>

ad

18. பிரசவ விடுமுறை - மற்றும் 19 முதல் 21 வரையான பகுதிகள்- அரசாங்க லீவு தொடர்பான பதிவின் 4 வது பகுதி

04 ஆம் பகுதி

அரச உத்தி​யோகத்தர்களின் லீவு

தாபான விதிக்கோவை அத்தியாயம் XII




லீவு தொடர்பான பதிவின் முதலாது பகுதியை கீழ்வரும் லிங்கில்வாசிக்கலாம்.

இரண்டாம் பகுதி





19. பிரசவ லீவு



  • நிரந்தர, தற்காலிக, அமைய அல்லது பயிலுனர் என்ற எந்த வகையான நியமனம் பெற்றவர்களும் உரித்துடையதாகும்.
  • சம்பளத்துடனான பிரசவ விடுமுறை
    • அனைத்து குழந்தைப் பிரசவங்களுக்கும் உரித்துடையதாகும்.
    • லீவு 84 தினங்களுக்கு பெறலாம்.
    • பிரசவம் நிகழ்ந்து 4 வாரங்களாகும்வரை உத்தியோகத்தரை  கடமைக்கு வருவதற்கு இடமளிக்கப்படுவதில்லை
    • இந்த லீவு பெறுவதற்காக வைத்திய அறிக்கை அல்லது குழந்தையின் பிறப்புச் சான்றிதழ்அவசியமாகும்.
    • சனி ஞாயிறு அரச விடுமுறைகள் தவிர்ந்த அடிப்படையில்  வேலை நாட்கள் மாத்திரம் கணக்கிடப்படும். 
    • இது பூரணமாக வழங்கப்படுகின்ற விசேடமான லீவாகும்.இது மற்றைய லீவுகளிலிருந்து கழிக்கப்படுவதில்லை
    • பிறக்கும் போது குழந்தை மரணித்தாலோ அல்லது குழந்தை பிறந்து 6 வாரங்களுக்குள் குழந்தை மரணித்தாலோ,  குழந்தை பிறந்த நாள் முதல் 6 வாரங்கள் விடுமுறை உரித்தாகின்றது.
  • அரைச் சம்பள லீவு
    • மேற்படி 84 நாள் லீவு முடியும் போது பெறலாம்.
    • இந்த லீவும் 84 நாட்கள் வழங்கப்படும்.
    • சனி ஞாயிறு அரச விடுமுறைகள் சேர்த்தே கணக்கிடப்படும்
  • சம்பளமற்ற பிரசவ லீவு
    • மேற்படி 84 நாள் லீவு முடியும் போது பெறலாம்.
    • இந்த லீவும் 84 நாட்கள் வழங்கப்படும்.
    • சனி ஞாயிறு அரச விடுமுறைகள் சேர்த்தே கணக்கிடப்படும்
    • கடன் ஏதும் இருப்பின் அவைகளை அறவிடுவதற்கான விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
  • கருச் சிதைவு ஏற்படும் போது
    • வைத்திய அறிக்கையில் குறிப்படுகின்ற அளவான லீவினை உத்தியோகத்தரின் ஓய்வு லீவுகளிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
  • தாய்ப்பால் ஊட்டுவதற்காக வேலை முடியும் நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாக செல்லல்
    • அரைச் சம்பள பிரசவ லீவு பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு இந்த சலுகையினைப் பெறலாம். குழந்தைக்கு 6 மாதமாகும்வரையில் மாத்திரமே இந்த லீவு வழங்கப்படும்.
  • கர்ப்பம்  தரித்து 5 மாதம் பூர்த்தியானதும் அரை மணிநேரம் தாமதமாகி வருவதற்கும் அரை மணி நேரம் முன்னதாக செல்வதற்கும் அனுமதி வழங்கலாம்.
  • அரைச் சம்பளம் அல்லது சம்பளமற்ற பிரசவ லீவு காலத்தில் குழந்தை மரணிக்குமாயின் அதிலிருந்து 7 நாட்களில் லீவு செல்லுபடியற்றதாகிவிடும்.
  • சம்பள ஏற்றம், பதவி உயர்வு, ஓய்வுதியக் கணிப்பு என்பவற்றுக்கு இந்தலீவு பதிப்பினை ஏற்படுத்தாது.
  • அவசியப்படுமிடத்து லீவினை இரத்துச் செய்து விட்டு சேவைக்கு செல்ல முடியம்.



  • தந்தயைாருக்கான லீவு
    • மனைவிக்கு குழந்தை ஒன்று பிறந்ததற்காக  இந்த லீவு பெறலாம்.
    • 03 தினங்கள் வழங்கப்படும்.
    • குழந்தைபிறந்த தினத்திலிருந்து 3 மாதங்களுக்குள் பெற வேண்டும்.
    • திருமணச் சான்றிதழ், குழந்தை பிறப்பு தொடர்பான வைத்திய சான்றிதழ், குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் என்பவற்றை சமர்ப்பித்து இந்த விசேட  லீவினைப்  பெற்றுக்கொள்ள  வேண்டும்.

