லீவுகுறத்த முன்னைய பதிவுகள்
16. வௌிநாட்டு கற்கை லீவு மற்றும்/ அல்லது தொழிலுக்கான சம்பளமற்ற லீவு
- கால அளவு-
- நிரந்தமாக்கப்பட்ட அலுவலர்களுக்கு - கல்வி/ தொழிலுக்காக அல்லது இரண்டுக்கும் 5 வருடங்கள் லீவு பெறலாம்
- நிரந்தரமாக்கப்படாத/ தற்காலிக அலுவலர்களுக்கு - கல்விக்காக மாத்திரம் பெறலாம்
- கல்விக்காக தொடர்ச்சியாக 3 வருடங்கள் பெறலாம்
- தொழிலுக்காக தொடர்ச்சியாக 5வருடங்கள் பெறலாம்
- முதுமானிப் பட்டத்தினைப் பூரணப்படுத்தி கலாநிதி பட்டத்திற்கான கல்வியைத் தொடர்வதாயின் மொத்தமாக 5 வருடங்கள் பெறலாம்
- அரசின் ஒத்தாசையுடன் இலங்கையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் அமைப்பின் அபிவிருத்தி திட்டங்கள், உலக சுகாதார ஸ்தாபனம் போன் வௌிநாட்டு அமைப்புக்கள் போன்றவற்றில் சேவையாற்றுவதற்கும் இந்த நடைமுறைகள் ஏற்புடையதாகும்.
- வௌிநாட்டு தொழில்/ கல்வி/ உள்நாட்டில் அமைந்துள்ள வௌிநாட்டு அமைப்புக்கள் என்பவற்றில் சேவையாற்றுவதற்கான காலம் 5 வருடங்களாகும்.
- அரச சேவையில் நிரந்தரப் பதவி வகிக்கின்ற அனைத்து மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மதகுருக்கள்/ மாதத் தலைவர்கள் மதம் சார்ந்த வௌிநாட்டு சுற்றுலா ஒன்றினை மேற்கொள்வதற்காகவோ அல்லது உள்நாட்டு மதம் சார்ந்த சேவைகளுக்காகவோ ஆகக் கூடிய கால அளவு 2 வருடங்கள் என்ற அடிப்படையில் சம்பளமற்ற லீவினைப் பெற்றுக்கொள்ளலாம். (அ.நி.சு 27/2018)
- திணைக்களத்தின் பொதுவான பணிகளுக்கு தடைகள் ஏற்டாமல் இருக்கவேண்டும். (குறித்த நபர் சேவையாற்றும் நிறுவனம் உரித்தாகின்ற திணைக்களத்தினை இது குறிக்கின்றது.)
- அரச அனுசரனையில் வெளிநட்டு புலமைப்பரிசில் ஒன்றினைப் பெற்றுச் செல்கின்ற போது அரச சேவையில் இருக்கின்ற துணைவருக்கு சம்பளமற்ற விடுமுறை பெற்றுக்கொள்ளலாம். (அ.நி.சு 9/2014)
- இது தொடர்பில் 16 ஆவது பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்படுகின்றது.
- முன்னர் வீசா கிடைக்கப் பெறாத சந்தர்ப்பத்தில் வீசா பெறுவதற்காக இந்த சலுகையினைப் பயன்படுத்தக்கூடாது.
- சம்பளமற்ற வௌிநாட்டு லீவு தொடர்பில் திணைக்ளத் தலைவர் கீழ்குறிப்பிடும் அடிப்படையில் சான்றுறுதிப்படுத்த வேண்டும்
- குறித்த பயிற்சி/ கற்கை திணைக்களத்தின் செயற்பாடுகளுக்கு அல்லது அலுவலரின் பதவி உயர்விற்கு அவசியமாகின்றது என்பது
- திணைக்களத்தினுல் புலமைப்பரிசில் திட்ட ஒழுங்கு இல்லை என்பது
- இந்த கற்கைக்கான வசதிகள் உள்நாட்டில் இல்லை என்பது.
- அங்கீகாரம் பெற்ற நிறுவனம் ஒன்றில் கற்கை நெறியினைத் தொடர்வதற்காக சம்பளமற்ற கற்கை லீவு பெற்றுக்கொள்ளல் தொடர்பான நிபந்தனைகள்
- திணைக்களத் தலைவரின் பரிந்துரை அவசியமானதாகும்'
- தகுதிகாண் காலப்பகுதியாயின் தகுதிகாண் காலப்பகுதி சம்பளமற்ற லீவுக்கான காலஅளவினால் நீடிக்கப்படும்.
