இந்தக் கேள்விக்கான தௌிவு அரச சேவைகள் ஆணைக்குழு அல்லது கல்வி அமைச்சு வழங்கியிருக்கவேண்டும். எனினும் போதிய அளவிலான தௌிவுகள் வழங்குகின்ற அடிப்படையில் எந்த விதமான உத்தியோகபூர்வ அறிவித்தல்களும் இன்னும் வௌியிடப்பட்டதாக தெரியவில்லை. எனினும் வரைவிடப்பட்ட சேவை என்பது குறித்து அவ்வப்போது ஓரு சில தொழிற்சங்கங்கள் வௌியிட்டிருக்கின்ற விளக்கவுரைகள் மற்றும் சில பத்திரைககளில் பிரசுரமான கட்டுரைகள் என்பன மாத்திரமே தேடிப் பெற முடியுமாக இருந்தது. அத்துடன் தற்போது வரைவிடப்பட்ட சேவையாக இயங்குகின்ற தபால் திணைக்களத்தின் ஊழியர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட தகவல்களின் அடிப்படையாகக் கொண்டே இந்த விடயம் விளக்கப்படுகின்றது. அந்த அடிப்படையில் தொழிற்சங்கள் மற்றும் தனிநபர்கள் வழங்கிய விளக்கங்கள் ஒரு போதும் இறுதித் தீர்மானங்களாக அமையப்போவதில்லை என்ற போதிலும் அவற்றிலிருந்து ஒரளவு புரிதலைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற அடிப்படையில் அவற்றை இங்கு தொகுத்துத் தர முயற்சிக்கின்றோம்.
2019.10.02 ஆம் திகதி ஜோசப் ஸ்டாலின் வரைவிடப்பட்ட சேவை தொடர்பா குறிப்பிட்ட விடயங்களை அன்றைய தினம் https://praja.lk/ எனும் இணையத்தளம் பதிவேற்றியிருந்தது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஸ்டாலின் அவர்கள் வழங்கிய விளக்கத்தின் அடிப்படையில் இந்த சேவைகளுக்கு தனியான சம்பள முறை ஒன்று வழங்கப்படும் என்பதாகவும் வழங்குகின்ற சம்பள ஏற்றங்கள் குறித்து ஏனைய அரச சேவையில் இருப்பவர்கள் தங்களது எதிர்ப்புக்களைத் தெரிவிக்க முடியாது என்பதாகவும் குறிப்பிடுகின்றார்.
முகாமை சேவை உத்தியோகத்தரான Sangeeth Harshana என்பவரின் கருத்து.
இவரின் கருத்துக்கு இணங்க வரைவிட்ட சேவையில் இருப்பவர்கள் வேறு நிறுவனங்களுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்ல முடியாது என்பதுடன் வேறு திணைக்களங்கள் சமாந்தர சேவைகளில் இருப்பவர்கள் இந்த சேவைக்கும் வர முடியாது என்ற காரணங்களினால் சமாந்திர சேவைகளில் இருப்பவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதாகவும் அரச சேவையே இதன் ஊடாக பாதிப்புக்களுக்கு உள்ளாகும் எனபதாக இவர் குறிப்பிடுகின்றார்.
முழுமையான கட்டுரையினைப் பார்வையிட
பத்திரிகை எழுத்தாளர் நாரத விக்ரமநாயக்கவின் கருத்து
நாரத விக்ரமநாயக்க சிலுமின பத்திரிகைக்கு 2017.12.03 அன்று கட்டுரை ஒன்றினை வழங்கியிருந்தார். அரச சேவைகள் அனைத்தையும் ஒன்றிணைத்து 2006 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தம் காரணமாக வரைவிடப்பட்ட சேவையில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து இந்தக் கட்டுரையில் பேசியிருந்தாலும் வரைவிட்ட சேவை குறித்த புரிதல் ஒன்றினைப் பெற்றுக்கொள்வதற்கு இந்தக் கட்டுரை உதவியாக அமைகின்றது.
வரைவிட்ட சேவையில் இருப்பவர்கள் வேறு திணைக்களங்களுக்கு கீழ் இயங்குகின்ற நிறுவனங்களுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்ல முடியாது என்தாகவும் பதவி உயர்வு வாய்ப்புக்கள் குறைந்துள்ளது தொட்ர்பிலும் இந்தக் கட்டுரை விரிகாப் பேசுகின்றது.
