சபரகமுவப் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் கலை கற்கைநெறி[ARTS - (SAB)]
(கற்கைநெறி இலக்கம் - 021) 309 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படுவர்.
உயர் தரகலைப்பிரிவு அல்லது வணிகவியல் பிரிவில் கல்வி பயின்று பரீட்சைக்குத் தோற்றி பெற்றுக் கொண்ட பெறுபேறுகளுக்கு அமைய பல்கலைக் கழக அனுமதிக்கான குறைந்தபட்ச தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்துள்ள பரீட்சார்த்திகள், இப்பாடநெறியைத் தொடர்வதற்காக விண்ணப்பிப்பிதற்கு தகைமை பெறுகின்றனர்.
(அ) கலை இளமாணி கெளரவ நான்கு வருட காலம்
(ஆ) கலை இளமாணி மூன்று வருட காலம்
ஆகிய இரண்டுவகையான பட்டப் பாடநெறிகள் அமையப் பெற்றுள்ளது. இந்த இந்தக் கற்கைநெறியில் இரண்டு பாடநெறிகளுக்காகவும் மாணவர்கள் ஒரே முறையில் இணைத்துக்கொள்ளப்பட்டு முதல் வருட முடிவில் 4 வருட விசேட பட்டப்படிப்புக்காக மாணவர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர்.
இந்தக் கற்கைநெறியில் காணப்படுகின்ற பிரதான பாடங்கள் கீழ்வருமாறு.
- பொருளியல் - (ஆங்கில மற்றும் சிங்கள மொழி மூலம்)
- புள்ளிவிபரவியல் - (ஆங்கில மற்றும் சிங்கள மொழி மூலம்)
- புவியியல் - (ஆங்கில மற்றும் சிங்கள மொழி மூலம்)
- சமூகவியல் - (ஆங்கில மற்றும் சிங்கள மொழி மூலம் )
- அரசியல் விஞ்ஞானம் - (ஆங்கில மற்றும் சிங்கள மொழி மூலம்)
- சிங்களம்
- தமிழ்
- ஆங்கிலம்
- ஜப்பானிய மொழி -
- ஹிந்தி
- சீன மொழி
- ஜேர்மன் மொழி
- தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் (ICT) (ஆங்கில மொழி மூலம் மாத்திரம்)
மாணவர்களைத் தெரிவுசெய்வதற்கான அடிப்படை
இக்கற்கைநெறிக்கு கலைப் பிரிவு மற்றும் வணிகப்பிரிவு மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படுகின்றனர். அந்ந அடிப்படையில் மொத்தமாகக் காணப்படுகின்ற 309 வெற்றிடங்களுக்காக கலைப் பிரிவிலிருந்து 55% மாணவர்களும் வர்த்தகப் பிரிவிலிருந்து 45% ஆன மாணவர்களும் இணைத்துக் கொள்ளப்படுவர்.
: