8. கட்புல அரங்கேற்றக்கலைகள் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் சங்கீதம், நடனம், நாடகமும் அரங்கமும் மற்றும் கட்புலக் கலை ஆகிய கற்கைநெறிகள்
கற்கைநெறி இலக்கம்
சங்கீதம் - 068;
நடனம் - 069;
நாடகமும் அரங்கியலும் - 071
கட்புலக்கலை - 085
அனுமதி -
சங்கீதம் - 300;
நடனம் - 300;
நாடகமும் அரங்கியலும் - 74
கட்புலக்கலை - 120
மொத்தமாக 794 மாணவர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர்.
கட்புல அரங்கேற்றக்கலைகள் பல்கலைக்கழகம் பின்வரும் மூன்று பட்ட நிகழ்ச்சித்திட்டங்களை வழங்குகின்றது.
1. கட்புலக் கலை கௌரவம்
2.அரங்கேற்றல் கலை - நடனமும் நாடகமும் கௌரவம்
3. அரங்கேற்றல் கலை இசை கௌரவம்
கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் பட்ட கற்கைநெறிகளுக்கு தகுதிபெற ஈவண்டுமெனில் க.பொ.த.(உ/த) பரீட்சையில் கற்கவேண்டிய பாடங்களும் பெற்றுக்கொள்ள வேண்டி பெறுபேறுகளினதும் விபரங்கள் வருமாறு:
பாடநெறியினைப் பயில்வதற்கு உத்தேசிக்கின்ற பிரதான பாடத்தில் க.பொ.த. (உ/த.) பரீட்சையில் தோற்றி ஆகக் குறைந்தது திறமைச் சித்தியை (C) யைப் பெற வேண்டும். அத்துடன் வேறு இரண்டு பாடங்களில் ஆகக் குறைந்தது 'S' பெற்றிருத்தல் வேண்டும். இத்தேவைப்பாடுகள் கட்டாயமானவையாகும். உதாரணமாக சங்கீத கற்கைநெறியை தொடர விரும்பும் ஒரு மாணவர் க.பொ.த. (உ/த.) இல் சங்கீத பாடத்தில் (C) சித்தி அல்லது அதற்கு மேற்பட்ட சித்தி
பெற்றிருத்தல் வேண்டும். அதே போல், கட்புலக் கலை கற்கைநெறியை தெரிவுசெய்வதாயின் க.பொ.த. (உ/த.) தில் வரைதல் பாடத்தில் (C) சித்தி அல்லது அதற்கு மேற்பட்ட சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
அத்துடன் கட்புல அரங்கேற்றக்கலைகள் பல்கலைக்கழகத்தில் அனுமதியை நாடும் பரீட்சார்த்திகள் கட்டாயமாக குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் செயல்முறை /உளச்சார்புப் பரீட்சையிலும் சித்தியடைய
வேண்டும். இவை சங்கீதம், நடனம், நாடகமும் அரங்கமும், கட்புலக் கலை ஆகியவற்றிற்காகும்.
குறிப்பிட்ட செயல்முறை / உளச்சார்பு பரீட்சையில் சித்தியடையாத மாணவன் குறித்த கற்கைநெறிக்கு அனுமதிபெற தகுதியற்றவராக கருதப்படுவார். எனினும் மாணவர் விண்ணப்பத்தில் குறிப்பீட்டுள்ள ஏனைய
கற்கைநெறிகளுக்கு தேவையான தகமைகளைப் பூர்த்திசெய்திருப்பின் அக் கற்கை நெறிகளுக்கு கருத்திற்கொள்ளப்படுவார்.
கட்புல அரங்கேற்றக்கலைகள் பல்கலைக்கழகம் செயல்முறை பரீட்சைக்கு / உளச்சார்புப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு விண்ணப்பங்கள் கோரி பத்திரிகை அறிவித்தலொன்றைப் பிரசுரிக்கும். பரீட்சார்த்திகள் மேலதிக விபரங்களுக்கு உரிய பல்கலைக்கழகப் பதிவாளரோடு தொடர்பு கொள்ள முடியும்.
கட்புல அரங்கேற்றக்கலைகள் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படுகின்ற சகல கற்கை நெறிகளினதும் போதனைகள் கட்டாயமாக சிங்களத்தில் மட்டுமே நடாத்தப்படும்.