ad

உயர் தரப் பெறுபேறு வௌியானது முதல் பல்கலைக்கழக நுழைவு வரையிலான 18 நடவடிக்கைகள்.



​பொதுவாக உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றுகின்ற மாணவர்கள் தங்களது பெறுபேறுகளுக்கு அமைய அவர்களது அடுத்த கட்ட நகர்வினை திட்டமிட்டுக்கொள்ள வேண்டிய ஏற்படும்.


மாணவர்கள் உயர்தர பரீட்சைக்கு முகம்கொடுப்பதன் முக்கிய நோக்கம் இந்தப் பரீட்சையின் ஊடாக அரச பல்கலைக்கழகம் ஒன்றில் நுழைவினைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதாகும். அந்தவகையில் உயர் தரம் எழுதிய மாணவர்கள் தமது உயர்தர பெறுபேறுகள்  வௌியிடப்படுவது முதல் பல்கலைக்கழக நுழைவினை அமைந்துகொள்ளும் வரையில் நடைபெறுகின்ற செயற்பாடுகள் குறித்து அறிந்திருப்பதானது அவர்களது பணிகளினை இலகுவாக்கிக்கொள்ள மிகவும் உதவியாக அமையும். 

அந்த வகையில் க.பொ.த (உ/த) ​பெறுபேறுகள் வௌியிடப்பட்டது முதல் பல்கலைக்கழக பிரவேசம் வரையில் பரீட்சைத் திணைக்களதினாலும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினாலும் மேற்கொள்ளப்படுகின்ற நடைமுறைகள் மற்றும் மாணவர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என மொத்த மாக 18 நடவடிக்கைகள் குறித்து இந்தப் பதிவில் ஆராய இருக்கின்றோம். 


பல்கலைக்கழக நுழைவுக்கான நடவடிக்கைள் கீழ்வரும் படிமுறையில் அமைவதுண்டு.


உயர் தரப் பெறுபேறுகள் வௌியானது முதல் பல்கலைக் கழக நுழைவு வரையான முக்கிய தகவர்களையும் வழிகாட்டல்களையும் உரிய நேரங்களில் பெற்றுக் கொள்ள இந்த குழுமத்தில் இணைந்திருங்கள்.. பல்கலைக்கழக விண்ணப்பத்தைத் தெடர்ந்து கல்வியல் கல்லூரி விண்ணப்பம் தொடர்பான விளங்கங்கள் தரப்படும். 

உயர் தர பேறுபேறுகளுக்கு பின்னரான விழிகாட்டல் குழுமத்தில் இணைய கீழுள்ள லிங்கில் கிளிக் செய்யவும். 

https://chat.whatsapp.com/C5Dq93ozgKL87ZozoIouvx

 01. உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் வௌியிடப்படல்

உயர் தரம் பரீட்சை தொடர்பான எழுத்து மூலப் பரீட்சைகள் மற்றும் செயன்முறைப் பரீட்சைகள் அனைத்தும் முடிவடைந்த பின்னர் பரீட்சைப் பெறுபேறுகள் இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோக பூர்வ இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும். நீங்கள் உயர் தரத்திற்கு எழுதிய பிரதான பாடங்கள் மூன்றினதும் பொதுப் பாடங்களினதும் பெறுபேறுகள் உங்களது பெறுபேற்றுப் பத்திரத்தில் குறிக்கப்பட்டிருக்கும். அத்துடன் நீங்கள் உயர் தரம் பயின்ற பிரிவில் நாடுபூராவும் உள்ள மாணவர்களில் நீங்கள் எத்தனையாவது இடத்தில் இருக்கின்றீர்கள் என்பதும் உங்களது மாவட்டத்தில் நீங்கள் எத்தனையாவது இடத்தில் இருக்கின்றீர்கள் என்பதும் பெறுபேற்று அட்டையில் குறிப்பிடப்படும். இதனை Rank என அழைப்பர். 