முழுமையான கட்டுரையினைப் பார்வையிட
இதற்கு மேலதிகமாக தபால் திணைக்களத்தில் பணியாற்றுகின்ற உத்தியோகத்தர் ஒருவரிடம் வரைவிட்ட சேவைகள் குறித்து வினவினோம். அவரிடம் வினவப்பட்ட வினாக்களும் அதற்கு அவர் தந்த பதில்களும் கீழே தரப்படுகின்றன.
01.வரைவிட்ட சேவை என்பது தபால் திணைக்களத்தைப் பொறுத்த வரை எந்த அடிப்படையில் காணப்படுகின்றது.
புதிதாக ஆட்கள் சேர்க்கும் போது வேறு திணைக்களங்களில் பணியாற்றியவர்கள் மட்டுப்படுத்த அடிப்படையில் சேர்க்கப்படுவதில்லை. மாறாக திறந்த அடிப்படையில் மாத்திரமே புதியவர்கள் பணிக்கு சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர்.
02. இதன் ஊடாக நலன்கள் ஏதும் உண்டா?
ஆம் அண்மையில் பட்டதாரிகள் இணைத்துக்கொள்ளப்பட்ட போது பிரதேச செயலகங்கள் கல்வித் திணைக்களம் சார்ந்த நிறுவனங்களுக்கு இணைக்கப்பட்டனர். இவ்வாறு தபால் சேவையில் இணைக்க முடியாது. எனவே அரசியல் சார்ந்த நியமனங்கள் தபால் சேவையில் வழங்க முடியாது மாறாக சேவைப் பிரமாணக் குறிப்புக்களில் குறிப்பிடப்பட்ட முறைகளுக்கு அமைய மாத்திரமே ஆட்கள் சேர்க்கப்படுகின்றனர்.
03. உங்களது சம்பளம் ஏனைய அரச நிறுவனங்களின் சமாந்திர சேவையில் இருப்பவர்களின் சம்பளத்தை விட அதிகரிக்க முடியுமா?
இல்லை சமாந்திர சேவைகளுக்கான சம்பளங்கள் சம்பள ஆணைக்குழுவினால் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஆரம்ப மட்ட அல்லது சிற்றூழியர்கள் ஏனைய நிறுவனங்களில் உள்ளது போன்று PL சம்பளத்தையே பெறுகின்றனர். தபால் நிலையப் பொறுப்பாளர்கள் MN3 சம்பளத்தையே பெறுகின்றனர். சம்பளம் என்பது சம்பள ஆணைக்குழுவினாலேயே தீர்மானிக்கப்படுகின்றது.
04. ஏனைய கொடுப்பனவுகள் குறித்து தீர்மானங்கள் எவ்வாறு அமைகின்றது.
எமது சேவையில் 24 மணித்தியாலயங்கள் இயங்குகின்ற தபால் காரியாலயங்களை உள்ளடக்கியுள்ளது. அத்துடன் சனிக்கிழமைகளிலும் எனைய தபால் நிலையங்கள் திறந்திருக்கின்றன. இந்த நிலையில் ஏனைய சேவைகளை விட மேலதிக நேரங்கள் சேவையாற்ற வேண்டிய நிலை ஏற்படும் இதற்காக மேலதிக நேரக் கொடுப்பனவுகள் உண்டு. மேலதிக நேரக் கொடுப்பனவு உரித்தில்லாதவலர்களுக்கு அவர்களது பணிகளுக்கு ஏற்ப வேறு கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன.
05. உங்களுக்கு இலங்கை நிர்வாக சேவை போன்ற நாடளாவிய சேவையிலான பதவிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேர்ப்பு முறையில் இணைய முடியுமா?
நிர்வாக சேவை என்பது எமது திணைக்களத்துடன் தொடர்பில்லாத சேவை எனவே அந்த சேவைகளுக்கு மட்டுப்படுத்தப்படட்ட ஆட்சேர்ப்பு முறையில் நாங்கள் அடங்குவதில்லை. எனினும் எமது திணைக்களத்தின் உயர் பதவிகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேர்ப்பு ஊடாக இணையலாம்.
