Principal Guide Book Chapter 6
பகுதி 2 இற்குச் செல்ல இங்கு கிளிக் செய்யவும்
உள்ளடக்கம்
- 6.1. அறிமுகம்
- 6.2. கல்வி முகாமைத்துவ தகவல் முறைமை
- 6.3. ஆவண முகாமைத்துவம்
- 6.3.1. சம்பவத் திரட்டுப் புத்தகம்
- 6.3.2. மாணவர்களை அனுமதித்தல், வகுப்பேற்றம் செய்தல் மற்றும் விடுகை செய்வதற்கான பதிவு
- 6.3.3. மாணவர் விடுகைப் பத்திரம்
- 6.3.4. மாணவர் வரவு இடாப்பு
- 6.3.5. கல்விசார்/கல்விசாரா பணிக்குழுவினரின் வரவு கையொப்ப பதிவு
- 6.3.6. லீவு பெற்றுக் கொள்ளுதல் மற்றும் லீவு பதிவு
- 6.4. கோவைகளைப் பேணுதல்
- 6.5. புகையிரத ஆணைச் சீட்டு
- 6.6. தினசரி தபால்
- 6.7. பணிக்குழுவினர் தேவையை கணக்கிடுதல்
- 6.8. தேசிய பரீட்சைகளுக்கு மாணவர்களை அனுப்புதல்
- 6.9. ஆவணச் செயற்பாடுகளை முறைமையாக்குதலும் அடையாளக் குறியீடுகளை இடுதலும்
6.3.6 லீவு பெற்றுக் கொள்ளுதலும் லீவு இடாப்பும் (பொது 190)
- லீவு பெற்றுக் கொள்ளும் போது பொது 125 படிவத்தை முறையாக பூர்த்தி செய்து முன் அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
- அவசர சந்தர்ப்பங்களில் லீவு பெற்றுக் கொள்ளும் போது வருகைத் தராத தினத்தை உள்ளடக்கிய தந்தி / தொலைபேசி தொடர்பு / வேறு முறையியலினூடாக அதிபருக்கு அறிவிக்க வேண்டியதோடு இது தொடர்பான குறிப்பினை இடுவதற்காக வேறான ஒரு புத்தகத்தை பாடசாலையில் பயன்படுத்த வேண்டும்.
- அவ்வாறான சந்தர்ப்பங்களில் மீண்டும் கடமைக்கு சமுகமளித்த பின் உடனடியாக முறையான லீவு விண்ணப்பத்தினூடாக அந்த லீவை அனுமதித்துக் கொள்ள வேண்டும்.
- கல்விசார் அல்லது கல்விசாரா பணிக்குழுவின் பணியாளர் ஒருவர் லீவு அனுமதித்துக் கொள்ளாமல் அறிவிக்காது கடமைக்கு சமுகமளிக்காத சந்தர்ப்பங்களில் அது தொடர்பாக வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவிக்க வேண்டும்.
- கல்விசார் அல்லது கல்விசாரா பணிக்குழுவினருக்கு வெவ்வேறாக லீவு இடாப்புகளை வைத்துக் கொள்ள வேண்டும்.
- வரவு இடாப்பை அடிப்படையாகக் கொண்டு லீவு இடாப்பை தயாரித்துக் கொள்ள வேண்டியதோடு ஒரு நபருக்கு ஒரு பக்கம் வீதம் வேறாக்கி லீவினைக் குறிக்க வேண்டும்.
- இதன்போது உத்தியோகத்தரின் பெயர், பதவி, முதல் நியமனத் திகதி மற்றும் கடந்த மூன்று வருடங்களில் பெற்றுக் கொண்ட லீவுகளின் சுருக்கத்தை குறிக்க வேண்டியதோடு வசதி கருதி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலக்கத்தை குறித்துக் கொள்ளுதல் வேண்டும்.
- லீவு பெற்றுக் கொண்ட தினங்கள் / லீவு பெற்றுக் கொண்டமைக்கான காரணம் என்பன குறிப்பிடப்பட வேண்டியதோடு அனுமதித்துக் கொண்டுள்ள லீவு வகைகளுக்கு இணங்க லீவு இடாப்பில் உரிய கோட்டில் வெவ்வேறாக தகவல்களை குறிக்க வேண்டும்.