க.பொ.த (சா/த) மற்றும் (உ/த) பெறுபேறுகள் குறித்த பொதுவான சந்தேகங்களும் அவற்றுக்கான பதில்களும் எனும் தொகுப்பினை வாசிக்க கீழுள்ள லிங்கில் கிளிக் செயய்வும்,

02. பல்கலைக்கழக கையேடு வௌியிடப்படும்



உயர் தரப் பெறுபேறுகள் வௌியாகி ஒரு வாரத்தில் அல்லது அதற்குப் பின்னர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஒரு கையேடு வௌியிடப்படும். இந்த வருடம் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிப்பதற்கான அடிப்படைத் தகைமைகள் என்ன என்பது குறித்தும் உயர் தரம் சித்தியடைந்தவர்களுக்கு அவர்கள் தெரிவு செய்த துறைகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களில் காணப்படுகின்ற பாடநெறிகள் குறித்தும் அந்தப் பாடநெறிகளுக்கு தேவையான வேறு தகைமைகள் குறித்தும் பல்கலைக்கழகத்திற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது குறித்தும் இந்த நூலில் தௌிவாகக் குறிப்பிடப்படும். 

இந்த நூலானது அச்சிட்ட பிரதியாகவும் ஒன்லைனில் பெறமுடியுமான இலத்திரனியல் பிரதியாகவும் வௌியிடப்படும். இந்த புத்தகத்தினை ரூபா 500 செலுத்தி (இது சென்ற வருட விலையாகும், இந்த வருடம் விலையில் மாற்றம் ஏற்படலாம்) இலத்திரனியல் பிரதியினை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் பெறலாம். அத்துடன் இந்தப் புத்தகத்தின் அச்சுப் பிரதி நாடுபூராவும் காணப்படுகின்ற புத்தக நிலையங்களில் 500 ரூபா செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம். நீங்கள் இலத்திறனில் பிரதியினை வாங்குவதனை விட அச்சுப் பிரதியினை பெறுவதே சிறந்த தெரிவு என்பதாக பரிந்துரைக்கப்படுகின்றது. இந்தப் புத்தகம் எந்தெந்த புத்தக நிலையங்களில் கிடைக்கும் என்ற விபரத்தினை புத்தகம் வௌியிடும் போது பல்லைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பகிரங்க அறிவித்தல் மூலம் அறியத் தரப்படும்.

சென்ற வருடம் வௌியிடப்பட்ட கைநூலைப் பர்வையிட கீழே குறிப்பிடும் லிங்கில் கிளிக் செய்யவும். 


2021 ஆம் ஆண்டின் (கடந்த வருடம்) அறிவித்தலையும் நாடு பூராவும் புத்தகங்களைப் பெற்றுக்கொள்ள முடியுமான முகவர் நிலையங்கள் மாவட்ட அடிப்டையில் பார்வையிட இங்கு கிளிக் செய்யவும். 


03. பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்கான சந்தர்ப்பங்கள் வழங்கப்டும்.






. அடுத்த கட்டமாக உயர் தர பெறுபேற்றினை மீள்பரிசீலனைக்கு உட்படுத்த ​வேண்டும் என்பதாக எதிர்பார்க்கின்ற மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கும் முகமாக மீள் பரிசீலனைக்கான விண்ணப்பங்கள் இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தினால் கோரப்படும். இதற்காகவும் இலங்கையின் பத்திரிகைகள் ஊடாகவும் தங்களது உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாகவும் அறிவித்தல் வழங்கும். இந்த சந்தர்ப்பத்தில் மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்,. இந்த நடவடிகையானது பல்கலைக்கழகளுக்கு விண்ணபிப்பதற்கான வழங்கப்படுகின்ற திகதிக்கு முன்னதாகவே பொதுவாக இடம்பெறுவதுண்டு

04. மாணவர்கள் பல்கலைக்கழக கையேடு கொள்வனவு செய்து அதனை கவனமாக  வாசித்தல்




இனி மாணவர்கள் பல்கலைக்கழக பிரவேசத்திற்காக கொள்வனவு செய்த கையேட்டினை நேரம் ஒதுக்கு முழுமையாக வாசிக்க வேண்டும்.  இந்த நடவடிக்கைக்காக ஒரு வார காலத்தை முழுமையாகப் பயன்படுத்தி கையேட்டின் அட்டைப் படம் முதல் அதன் இறுதிப் பகுதிவரை வாசித்துக்கொள்வது உங்கள் மனதிலுள்ள பல கேள்விகளுக்கும் விடையினைப் பெற்றுத் தர உதவியாக அமையும்.

