ad

2020 பட்டதாரி பயிலுநர்களுக்கான லீவு நடைமுறையில் மாற்றம்.

2020 பட்டதாரி பயிலுநர் திட்டத்தின் அடிப்படையில் அரச சேவையில் பயிலுநர்களாக இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளின் லீவு நடவடிக்கைகள் குறித்த சில தீர்மானங்கள் 2021.05.03 ஆம் திகதி அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது. அதற்கமைய பயிலுநர் பட்டதாரிகளின் லீவு தொடர்பான அரச நிர்வாக சுற்றறிக்கை 9/2021 ஆம் இலக்க சுற்றுநிருபம் வௌியிடப்பட்டுள்ளது. 

01 மாதத்தில் (02) இரண்டு நாட்டகள் சம்பளத்துடனான லீவு எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கல். அதற்கு மேலதிகமாக லீவு எடுக்குமிடத்து சம்பளமற்ற லீவாக அதனைக் கணித்தல், (மாதாந்தம் வழங்கப்படுகின்ற சம்பளக் கொடுப்பனவிலிருந்து சம்பளமற்ற ஒரு நாள் லீவுக்காக   1/30 பகுதி கழிக்கப்படும்)

02. பெண் பயிலுநர்களின் குழந்தைப் பேற்றின் போது சனி ஞாயிறு அரச விடுமுறை தினங்கள் தவிர்த்து 84 நாட்கள் பிரசவ விடுமுறை வழங்குதல்

03. பட்டதாரி பயிலுநர்களாக நியமனம் பெற்றதன் பின்னர் பிரசவம் காரணமாக விடுமுறை எடுத்திருப்பின் அதனை சம்பளமற்ற விடுமுறையாக கருதப்படல், மேற்படி லீவுகளுக்கு அவர்களது சம்பளத்திலிருந்து கழித்த தொகையை மீள வழங்குதல்

lankajobinfo.com


அரச உத்தியோகத்தர்களின் லீவு தொடர்பாக தாபனவிதிக்கோவையில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் குறித்த 4 கட்டுரைகள் கீழே தரப்படுகின்றன.