- குறுங்கால லீவு விண்ணப்பத்திற்காகவும் குறிப்பதற்காகவும் வேறான பதிவினை பேணுதல் வேண்டும்.
- வேறு பாடசாலைக்கோ அல்லது நிறுவனத்திற்கோ தற்காலிக இணைப்பு செய்யப்பட்டிருக்கும் கல்விசார் / கல்விசாரா பணிக்குழுவின் அனைவரதும் லீவு விபரங்களை கல்வி B100 மூலம் மாதாந்தம் சம்பளம் பெறும் நிறுவனத்திற்கு / பாடசாலைக்கு வழங்க வேண்டும்.
- வருடாந்தம் உரித்து லீவுகளுக்கு மேலதிகமாக லீவு பெற்றுக் கொள்ளும் போது (B100 படிவத்தின் மூலம்) சம்பளமற்ற லீவு விபரத்தை வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவிக்க வேண்டும்.
- அதிபர் அல்லது அவரால் அதிகாரமளிக்கப்பட்ட ஒருவரால் லீவு இடாப்பை தொடர்ச்சியாக மேற்பார்வை செய்து கையொப்பமிடுதல் வேண்டும்.
- இடமாற்றம் பெற்றுச் செல்லும் சந்தர்ப்பத்தில் அன்றைய தினம் வரை பெற்றுக் கொண்டுள்ள அனைத்து லீவு தொடர்பான விபரங்களின் சுருக்கமொன்றை கல்வி B100 மூலம் புதிய சேவை நிலையத்திற்கு அனுப்ப வேண்டும்.
- லீவு இடாப்பை தற்காலப்படுத்திப் பேணுவதோடு வருடாந்தம் மொத்தம் கூட்டி பின்னர் அதிபர் அல்லது அதிகாரமளிக்கப்பட்ட ஒருவரால் ஒவ்வொரு பக்கத்திலும் கையொப்பமிடுதல் வேண்டும்.
- பிந்தி வருகைத் தருவதற்காக வேறான பதிவினை பேணுவதோடு முதல் அரை மணித்தியாலத்தில் பிந்தி வருகைத் தந்த 03 தடவைக்காக ½ நாள் வீதமும் அந்த நேரத்தின் பின் பிந்தி வருகைத் தரும் ஒவ்வொரு தடவைக்கும் ½ நாள் வீதம் லீவு வழங்க வேண்டும்.
6.3.6.1 வெளிநாட்டு லீவுக்காக விண்ணப்பித்தல்
தனிப்பட்ட வெளிநாட்டு லீவு கோரி விண்ணப்பிக்கும் போது 03 மாதங்கள் வரை குறுகிய கால அடிப்படையிலான லீவு கோருவதோடு தொழில் அல்லது கற்கை செயற்பாடுகளுக்காக நீண்ட கால லீவு கோரி விண்ணப்பிக்க முடியும்.
பணிக்குழு உறுப்பினர்கள் வெளிநாட்டு லீவு கோரி விண்ணப்பிக்கும் போது பொது 126 படிவத்தில் லீவுக்காக விண்ணப்பிக்க வேண்டும். அதன்போது சமர்ப்பிக்க வேண்டியவை:
- லீவு விண்ணப்பக் கடிதம்
- சேவையில் நிரந்தரப்படுத்தப்பட்டக் கடிதம்
- பதில் கடமை நிறைவேற்றல் கடிதம்
- வருடத்தில் மீதியாக உள்ள லீவு
- உரிய பின்னிணைப்பு
- தேசிய அடையாள அட்டை / வெளிநாட்டுக் கடவுச் சீட்டின் போட்டோ பிரதியொன்று.
- தனிப்பட்ட கோவை அறிக்கை
- வெளிநாட்டு லீவுக்காக விண்ணப்பிக்கும்போது பதில் கடமை நிறைவேற்றுதல் தொடர்பாக அதிபரின் சிபாரிசு அத்தியாவசியமாகும்.
- கற்கைச் செயற்பாடுகளுக்காக இருப்பின் கல்வியைப் பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கும் கல்வி நிறுவனத்திலிருந்து கிடைக்கப்பெற்ற அழைப்புக் கடிதத்தை சமர்ப்பித்தல் வேண்டும்.
