Principal Guide Book Chapter 6
பகுதி 2 இற்குச் செல்ல இங்கு கிளிக் செய்யவும்
உள்ளடக்கம்
- 6.1. அறிமுகம்
- 6.2. கல்வி முகாமைத்துவ தகவல் முறைமை
- 6.3. ஆவண முகாமைத்துவம்
- 6.3.1. சம்பவத் திரட்டுப் புத்தகம்
- 6.3.2. மாணவர்களை அனுமதித்தல், வகுப்பேற்றம் செய்தல் மற்றும் விடுகை செய்வதற்கான பதிவு
- 6.3.3. மாணவர் விடுகைப் பத்திரம்
- 6.3.4. மாணவர் வரவு இடாப்பு
- 6.3.5. கல்விசார்/கல்விசாரா பணிக்குழுவினரின் வரவு கையொப்ப பதிவு
- 6.3.6. லீவு பெற்றுக் கொள்ளுதல் மற்றும் லீவு பதிவு
- 6.4. கோவைகளைப் பேணுதல்
- 6.5. புகையிரத ஆணைச் சீட்டு
- 6.6. தினசரி தபால்
- 6.7. பணிக்குழுவினர் தேவையை கணக்கிடுதல்
- 6.8. தேசிய பரீட்சைகளுக்கு மாணவர்களை அனுப்புதல்
- 6.9. ஆவணச் செயற்பாடுகளை முறைமையாக்குதலும் அடையாளக் குறியீடுகளை இடுதலும்
6.1 அறிமுகம்
பாடசாலை நிருவாகம் மற்றும் முகாமைத்துவத்துடன் தொடர்புடைய பதிவுகளை (மாணவர்கள் பாடசாலைக்கு அனுமதித்தல் தொடக்கம் விலகிச் செல்லுதல், கல்விசார் மற்றும் கல்விசாரா பணிக்குழுவின் உறுப்பினர்கள் பாடசாலைக்கு வருகைத்தருதல் தொடக்கம் இடமாற்றம் அல்லது ஓய்வு பெறுதல்) முறையாக தற்காலப்படுத்தி பேணுதல் வேண்டும். அதற்கிணங்க கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள துறைகள் தொடர்பாக அதிபரின் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
6.2 கல்வி முகாமைத்துவ தகவல் முறைமை (EMIS)
6.2.1 கல்வி முகாமைத்துவ தகவல் முறைமையொன்றில் உள்ளடங்க வேண்டிய தகவல்கள்
- வரைபடம், காணி உறுதிப் பத்திரம் (Master plan)
- பாடசாலை வரலாறு (ஆரம்பத்திலிருந்து தற்போது வரையிலான தகவல்கள்)
- மாணவர் தொடர்பான தகவல்கள்
- பெற்றார் தொடர்பான தகவல்கள்
- கல்விசார் மற்றும் கல்விசாரா பணிக்குழு தொடர்பான தகவல்கள்
- பௌதீக வளங்கள் தொடர்பான தகவல்கள்
- மாணவர் அடைவு தொடர்பான தகவல்கள்
- வளநபர்கள்/நிறுவனங்கள் தொடர்பான தகவல்கள்
- இணைக்கலைத்திட்டச் செயற்பாடுகள் தொடர்பான தகவல்கள்
- பாடசாலை நிருவாகத்துடன் தொடர்புடைய குழுக்கள் தொடர்பான அடிப்படைத் தகவல்கள்
- நிதி தொடர்பான தகவல்கள்
- மாணவர் நலனோம்பல் தொடர்பான தகவல்கள்
- ஏனையவை
6.2.2 கல்வி முகாமைத்துவ தகவல் முறைமையொன்றினை பேணுதல்
- கல்வி முகாமைத்துவ தகவல் முறைமை தொடர்பான பொறுப்புகள் உரிய முறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை
- பொருத்தமான பொறிமுறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் தகவல்களை சேகரித்தல்
- நடைமுறையிலுள்ள வசதிகளுக்கேற்ப தகவல்களை கணனி மயப்படுத்துதலும் தற்காலப்படுத்துதலும்
- தகவல்களை பகுப்பாய்வு செய்தலும் தீர்மானம் மேற்கொள்ளும்போது பயன்படுத்துதலும்
- தேவையான சந்தர்ப்பங்களில் தகவல்களை வழங்குதல்
- சம்பந்தப்பட்ட தகவல்களை காட்சிப்படுத்துதல்
- முகாமைத்துவச் செயற்பாடுகளுக்காக தகவல்களைப் பயன்படுத்துதல்
6.2.3. ஆசிரியர்களின் மனிதவள முகாமைத்துவம்
முறைசார்ந்த அமைப்பு
தேசிய கல்வி முகாமைத்துவ முறைமையின் கீழ் ஆசிரியர்களின் மனித வள முகாமைத்துவ முறைசார் அமைப்பொன்று கல்வி அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இம் முறைசார் அமைப்பினுள் அனைத்து அரச பாடசாலைகள், பிரிவெனாக்கள், உதவி பெறும் மற்றும் பெறாத தனியார் பாடசாலைகள் மற்றும் பகுதியளவில் அரச மானியம் பெறும் விசேட பாடசாலைகளில் சேவையாற்றும் ஆசிரியர்களின் கடமைப் பரப்புக்குரியதான தகவல்கள் பேணப்பட்டு வருகின்றது.
அசிரியர்கள் தொடர்பாக நிறுவன மற்றும் நிருவாகம்சார் செயற்பாடுகளை தாமதமின்றி பூர்த்தி செய்வதன் மூலம் அவர்களின் சேவைசார் திருப்தியை உயர்த்ததுல், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட விடயங்களில் சரியான தகவல்களைப் பெற்றுக் கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை வினைத்திறனுடன் முன்னெடுத்தல் இத் தகவல் முறைமையை அறிமுகப்படுத்துவதனுடாக எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
6.2.3.1 தரவுத் தளம் தொடர்பாக ஆசிரியர்களின் பொறுப்பு
- குறைந்த பட்சம் ஒரு மாதத்தில் ஒரு தடவையேனும் தங்களது பயனீட்டாளர் கணக்கைப் பயன்படுத்தி இம் முறைசார்ந்த தகவல் முறைமையில் உட்படுத்தப்பட்டுள்ள தனது தகவல்கள் சரியானவையா என பரீட்சித்துப் பார்த்தல்.
- தனது பயனீட்டாளர் பெயர் மற்றும் அடையாளச் சொல்லை தனிப்பட்டக் கோவை வைக்கப்பட்டுள்ள வலயக் கல்விப் பணிமனையில் பெற்றுக் கொள்ளுதல்.
- முதல் நுழைவின் போது அடையாளச் சொல்லை மாற்றி இரகசியத் தன்மையை பாதுகாத்துக் கொள்ளுதல்.
- தகவல்களில் தவறுகள் காணப்படும் சந்தர்ப்பத்தில் சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன் அதிபர் ஊடாக வலயக் கல்விப் பணிப்பாளருக்கு தாமதிக்காமல் எழுத்து மூலம் சமர்ப்பித்தல்.
6.2.3.2 தரவு முறைமை தொடர்பாக அதிபரின் பொறுப்பு
- பாடசாலையின் ஆசிரியர்களின் தகவல்களை பிழையற்றதும் தனது தற்காலப்படுத்தப்பட்டதுமாக முறைமையில் காணப்படுகின்றதா என உறுதிப்படுத்திக் கொள்ளுதல்.
- இடமாற்றங்களைப் போன்றே ஆசிரியர்களின் கடமை பரப்பிற்குரிய மாற்றங்களை உடனடியாக தனது பாடசாலைக்குரிய வலயக் கல்விப் பணிமனையில் தனிப்பட்டக் கோவைக்கு பொறுப்பாகவுள்ள உத்தியோகத்தருக்கு கிடைக்கச் செய்தல்.
- ஆசிரியர்களால் அவர்களது தகவல்களை தற்காலப்படுத்துவதற்காக வலயத்திற்கு அனுப்பப்படும் கடிதங்கள் மற்றும் ஆவணங்களை உறுதிப்படுத்தி சமர்ப்பித்தல்.
- திருத்தங்களை முன் வைப்பதற்காக உரிய இணைப்புகளை பூரணப்படுத்தி ஒவ்வொரு மாதமும் சம்பளப் பட்டியலுடன் வேறாக நிருவாகப் பிரிவுக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தருக்கு சமர்ப்பித்து அது கிடைக்கப் பெற்றதை உறுதிப்படுத்திக் கொள்ளுதல்.