மேலே குறிப்பிடப்பட்ட 5 சாரார்களும் குறிப்பிட்ட கருத்துக்களுக்கு அமைய இலங்கை அதிபர் சேவை, ஆசிரியர் ஆலோசகர் சேவை, இலங்கை ஆசிரியர் சேவை என்பன வரைவிடப்பட்ட சேவையாக அமையும் போது ஏற்படவிருக்கின்ற மாற்ற்ஙகளாக கீழ்க் குறிப்பிடுகின்றவற்றை அனுமானிக்கலாம்.
01. மேற்படி 3 சேவையில் இருக்கின்றவர்களும் பாடசாலையினை மையப்படுத்தியவர்கள் என்பதாக வரைவிடப்பட்ட சேவை நிறுவனமாக பாடசாலைகள் மாத்திரம் உள்ளடக்கப்படலாம்.
02. தற்போது பாடசாலைகளில் அதிபர்களாக பணியாற்றுகின்ற கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் இனிமேல் பாடசாலைகளில் பணியாற்ற முடியாது என்ற நிலை ஏற்பட்டு அவர்கள் வலயக் கல்விக் காரியாலயம் அல்லது மாகாணக் கல்வித் திணைக்களத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம்.
03. ஆசிரியர் சேவையில் அல்லது அதிபர் சேவையில் இருக்கின்ற பலர் தற்போது வலயக் கல்விக் காரியாலயங்களில் பாடங்களுக்குப் பொறுப்பான பணிப்பாளர்களாகக் கடமையாற்றி வருகின்றனர். அவர்கள் அனைவரும் பாடசாலைகளுக்கு திரும்பச் செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம்.
04 ஆசிரிய ஆலோசகர்கள் தற்போது வலயங் கல்விக் காரியாலயங்களையே சேவைத்தளமாகக் கொண்டு இயங்குகின்றனர். அவர்களது சேவைத் தளங்கள் இனிமேல் பாடசாலைகளே என்ற நிலை ஏற்படலாம்.
05. தற்போது ஆசிரியர்கள் சிலர் அமைச்சர்களின் இணைப்பாளர்களாகவும் வௌிநாட்டு அரசு சராரா தொண்டர் நிறுவனங்களின் செயற்திட்டங்களில் பணியாற்றுகின்றனர். இனிமேல் இவ்வாறு பணியாற்ற முடியாத நிலை ஏற்படலாம்.
06. சில ஆசிரியர்கள் கெடெட் உத்தியோகத்தர்களாக கேம்ப்களில் பணியாற்றிவருகின்றனர் அவர்கள் தொடர்பிலும் மாற்றங்கள் ஏற்படலாம்.
07. மேற்படி 3 சேவைகளில் இருக்கின்றவர்களுக்கும் மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் அல்லது சேவை மூப்பு பதவி பெற முடியமாக இருக்கின்ற இலங்கை கல்வி நிர்வாக சேவை, இலங்கை கணக்காளர் சேவை, இலங்கை கல்வியியலாளர் சேவை போன்றவற்றுக்கு இனிமேல் இணைய முடியாத நிலை ஏற்படலாம்.
(வரைவிடப்பட்ட சேவைக்கான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்னரே மேற்படி 3 பரீட்சைகளுக்குமான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருப்பது இந்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகின்றது)
08. ஆசிரியர்களின் அதிபர்களின் சம்பளங்களை தனியாக உயர்த்த முடியுமா என்றால் தபால் சேவை உத்தியோகத்தரின் கூற்றுக்கு இணங்க அதுவும் சாத்தியப்படும் என்பதாக குறிப்பிடப்பிட முடிவதில்லை. (2006 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களினால் ஏற்பட்ட பாதிப்புக்களைச் சரிசெய்வதற்கு இன்றுவரை முடியாத நிலை காணப்படுகின்றது.) அண்மையில் வழங்கப்பட்ட சம்பள உயர்வு தேசிய சம்பளக் கொள்கைக்கு முரணானது என்பதாக வைத்திய சேவையினர் மற்றும் கல்வி நிர்வாக சேவையினர் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கின்றனர். எனவே அரச சேவையில் ஆகக் கூடிய சம்பளம் பெறுகின்ற அமைச்சின் செயலாளரின் சம்பளமானாது ஆகக்குறைந்த சம்பளம் பெறுகின்றவரின் சிற்றூழியர்களின் சம்பளத்தில் 4 1/2 மடங்குகளாக இருக்க வேண்டும். இதன் அடிப்படையில் இடையில் இருப்பவர்களின் சம்பளங்கள் அதற்கேற்ற விகிதங்களில் அமைய வேண்டும் என்பதாக தேசிய சம்பளக் கொள்கை அமைந்திருக்கின்றது. எனவே ஆசிரயர் சேவையோ அல்லது அதிபர் சேவையோ அதற்கு சமாந்தரமான சேவைக்குரிய சம்பளத்தையே பெறவேண்டிய நிலை காணப்படுகின்றது.
