ad

Education Circular : Old students’ association - Sinhala and Tamil


සිංසල චක්‍රලේඛ අවසානයේ දක්වා ඇත.


பழைய மாணவர் சங்கம் தொடர்பான சுற்றுநிருபம். 

1961.11.20 அன்று வௌியிடப்பட்ட 1961 ஆம் ஆண்டு 27 இலக்க சுற்றுநிருபம் 


இந்த சுற்றுநிருபமானது அனைத்து உதவிப் பணிப்பாளர்கள், பணிப்பாளர்கள், மாவட்டப் பரிசோதகர்கள், நிர்வாகப் பரிசோதகர்களை விழித்து வௌியிடப்பட்டுள்ளது. 

அனைத்து பாடசாலைத் தலைவர்களுக்கும். 

பழைய மாணவர் சங்கம். 


பல பாடசாலைகளில் நிறுவப்பட்டுள்ள பழைய மாணவர் சங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற முயற்சிகள் குறித்து திணைக்களம் அறிந்துள்ளது. அவ்வாறான சங்கங்கள் அனைத்து பாடசாலைகளிலும் நிறுவப்படுவது மற்றும் பாடசாலைகளுக்கும் பழைய மாணவர்களுகக்குமிடையிலான உறவினைப் பேணுவது என்பவற்றை நோக்காகக் கொண்டு கீழே குறிப்பிடப்படுகின்ற நியதிதிச் சட்டத்தின் பிரகாரம் அவற்றைச் செயற்படுத்துமாறு அறியத் தரப்படுகின்றது. 

நியதிச்ச சட்டம். 

01. பெயர் - இந்த சங்கமானது பழைய மாணவர் சங்கம் என்ற பெயரினால் அழைக்கப்படும்.
02. இந்த சங்கத்தினை நிறுவுவதன் நோக்கம் மற்றும் காரணம் - பாடசாலையின் அபிவிருத்தியினை நோக்காகக் கொண்டு ஒத்துழைப்புடன் செயலாற்றுதல். 
    அவையாவன -

           A) மாணவர்களின் வருகையினை அதிகரித்தல் 
  B) தேவைப்படும் சந்தர்ப்பங்களில் பாடசாலை வளங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்குவதற்கு
     C) பாடவிதானங்கள் மற்றும் தொழில் வழிகாட்டல்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு
           D)பகல் உணவு வழங்கும் நடவடிக்கைகளை  வௌ்ளிகரமாக்குவதற்கு
           E)  முடியுமியின் பகல் உணவுக்கு மேலதிகமான ஏதேனும் வழங்குவதற்கு
           F) போதுமான சுகாதார வசதிகள் வழங்குவதற்கு
       G) பாடசாலையின் தேசிய மற்றும் மதம் சார்நத நிகழ்வுகளுக்கு உதவயாக இருப்பதற்காக
    H) விளையாட்டு, விளையாட்டுப் போட்டிகள், சாரணர் குழுக்ககள் போன்றவற்றை அபிவிருத்தி செய்வதற்கு உதவுவதற்கு
    I) பாடசாலையின் பல்வேறு நிகழ்வுகள், கலை நிகழ்ச்சிகள் நாட்டிய நிகழ்ச்சிகள் என்பவற்றை ஏற்பாடு செய்வதற்கு
   J)  பாடசாலையுடன் சமூகத்தை இணைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளல். 
03.  சங்கத்தின் அங்கத்துவம். 
  • அனைத்து பழைய மாணவர்களும் அங்கத்துவம் பெறுவதற்கு தகுதியானவர்களாவர்.
  • பாடசாலையில் தற்போது இருக்கின்ற ஆசிரியர்கள் மற்றும் அந்தப் பாடசாலையின் முன்னர் பணியாற்றிய ஆசிரியர்களுக்கும் அங்கத்துவம் வகிக்கலாம்.
04. நிதி
        I. அங்கத்தவர் கட்டணம்
        II. வருடாந்த சந்தா
        III. வேறு விசேட காரணங்களுக்காக சேகரிக்கின்ற சந்தா /நிதி

5.சங்கத்தின் கூட்டங்கள்
I. நேர காலத்துடன் எழுத்து மூலமாக அறிவித்ததன் பின்னர் சங்கத்தின் வருடாந்த பொதுக் (மகாசபைக்) கூட்டத்தினை வருடத்துக்கு ஒரு முறை நடாத்தப்படல்
II. அவ்வாறான கூட்டங்களுக்காக நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்படும்
III.  ஆலோசனைகள் முன்வைப்பதற்காக நேரம் வழங்குதல், வருடாந்த கூட்டத்தில் பங்குகொள்வதற்கு தகைமையுள்ளவர்கள் கூட்டம் நடைபெறுவதற்கு 7 நாட்களுக்கு முன்னதாக எழுத்து மூலம் செயலாளருக்கு (இணைச் செயலாளருக்கு) அனுப்புதல் வேண்டும். 
IV. சங்கத்தின் விசேட பொதுக்கூட்டங்கள் (மகாசபைக் கூட்டம்) கூட்டப்படவேண்டும் என்பதாக பொதுக் கூட்டங்களில் பங்குகொள்ளும் உரிமையுடைய 10 நபர்கள் எழுத்து மூலமாக அறிவிப்பார்களானால் அவ்வாறு கோரப்பட்டு 3 வாரங்களுக்குள் செயலாளரினால் குறித்த கூட்டம் கூட்டப்படவேண்டும். விசேட பொதுக் கூட்டம் கூட்டப்படுவதற்கான காரணம் குறித்த கோரிக்கைக் கடிதத்தில் குறிப்பிடப்படவேண்டும். 

6. சங்கத்தின் பதவிகள்.

I. ஆலோசகர்கள்.
II. தலைவர் - பாடசாலையின் அதிபர் ( பதவி அதிகாரத்தின் ஊடாக)
III. உப தலைவர் - அங்கத்தவர்களிலிருந்து தெரிவு செய்யப்படுபவர்கள்
IV செயலாளர் -  A. செயலாளர்
                                 B. உப செயலாளர்
                                 C. இணைச் செயலாளர்
V பொருளாளர்  - A. பொருளாளர்
                                 B. உப பொருளாளர்
                                 C. இணை பொருளாளர்
VI  செயற்குழு - செயற்குழு அங்கத்தவர்கள் தொகை சங்கத்தின் அங்கத்தவர் தொகையினைப் பெறுத்து வேறுபடலாம்.- 5 பேர்களுக்கு குறையாமலும் 12 போர்களை விட அதிகரிக்காமலும் இருத்தல் வேண்டும்.

VII  கணக்குப் பரிசோதகர் ஒருவர் - அவர் அங்கத்தவர்களில் ஒருவராக இருக்கலாம். அல்லது சங்கத்தின் மூலமாக நியமிக்கப்படுகின்ற வேறு ஒருவராக இருக்கலாம். 



Click Here To Download Sinhala PDF