19.  அரச பரீட்சைகளில் பங்குபற்றுவற்கான லீவு



  • வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சைக்காக  உரித்தாகும்
  • முதலாவது முறையாக முகம் கொடுப்பதற்கு மாத்திரம் வழங்கப்படும்.
  • பிரயான கொடுப்பனவு மற்றும் வேறு கொடுப்பனவுகள் இதற்கு இல்லை
  • ஒவ்வொரு பாடத்திற்கும்   வெவ்வேறாக முகம் கொடுப்பதாயின் முதல்தடவை மாத்திரம் பெறலாம்.
  • ஏனைய அரசகரு மொழித் தேரச்சியைப் பெறுவதற்கான  பரீட்சைக்கு முகம்  கொடுப்பதற்காக ( அ.நி.சு. 2/2016)
    • முதலாவது முறை மாத்திரம் பெற்றுக்கொள்ளலாம்.
    • அரச கருமமொழிகள் திணைக்களம் / இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் என்பவற்றினால் நடாத்தப்படும் பரீட்சைகளுக்காக மாத்திரம். வழங்கப்படும்.

20. கட்டாய லீவு.



  • உத்தியோகத்தர் தனது கடமைகளை மேற்கொள்வது  பொது நலனுக்காக அல்ல என்பதாகக் கருதப்படும்  போது கட்டாய லீவு வழங்கப்படலாம்.
  • வைத்திய காரணங்கள் அல்லது விசேட (ஒழுக்காற்று) காரணங்கள்
  •  நியமன அதிகாரியே இந்த  லீவினை வழங்குவார்.
  • ஆரம்பமாக சேமித்துள்ள லீவுகளில் இருந்து கழிக்கப்படும்.
  • அதன் பின்னர் சம்பளமற்ற லீவாக கணிக்கப்படும்.

21.அரைச் சம்பள லீவு .



  • உத்தியோகத்தர் ஒருவரது ஓய்வு லீவுகள் முடிந்ததன் பின்னர் சுகயீனங்களுக்காக இந்த லீவினைப் பெறலாம்.
    • இங்கு  ஓய்வு லீவுகள் எனப்படுவது நடப்பு வருடத்தின் ஓய்வு லீவுகள், கடந்த வருடத்தில் மீதப்படுத்தியுள்ள ஓய்வு லீவுகள், முன்னைய லீவுகள் என்பவற்றைத் குறித்தும் 
  • அரைச்சம்பள லீவு பெறமுடியுமான உச்ச கால அளவு  சேவைக் காலத்தின் 1/6 பகுதியாகும்
  • தொடராக 12 மாதங்களுக்கு மேல் வழங்கமுடியாது
  • பதவிநிலை உத்தியோகத்தர் ஒருவர் வௌிநாட்டில் லீவினை கழிக்க முட்படும்போது 
    • அவருக்கான ஏனைய லீவுகள் முடிந்த பின்னர் எடுக்கலாம்.
    • மொத்த அரைச் சம்பள லீவினையும் அல்லது அதன் ஒரு பகுதியை சம்பளமற்ற லீவாக்குவதற்கு லீவு வழங்கும் அதிகாரம் பெற்றவருக்கு அதிகாரமுண்டு.
  • கீழ்வருகின்ற நிபந்தனைகளின் அடிப்படையில் இலங்கையில் லீவினைக் கழப்பதற்கு வழங்க முடியும் (பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கு)
    • அரைச் சம்பள லீவு 3 மாதங்களுக்கு அதிகரிக்கலாகாது.
    • நடப்பு வருடம் மற்றும் அதற்கு முன்னைய இரண்டு வருடங்களின் ஓய்வுலீவுகள் முடிந்திருக்கவேண்டும்.
    • லீவில் இருக்கும் போது உத்தியோகத்தர் ஓய்வு பெற்றாலோ அல்லது சேவையிலிருந்து நீங்கினாலோ கடைசியாக பணியாற்றிய தினத்திலிருந்து பெற்ற சம்பளத்தினை  மீளவழங்க வேண்டும்.
  • பதவி நிலையல்லாத உப நிலைகளில் உள்ள உத்தியோகத்தர் ஒருவருக்கு மருத்துவச் சான்றிதழில் அடிப்படையில் இலங்கையில் கழிப்பதற்கு இந்த லீவினைப் பெறலாம்.
  • சம்பளத்திற்கு மேலதிகமாக கொடுப்பனவுகள் பெறும் போது அதிலும் அரைப்பகுதியினைப் பெற்றுக்கொள்ளலாம்.
  • ஒரு வருடத்தில் ஆரம்பித்து அடுத்த வருடத்திற்கு தொடருக்கின்ற லீவுகள் இடையீ டிலா லீவாகக் கருதப்பட்டு முழுக் காலத்திற்கும் அரைச் சம்பளமாக கருதப்படல் வேண்டும்.
  • அரைச் சம்பள லீவுக்குப் பிறகு பூரண சம்பளத்துடனான லீவு பெற முடியாது.
  • முழுச் சம்பளத்துடனான லீவுக்குப் பின்னர் அரைச் சம்பள லீவு பெறலாம்.
  • அரைச் சம்ள லீவுக்குரிய காலப்பகுதியின் அரைவாசியே சேவைக்காலமாக கணக்கிலெடுக்கப்டும்.
  • அரைச் சம்பள  லீவில் சனி, ஞாயிறு, அரச விடுமுறைகள் என்பன உள்ளடக்கப்டும்
இந்தப் பகுதி தொடர்பான வினாக்கள் இருப்பின் கீமே கொமன்ட்டில் குறிப்பிடவும். 

இந்தக் விபரங்கள் lankajobinfo,com இணையத்தளத்தினால் தொகுத்து வழங்கப்பட்டதாகும்.