09. வேறு கொடுப்பனவுகள் பெறுவதற்கான சாத்தியங்கள் உண்டா என்று நோக்கும் போது மேலதிக வகுப்புக்கள் விளையாட்டு போன்ற ஏனைய செயற்பாடுகளைக் கவனத்தில் கொண்டு பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பிருக்கின்றது. இதற்காக மேலதிக நேரம் என்ற அடிப்படையில் பணியாற்ற வேண்டிய தேவை ஏற்படலாம்.
10. பதிவி உயர்வு வாய்ப்புக்கள் குறித்து நோக்கும் போது ஆசிரியர் சேவையில் இருப்பவர்கள் ஆசிரியர் ஆலேசகர் சேவைகட்கும் அதிபர் சேவைக்கும் பதவி உயர்வு பெறலாம். இவைகள் வரைவிடப்பட்ட சேவைக்கு முன்னரும் இதே நிலையில் தான காணப்பட்டது. எனவே வரைவிட்ட சேவையின் ஊடாக மாத்திரமே இதனைப் பெற்றுக்கொள்ளலாம்
11. இடமாற்றங்கள் கூட பாடசாலைக்கு இடையில் தான் இடம்பெறுகின்றன எனவே வரைவிட்ட சேவையாக மாற்றுவதில் இடமாற்றம் தொடர்பிலிம் புதிதாக ஏற்பட எதுவுமில்லை. சிலநேரம் தேசிய பாடசாலை மாகாணப்படாசாலை என்ற வேறுபாடுகள் இன்றி எந்தப் பாடசாலைக்கும் இடமாற்றம் பெற முடியுமாக அமையலாம்.
முடிவுரை
இவ்வாறு நிகழலாம் என்பதாக மேலே குறிப்பிடப்பட்டுள்ள 11 விடயங்கள் அனுமானங்கள் மாத்திரமே என்பதுன் இதற்கு மாற்றமாக அனைத்து விடயங்களுமே ஆசிரியர் அதிபர்களுக்கு சாதகமாகவும் அமைந்துவிடலாம். பொருளைப் பார்க்காமல் பொருளுக்கான கேள்வியை ஏற்படுத்தி அந்தப் பொருள் இவ்வாறு இருக்கும் என்று ஒரு கற்பனையை அமைத்துக்கொண்டு விலையைக் கொடுத்து பொருளை வாங்கியது போன்ற ஒரு நிலையாகவே ஆசிரியர்கள் அதிபர்கள் ஆசிரிய ஆலோசகர்களின் வரைவிடப்பட்ட சேவைக்கான வர்த்தமானி அறிவித்தல் காணப்படுகின்றது. வாங்கிய பொருள் எதிர்பார்த்த விதத்தில் இல்லை என்ற நிலை ஏற்படுமானால் பொருளைத் திரும்பக் கொடுத்து அதற்காக செழுத்திய பணம் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியுமா என்பது தெரியாமலேயே பொருளின் பெயரை மட்டும் கூறி பொருளை வாங்கியிருக்கின்றோம். பொருள் எந்த வடிவத்தில் இருக்கும் என்பது கூட எங்களுக்கு சரியாகத் தெரியாது. பொருள் நாங்கள் எதிர்பார்த்த விதத்தில் இல்லாமல் இருந்தால் என்ன செய்வது அதனைத் திரும்பப் கொடுப்பதா அல்லது எமக்கு தேவையான முறையில் திரும்ப வடிவமைத்துக்கொள்ள முடியுமா என்பது குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தெடர்ந்தும் எமது இணையத்தளத்துடன் இணைந்திருங்கள்
தொகுப்பு
Admin
lankajobinfo.com
0 Comments