அத்துடன் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்னதாக ' மேற்கொள்ள வேண்டிய முன்னாயத்தங்கள் எனும் எமது வழிகாட்டல் கட்டுரையினை வாசித்துக்கொள்ளுங்கள். இந்தக் கட்டுரையில் நீங்கள் விண்டப்பிக்கும்போது கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் குறித்தும். பல்கலைக்கழ மானியங்கள் ஆணைக்குழுவின் கையேட்டில் நீங்கள் கவனம் செலுத்தவேண்டி பக்கங்கள் குறித்தும். அத்துடன்  மேற்கொள்ள வேண்டிய முன்னாயத்தங்கள் குறித்தும் தொகுத்துத் தரப்பட்டுள்ளது.

கட்டுரையை வாசிக்க கீழுள்ள லிங்கில் கிளிக் செய்யவும்.

https://www.lankajobinfo.com/2021/05/things-to-do-before-applying-university.html 


05. மாணவர்களது விருப்பங்களுக்கு அமைவாக தெரிவுசெய்கின்ற பாடநெறிகளுக்காக நுண்ணறிவுப் பரீட்சைக்கு விண்ணப்பித்தல்.



பொதுவாக பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும்போது உயர்தர பரீட்சைக்கு தோற்றிய பிரிவு, உயர்தரத்தில் பெற்றுக்கொண்ட வெட்டுப்புள்ளி என்பவற்றின் அடிப்படையிலேயே மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படுவர். இந்த அடிப்படையில் இணைத்துக் கொள்ளும் போது பல மாணவர்களுக்கு வாய்ப்புக்கள் தவறிப் போகும் என்பதனால் சில பல்கலைக்கழகங்கள் நுண்ணறிவுப் பரீட்சைகள் நடாத்தி அதன் பெறுபேறுகளின் அடிப்படையில் குறிப்பிட்ட பாடநெறிகளுக்காக மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படுகின்றனர் இவ்வாறு மாணவர்கள் இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பம் கோரல் தொடர்பான விபரங்கள் குறித்த பல்கலைக்கழகங்களால்  பத்திரிகைகளில் அல்லது உத்தியோகபூர்வ இணைய தளங்களில் விளம்பரப்படுத்தப்படும். 

இந்த செயற்பாடு பெறுபேறு வெளியான நாள் முதல் ஒன்லைன் விண்ணப்ப முடிவுத்திகதி வரையில் நடைபெறும். இவ்வாறு வருடாந்தம் நுண்ணறிவும் பரீட்சைகளுக்காக விண்ணப்பம் கோருகின்ற பல்கலைக்கழகங்களினதும் பாடநெறிகளினதும் விபரம் எமது இணையத்தளத்திலும் பதிவு செய்யப்படும். 

பாடநெறிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் விபரத்தினை கீழ்வரும் லிங்கில் பார்வையிடலாம். இதே பாடநெறிகளுக்காகவே இந்த வருடமும் விண்ணப்பம் கோரப்படவுள்ளது


அத்துடன் இவ்வாறு விண்ணப்பிக்கின்ற நுண்ணறிவும் பரீட்சையின் அடிப்படையிலான பாடநெறி விபரம் பல்கலைக்கழக விபரம் என்பன பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் கோரப்படுகின்ற பல்கலைக்கழகங்களுக்கான ஒன்லைன் விண்ணப்பத்தில் குறிப்பிடப்படவேண்டும்.



