ad

தொடர்பாடல் கற்கைகள் (கற்கைநெறி இலக்கம் 029)

 3. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தினால் வழங்கப்படும் தொடர்பாடல் கற்கைகள் 

(கற்கைநெறி இலக்கம் 029) (உத்தேச அனுமதி 200)


இக்கற்கைநெறியின் கீழ் திருகோணமலை வளாகம் பின்வரும் ஒரு பட்டப்படிப்பு பாடநெறிகளை வழங்குகின்றது
01. கலை இளமாணி தொடர்பாடல் கற்கைகள்
02. கலை இளமாணி மொழிகள்


பொதுவாக பல்கலைக்கழகமொன்றில் மூன்று வருட பட்ட நிகழ்ச்சித்திட்டம் ஒன்றிற்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் 4ம் வருடம் கல்வியைத் தொடர விரும்புவார்களானால் அவர்கள் பல்கலைக்கழகத் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்திருப்பின்  அவர்கள் இந்தப் பாடநெறிக்காக  அனுமதிக்கப்படுவர். மாணவர்கள் 4ஆம் வருடத்தில் பீடத்தின் மற்றும் பல்கலைக்கழக முதவையின்
அறிவுறுத்தலுக்கமைய தமது விசேட கற்கைத்துறையுடன் தொடர்புபட்ட மேலதிக பாட அலகுகள் வழங்கப்படும்.

கற்கைநெறிக்காக மாணவர்களைத்  தெரிவு செய்வதற்கான நடைமுறைகள்  மிகவும் நெகிழ்வுத்தன்மையானதாகக் காணப்படுகின்றது. க.பொ.த. (உ/த.) பரீட்சையில் பல்கலைக்கழக அனுமதிக்கான குறைந்தபட்ச தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்த மாணவர்கள் (குறைந்தது 3 பாடங்களிலும் (S) சித்திகள் , பொதுப் பரீட்சையில் குறைந்தது 30% புள்ளிகள்) இக் ற்கைநெறிக்கு தகுதி பெறுவர். மேலும் சிங்களம்/ தமிழ்/ஆங்கிலம் ஆகியவற்றில் ஒரு பாடத்திலேனும் குறைந்தது திறமைச் (C) சித்தியைப் பெற்றிருத்தல் வேண்டும்.

இக்கற்கைநெறியின் போதனா மொழி ஆங்கிலமாக இருப்பதால் இக்கற்கைநெறிக்கு தகுதி பெறுவதற்கு மாணவன் க.பொ.த. (சா/த.) பரீட்சையில் குறைந்தது C” தரத்தை ஆங்கிலப் பாடத்தில் பெற்றிருத்தல் வேண்டும்.

கற்கை நெறிக்கான கற்பித்தல் நடவடிக்கைகள் கட்டாயமாக ஆங்கிலத்தில் மட்டுமே நடாத்தப்படும்.

க.பொ.த. (சா/த.) பரீட்சை பெறுபேற்று மூலச்சான்றிதழின் உரியவாறு உறுதி செய்யப்பட்ட பிரதியினை (Certified Copy) பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்குமாறு பரீட்சார்த்திகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். இதைச் சமர்ப்பிக்கத் தவறின், தொடர்பாடல் கற்கைகளுக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்படும். 

திருகோணமலை வளாகத்தினால் நிர்ணயிக்கப்பட்ட பிரமாணங்களின் அடிப்படையில் ஒரு பாட நெறிக்கு அனுமதிக்கப்படும் ஆகக் கூடுதலான மாணவர்கள் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும்.

குறிப்பு:

2022/2023 கல்வியாண்டில் இருந்து தொடர்பாடல் கற்கைகள் பின்வருமாறு இரண்டு கற்கைநெறிகளாகப் பிரிக்கப்பட்டு மாணவர்கள் தனித்தனியாக தேர்வு செய்யப்படுவார்கள். இந்த இரண்டு கற்கைநெறிகள்

1. தொடர்பாடல் கற்கைகள்
2. மொழிகள்

1. தொடர்பாடல் கற்கைகள் பாடநெறிகளுக்கான தகைமைகள்

தொடர்பாடல் கற்கைகள் படிப்புக்கு தகுதி பெறுவதற்கு, மாணவர்கள் 2022/2023 கல்வியாண்டிலிருந்து பின்வரும் மூன்று வகைகளில் ஏதாவது ஒன்றின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படையில்  சுட்டிக்காட்டப்பட்ட பொருத்தமான குறைந்தபட்ச தகுதிகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். 

வகை (அ)

க.பொ.த. (உயர் தரப்) பரீட்சையில் ஏதேனும் 3 பாடங்களுக்கு குறைந்தபட்சம் 'S' தரங்களைப் பெற்றிருப்பதுடன் க.பொ.த. (சாதாரண தரப்) பரீட்சையில் தொடர்பாடலும் ஊடகக் கற்கைகளுக்கும் குறைந்தபட்சம் 'C" தரத்தை பெற்றிருக்க வேண்டும்.

வகை (ஆ)

தொடர்பாடலும் ஊடகக் கற்கைகளுக்கும் குறைந்தபட்சம் ஒரு ‘S’ தரத்தையும் க.பொ.த. (உயர் தரப்) பரீட்சையில் வேறு ஏதேனும் இரண்டு பாடங்களிலும் சித்தி பெற்றிருக்க வேண்டும்.

வகை (இ)

க.பொ.த.(உயர் தரப்) பரீட்சையில் ஏதேனும் 3 பாடங்களுக்கு குறைந்தபட்சம் 'S' தரங்களைப் பெற்றிருப்பதுடன் க.பொ.த. (சாதாரண தரப்) பரீட்சையில் ஆங்கில மொழிக்கு குறைந்தபட்சம் ‘C’ தரத்தை பெற்றிருக்க வேண்டும்.

2.மொழிகள் பாடநெறிக்கான தகைமைகள்

மொழிகளில் படிப்புக்கு தகுதி பெறுவதற்கு, மாணவர்கள் 2022/2023 கல்வியாண்டிலிருந்து பின்வரும் மூன்று வகைகளில் ஒன்றின் கீழ் சுட்டிக்காட்டப்பட்ட பொருத்தமான குறைந்தபட்ச தகுதிகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

வகை (அ)

க.பொ.த. (உயர் தரப்) பரீட்சையில் ஏதேனும் 3 பாடங்களுக்கு குறைந்தபட்சம் “S’ தரங்களைப் பெற்றிருப்பதுடன் க.பொ.த. (சாதாரண தரப்) பரீட்சையில் ஆங்கில மொழிக்கு குறைந்தபட்சம் ‘C’ தரத்தை பெற்றிருக்க வேண்டும்.

வகை (ஆ)

க.பொ.த. (உயர் தரப்) பரீட்சையில் ஏதேனும் 3 பாடங்களுக்கு குறைந்தபட்சம் ‘S’ தரங்களைப் பெற்றிருப்பதுடன் பொது ஆங்கில பாடத்தில் குறைந்தபட்சம் ‘B’ தரங்களைப் பெற்றிருக்க வேண்டும்.

வகை (இ)

க.பொ.த. (உயர் தரப்) பரீட்சையில் ஆங்கிலம் மற்றும் வேறு இரண்டு பாடங்களுக்கு குறைந்தபட்சம் "S' தரங்களைப் பெற்றிருக்க வேண்டும்.