- தொழில் நிமித்தம் வெளிநாடு செல்லும் சந்தர்ப்பத்தில் செல்லும் நாட்டின் தொழில் வழங்கும் நிறுவனத்தில் தொழிலுக்காக செலவிடும் தினங்களின் எண்ணிக்கையுடன் வழங்கப்படும் நியமனக் கடிதம், அக் காலத்தில் பதில் கடமை நிறைவேற்றல் கடிதம் மற்றும் அரசாங்கத்திற்கு அறவிடப்பட வேண்டிய அனைத்து பணத் தொகையையும் மீளச் செலுத்தியதாக உரிய பற்றுச்சீட்டின் பிரதி அல்லது கடிதத்துடன் விண்ணப்பத்தை சமர்ப்பிக் வேண்டும்.
- தேசிய பாடசாலையொன்று எனின் வலய மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக நிரல் கல்வி அமைச்சின் செயலாளருக்கு சமர்ப்பித்து அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
- மாகாண பாடசாலையொன்று எனின் வலய, மாகாண கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் மாகாணக் கல்விச் செயலாளர் ஊடாக மாகாண ஆளுனருக்கு சமர்ப்பித்து அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
- நீண்ட கால லீவை திருத்தம் செய்யும் போது கீழ்க் காணப்படும் ஆவணங்களை அதிபர், வலய மற்றும் மாகாண சிபாரிசுகளுடன் சமர்ப்பித்தல் வேண்டும்:
- உத்தியோகத்தரின் கோரல் கடிதம்.
- உரிய தினங்கள் உறுதிப்படுத்தப்படும் வகையில் வெளிநாட்டுக் கடவுச் சீட்டின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி.
- தொழில்/கல்வி நிறுவனத்தில் தொழில்/ பாடநெறியின் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக வழங்கப்பட்டுள்ள கடிதத்தின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி.
வெளிநாட்டு லீவைக் கணக்கிடுதல்
- சமையோசித லீவைக் கணக்கிடும் போது வார இறுதி இரண்டு நாட்கள் மற்றும் பொது விடுமுறைகளை தவிர்த்து கணக்கிடல்.
- பாடசாலை நடாத்தப்படும் காலத்தினுள் தனிப்பட்ட தேவைகளுக்காக வெளிநாடு செல்லும் போது அந்த லீவு காலத்திற்கு கணக்கிடப்படும் வார இறுதி விடுமுறைகள் மற்றும் பொது விடுமுறைகள் சம்பளமற்ற லீவாக கணக்கிடப்படும்.
- பாடசாலை விடுமுறை காலத்தினுள் வெளிநாடு சென்றிருக்கும் போது அது சம்பளத்துடனான லீவாகக் கருதப்படும்.
- சம்பளமற்ற லீவு காலத்தினுள் சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை தினங்கள் சம்பளமற்ற லீவாகக் கருதப்படும்.
- தனிப்பட்ட, கற்கை அல்லது தொழில் பணிகளுக்காக 01 வருடத்திலிருந்து 05 வருடம் வரை வெளிநாட்டு லீவு பெற்றுக் கொள்ளும்போது அந்த முழுக் காலமும் சம்பளமற்ற லீவாக கருதப்படும்.
மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லுதல்
- இணைக்கலைத்திட்ட மற்றும் புறகிருத்தியச் செயற்பாடுகளுக்காக மாணவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் சந்தர்ப்பங்களில் தேசிய பாடசாலையெனின் வலய மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக நிரல் கல்வி அமைச்சின் செயலாளருக்கு சமர்ப்பித்து அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
- மாகாண பாடசாலையெனின் வலய மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக நிரல் கல்வி அமைச்சின் செயலாளருக்கு சமர்ப்பித்து அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
- பாடசாலை கழகங்கள் ஊடாக வெளிநாட்டு போட்டிகளுக்கு பங்கேற்கும் சந்தர்ப்பங்களில் அவ்வாறு பங்கேற்பதற்கு அழைப்பு மற்றும் விளையாட்டு வீரர்களைத் தெரிவு செய்யும் நடைமுறை மற்றும் பங்கேற்கும் ஆசிரிய ஆசிரியைகளைத் தெரிவு செய்து கொள்ளும் அடிப்படை மற்றும் அதற்காக நிதி பெற்றுக் கொள்ளும் விதம் தொடர்பாக தெளிவான விபரமொன்றை சமர்ப்பித்து அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
- தனிப்பட காரணங்களின் அடிப்படையில் மாணவர்கள் வெளிநாடு செல்லும் சந்தர்ப்பங்களில் தேசிய பாடசாலையெனின் உரிய படிவத்தை பூரணப்படுத்தி அதிபர், வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஊடாக நிரல் கல்வி அமைச்சுக்கு சமர்ப்பித்து அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
- மாகாண பாடசாலையெனின் வலயக் கல்விப் பணிப்பாளர் ஊடாக மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு சமர்ப்பித்து அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
6.3.6.2 குறுங் கால லீவு
- கல்விசார் பணிக்குழு உறுப்பினர்களுக்காக ஒரு நாளில் ஒரு மணித்தியாலம் வீதமும் கல்விசாரா பணிக்குழு உறுப்பினர்களுக்காக ஒரு நாளில் 1½ மணித்தியாலம் வீதம் ஒரு மாதத்தில் இரண்டு நாட்கள் குறுங்கால லீவு பெற்றுக் கொள்ள முடியும்.
- குறுங்கால லீவுப் பதிவேட்டில் குறித்து முன் அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
6.3.6.3 அரை நாள் லீவு
- கடமைக்கு சமுகமளித்த பின் தினசரி சேவை மணித்தியாலங்களில் அரைப் பகுதி பணியாற்றிய பின்னரே அரை நாள் லீவு பெற்றுக் கொள்ள முடியும்.
6.3.6.4 சமயோசித லீவு
- ஒரு தடவையில் 6 நாட்களுக்கு மேற்படாத வகையில் ஒரு வருடத்தில் 21 நாட்கள் சமயோசித லீவு பெற்றுக் கொள்ள முடியும்.
- அவ்வாறு இருப்பினும் தனது திருமணத்திற்காக 14 நாட்கள் வரை லீவு பெற்றுக் கொள்ள முடியும்.
6.3.6.5 சுகயீன லீவு
- 2 நாட்களுக்கு மேல் சுகயீன லீவு பெற்றுக் கொள்ளும் போது பதிவு செய்யப்பட்ட வைத்தியர் ஒருவரிடமிருந்து வைத்திய சான்றிதழ் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.
- 6 நாட்கள் வரையான சுகயீன லீவை தனது சமயோசித லீவில் குறைத்துக் கொள்ள முடியும்.
- நீண்ட காலத்திற்கு லீவு தேவைப்படும். சுகயீனத்தின் போது தாபனக் கோவை விதிகளுக்கு அமைவாக செயலாற்ற வேண்டும்.
6.3.6.6 காலங் கடந்த ஓய்வு லீவு
- நடப்பு வருடத்தில் ஒய்வு லீவு நிறைவு பெறும் பட்சத்தில் வைத்திய சான்றிதழினூடாக உறுதிப்படுத்தப்படும் சுகயீன காரணங்களுக்காக முந்திய வருடத்தின் லீவு காலங் கடந்த லீவாக பெற்றுக் கொள்ளும் உரித்து உண்டு.
- முந்திய வருடத்தின் ஈடு செய்ய முடியாத பட்சத்தில் தனது முந்திய சேவை காலத்தினுள் அண்மித்த 02 வருடங்களில் பெற்றுக் கொள்ளாது மீதப்படுத்திக் கொண்டுள்ள சுகயீன லீவினை சம்பளத்துடனான காலங் கடந்த லீவாக பெற்றுக் கொள்வதற்கு உரித்துண்டு.
- வலயக் கல்விப் பணிப்பாளர் ஊடாகவே காலங் கடந்த லீவு அனுமதிக்கப்படும்.
