லூரியால் வழங்கப்படும் சங்கீதம், நடனம், சித்திரம் வடிவபை்புக் கற்கைநெறி


கற்கை நெறி இலக்கம்

சங்கீதம், - 068

நடனம், - 069

சித்திரமும் வடிவமைப்பும்  - 070

மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்ற அளவுகள் 

சங்கீதம், - 068

நடனம், - 069


சித்திரமும் வடிவமைப்பும் 62

மொத்தமாக 280 மாணவர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர். 

இந்த பாடநெறி தொடர்பான விரிவான விபம் பெற இங்கு கிளிக் செய்யவும

10. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவகத்தினால் வழங்கப்படும் சங்கீதம், நடனம், நாடகமும் அரங்கமும், கட்புலமும் தொழில்நுட்பவியல் கலையும் கற்கைநெறிகள்


கற்கைநெறி இலக்கம்: 
சங்கீதம்  068 
நடனம் 069 
நாடகமும் அரங்கமும் 071. 
கட்புலமும்  தொழில்நுட்பவியல் கலையும் - 072)


உத்தேச அனுமதிகள் 

சங்கீதம்  103
நடனம் - 93
நாடகமும் அரங்கமும் - 104;
தொழில்நுட்பவியல் கலையும் 94

மொத்தமாக உத்தேச அனுமதி 394 ஆகும்.

இந்த பாடநெறி தொடர்பான விரிவான விபம் பெற இங்கு கிளிக் செய்யவும


இவை தவிர 

பேராதனைப் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் சமூகப்பணி கற்கைநெறி 

(கற்கைநெறி இலக்கம் -112) (உத்தேச அனுமதி 51)

இந்த பாடநெறி தொடர்பான விரிவான விபம் பெற இங்கு கிளிக் செய்யவும்


ஸ்ரீ ஐயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் கலை -தகவல் தொழில்நுட்பம் கற்கைநெறி

(கற்கைநெறி இலக்கம் -128) (உத்தேச அனுமதி -50)

இந்த பாடநெறி தொடர்பான விரிவான விபம் பெற இங்கு கிளிக் செய்யவும்

மேலும் கலைப் பிரிவில் உயர் தரம் தோற்றிய மாணவர்களுக்கு கீழக்குறிப்பிடும் பாடநெறிகளுக்கும் விண்ணப்பிதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன .அந்தக் கற்கைநெறிகளுக்காகப் பூர்த்தி செய்யப்பட வேண்டிய விசேட தகைமைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டியிருக்கின்றது என்பதனையும் கருத்தில் கொள்ளவும். 

  1. சட்டம்
  2. கட்டடக்கலை
  3. வடிவமைப்பு
  4. நவநாகரிக வடிவமைப்பும் உற்பத்தி அபிவிருத்தியும்
  5. முகாமைத்துவக் கற்கைகள் (TV)
  6. கணிய அளவையியல்
  7. தகவல் தொழில்நுட்பம் (IT)
  8. பட்டினமும் நாடும் திட்டமிடல்
  9. தகவலும் தொடர்பாடல் தொழில்நுட்பமும் (ICT)
  10. தொழில் முயற்சியும் முகாமைத்துவமும்
  11. முகாமைத்துவமும் தகவல் தொழில்நுட்பமும் (SEUSL)
  12. கைத்தொழில் தகவல் தொழில்நுட்பம்
  13. உடற்றொழில் கல்வி
  14. விளையாட்டு விஞ்ஞானமும் முகாமைத்துவமும்
  15. பேச்சும் செவிமடுத்தல் விஞ்ஞானமும்
  16. விருந்தோம்பல், சுற்றுலா மற்றும் நிகழ்ச்சிகள் முகாமைத்துவம்
  17. தகவல் தொழில்நுட்பமும் முகாமைத்துவமும்
  18. சுற்றுலாவும் விருந்தோம்பல் முகாமைத்துவமும்
  19. தகவல் முறைமைகள்
  20. நிலத்தோற்றக் கட்டடக்கலை
  21. மொழி பெயர்ப்பு கற்கைகள்
  22. திரைப்படமும் தொலைக்காட்சி கற்கைகள்
  23. செயற்திட்ட முகாமைத்துவம்
  24. நிதி பொறியியல்
  25. புவியியல் தகவல் விஞ்ஞானம்
  26. நிதியியல் கணிதக்கற்கை மற்றும் தொழில்முறை புள்ளியியல்
  27. மனித வள மேம்பாடு
  28. மருத்துவ சுற்றுலாத்துறை மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவம்
  29. யோகா மற்றும் மனநிகழ்வுகளின் ஆய்வு
  30. சுதேச அறிவியல் மீதான சமூகக் கல்வி
  31. நிதி பொருளியல்
  32. ஆங்கில மொழி மற்றும் பிரயோக மொழியியல்
  33. ஆக்கத்திறன் இசை தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித்திறன்
இந்த பாடநெறிகள் தொடர்பான விபரங்கள் அடுத்தடுத்த பதிவுகளில் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம். 

2023 ஆம் ஆண்டு பல்கலைக் கழக நுழைவு தொடர்பான வழிகாட்டல்களை தொடர்ந்தும் பெற்றுக்கொள்ள அதற்கான எமது பிரத்தியேக வட்சப் குழுமங்களில் இணைந்துகொள்ளுங்கள்..

பல்கலைக்கழக நுழைவு தொடர்பான வழிகாட்டலுக்கான குழுமம். 



இது தவிர பொதுவான வேலை வாய்ப்புத் தகவல்கள் அரச பணியில் இருப்பவர்கள் அறிந்திருக்க வேண்டிய விடயங்கள் என்பவற்றை அறிந்துகொள்ள லங்காஜொப்இன்போ வின் வட்சப் குழுமத்தில் இணைந்துகொள்ளுங்கள்