(இது தொடர்பாக கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள 30/2019 இலக்கமுடையதும் 2019.06.07 ஆந் திகதிய சுற்றுநிருபம் மற்றும் அறிவுறுத்தல் கோவைக்கு அமைவாக)
6.3 ஆவண முகாமைத்துவம்
6.3.1 சம்பவத் திரட்டுப் புத்தகம்
சம்பவத் திரட்டுப் புத்தகத்தை பாடசாலையின் வரலாறு மற்றும் கடமைகள் மேற்கொள்ளப்படுகின்றமை, பாடசாலையில் இடம்பெற்ற விசேட செயற்பாடுகள் தொடர்பான முக்கியத் தகவல்கள் அடங்கிய பதிவாக பாடசாலையில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுதல் வேண்டும். சம்பவத் திரட்டுப் புத்தகத்தை நேர்த்தியாகவும் சுத்தமாகவும் வைத்துக் கொள்ளுதல் வேண்டும். சம்பவத் திரட்டுப் புத்தகத்தை அதிபருடைய பொறுப்பில் வைத்திருக்க வேண்டும். தகவல்களைக் குறிப்பிடுதல் அதிபரால் மேற்கொள்ளப்படுவதோடு அதிபர் பாடசாலையில் இல்லாத போது அதிகாரமளிக்கப்பட்ட நபரொருவரால் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அதிபர் பாடசாலையை விட்டு வெளியில் செல்லும் சந்தர்ப்பங்களில் சம்பவத்திரட்டுக் குறிப்பை இடுவதனூடாக பணிப்பகிர்வு செய்யப்பட வேண்டியதோடு கடமைகளைப் பொறுப்பேற்ற நபரினால் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதாக குறிப்பினை இடுதல் வேண்டும். சம்பவத் திரட்டுக் குறிப்பினை எழுதும்போது ஆரம்பத்திலேயே குறிப்பு இடப்படும் திகதியை தெளிவாக குறிப்பிடப்பட வேண்டியதோடு இறுதியில் குறிப்பினை இட்ட நபரின் ஒப்பம், பெயர் மற்றும் பதவியை குறிப்பிட வேண்டும்.
ஒரு சம்பவத் திரட்டுக் குறிப்பை இட்ட பின்னர் அடுத்த குறிப்பினை இடுவதற்காக விடப்படும் இடைவெளியானது மேலதிக குறிப்பினை இடுவதற்கு முடியாத வகையில் இருத்தல் வேண்டும். சம்பவத் திரட்டுக் குறிப்பொன்றை மாற்றம் செய்வதோ அல்லது வெட்டிவிடுதல் அல்லது அழிப்பதை தவிர்க்க வேண்டும். குறிப்பு ஒன்றை இடும்போது தவறு ஒன்று ஏற்படுமாயின் அடுத்தாக குறிப்பொன்றை இட்டு அதனை சரி செய்தல் வேண்டும். ஒவ்வொரு பக்கமும் இலக்கமிடப்பட்டிருப்பதோடு ஒரு பக்கத்தை அகற்றி விடுவதோ புதிய பக்கமொன்றை புகுத்துவதோ செய்யக் கூடாது. ஒவ்வொரு சம்பவத் திரட்டுக் குறிப்பும் தொடரொழுங்கில் இலக்கமிடப்பட்டித்தல் பொருத்தமாகும்.
சம்பவத் திரட்டுப் புத்தகத்தில் குறிப்பினை இடுவதற்கு அதிகாரம் பெற்ற உத்தியோகத்தர்கள்:
- கல்வி அமைச்சு, மாகாண, வலய மற்றும் கோட்டக் கல்விப் பணிமனைகளில் கடமைகளின் நிமித்தம் சமுகந் தரும் பதவிநிலை உத்தியோகத்தர்கள்.
- பாடசாலைக்கு கடமையினிமித்தம் சமுகமளிக்கும் சுகாதார வைத்திய அதிகாரி.
- கணக்காய்வு மற்றும் ஒழுக்காற்று விசாரணை உத்தியோகத்தர்கள்.
- பிரதேச மற்றும் அரச சமாதான நிலை உத்தியோகத்தர்கள்.
சம்பவத் திரட்டுப் புத்தகத்தில் குறிப்பினை இடும் சந்தர்ப்பங்கள்:
- பாடசாலையின் நிருவாகம் மற்றும் முகாமைத்துவத்திற்குரிய விசேட சந்தர்ப்பங்கள்.
- கடமையினிமித்தம் அதிபர் வெளியில் செல்லுதலும் கடமை நிறைவேற்றுதலும்.
- கல்விசார் மற்றும் கல்விசாரா பணிக்குழு உறுப்பினர்கள் பாடசாலைக்கு நியமிக்கப்படுதல்/ இடமாற்றம்/ பதவி உயர்வு/ ஓய்வு பெறுதல்.
- பாடசாலையில் விசேட பிரச்சினைகள் உருவாகும் பட்சத்தில் (திருட்டு ஒன்று இடம்பெற்றுள்ள போது, ஒழுக்காற்று பிரச்சினையொன்று உருவாகும் பட்சத்தில், திடீர் மரணமொன்று ஏற்படும் பட்சத்தில், எதிர்பாராத சுற்றாடல் பிரச்சினையொன்று).
- கல்விசார் மற்றும் கல்விசாரா பணிக்குழு உறுப்பினர்களுக்கு வீட்டிலிருந்து கடமை நிலையத்திற்கு சமுகமளித்தல், திரும்பிச் செல்லுதல், கடமையினிமித்தம் வெளியில் செல்லும்போதும் திரும்பி வரும்போதும் அல்லது கடமை நிலையத்தில் வைத்து திடீர் விபத்து ஏற்படுதல்.
- மாணவரோடு தொடர்புடைய விசேட நிகழ்வுகள்.
- பாடசாலையில் இடம்பெறும் விசேட நிகழ்வுகளும் விழாக்களும்.
- பாடசாலையின் கல்விசார் மற்றும் கல்விசாரா பணிக்குழு உறுப்பினர்கள் வெளிநாட்டு லீவு பெற்றுக் கொள்ளுதலும் மீண்டும் சமுகமளித்தலும்.
- பாடசாலையின் கல்விசார் மற்றும் கல்விசாரா பணிக்குழு உறுப்பினர்கள் முழு நேர கற்றல் விடுகையைப் பெற்றுக் கொள்ளுதலும் மீண்டும் சமுகமளித்தலும்.
6.3.2 மாணவர்களை அனுமதித்தல், வகுப்பேற்றம் செய்தல் மற்றும் விலக்கிக் கொள்ளுதல்
- அனைத்து சேர்வு இடாப்புகளும் இலக்கமிடப்பட்டு பாதுகாப்பாக அதிபரின் பொறுப்பில் வைத்துக் கொள்ளுதல்.
- பாடசாலைக்கு முதல் தடவையாக சேர்க்கப்படும் ஒவ்வொரு மாணவருக்கும் சேர்வு இலக்கம் வழங்குதல்.
- ஒவ்வொரு மாணவரதும் மாணவர் அடையாள இலக்கமாக (பாடசாலை தொகை மதிப்பு இலக்கம் + மாணவர் சேர்வு இலக்கம்) பதிவில் குறிப்பிட வேண்டும்.
- யாராவது ஒரு மாணவர் வேறு பாடசாலையிலிருந்து இப்பாடசாலைக்கு சேர்க்கப்படுவாராயின் அப் பாடசாலையின் மாணவர் விடுகைப்பத்திரத்திற்கிணங்க சேர்வு இடாப்பில் உரிய தகவல்களை குறித்தல்.
- வேறு பாடசாலையிலிருந்து சேர்க்கப்படும் மாணவரது அடையாள இலக்கத்தைக் குறிப்பிடும் போது அம் மாணவர் முதல் தடவையாக அனுமதிக்கப்பட்ட பாடசாலையின் தொகைமதிப்பு இலக்கம்/ மாணவர் சேர்வு இலக்கம் குறிக்கப்படுதல் வேண்டும்.
- அப் பாடசாலையிலிருந்து மாணவர் ஒருவர் விலகி வேறொரு பாடசாலைக்குச் சென்று பிரிதொரு சந்தர்ப்பத்தில் மீண்டும் அப்பாடசாலைக்கு அனுமதிக்கப்படுவாரேயானால் முன்னர் வழங்கப்பட்டிருந்த மாணவர் அடையாள இலக்கத்தையே மீண்டும் வழங்கி அம் மாணவர் தொடர்பான தகவல்களை மீண்டும் சேர்வு இடாப்பில் உட்படுத்தி அடையாள இலக்கத்தை சிவப்பு நிறத்தில் எழுதி எதிரே R எழுத்தை குறிக்க வேண்டும்.