- துணைவர் அரச உத்தியோகத்தராயின் அவருக்கும் சம்பளமற்றலீவு பெறமுடியும்.
- திணைக்களத் தலைவர் விதிக்கின்ற காலஅளவு திணைக்களத்தில் கட்டாமாக சேவையாற்ற வேண்டும். (வேறு ஒரு சேவைக்காக விடுவிக்கப்படும் போது இது ஏற்புடையதாகாது)
- லீவினை அனுமதிப்பதற்கு முன்னர் குறித்த அலுவலருக்கு வௌிநாட்டுச் செலாவணி கிடைக்கின்றது என்பது உறுதிப்படுத்தப்படல்வேண்டும்.
- இந்த லீவினைப் பெறுவதற்கு சம்பாதித்த லீவினை உபயோகிக்கலாம்.
- இது கட்டாய சேவைக்காலத்துக்கு சேர்க்கப்படுவதில்லை
- மொத்த லீவு காலத்தில் ஒரு பகுதியாக இது கணக்கிடப்படல்வேண்டும்.
- ஒப்பந்த படிவம். (அ.நி.சு 7/2016)
- கல்விக்காக - 9 வது பின்னிணைப்பு
- தொழிலுக்காக 10 வது பின்னிணைப்பு
- கல்வி தொழில் இரண்டுக்குமாயின் - 11 வது பின்னிணைப்பு
- துணைவர் புலமைப்பரிசில் ஒன்றின் ஊடாக வௌிநாடு செல்கின்றபோது அவருடன் செல்கின்ற அலுவலர் - 33 வது பின்னிணைப்பு
- தற்காலிக/நிரந்தமாக்கப்படாத அலுவலர் வௌிநாடு செல்கின்றபோது ஒப்பந்தத்திற்கு மேலதிகமாக xv அத்தியாயத்தின் 4.2 இற்கு அமைய பிணைமுறி ஒன்று சமர்ப்பிக்க வேண்டும்.
- குறிப்பு - பின்னிணைப்பு என்று குறிப்பிடப்பட்டிருக்கின்ற படிவங்கள் தாபனக் கோவையில் பின்னிணைப்பாகத் தரப்பிட்டிருக்கின்றன.
- கற்கை சம்பளமற்ற லீவுகள்
- சம்பளப் படியேற்றத்திற்காக (INCREMENT) கணிக்கப்படல் வேண்டும்
- வௌிநாடு செல்லாவிட்டால் கிடைக்கப்பெறவிருந்த சம்பளத்திலேயே இருத்தவேண்டும்.
- இந்து லீவு காலப்பகுதி ஓய்வூதியத்திற்காக கணிப்படப்படமாட்டாது
- பதவி உயயர்வொன்றிற்காக ஆகக்குறைந்த சேவைக்காலம் அவசியமாகும் பேது அதற்காக இந்த லீவு கணக்கிடப்படமாட்டாது.
- பதவி உயர்விற்காக ஏதேனும் சம்பள மட்டம் ஒன்றினை அடைய வேண்டியிருபபதாயின் மேலே குறிப்பிட்ட சம்பளப்படியேற்றம் (16/7) பதவி உயர்வுக்காக ஏற்புடையதாகாது.
- கட்டாய சேவைக்காலம்
- சம்பளமற்ற விடுமுறை போன்று இரண்டுமடங்காக வேண்டும்.
- எனினும் நிரந்தர ஓய்வூதிய சேவைக்காலத்தினைக் கொண்ட ஒவ்வொருவருடத்திற்கும் ஒரு மாதம் என்ற அடிப்படையில் குறைக்கலாம். இங்கு
- சம்பளமற்ற லீவுகாலம் இருக்குமாயின் அது குறைக்கப்படல் வேண்டும்.
- ஆகக் குறைந்த கட்டா சேவைக்காலம் ஒரு வருடமாக இருக்க வேண்டும்.
