ad

கலை -தகவல் தொழில்நுட்பம் கற்கைநெறி 128 - ஸ்ரீ ஐயவர்த்தனபுர

 ஸ்ரீ ஐயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் கலை -தகவல் தொழில்நுட்பம் கற்கைநெறி

(கற்கைநெறி இலக்கம் -128) (உத்தேச அனுமதி -50)

பட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் பெயர் - கலை தகவல் தொழில்நுட்பத்தில் கௌரவமாணி [BAHons (TT)]

இப்பட்ட நிகழ்ச்சித் திட்டத்திற்கு தகைமை பெறுவதற்கு கலைப்பிரிவின் ஏதாவது மூன்று பாடங்களில் க.பொ.த. (உ.த.) பரீட்சையில் ஆகக் குறைந்தது 'S' தரச்சித்திகளையும் பொதுப் பரீட்சையில் ஆகக் குறைந்தது 30% புள்ளிகளைப்  பெற்றிருத்தல் வேண்டும்.

அத்துடன், இக்கற்கைநெறிக்கு தகுதி பெறுவதற்கு மாணவன் க.பொ.த. (சா/த.) பரீட்சையில் குறைந்தது "C" தரத்தை கணித பாடத்தில் பெற்றிருத்தல் வேண்டும்.

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பத்துடன் பரீட்சார்த்திகள் க.பொ.த. (சா.த.) மூலச்சான்றிதழின் உரியவாறு உறுதி செய்யப்பட்ட பிரதிபினை (Certified Copy) சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். இதைச் சமர்ப்பிக்கத்
தவறின் கலை தகவல் தொழில்நுட்ப கற்கை நெறிக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

கற்கைநெறியின் காலம் 04 ஆண்டுகள். கற்கை நெறிக்கான போதனை கட்டாயமாக ஆங்கிலத்தில் நடாத்தப்படும்.