6.3.6.7 பிரசவ லீவு
- குழந்தை உயிருடன் பிறக்கும் ஒவ்வொரு பிரசவத்திற்காகவும் பாடசாலை நடாத்தப்படும் நாட்களில் 84 நாட்கள் சம்பளத்துடனான லீவு பெற்றுக் கொள்ள முடியும். (குழந்தை உயிருடன் பிறக்கும் பிரசவமென கருதப்படுவது குழந்தை பிறந்து 06 வாரங்களுக்கு மேல் உயிருடன் இருக்கும்போதாகும்)
- பிரசவ லீவை அனுமதிக்கும்போது பிள்ளையின் பிறப்புச் சான்றிதழ் பிரதியொன்றோ அல்லது வைத்திய சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
- குழந்தை இறந்து பிறந்த பிரசவமெனின் 42 நாட்கள் சம்பளத்துடனான லீவு பெற்றுக் கொள்வதற்கு உரித்துண்டு. (குழந்தை இறந்து பிறந்த பிரசவமென கருதப்படுவது பிரசவத்தின் போது அல்லது பிரசவம் நிகழ்ந்து 06 வாரங்களில் குழந்தை இறந்து விடும் சந்தர்ப்பத்திலாகும்)
- குழந்தை இறந்து பிறந்த பிரசவமெனின் இறப்புச் சான்றிதழ் பிரதி அல்லது வைத்திய சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
- குழந்தையைப் பராமரிப்பதற்காக தொடர்ந்து லீவு கோரும் பட்சத்தில் தொடர்ச்சியாக 84 நாட்கள் (அனைத்து அரசாங்க விடுமுறைகள் உட்பட சனி மற்றும் ஞாயிறு தினங்கள்) அரைச் சம்பள லீவும் மேலும் லீவு கோரும் பட்சத்தில் தொடர்ச்சியாக 84 நாட்கள் சம்பளமற்ற லீவு பெற்றுக் கொள்ள முடியும்.
- வைத்திய காரணங்களின் அடிப்படையில் தேவையெனின் பிரசவத்திற்கு முன் 02 வாரங்களுக்குக் குறையாத காலத்திற்கு லீவு பெற்றுக் கொள்ள முடியும்.
- இந்த லீவு பிரசவ லீவு 84 ற்கு உட்பட்டதாக கணக்கிடப்பட வேண்டும்.
6.3.6.8 தந்தையருக்கான லீவு
- தனது மனைவிக்கு குழந்தை பிரசவம் நிகழ்ந்து 04 வாரங்களுக்குள் அரச உத்தியோகத்தர் ஒருவருக்கு தந்தையருக்கான லீவை கோர முடியும்.
- இதன் போது தொடர்ச்சியாக அல்லது இடைக்கிடை உச்ச தினங்கள் 03 வரை லீவு பெற்றுக் கொள்ள முடியும்.
- அதற்கென திருமண சான்றிதழ் மற்றும் வைத்திய சான்றிதழ் அல்லது பிள்ளையின் பிறப்புச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
6.3.6.9 விசேட லீவுகள் (இஸ்லாமிய மதம்)
- இஸ்லாமிய சமயத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவருக்கு தனது கணவர் மரணிக்கும் சந்தர்ப்பத்தில் இத்தா மதக் கடமைகளை அனுசரிப்பதற்காக 04 மாதங்களும் 10 நாட்களும் லீவு உரித்தாகும்.
- விவாக ரத்து செய்து கொண்ட இஸ்லாமிய ஆசிரியை ஒருவர் 03 மாதங்களுக்கான விசேட லீவு பெற்றுக் கொள்ளும் உரித்துடையவராவார்.
- இந்த லீவுகள் வழங்கப்படுவது தனது முழு சேவைக்காலத்தினுள் மீதப்படுத்திக் கொண்ட சுகயீன லீவை ஈடு செய்து சம்பளத்துடனான லீவாகவும் அந்த நாட்கள் நிறைவடைந்த பின்னர் அதற்கு மேலதிகமாக லீவு பெறும் பட்சத்தில் அந் நாட்களுக்கான லீவு சம்பளமற்ற லீவாகவும் கணக்கிடப்பட்டேயாகும்.
6.3.6.10 இளைப்பாறுதலுக்கு முந்திய லீவு
- அரச சேவையில் ஓய்வு பெறும் சந்தர்ப்பத்தில் அண்மித்த 03 வருடங்களில் கணக்கிடப்படும் அரசாங்க வேலை நாட்களுக்கு சமனாக மீதப்படுத்திக் கொண்ட லீவு அவர்/அவளுக்கு இருக்குமேயானால் உத்தியோகத்தருக்கு 03 மாதங்களுக்கு மேற்படாது இளைப்பாறுதலுக்கு முந்திய லீவை பெற்றுக் கொள்ள முடியும்.