நுண்ணறிவுப் பரீட்சை என்றால் என்ன என்பது குறித்த முழுமையா விபரங்களை அறிந்துகொள்ள கீழ்வரும் லிங்கில் கிளிக் செய்யவும். 



06. ஒன்லைன் பதிவு செய்துவிட்டு அதனது பிரதியை பல்கழக மாணியங்கள் ஆணைக்குழுவுக்கு தபாலில் அனுப்பிவைத்தல் 



 'பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் போது மாணவர்கள் பொதுவாக விடுகின்ற தவறுகள் குறித்து ஒரு முழுமையாக தொகுப்பாக தநதிருக்கின்றோம். பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்னதாக இந்தக் கட்டுரையிகை ஒரு முறை வாசித்துக்கொள்ளுங்கள். 

கட்டுரையை வாசிக்க கீழுள்ள லிங்கில் கிளிக் செய்யவும். 

https://www.lankajobinfo.com/2021/05/how-to-fill-ugc-online-application-2021.html 



பல்கலைக்கழக நுழைவுக்கான விண்ணப்பம் ஒன்லைன் மூலமாக மாத்திரமே நடைபெறுகின்றது. எனவே நீங்கள் பல்கலைகங்களில் பயில விரும்புகின்ற பாடநெறிகளுக்காக ஒன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான அறிவுறுத்தல் கையேட்டில் தௌிவாக வழங்கப்பட்டிருக்கும். கையேட்டுக்கு மேலதிகமாக குறித்த காலப்பகுதியில் நாட்டில் காணப்படுகின்ற சூழ்நிலைகளுக்கு ஏற்ப பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கேயேட்டில் குறிப்பிட்ட விடயங்கள் குறித்து திருத்தங்கள் ஏற்படுத்தலாம். எனவே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு என்னென்ன திருத்தங்களை வௌியிடுகின்றது என்பது குறித்து அவதானமாக இருந்துகொள்ளுங்கள். ஏதேனும் திருத்தங்கள் வௌியடப்படுமிடத்து அவை குறித்து எமது இணையத்தளத்தில் பதிவிடுவதுடன் அவற்றை எமது வட்சப் குழுமங்களிலும் பகிர்ந்துகொள்வோம். எனவே பதிவின் இறுதியில் குறிப்பிடப்பட்டிருக்கும் எமது வட்சப் குழுமங்களில் இணைந்துகொள்ளுங்கள். 

பல்கலைக்கழகங்களுக்கு ஒன்லைன் ஊடாக எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறித்து கட்டம் கட்டமான அடிப்படையில் படங்களுடன் வழிகாட்டல்களை தந்திருக்கின்றேம். 2021 ஆம் ஆண்டு பல்ககைக்கழ விண்ணப்பத்திற்காக வழிகாட்டல் பதிவின் லிங்கினை இங்கு தருகின்றோம் இந்த வருடம் அவற்றில் ஏதும் மாற்றங்கள் இருக்குமாயின் அதன் அடிப்படையில் இந்தக் கட்டுரை மாற்றியமைக்கப்படும். 

கட்டுரையை வாசிக்க கீழுள்ள லிங்கில் கிளிக் செய்யவும். 

https://www.lankajobinfo.com/2021/05/how-to-fill-ugc-online-application-2021.html 

07.  நுண்ணறிவுப் பரீட்சைக்கு தோற்றுதல்.




நீங்கள் விண்ணப்பித்த நுண்ணறிவுப் பரீட்சையின் ஊடாக மாணவர்களை இணைத்துக்கொள்கின்ற பாடநெறிகளுக்கான நுண்ணறிவுப்.பரீட்சைகள் அந்தந்த பல்கலைக்கழகங்களினால் நடாத்தப்படும்.  இரண்டு பாடநெறிகளுக்கான  பரீட்சைகள் ஒரே நாளில் நடைபெறாத அடிப்படையில் இந்தப் பரீட்சைகள் நடைபெறும். நீங்கள் அனைத்து நுண்ணறிவும் பரீட்சைகளுக்கும் விண்ணப்பித்திருந்தாலும் அனைத்துப் பரீட்சைகளிலும் தோற்றுவதற்கு உங்களுக்கு வாய்ப்புக்கிடைக்கும்.


