>

ad

CUT OFF MARKS Released What Next? Guide in Tamil



2022 ஆம் ஆண்டு க.பொ.த உயர் தரம் எழுதிய மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளகள்  வௌியாகிவிட்டது. . 

அதன் பின்னர் நீங்கள் UGC இணையத்தளத்தில் பிரவேசிப்பீர்களாயின் உங்களுக்கு 4 விதமான பதில்கள் கிடைக்கப்பெற்றிருக்கும்

01. விண்ணப்பித்த பாடநெறிகளுக்காக தெரிவு செய்யப்பட்டு அதற்கான பல்கலைக்கழகம் கிடைக்கப்பெற்றிருப்பது குறிப்பிடப்பட்டிருக்கும். அல்லது
02. lease Call UGC என்பதாக குறிப்பிடப்பட்டிருக்கும். அல்லது
03. Not Selected என்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். 


 வெட்டுப்புள்ளிகள் வௌியான பின்னர் நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பது குறித்தும்,  Procedure for filling of vacancies (waiting list ) எனும் செயன் முறை குறித்து பலருக்கு பல விதமான கேள்விகள் உங்களிடம் காணப்படும். எனவே அந்த செயன்முறை குறித்து போதுமான தௌிவினை இந்தப் பதிவு வழங்குகின்றது. 

விண்ணப்பித்த பாடநெறிகளுக்காக தெரிவு செய்யப்பட்டு அதற்கான பல்கலைக்கழகத்தின் பெயர் கிடைக்கப்பெற்றவர்கள்.


இலட்சக்கணக்கான மாணவர்களுடன் போட்டியிட்டு பல்கலைக்கழகமொன்றில் உயர் கல்வி கற்பதற்கான வாய்ப்பினைப் பெற்றிருக்கின்றீர்கள் என்ற அடிப்படையில் உங்களுக்கு எங்களது உளப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஆனால் இப்போது நீங்கள் ஒரு முக்கியமான முடிவினை எடுக்க வேண்டிய நிலையில் இருக்கின்றீர்கள், இப்பபோது கிடைத்திருக்கின்ற பெறுபேறுகள் போதுமானது என்பதால் கிடைத்த பாடநெறிக்காக விண்ணப்பிப்பது அல்லது இன்னுமொரு முறை உயர் தரப் பரீட்சை எழுதி இதனை விட சிறந்த பாடநெறி ஒன்றினை அடைந்துகொள்வது என்ற முடிவினை நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். 

மீண்டும் உயர் தரம் எழுதப் போகின்றேன் என்ற முடிவினை எடுப்பீர்களானால் அப்படியே உங்களது கல்வியில் கவனத்தைச் செலுத்த ஆரம்பியுங்கள். அது மாத்திரம் தான் நீங்கள் செய்ய வேண்டியதே தவிர பல்கலைக்கழ பாடநெறிகளுக்கு அடுத்தடுத்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பீர்களானால் அடுத்த வருடம் பல்கைக்கழக நுழைவுக்கான வாய்ப்பினை இழந்துவிடுவீர்கள். 

இல்லை இப்போது கிடைத்திருக்கும் பாடநெறியைப் பயின்று அதன் ஊடாக எனது எதிர்காலத்தை அமைத்துக்கொள்கின்றேன் என்பீர்களானால்  உங்களது அடுத்த கட்ட விண்ணப்பிக்கும் பணிகளுக்கு ஆயத்தமாகின்ற பணிகளில் ஈடுபடுங்கள்.  எனினும் 
 நீங்கள் இப்போதைக்கு செய்வதற்கு ஒன்றுமில்லை. எனினும் ஓரிரு வாரங்களின் பின்னர் நீங்கள் இரண்டு விண்ணப்பங்கள் பூர்த்திசெய்ய வேண்டும். 


01. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கான விண்ணப்பம்.
02. நீங்கள் தெரிவு செய்கின்ற பல்கலைக்கழங்களுக்கான விண்ணப்பம். அத்துடன் மகாபொல புலமைப்பரிசில் விண்ணப்பத்துடன் ஹொல்டல் கோருவதற்கான விண்ணப்பங்கள் பூரணப்படுத்த வேண்டும். 

இவைகள் குறித்த விபரங்கள் உங்களுக்கு பிரத்தியோகமாக வந்து சேரும். அத்துடன் அந்த காலகட்டத்தில் அது குறித்த விளக்கங்களை தர முயற்சிக்கின்றோம். அது வழரயில் காத்திருங்கள். 

Please Call UGC

இன்னும் சிலருக்கு தங்களது சுட்டிலக்கத்தை செலுத்தி தெரிவு செய்யப்பட்ட பாடநெறிகள் குறித்து பரிசோதிக்கும் போது Please Call UGC பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அழைப்பொடுக்கவும் என்பதாக சில தொலைபேசி இலக்கங்கள் குறிப்பிட்டு ஒரு செய்தி காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். 