- அவ்வாறு அண்மித்த 03 மாதக் காலத்தினுள் கணக்கிடப்படும் அரசாங்க வேலை நாட்களுக்கு சமனாக மீதப்படுத்திக் கொண்ட லீவு இல்லையெனின் அவரால் மீதப்படுத்திக் கொண்டுள்ள லீவுகளின் எண்ணிக்கைக்கு சமனான வேலை செய்யும் நட்களின் எண்ணிக்கையை ஓய்வுக்கு முந்திய லீவாக பெற்றுக் கொள்ள முடியும்.
- இதன் போது 2007.01.01 ஆந் திகதியிலிருந்து மீதப்படுத்திக் கொண்ட சமயோசித, ஓய்வு/ சுகயீன லீவினை இதற்காக உரியதாகக் கொள்ள முடியும் என்பதோடு 2006 ஆம் ஆண்டில் மீதப்படுத்திக் கொண்ட லீவினையும் உரித்தாக்கிக் கொள்ள முடியும்.
- இந்த லீவானது வலயக் கல்விப் பணிப்பாளர் ஊடாக அனுமதித்துக் கொள்ள வேண்டும்.
6.4 கோவைகளைப் பேணுதல்
6.4.1 மாணவர்களின் கோவைகள்
ஒவ்வொரு மாணவருக்காகவும் தனிப்பட்ட கோவையொன்றை பேணுவதோடு அதில் கீழ்க் குறிப்படப்பட்டுள்ள ஆவணங்கள் உள்ளடக்கப்பட வேண்டும்.
- பிறப்புச் சான்றிதழ்.
- வேறு பாடசாலையிலிருந்து வருகைத் தந்த மாணவராயின் மாணவர் விடுகைப் பத்திரம்.
- சுட்டெண், அனுமதிக்கப்பட்ட திகதி தயாரிக்கப்பட்ட தனிப்பட்ட தகவல்கள் அடங்கிய படிவம். (பெற்றாரின் தகவல்கள், வதிவிடம்)
இதற்கு மேலதிகமாக மாணவரது சுகாதார மற்றும் போஷணை தொடர்பான தகவல்கள், வெற்றிகள், தலைமைத்துவப் பண்புகள் மற்றும் மாணவர் தொடர்பான விசேட தேவைகள் போன்ற தகவல்களை மாணவரது தனிப்பட்ட கோவையில் உள்ளடக்கலாம்.
6.4.2 பணிக்குழுவினருக்கான தனிப்பட்ட கோவைகள்
- நியமனக் கடிதம், கடமைப் பொறுப்பேற்றல் கடிதம், இடமாற்றல் கடிதம்.
- தனிப்பட்ட தகவல் படிவம்/சுய விபர அறிக்கை.
- கல்வி மற்றும் தொழில் சான்றிதழ்களின் பிரதிகள்.
- செயலாற்றுகை அறிக்கை, படியேற்ற அறிக்கை.
- லீவு விபரங்கள்.
- சேவை விபரம்.
6.4.5 இலவச பாடநூல்கள் தொடர்பான பதிவுகள்
- வருடாந்த பாடநூல்களுக்கான தேவையை பிழையின்றி கணக்கிட்டு பாடசாலையில் பாடநூல்களின் தேவைக்கான பதிவொன்றை பேணுதல் வேண்டும்.
- உரிய படிவங்களுக்கு அமைவாக வகுப்பு மட்டத்தில் நூல்களைப் பகிர்ந்தளிக்கும் பதிவு ஒன்றை பேணுதல் வேண்டும்.
6.5 புகையிரத ஆணைச்சீட்டு
- விடுமுறை புகையிரத ஆணைச் சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது உரிய படிவத்தை பூரணப்படுத்தி விண்ணப்பித்தல் வேண்டும்.
- விண்ணப்பங்களை அனுமதித்தல் நிறைவு பெற்ற பின்னர் புகையிரத ஆணைச் சீட்டுப் பதிவில் பதிந்த பின் ஆணைச் சீட்டை வினியோகித்தல் வேண்டும்.