பல்கலைக்கழகங்களின் பாடநெறி கள் தொடர்பான கடந்தகால 42 வினாத்தாள்களை ஒரே பக்கத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள கீழ்வரும் லிங்கில் கிளிக் செய்யவும்.
:


08. நுண்ணறிவுப் பரீட்சைகளின் அதற்கான பெறுபேறுகளை பல்கலைக்கழகங்கள் வௌியிடும்.



பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்ததன் பின்னர் மேலே குறிப்பிடப்பட்ட நுண்ணறிவுப் பரீட்சைகளின் பெறுபேறுகள் அந்தந்த பல்கவைக்கழகங்களினால் வெளியிடப்படும்.




  09. Z-score  வெட்டுப்புள்ளி வௌியிடல் 



பல்கலைக்கழகங்களில் காணப்படுகின் பாடநெறிகளுக்காக காணப்படுகின்ற வெற்றிடங்கள் மற்றும் அவற்றுக்காக  விண்ணப்பிக்கின்ற மாணவர்களின் எண்ணிக்கைகள் என்பவற்றின் அடிப்படையில்  ஒவ்வொரு பல்கலைக்கழகத்தினதும் தனித்தனி பாடநெறிகளுக்கா Z-score  வெட்டுப்புள்ளிகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வௌியிடப்படும்.

  Z-score  வெட்டுப்புள்ளிகள்  என்றால் என்ன அது எவ்வாறு கணிப்பிடப்படுகின்று என்ற முழுமையான விளக்கத்தினை கீழ்வரும் லிங்கில் கிளிக் செய்து பார்வையிடலாம்.


https://www.lankajobinfo.com/2021/05/what-is-z-score.html


10.அடுத்து நீங்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளீர்களா இல்லையா என்பது குறித்து உங்களுக்கு அறியத் தரப்படும்.




நீங்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளீர்களா இல்லையா என்பதனை உங்களுக்கு ஏற்கனவே தரப்பட்டுள்ள username password என்பவற்றைப் பயன்படுத்தி உங்களது கணக்கில் பிரவேசித்து அறிந்துகொள்ளலாம். இந்த தகவல்கள் குறித்த இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டதும் அது குறித்துபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அறியத்தரப்படும் அதன் பின்னர் நீங்கள் பார்வையிடலாம். உங்களுக்கு 3 வகையான பெறுபேறுகள் கிடைக்கப்பபெறும்.
1. பல்கலைக்கழம் ஒன்றிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள்
2. Please Call UGC
3. not selected 

இந்த மூன்று விடயங்கள் தொடர்பான விளக்கங்களையும் இவ்வாறு பெறுபேறு பெற்றுள்ள ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தனிப்பதிவாக தரப்பட்டுள்ளது. அதனை கீழுள்ள லிங்கில் கிளிச் செய்து வாசித்து விளங்கிக் கொள்ளலாம்.


11. பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் அந்தந்த பல்கலைக்கழகங்களுக்கு பதிவு செய்தல். 



பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஒன்லைன் பதிவினை மேற்கொண்ட நீங்கள் அங்கு குறிப்பிட்ட பாடநெறிகளுக்கு தெரிவு செய்யப்பட்டிருப்பின் அது குறித்து உங்களுக்கு அறியத்தரப்படும். இங்கு நீங்கள் தெரிவு செய்யப்பட்டதற்கான கடிதத்தினை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள தகவல்கள் மற்றும் அதனுடன்  தரப்படுகின்ற அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப பல்கலைக்கழகங்களுக்கு ஒன்லைன் ஊடாக விண்ணப்பிக்க வேண்டும் உங்களது வசதி கருதி 2021 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக விண்ணப்பம் தொடர்பான வழிகாட்டல்கள் அடங்கிய பதிவை இங்கு குறிப்பிடுகின்றோம் கீழ்க்குறிப்பிடும் லிங்கில் கிளிக் செய்து அதனைப் பார்வையிடலாம். 