- மாணவர்களை ஒரு வகுப்பிலிருந்து அடுத்த வகுப்பிற்கு வகுப்பேற்றம் செய்யும் போது அம் மாணவர் சேர்வு இடாப்பை வருடாந்தம் தற்காலப்படுத்துதல் அத்தியாவசியமாகும்.
- மாணவர்களின் தொடர்ச்சியான வரவின்மை தொடர்பாக சுற்றுநிருப விதிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
- சேர்வு இடாப்புகளில் மிகத் தெளிவாக குறிப்புகளை இட வேண்டியதோடு இடப்படும் குறிப்புகளை மாற்றம் செய்தல் (அழிப்பதற்கான திரவத்தை பயன்படுத்துதல், கீறிவிடுதல், வெட்டிவிடுதல்) ஆகாது.
(இது தொடர்பாக கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள 25/2007 சுற்றுநிருப விதிகளுக்கு அமைய செயலாற்றுதல் வேண்டும்)
6.3.3 மாணவர் விடுகைப் பத்திரம் (B 59)
- மாணவர் விடுகைப் பத்திரம் அதிபராலேயே வழங்கப்படுதல் வேண்டும். அதிபர் பாடசாலையில் இல்லாத சந்தர்ப்பத்தில் மாத்திரம் உரிய முறையில் அதிகாரமளிக்கப்பட்ட நபரொருவருக்கு அது தொடர்பாக செயலாற்ற முடியும்.
- மாணவர் விடுகைப் பத்திரத்தில் மாணவர் அடையாள இலக்கத்தை உட்படுத்துதல் கட்டாயமாகும்.
- இது சட்ட ரீதியான ஆவணமொன்று என்பதால் அனைத்துத் தகவல்களினதும் பிழையற்ற தன்மை தொடர்பாக அதிபர் பொறுப்பினை ஏற்க வேண்டும்.
- மாணவர் விடுகைப் பத்திரம் வழங்குதல் தொடர்பாக மாணவர் சேர்வு இடாப்பில் குறிப்பிடப்படுதல் வேண்டும்.
- மாணவர் ஒருவர் பாடசாலையிலிருந்து விலகிச் செல்லும் சந்தர்ப்பத்தில் பாடசாலையில் சேர்ப்பதற்கு சமுகமளித்த நபரே சமுகமளித்தல் வேண்டும். அவ்வாறு இல்லையெனில் பிள்ளையின் சட்ட ரீதியான பாதுகாவலர் (சட்ட ரீதியான பாதுகாவலராக நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பாதுகாப்பிற்கான உரிமையை பெற்றிருந்தால் மாத்திரம்) என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
- தாய்/தந்தை அல்லது சட்ட ரீதியான பாதுகாவலரின் எழுத்துமூலமான கோரல் பெற்றுக் கொள்ள வேண்டும்.
- விசேஷித்த சந்தர்ப்பங்களில் உரிய ஆவணங்களின் பிழையற்ற தன்மையை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர் மாத்திரமே மாணவர் விடுகைப்பத்திரத்தை வழங்க வேண்டும்.
- விடுகைப்பத்திரத்தைப் பெற்றுக் கொண்ட பின் இடாப்பில் கையொப்பத்தைப் பெற்று திகதியைக் குறிப்பிடுதல் வேண்டும். வயது பூர்த்தியானதன் பின்னர் பாடசாலையிலிருந்து விலகிச் சென்ற ஒருவரால் விடுக்கப்படும் கோரிக்கை இதன்போது செல்லுபடியாகும்.
- இரண்டாவது பிரதியொன்றுக்கான தேவையேற்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட விண்ணப்பத்தாரியால் சத்தியக் கடிதத்துடன் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு விண்ணப்பிக்க வேண்டியதோடு வலயக் கல்விப் பணிப்பாளரின் கட்டளையின் அடிப்படையில் மாத்திரம் அதிபரால் உரிய இரண்டாவது பிரதி வழங்கப்பட வேண்டும்.
- இரண்டாவது பிரதியை வழங்கும் போது மாணவர் சேர்வு இடாப்பிலும் மாணவர் விடுகைப் பத்திரத்திலும் சிவப்பு மையினால் "இரண்டாம் பிரதி வழங்கப்படுகின்றது" என குறிப்பிட வேண்டும்.
- வலயக் கல்விப் பணிமனையிலிருந்து பாடசாலைக்கு கொண்டுவரப்படும் மாணவர் விடுகைப் பத்திரத்தை வழங்குவதற்கான புத்தகங்களை பயன்படுத்துவதற்கு முன்னர் பாடசாலையிலுள்ள அடிச் சீட்டுப் பதிவில் உள்ளடக்க வேண்டும்.
