கற்கைநெறி இலக்கம்: சங்கீதம் 068 நடனம் 069 நாடகமும் அரங்கமும் 071. கட்புலமும் தொழில்நுட்பவியல் கலையும் - 072
10. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவகத்தினால் வழங்கப்படும் சங்கீதம், நடனம், நாடகமும் அரங்கமும், கட்புலமும் தொழில்நுட்பவியல் கலையும் கற்கைநெறிகள்
கற்கைநெறி இலக்கம்:
சங்கீதம் 068
நடனம் 069
நாடகமும் அரங்கமும் 071.
கட்புலமும் தொழில்நுட்பவியல் கலையும் - 072)
உத்தேச அனுமதிகள்
சங்கீதம் 103
நடனம் - 93
நாடகமும் அரங்கமும் - 104;
தொழில்நுட்பவியல் கலையும் 94
மொத்தமாக உத்தேச அனுமதி 394 ஆகும்.
சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவகம் பின்வரும் 4 பட்ட நிகழ்ச்சித்திட்டங்களை வழங்குகின்றது.
1. நுண்கலை (சங்கீதம்)
2 நுண்கலை (நடனம்)
3 நுண்கலை (நாடகமும் அரங்கமும்)
4 நுண்கலைப் (கட்புலமும் தொழில்நுட்பவியல் கலையும் )
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவகத்தினால் வழங்கப்படும் கற்கை நெறிகளுக்கு தகுதியினைப் பெறுவதற்காக க.பொ.த. (உ/த) பரீட்சையில் கற்கவேண்டிய பாடங்களும் பெற வேண்டிய பெறுபேறுகள் குறித்த தகவல்கள் கீழே தரப்படுகின்றன.
பரீட்சார்த்திகள் தாம் பட்டப்படிப்புக்காக பயில விரும்புகின்ற துறையின் பிராதான பாடத்தினை க.பொ.த. (உ/த.) பாடமாக எடுத்து பரீட்சையில் ஆகக் குறைந்தது திறமைச் சித்தியை (C) பெற்றிருக்க வேண்டும். அத்துடன் வேறு ஏதாவது இரண்டு பாடங்களில் ஆகக் குறைந்தது "S” தரத்தையும் பெற்றிருத்தல்
வேண்டும். இத்தேவைப்பாடுகள் கட்டாயமானவையாகும். உதாரணமாக சங்கீத கற்கைநெறியை தொடர விரும்பும் ஒரு மாணவர் க.பொ.த. (உ/த.) சங்கீத பாடத்தில் (C) சித்தி அல்லது அதற்கு மேற்பட்ட சித்தி பெற்றிருத்தல் வேண்டும். மற்றும் கட்புலமும் தொழில்நுட்பவியல் கலையும் கற்கைநெறியை தெரிவுசெய்யின் வரைதல் பாடத்தில் (C) சித்தி அல்லது அதற்கு மேற்பட்ட சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் அனுமதியை நாடும் பரீட்சார்த்திகள் கட்டாயமாக குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் செயல்முறை / உளச்சார்புப் பரீட்சையிலும் சித்தியடைய வேண்டும். இவை சங்கீதம், நடனம், நாடகமும் அரங்கமும், கட்புலமும் தொழில்நுட்பவியல் கலையும் ஆகும்.
குறிப்பிட்ட உளச்சார்பு/செயல்முறை பரீட்சைக்கு பரீட்சையில் சித்தியடையாத மாணவன் குறித்த கற்கைநெறிக்கு அனுமதிபெற தகுதியற்றவராக கருதப்படுவார். எனினும் மாணவர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள ஏனைய
கற்கைநெறிகளுக்கு தேவையான தகைமைகளைப் பூர்த்திசெய்திருப்பின் அக் கற்கைநெறிகளுக்கு கருத்திற்கொள்ளப்படுவார்.
சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் உளச்சார்புப் பரீட்சைக்கு / செயல்முறை பரீட்சைக்கு தோற்றுவதற்கு விண்ணப்பங்கள் கோரி பத்திரிகை அறிவித்தலொன்றைப் பிரசுரிக்கும். பரீட்சார்த்திகள் மேலதிக விபரங்களுக்கு சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவக சிரேஷ்ட உதவி பதிவாளரோடு தொடர்பு கொள்ள முடியும்.
கற்கை நெறிக்கான போதனை தமிழில் மட்டுமே நடாத்தப்படும்
0 Comments