- சம்பளமற்ற லீவில் வௌிநாட்டு வேலைக்காக செல்லும் போது IELTS/NCLE போன்ற பரீட்சைகளில் சித்தியடைய வேண்டுமாயின்
- 5 வருட லீவு காலத்துக்கு மேலதிகமாக 03 மாத சம்பளமற்ற லீவு பெற முடியும்
- வௌிநாடு செல்ல முன்னர் சித்தியடைய வேண்டும்
- அதற்காக அரசின் நிதி செலவிடமுடியாது
- வேறு விடயங்களுக்காக இந்த லீவு பயன்படுத்தப்படுமாயின் அது ஒழுக்காற்று செயலாக கருதப்பட்டு ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பதவி உயர்வுகள் சேவை மூப்பு என்பவற்றுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வெளிநாட்டு லீவு பெற்றுக்கொள்வதாயின் அதற்கான ஒப்பந்தப் பத்திரம் மாத்திரம் வேறுபடுகின்றது. குறித்த சுற்றுநிருபம் மற்றும் ஒப்பந்தத்தினை கீழுள்ள லிங்கில் பார்வையிடலாம்.
வௌிநாட்டு லீவு விண்ணப்பிக்கும் போது சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்.
கவனத்தில் கொள்ள வேண்டிய பொதுவான விடயங்கள்.
- உங்களால் முன்வைக்கப்படுகின்றன் வௌிநாட்டு லீவுக்கான விண்ணபத்தினை சரியாகப் பூரித்தி செய்து உரிய ஆவணங்களுடன் பாடசாலை அதிபர், வலயக் கல்விப், மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஊடாக மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
- அதனை அடுத்து குறித்த விண்ணப்பப்படிவம் அமைச்சின் செயலாளரின் பரிந்துரையுடன் மாகாணத்தின் பிரதான செயலாளரின் பரிந்துரையும் பெறப்பட்டு வௌிநாடு செல்வதற்கான அனுமதி பெறுவதற்காக மாகாண ஆளுனரின் செயலாளருக்கு அனுப்பப்படும்.
- நாட்டிலிருந்து வௌியே செல்வதற்கு ஆளுனரின் அனுமதி பெறப்பட்டதும் வௌிநாட்டு லீவானது மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் அனுமதிக்கப்படும்.
- வௌிநாட்டு லீவுக்கு அனுமதி வழங்குவது மாகாண ஆளுனர் என்பதனால் முறையாகப் பூர்தி செய்யப்பட்ட வௌிநாட்டு லீவு விண்ணப்பத்தினை வௌிநாட்டு லீவு ஆரம்பிப்பதற்கு 2 வாரங்களுக்கு முன்னர் சமர்ப்பிக்கின்ற அடிப்படையில் அதற்கு முந்திய நிறுவனங்களுக்கு நேர காலத்துடனேயே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
- யாரும் அனுமதியின்றி வௌிநாடு செல்வது சேவையிலிருந்து விலகிச் சென்றதாக கருதி சேவையிலிருந்து நீக்குவதற்கு காரணமாக அமையலாம்.
- குறைபாடுகளுடனான விண்ணப்பங்கள் திரும்ப அனுப்பி வைக்கப்படும் என்பதால் முறையாக நிரப்பப்பட்ட விண்ணப்பங்களுடன் குறித்த ஆவணஙகளைச் சமர்ப்பிக்கவேண்டும்.
- உங்களால் முன்வைக்கப்படுகின்றன் வௌிநாட்டு லீவுக்கான விண்ணபத்தினை சரியாகப் பூரித்தி செய்து உரிய ஆவணங்களுடன் பாடசாலை அதிபர், வலயக் கல்விப், மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஊடாக மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
- அதனை அடுத்து குறித்த விண்ணப்பப்படிவம் அமைச்சின் செயலாளரின் பரிந்துரையுடன் மாகாணத்தின் பிரதான செயலாளரின் பரிந்துரையும் பெறப்பட்டு வௌிநாடு செல்வதற்கான அனுமதி பெறுவதற்காக மாகாண ஆளுனரின் செயலாளருக்கு அனுப்பப்படும்.
- நாட்டிலிருந்து வௌியே செல்வதற்கு ஆளுனரின் அனுமதி பெறப்பட்டதும் வௌிநாட்டு லீவானது மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் அனுமதிக்கப்படும்.