- மாணவர் விடுகைப்பத்திரம் வழங்குவதற்குரிய அனைத்து ஆவணங்களையும் முறையாக கோவைப்படுத்தி பாதுகாப்பாக வைத்தல் வேண்டும்.
6.3.4 மாணவர் வரவு இடாப்பு (கல்வி C 31)
- வரவு இடாப்பினை முறையாகவும் நேர்த்தியாகவும் பேணுதல் வகுப்பாசிரியர்களின் பொறுப்பாகும்.
- மாணவர்களின் பெயர்களை வரவு இடாப்பில் குறிப்பிடும் போது ஆண் மற்றும் பெண் பிள்ளைகளின் பெயர்களை வெவ்வேறாக எழுத வேண்டியதோடு, மாணவர் சேர்வு இலக்க ஒழுங்குமுறைக்கு இணங்க அவை எழுதப்பட வேண்டும்.
- தினசரி வரவு இடாப்பில் வரவைக் குறித்தலும் அதனை பிழையற்றதாகவும் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் பயன்படுத்துதலும் பேணுதலும் வகுப்புப் பொறுப்பு ஆசிரியரின் பொறுப்பாவதோடு அப் பணிகளை கண்காணிக்கும் பொறுப்பு அதிபரைச் சார்ந்ததாகும்.
- ஒரு நடப்பு வருடத்திற்கென பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட பின் பாடசாலைக்கு சேரும் மாணவர் ஒருவரை சேர்க்கப்பட்ட தினத்திலேயே வரவு இடாப்பில் பெயரை எழுதி வரவைக் குறிப்பதோடு அதற்கு முந்திய தினத்தை சிவப்பு பேனையினால் கோடு கீறி வெட்டிவிடுதல் வேண்டும். இங்கு குறிப்பிடப்படுகின்ற சேர்க்கப்படும் மற்றும் விலக்கிக் கொள்ளும் திகதிகள் மாணவர்களை சேர்த்தல் மற்றும் விலக்கிக் கொள்ளுதல் தொடர்பான இடாப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவாறே இருத்தல் வேண்டும்.
- வரவு இடாப்பில் மாணவர்களின் வரவை தினசரி, வாராந்த, மாதாந்த மற்றும் வருடாந்த சுருக்கத்தைத் தயாரித்தல் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
- வருகைத் தராத மாணவர் தொடர்பாக விசேட கவனஞ் செலுத்துதலும் மாணவர்களின் வரவின்மையைக் குறைப்பதற்காகவும் தேவையான நடவடிக்கை எடுத்தலுக்கும் வரவு இடாப்பில் காணப்படும் தகவல்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
- வருட இறுதியில் முழுத் தொகையை தயாரித்து பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தருக்கு வழங்குதல் கட்டாயமாகும். அதன் மேற்பார்வைக்கு அதிபர் கவனஞ் செலுத்தல் வேண்டும்.
- தினசரி வரவுச் சுருக்கத்தை இரண்டாம் பாடவேளையின் ஆரம்பத்திற்கு முன்னர் அதிபர் அலுவலகத்திற்குப் பெற்றுக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வகுப்பினதும் மாணவர் வரவுத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு மொத்த எண்ணிக்கைக்கான புத்தகமொன்றை பேண வேண்டும்.
- மாணவர் வரவு இடாப்பின் இறுதிப் பக்கத்திலுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும்.
- இது பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய ஆவணமென்பதால் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
- மாணவர் வரவு இடாப்புகளில் மிகத் தெளிவாக குறிப்புகளை இட வேண்டியதோடு இடப்படுகின்ற குறிப்புகளை மாற்றம் செய்தலை (அழிப்பதற்கான திரவத்தை பயன்படுத்துதல், கீறிவிடுதல், வெட்டிவிடுதல்) மேற்கொள்ளுதல் ஆகாது.
6.3.5 கல்விசார்/கல்விசாரா பணிக்குழுவினரின் வரவுக் கையொப்பப் பதிவு (பொது 18)
- கல்விசார் மற்றும் கல்விசாரா பணிக்குழுவினருக்காக வெவ்வேறான வரவு இடாப்பினை பேணுதல் வேண்டும்.
