கொழும்புப் பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாளி வளாகத்தினால் வழங்கப்படும் அரங்கேற்றக் கலை பட்டம் மற்றும் வெகுசன ஊடகப் பட்டம் (ART(SP) பாடநெறி இலக்கங்கள்
- வெகுசன ஊடகம் 20
- அரங்கேற்றக் கலை 41
இந்த இரண்டு பாடநெறிகளுக்கும் தலா 110 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவர்.
இந்தப் பாடநெறியானது இரண்டு பட்டப் பாடநெறிகளை உள்ளடக்கியுள்ளது.
- அரங்கேற்றக் கலைகள் கலைமாணி கௌரவம்
- வெகுஜன ஊடகம் கலைமாணி கௌரவம்
என்பனவே குறித்த இரண்டு பாடநெறிகளாகும்.
இவ்விரு பட்ட நிகழ்ச்சித் திட்டங்களின் காலம் 4 ஆண்டுகளாகும்.
இக்கற்கைநெறிகளுக்கான க.பொ.த. (உ/த) பெறுபேறுகளிள் அவசியப்பாடுகள் குறித்தும் எனைய அவசியப்பாடுகள் குறித்தும் கீழே தரப்படுகின்றன.
உயர்தரப் பரீட்சையில் கலைப்பிரிவில் பின்வரும் விதிகளுக்குட்பட்டு 3 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
- பாடத் தொகுதியில் இரண்டு மொழிகளுக்கு அதிகமாக தெரிவுசெய்யாதிருக்க வேண்டும்.
- சமயங்களும் நாகரீகங்கலும் தொகுதியிலிருந்து ஒன்றுக்கு அதிகமான பாடங்கள் தெரிவுசெய்யாதிருக்க வேண்டும்.
- ஒன்றுக்கு மேற்பட்ட தொழில்நுட்பவியல் பாடங்களை தெரிவுசெய்யலாகாது
- பின்னரும் பாடங்களில் ஒன்றுக்கு அதிகமாக தெரிவுசெய்யலாகாது
- கணக்கீடு
- வணிகப் புள்ளிவிபரவியல்
- பொருளியல்
அத்துடன் மேற்படி பாடநெறிகளுக்கு இரண்டு தேவைப்பாடுகளை பூர்த்தி செய்திருக்க வேண்டியுள்ளது.
1. க.பொ.த. (சா/த.) பரீட்சையில் ஆங்கிலத்தில் குறைந்தபட்சம் சாதாரண (S) சித்தி பெற்றிருக்க வேண்டும்.
பரீட்சார்த்திகள் க.பொ.த. (சா/த.) பரீட்சை மூலச்சான்றிதழின் உரியவாறு உறுதி செய்யப்பட்ட பிரதியினை (CertifiedCopy) விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். அதனைச் சமர்ப்பிக்கத் தவறின் மேற்குறிப்பிட்ட கற்கைநெறிக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
02.. கொழும்புப் பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாளி வளாகத்தினால் நடாத்தப்படும் உளச்சார்புப் பரீட்சையில் சித்திபடைதல் வேண்டும்.
கொழும்புப் பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாளி கெம்பஸினால் மேற்படி பாடநெறிக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான உளச்சார்புப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு விண்ணப்பங்கள் கோரி பத்திரிகை அறிவித்தல் ஒன்று வெளியிடப்படும். உளச்சார்புப் பரீட்சையானது கெம்பஸின் சபையின் அனுமதியுடன் நேர்முகப் பரீட்சையாகவோ, செயல்முறைப் பரீட்சையாகவோ, அல்லது ஒரு எழுத்துப் பரீட்சையாகவோ, அல்லது இம் மூன்று பகுதிகளையும் கொண்டதாகவோ இருக்கும் அடிப்படையில் நடாத்தப்படும். இந்தப் பாடநெறிகள் தொடர்பான மேலதிக விபரங்களுக்கு பரீட்சார்த்திகள் ஹொரணயில் உள்ள ஸ்ரீபாளி வளாகத்தின் சிரேஷ்ட உதவிப் பதிவாளருடன் தொடர்பு கொள்ளலாம்.