உங்களுக்கு ஏற்கனவே தரப்பட்ட username password என்பவற்றைப் பயன்படுத்தி உங்களுக்கு கிடைத்த வெட்டுப்புள்ளி களின் அடிப்படையில் பாடநெறி களின் வெட்டுப்புள்ளிக்கு ஏற்ற பாடநெறிகளுக்கு குறித்த பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இது மீள்திருத்த பெறுபேறுகள் வெளியிட்டதன் பின்னர்  நடைபெறுமா பால் ஒரே முறையில் விண்ணப்ப செயற்பாடு முடிந்துவிடும்.. மீள் திருத்த பெறுபேறுகள் வெளிவர முன்னர் விண்ணப்பிக்குமிட்த்து மீள்பெறுபேறுகள் வெளியான பின்னர் வெட்டுப்புள்ளிகள் மாற்றம் ஏற்படுவதால் மேலும் சில பாடநெறிகளுக்கு தகுதிபெறலாம் எனவே அவைகளுக்கு நீங்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய ஏற்படும்.


12. மீள் திருத்தத்திற்காக பெறுபேறுகள் வௌியிடப்படும்.


இந்த சந்தர்ப்பத்தில் மீள் திருத்தத்தின் பின்னரான பெறுபேறுகள் வெளியிடப்படும். இந்த திருத்தத்தின் பின்னர் மாணவர்களின் z score களில் மாற்றம் ஏற்படுவதுடன் பாடநெறி களின் z score இலும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.


13. உயர் தரப் பரீட்சை பெறுபேற்றினை மீள் மதிப்பீடு செய்து அதற்கான பெறுபேறுகள் வௌியானதன் பின்னர் மீண்டும் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்தல். 


முன்னர் குறிப்பிட்டது போன்று 2021 ஆம் ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்ததன் பின்னரே மீள் பரிசீலனைக்கான பெறுபேறு கிடைக்கப்பெற்றது எனவே பெறுபேறுகளில் மாற்றம் ஏற்பட்டவர்களுக்கு மீண்டும் விண்ணப்பங்களில் மாற்றம் செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.  இந்த சந்தர்ப்பத்தில் உங்களது முன்னைய பெறுபேறு பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிப்பதற்கு போதுமானதாக அமையாத நிலையில் நீங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் உங்களைப் பதிவு செய்யும் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்காமல் இருந்தால் கூட மீண்டு ஆரம்பத்திலிருந்தே விண்ணப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது.

அது தொடர்பான விபரத்தினை கிழுள்ள லிங்கில் சென்று அறிந்துகொள்ளலாம். ஒன்லைன் பதிவு செயற்பாடுகள் முழுமையாகத் தரப்பட்டுள்ளது. 



14. வெற்றிடங்கள் நிரப்பும் செயன்முறை..




மேற்படி செயன்முறையில் ஒருவர் பல பாடநெறிகளுக்காக விண்ணப்பித்து அவற்றில் ஒரு பாடநெறிக்கே செல்வதனால் சில இடங்கள்  வெற்றிடமாவதுண்டு அவைகள் அதன் கீழுள்ள பெறுமானம் குறைந்த பாடநெறிகளுக்கு விண்ணப்பித்தவர்களால் நிரப்பப்படும். இவ்வாறு பல சுற்றுகள் நிரப்பி முடியந்ததன் பின்னர் உங்களுக்கான பல்கலைக்கழகங்களுக்கான அனுமதிக் கடிதம் கிடைக்கப்பெறும்.

15. மகாப்பொல மற்றும் தங்குமிட வசதியினைப் பெறுவதற்கான விண்ணப்பம்.




இந்த சந்தர்ப்பத்தில் மேற்படி இரண்டு விண்ணப்பங்களும் உங்களால் பூர்த்தி செய்து அனுப்பப்படவேண்டும்.