- விசேட கடமை நேரங்களுக்கு உரித்தான காவலாளிகள் / விடுதிகளுக்குப் பொறுப்பான உத்தியோகத்தர்கள் போன்ற பதவிகளுக்காக வெவ்வேறாக வரவு கையொப்ப இடாப்பு பேணுதல் வேண்டும்.
- வரவு கையொப்ப இடாப்பில் முதல் பக்கத்தில் பெயர், இலக்கம் மற்றும் மாதிரிக் கையொப்பம் என்பனவற்றை (சுருக்க மற்றும் நெடும் கையொப்பம்) உள்ளடக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
- வரவு கையொப்ப இடாப்பில் கோடுகளுக்கு இடையில் இடைவெளி விடப்படக் கூடாது.
- வருகைத் தரும் போதும் வெளியேறும் போதும் கட்டாயமாக கையொப்பமிடப்பட வேண்டியதோடு நேரத்தையும் உரிய நபருக்குரிய இலக்கத்தையும் பிழையின்றி குறித்தல் வேண்டும்.
- சுற்றுநிருபங்கள் மற்றும் அறிவுறுத்தல்களுக்கு இணங்க உரிய நேரத்தில் கையொப்ப இடாப்பை நிறைவு செய்து வருகைத் தராத நபர்களின் பெயர்கள் சிவப்பு மையினால் எழுதப்பட வேண்டும். (முதல் நிறைவு பாடசாலை ஆரம்பிக்கப்படுவதற்கு உரிய நேரமாவதோடு இரண்டாம் நிறைவு முதலாம் நிறைவிலிருந்து 15 நிமிடங்களின் பின்னராகும். மூன்றாவது நிறைவு பாடசாலை ஆரம்பிக்கப்படுவதற்கு உரிய நேரத்திலிருந்து 30 நிமிடங்களுக்குப் பின்னராகும்.) அன்றாடம் வருகைத் தந்தவர்களின் எண்ணிக்கையைக் குறித்து வைத்தல் வேண்டும்.
- தினசரி வரவு இடாப்பில் மாற்றம் செய்தல், கீறிவிடுதல் அல்லது அழிப்பதற்கான திரவத்தை பயன்படுத்தக் கூடாது.
- பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினால் கொடுப்பனவு வழங்கப்படுகின்ற தற்காலிக ஊழியர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்காக வெவ்வேறாக கையொப்ப இடாப்பினை பயன்படுத்த வேண்டும்.
- அனைத்து வரவு இடாப்புகளையும் தினசரி பரிசீலித்து உரிய முறையில் நிறைவு செய்தல் அதிபர் அல்லது அதிகாரமளிக்கப்பட்ட ஒருவரால் மேற்கொள்ளப்பட வேண்டும்.
- கடமை நேரத்தினுள் குறுகிய காலத்திற்கு பாடசாலைக்கு வெளியே கடமை நடவடிக்கைக்காக வெளியில் செல்லும் போது குறிப்பினை இடுவதற்காக வெளியில் செல்வதற்கான பதிவு ஒன்றை பேணுதல் வேண்டும்.
- கல்விசார் மற்றும் கல்விசாரா பணிக்குழவினருக்காக விவரங்களைத் தற்காலப்படுத்தி பேணுதல் வேண்டும்.
- C-31 இடாப்பினை அச்சிடப்பட்ட வரவு கையொப்ப இடாப்பு (பொது 18) இல்லாதவிடத்து தற்காலிக தீர்வாக CR புத்தகமொன்றைப் பயன்படுத்தி உரிய படிவத்திற்கிணங்க தயாரித்து பக்கங்களை இலக்கமிட்டு எல்லா பக்கத்திலும் வலயக் கல்விப் பணிப்பாளரின் பதவி முத்திரை வைத்து காரணத்தைக் குறிப்பிட்டு சம்பவத் திரட்டுக் குறிப்பொன்றை இடுவதன் பின்னர் பயன்படுத்த முடியும். இருப்பினும் அச்சிடப்பட்ட உரிய படிவத்தைக் கொண்ட இடாப்பு கிடைக்கப்பெற்ற பின் இந்த CR புத்தகத்தை முடிவுக்குக் கொண்டு வந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுதல் வேண்டும்.
- விரல் அடையாள இயந்திரத்தைப் பயன்படுத்தும் சந்தர்ப்பங்களிலும் வரவு கையொப்ப இடாப்பு ஒன்றைப் பயன்படுத்த வேண்டும்.
0 Comments