- வௌிநாட்டு லீவுக்கு அனுமதி வழங்குவது மாகாண ஆளுனர் என்பதனால் முறையாகப் பூர்தி செய்யப்பட்ட வௌிநாட்டு லீவு விண்ணப்பத்தினை வௌிநாட்டு லீவு ஆரம்பிப்பதற்கு 2 வாரங்களுக்கு முன்னர் சமர்ப்பிக்கின்ற அடிப்படையில் அதற்கு முந்திய நிறுவனங்களுக்கு நேர காலத்துடனேயே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
- யாரும் அனுமதியின்றி வௌிநாடு செல்வது சேவையிலிருந்து விலகிச் சென்றதாக கருதி சேவையிலிருந்து நீக்குவதற்கு காரணமாக அமையலாம்.
- குறைபாடுகளுடனான விண்ணப்பங்கள் திரும்ப அனுப்பி வைக்கப்படும் என்பதால் முறையாக நிரப்பப்பட்ட விண்ணப்பங்களுடன் குறித்த ஆவணஙகளைச் சமர்ப்பிக்கவேண்டும்.
சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்.
கீழ் குறிப்பிடப்படும் படிவத்துடன் நிறுவனத் தலைவரின் மற்றும் திணைக்களத் தலைவரின் சிபாரிசுடன் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.
உரிய படிவங்கள்
i. பொது 126 படிவம் ( இதில் மூன்று பிரதிகள் சமர்ப்பிக்க வேண்டும்) –பதிவு இறக்கம் செய்து கொள்ளவும்
ii. 16 பின்னிணைப்பு ( இதில் மூன்று சமர்ப்பிக்க வேண்டும்) – பதிவு இறக்கம் செய்து கொள்ளவும்.
iii. மேல் மாகாணத்தில் பணியாற்றுபவர்களாயின் அவ்வாறான உத்தியோகத்தர்கள் இலங்கைக்கு வெளியே செல்வதற்கு அனுமதி பெற்றுக்கொள்ளுதல் தொடர்பாக சமர்ப்பிக்க வேண்டிய விண்ணப்பப்பத்திரம் (பிரதிகள் 3 உடன் சமர்ப்பிக்க வேண்டும்) – பதிவு இறக்கம் செய்து கொள்ளவும். (அவரவர் வசிக்கின்ற மாகாணத்திற்கு இது வேறுபடலாம்)
iv.பதில் கடமை செய்யும் உத்தியோகத்தர்களின் விருப்பம் தெரிவித்த கடிதம்
v. மேல் மாகாணத்தில் பணியாற்றுபவர்களாயின் அவ்வாறான உத்தியோகத்தர்கள்அரச சேவையின் உத்தியோகத்தர்களின் வெளிநாட்டு விடுமுறை குறிப்பப்பத்திரம் (பிரதி 1) – பதிவு இறக்கம் செய்து கொள்ளவும். (அவரவர் வசிக்கின்ற மாகாணத்திற்கு இது வேறுபடலாம்)
vi. 8 பின்னிணைப்பு ( விடுமுறையானது 1 மாதத்தைவிட கூடுலானதாக அமையும் போது) –08 பின்னிணைப்பு பதிவு இறக்கம் செய்து கொள்ளவும்.
vii. 15 பின்னிணைப்பு ( விடுமுறையானது 1 மாதத்தைவிட கூடுலானதாக அமையும் போது) – 15 பின்னிணைப்பு பதிவு இறக்கம் செய்து கொள்ளவும்.
viii. பாடநெறிக்கு அல்லது தொழிலுக்கு தெரிவு செய்யப்பட்ட கடிதம்.
மேற்குறிப்பிட்ட முறையில் வெளிநாட்டு விடுமுறைப்பத்திரம் அமைச்சுக்கு கிடைத்ததன் பின்பு முதலமைச்சரின் அனுமதியைப் பெற்றுக்கொண்டதன் பின்பு கௌரவ ஆளுநரின் அனுமதியை பெற்றுக்கொள்வதற்காக பிரதமச் செயலாளரின் சிபாரிசு செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்படும்.
03). சம்பளமற்ற வெளிநாட்டு விடுமுறை
கீழ் குறிப்பிடப்பட்ட படிவத்துடன் நிறுவனத் தலைவரின் மற்றும் திணைக்களத் தலைவரின் சிபார்சுடன் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.
