ad

வரைவிடப்பட்ட சேவை குறித்த ஒரு முகாமை உதவியாளரின் விளக்கம்.

முகாமை சேவை உத்தியோகத்தரான Sangeeth Harshana என்பவர் தனது முகநூல் பக்கத்தில் இட்டிருந்த பதிவின் தமிழாக்கத்தினை இங்கு தருகின்றோம்.



ஆரம்ப காலங்களில் அரச நிறுவனங்கள் அனைத்துமே திணைக்களங்களாக செயற்பட்டு வந்தன. அவ்வாறு செயற்பட்டு வந்த நிறுவனங்களை நவீனமயப்படுத்தும் நோக்கிலும் நிறுவனத்தில் காணப்படுகின்ற ஊழல்களை தடுக்கும் நோக்கிலும் மேலும் உத்தியோகத்தர்கள் பலவிதமான நிறுவனங்களை புதிய அனுபவங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கிலும் உத்தியோகத்தர்கள் திணைக்களுங்களுக்கிடையே இடமாற்றம் பெற்றுச் செல்கின்ற அடிப்படையில் இணைந்த சேவைகளும் வரைவிடப்பட்ட சேவைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. அரச நிறுவனங்கள் சமமான மட்டங்களில் காணப்படுகின்ற சேவைகள் ஒன்றிணைக்கப்பட்டு இணைத்துக்கொள்ளல், பதவி உயர்வு வழங்குதல், இடமாற்றம் மற்றும் ஒழுக்காற்று என்பன தொடர்பில் அனைத்து செய்றபாடுககளும் பொதுவாக ள் அமைகின்ற விதத்தில்  விதிமுறைகள் அமைக்கப்பட்டன.
ஆசிரியர் அதிபர் சேவைகள் கல்வி அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றது. அத்துடன் சுகாதார உத்தியோகத்தர்கள் சுகாதாரண அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் இயங்குகின்றது. அந்த அடிப்படையில் அவைகள் வரைவிட்ட சேவைகளாகவே செயற்பட்டு வருகின்றன.

எனினும் சுகாதாரம், புகையிரதம, தபால், கல்வி ஆகிய நிறுவனங்களின் சிற்றூழியர் முதல் உயர் பதவி வரை வரைவிடப்பட்டதாக மாற்றி அமைக்கப்படுவதானத' குறித்த நிறுவனங்களின் நாடாளாவிய சேழவ மற்றும் இணைந்த சேவை உத்தியோகத்தர்களுக்கு பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது. குறித்த நிறுவனங்களின் சலுகைகள் அனைத்தும் குறிப்பிட்ட தரப்பினர்கள் மாத்திரமே அனுபவிக்கின்ற நிலை ஏற்படுவதால் மேற்படி நாடலாவிய சேவை மற்றும் இணைந்த சேவை உத்தியோகத்தர்களுக்கு பாதிப்பாக அமைகின்றது.

இந்த நிலையில் அரச சுகாதார முகாமை உத்தியோகத்தர் என்ற அடிப்படையில் சுகாதார அமைச்சின் கீழும் புகையிரத லிகிதர்கள் என்ற அடிப்படையில் வரைவிடப்பட்டிருக்கின்றது. இதனைத் தொடர்ந்து வௌிநாட்டு அமைச்சு, பரீட்சைத் திணைக்களம், தேர்தல் திணைக்களம், தொழிலாளர் திணைக்ளளம். அரச அச்சகம், உள்நாட்டு வருமானத் திணைக்களம், கல்வி அமைச்சின் இணைந்த சேவை மற்றும் நாடாளாவயி சேவைகள் என்பன வரைவிட்ட அடிப்படையைக் கோருகின்றது. இவ்வாறு சேவைகள் வரைவிட்ட சேவைகளாக மாற்றப்படுவது இது அரவச சேவையினைப் பாதிக்காதா

சிங்கள கட்டுரையில் இணைப்பு