- புகையிரத ஆணைச் சீட்டு பதிவினை இலக்கமிட்டு பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
6.6 தினசரி தபால்
- பாடசாலைகளுக்கு தபால் மூலம், கையில், தொலைநகல் மற்றும் மின்னஞ்சல் மூலம் கிடைக்கப்பெறும் கடிதங்கள் இவற்றில் அடங்கும்.
- பாடசாலைகளுக்கு கிடைக்கும் கடிதங்களை அதிபர் அல்லது அதிகாரமளிக்கப்பட்ட பிரதி அதிபர் முன்னிலையில் திறக்கப்பட்ட பின் தின முத்திரையை இட்டு சுருக்க கையொப்பத்தை இடுதல் வேண்டும்.
| தொடர் இலக்கம் |
கிடைத்த திகதி |
பதிவு இலக்கம் |
அனுப்பியவரின் பெயர் |
விடயம் |
பொறுப்பேற்றவரின் பெயர் |
சுருக்க ஒப்பம் |
எடுக்கப்பட்ட நடவடிக்கை |
| |
|
|
|
|
|
|
|
| தொடர் இலக்கம் |
அனுப்பப்படும் திகதி |
பதிவு இலக்கம் |
பெறுபவரின் பெயரும் விலாசமும் |
விடயம் |
கடிதம் அனுப்பப்பட்டதற்காக உரிய நபரின் கையொப்பம் |
| |
|
|
|
|
|
6.7 பணிக்குழுவினருக்கான தேவையை கணக்கிடுதல்
- பாடசாலையில் இருக்க வேண்டிய பணிக்குழுவினர் எண்ணிக்கையை கணக்கிடுதலை கல்வி அமைச்சினால் வெளியிடப்படும் சுற்றுநிருபங்கள் மற்றும் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.
- பணிக்குழுவினருக்கான தேவை, பற்றாக்குறை மற்றும் மேலதிகம் என்பனவற்றைக் கணக்கிட்டு உரிய காலத்தினுள் உரிய நிறுவனங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
6.8 தேசிய பரீட்சைகளுக்காக மாணவர்களை அனுப்புதல்
- தயாரித்துக் கொண்ட படிவத்தின் மூலம் பரீட்சைக்குரிய தகவல்களை சேகரித்தல்.
- தேசிய அடையாள அட்டைகளை உரிய காலத்தில் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்.
- அனுமதி அட்டையை உரிய காலத்தினுள் பெற்றுக்கொள்ளுதல், தாமதமின்றி மாணவர்களுக்கு பகிர்ந்தளித்தல்.
6.9 ஆவணச் செயற்பாடுகளை முறையாக்கலும் குறியீட்டுச் செயன்முறையும்
பாடசாலையிலுள்ள அனைத்து ஆவணங்களையும் வகைப்படுத்தலுக்கு உட்படுத்தி பொருத்தமான நிறங்களில் கோவைப் படுத்துதலும் பொருந்தக் கூடிய குறியீட்டினூடாக அவற்றை இலக்கமிடுதலினூடாகவும் பணிகளை தரப்படுத்திக் கொள்ள முடியும்.
நிறக் குறியீடு (உதாரணம்):
- நிருவாக ஆவணங்கள் - சிவப்பு நிறத்தில்
- நிதி தொடர்பான ஆவணங்கள் - நீலம்
- அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கான ஆவணங்கள் - பச்சை
- விளையாட்டு மற்றும் இணைக் கலைத்திட்ட ஆவணங்கள் - மஞ்சள்
WP / HO / JJ / Ad / st'En / 01
- WP: மாகாணம் (Western Province)
- HO: வலயம்
- JJ: பாடசாலை
- Ad: நிருவாக கோவை (Administration)
- st'En: விடயக் கோவை (Student Enrolment)
- 01: கோவை இலக்கம்
SP / HT / RMV / Fi / Vou-Jan-01
- SP: மாகாணம்
- HT: வலயம்
- RMV: பாடசாலை
- Fi: நிதி (Finance)
- Vou-Jan-01: விடயங்கள் (வவுச்சர்- ஜனவரி மாத கோவை 01)
0 Comments