உரிய படிவம்
i. பொது 126 படிவம் ( இதில் மூன்று பிரதிகள் சமர்ப்பிக்க வேண்டும்) – பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
ii. மேல் மாகாணத்தில் பணியாற்றுபவர்களாயின் அவ்வாறான உத்தியோகத்தர்கள் இலங்கையிலிருந்து வெளியே செல்வதற்கு அனுமதி பெற்றுக்கொள்ளுதல் தொடர்பாக சமர்ப்பிக்க வேண்டிய விண்ணப்பப்படிவம் (பிரதிகள் 2 உடன் சமர்ப்பிக்க வேண்டும்.).– பதிவிறக்கம் செய்து கொள்ளவும்
iii. புதில் கடமை செய்கின்ற உத்தியோகத்தரின் விருப்பம் தெரிவித்து கடிதம் (பிரதிகள் 2 உடன் சமர்ப்பிக்க வேண்டும்.)
iv. மேல் மாகாணத்தில் பணியாற்றுபவர்களாயின் அவ்வாறான அரச சேவை உத்தியோகத்தரின் வெளிநாட்டு விடுமுறை குறிப்புப்பத்திரம் ( பிரதிகள் 1)- பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
v. ஆய்வானால் 9 பின்னிணைப்பு, தொழிலானால் 10 வது பின்னினைப்பு ஆய்வு தொழில் 02 உம் ஆனால் 11 வது பின்னிணைப்பு- 09வது பின்னினைப்பு, 10வது பின்னினைப்பு. 11வது பின்னிணைப்பு – பதிவிறக்கம் செய்து கொள்ளவும். ஆய்வானால் 9 , ஆய்வானால் 10 , ஆய்வானால் 11பதிவிறக்கம் செய்து கொள்ளவும்
vi. பாடநெறிக்கு அல்லது தெரிலுக்கு தெரிவு செய்த கடிதம்.
மேலுள்ள முறையில் வெளிநாட்டு விடுமுறைப்பத்திரம் அமைச்சுக்கு கிடைத்ததன் பின்பு முதலமைச்சரின் அனுமதியைப் பெற்றுக்கொண்டதன் பின்பு கௌரவ ஆளுநரின் அனுமதியைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக ஆளுநரின் செயலாளருக்கு சிபார்சு செய்து சமர்ப்பிக்கப்படும்.
17. சம்பாதித்த லீவு
- 15, 16 ஆவது அத்தியாங்களுக்குஅமைய சம்பளமற்ற லீவுகள் பெற்றுக்கொள்ளும்போது அதற்குப் பதிலாக அல்லது அதன் ஒருபகுதிக்கு பதிலாக உரித்தாகும்
- உபநிலை உத்தியோகத்தர் (உள்நாடு அல்லது வௌிநாட்டு லீவுகளுக்காக நடைமுறை ஆண்டு மற்றும் அதற்கு முன்னையஅண்டுகளின் ஓய்வு லீவுகளுடன் ஏதாவது அடுத்தடுத்து வரும் 2 வருடங்களில் மீதமாக உள்ள ஒய்வு லீவுகள்(உபநிலை உத்தியோகத்தர் எனப்படுவது பதவிநிலை உத்தியோகத்தருக்கு கீழ் பணியாற்றும் மூன்றாம் நிலை இரண்டாம் நிலை உத்தியோகத்தர்கள்)
- பதவி நிலை உத்தியோகத்தர்கள் (வௌிநாடு) நடைமுறை ஆண்டு மற்றும் அதற்கு முன்னையஅண்டுகளின் ஓய்வு லீவுகளுடன் மாற்றப்பட்ட அரைச்சம்பள லீவுகளும் சேர்க்கப்படும். இது 6 மாதங்களை விட அதிகரிக்காமல் இருக்க வேண்டும்.
- பதவிநிலை உத்தியோகத்தர் உள்நாட்டு லீவுகளுக்காக நடைமுறை ஆண்டு மற்றும் அதற்கு முன்னையஅண்டுகளின் ஓய்வு லீவுகளுடன் ஏதாவது அடுத்தடுத்து வரும் 2 வருடங்களில் மீதமாக உள்ள ஒய்வு லீவுகள்
- அலல்து
- ஆண்டில் உரித்துடைய ஓய்வு லீவுகள் மற்றும் மாற்றப்பட்ட அரைச்சம்பள லீவுகள் ( இது 3 மாதங்களை விட அதிகரிக்காமல் இருக்க வேண்டும்.)
- மாற்றப்பட்ட அரைச்சம்பள லீவினை உபயோகிக்க முன்னர் நடைமுறை ஆண்டினதும் அதற்கு முன்னைய ஆண்டினதும் பயன்படுத்தப்படாத ஓய்வு லீவுகள் இருப்பின் அவற்றை பெற வேண்டும்.