16. மேன்முறையீட்டு விண்ணப்பம் சமர்ப்பத்தல்.



ஆரம்பத்தில் விண்ணப்பிக்கும் போது ஏதாவது ஒரு பாடநெறி விடுபட்டுவிட்டது அல்லது கிடைத்திருக்கின்ற பல்கலைக்கழத்தை மாற்றிக்கொள்ளவேண்டும் என்பவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்காக இந்த விண்ணப்பம் கோரப்படுகின்றது. இந்த விண்ணப்பம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வழங்கப்படும் கையேட்டின் முதலாம் இலக்க பின் இணைப்பாக தரப்படும்.

2021/2022 ஆண்டுக்கான மேன்முறையீட்டு விண்ணப்பத்தினை இங்கு பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

17. இணைப்பாடவிதானத்தில் திறமை காட்டியவர்களுக்கான விண்ணப்பம்.




கடந்த இரண்டு வருடங்களில் சர்வதேச அல்லது தேசிய ரீதியில் போட்டிகளில் வௌ்ளிகளைப் பெற்றிருப்பின் அவ்வாறானவர்கள் இந்த விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கலாம் இந்த விண்ணப்பம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வழங்கப்படும் கையேட்டின் இரண்டாம் இலக்க பின் இணைப்பாக தரப்படும்.


18. தெரிவு செய்யப்பட்ட பல்கலைக்கழகத்தில் நுழைவுக்காக கடிதம்.

அடுத்து நீங்கள் தெரிவு செய்யப்பட்ட பல்கலைக்கழகத்தில் நுழைவதற்கான அறிவுறுத்தல்கள் உங்களுக்கு தரப்படும் அந்த அடிப்படையில் பல்கலைக்கழகங்களில் நீங்கள் தெரிவுசெய்யப்பட்ட பாடநெறியினைத் தொடரலாம்.

இறுதியாக 


உயர் தரப் பெறுபேறுகள் வௌியானது முதல் பல்கலைக் கழக நுழைவு வரையான முக்கிய தகவர்களையும் வழிகாட்டல்களையும் உரிய நேரங்களில் பெற்றுக் கொள்ள இந்த குழுமத்தில் இணைந்திருங்கள்.. பல்கலைக்கழக விண்ணப்பத்தைத் தெடர்ந்து கல்வியல் கல்லூரி விண்ணப்பம் தொடர்பான விளங்கங்கள் தரப்படும். 

உயர் தர பேறுபேறுகளுக்கு பின்னரான விழிகாட்டல் குழுமத்தில் இணைய கீழுள்ள லிங்கில் கிளிக் செய்யவும். 

https://chat.whatsapp.com/C5Dq93ozgKL87ZozoIouvx


கடந்த வருடங்களில் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்வது தொடர்பில் பின்பற்றப்பட்ட நடைமுறைகளைத் தழுவியே மேற்குறிப்பிட்ட விளக்கம் தரப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் மேற்குறிப்பிட்ட விடயங்களில் சில மாற்றங்கள் ஏற்பட முடியாக இருப்பினும் வழமையாக நடைபெறுகின்ற விடயங்களே இங்கு குறிப்பிடப்பட்டிருக்கின்றது. 

உங்களுக்கு பெறுபேறுகள் கிடைத்ததன் பின்னர் விண்ணப்பிப்பதற்காக ஆரம்பத் தகுதி இருக்குமானால் பல்கலைக்கழக விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கு தவற வேண்டாம்.

போதிய சித்தி கிடைக்கப்பெறவில்லை எனில் அதற்கான மாற்றீடுகள் குறித்த வழிகாட்டல்களை பெறுபேறு வந்ததன் பின்னர் உங்களுக்கு வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம். 

எமது தகவல்களை தொடர்ந்தும் பெற்றுக்கொள்ள எமது வட்சப் குழுமங்களுடனும் முகநூல் பக்கத்துடனும் இணைந்திருங்கள். 





இந்த ஆக்கத்தை PDF  வடிவில் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள படத்தில் கிளிக் நெய்யவும்.