அவ்வாறானவர்கள் எந்தக் கவலையும் படவேண்டிய அவசியமில்லை. நீங்கள் ஏதோ ஒரு பாடநெறிக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கின்றீர்கள் ஆனாலும் நீங்கள் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிய ஆவணங்களில் ஏதோ ஒரு குறைபாடு இருக்கின்றது. உதாரணமாக உங்களது சான்றிதழ்களிலுள்ள பெயர்களில் வித்தியாசம் இருக்கலாம் அல்லது அதிபர் கையொப்பம் இடவேண்டிய இடங்களில் அந்தக் கையொப்பம் இடாமலிருக்கலாம், அல்வ்து அனுப்பப்படவேண்டிய ஆவணமொன்று இணைக்கப்படாமலிருக்கலாம் என்ற அடிப்படையிலான சில குறைபாடுகளே காணப்படமுடியும். இவ்வாறான ஏதேனும் ஒர் காரணத்தினாலேயே உங்களுக்கு மேற்படி செய்தி காடச்சியளிக்கப்படுகின்றது.  உங்களது குறைபாடு என்ன என்பதனை இந்த நேரமாகும் போது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உங்களுக்கு அறிவித்திருக்கும். அல்லது இன்னும் சில தினங்களில் அறிவிக்கும். எனவே அது வரையில்  உங்களது விண்ணப்பம் மற்றும் நீங்கள் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிய ஆவணங்கள் குறித்து மீள் பரிசீலனை செய்து பாருங்கள். சக நண்பர்கள் அனுப்பிய ஆவணங்களுடன் உங்களது ஆவணங்களை ஒப்பிட்டுப் பார்த்து காணப்படுகின்ற குறைகளை நிவர்த்திசெய்யும் போது உங்களுக்கு நிச்சயம் நீங்கள் தெரிவான பாடநெறிக்காக விண்ணப்பிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும். 

Not Selected


இன்னும் சிலருக்கு தங்களது சுட்டிலக்கத்தை செலுத்தி தெரிவு செய்யப்பட்ட பாடநெறிகள் குறித்து பரிசோதிக்கும் போது Not selected என்பதாக ஒரு செய்தி காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். 

நீங்கள் இப்போதைக்கு எந்தப் பாடநெறிகளுக்காகவும் தெரிவு செய்யப்படவில்லை என்பதனையே இது குறிப்பிடுகின்றது. ஆனாலும் வெற்றிடங்களை நிரப்புகின்ற செயன்முறை ஊடாகவோ அல்லது மேன்றையீடு சமர்ப்பிக்கும் செயன்முறை ஊடாகவோ உங்களும் சிலவேலைகளில் பல்கலைக்கழகப் பிரவேசம் கிடைக்கப்பெறலாம். எனவே பல்கலைக்கழ பாடநெறிகளுக்காகக் காணப்படுகின்ற வெற்றிடங்கள் நிரப்புகின்ற 7 அல்லது 8 சுற்றுகள் முடிவடையும் வரையில் காத்திருங்கள். வெற்றிடங்கள் நிரப்புகின்ற செயன்முறை எவ்வாறு நடைபெறுகின்றது என்பது குறித்த விளக்கத்தை தொடர்ந்தும் வாசியுங்கள். 
 
யார் மேன்முறையீடு செய்யலாம் யார் மேன்முறையீடு செய்யமுடியாது என்பன  தொடர்பான விளக்கம் அவசியப்படுமாயின் கீழுள்ள லிங்கில் கிளிக் செய்து வாசித்து அறிந்துகொள்ளலாம். 



.. Procedure for filling of vacancies வெற்றிடங்களை நிரப்புதல் என்றால் என்ன 

வெற்றிடங்கள் நிரப்புதல் என்பதற்கு சுருக்கமாக விளக்கமளிப்பதானால் பல்கலைக்கழகங்களில் ஒவ்வொரு பாடநெறிக்கும் தேவையான மாணவர் தெகையினை பூரணப்படுத்துவதற்காக மாணவர்களை இணைத்துக்கொள்வது என்பதாகக் குறிப்பிடலாம். 

ஒவ்வொரு வருடத்திலும் ஒவ்வொரு பல்கழைகத்திலும் காணப்படுகின்ற அனைத்துப் பாடநெறிகளுக்குமான தனித்தனியான வெட்டுப்புள்ளகள் வௌியிடப்படுகின்றன. எனினும் இறுதியில் சில வேளைகளில் குறித்த வெட்டுப்புள்ளிகளிலும் பார்க்க குறைந்த அளவு zscore பெற்றுக்கொண்ட மாணவர்களும் பாடநெறிகளுக்காக உள்வாங்கப்படலாம். அல்லது தற்போது கிடைத்திருக்கின்ற பாடநெறிகளிலும் பார்க்க தரத்தில் கூடிய பாடநெறிகளுக்கு மாணவர்கள் வெற்றிடங்களை சேர்த்து குறித்த பாடநெறிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புகின்ற செயன்முறையின் அடிப்படையில் உள்வாங்கப்படுகின்றனர். 


உதாரணமாக குறிப்பிடுவதானால்  மொணராகலைப் பகுதியிலிருந்து கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு  Physical Science பாடநெறிக்காக வழங்கப்பட்ட ஆகக் குறைந்த வெட்டுப்புள்ளி 0.6 என் வைத்துக்கொள்வோம். முதலாவது சுற்றில் 0.6 z-score புள்ளிக்கு அதிகமான புள்ளி பெற்றவர்களே சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். அதன் பின்னர் வெற்றிடம் நிரப்புகின்ற செயன்முறையின் முடிவில் சிலவேளைகளில் 0.1 வெட்டுப்புள்ளி Cut - Off Mark பெற்றவர்களும் இந்தப் பாடநெறிக்காக தெரிவு செய்யப்படலாம். அது எவ்வாறு என்று அறிந்துகொள்ள தொரடந்தும் வாசியுங்கள்.
 
பொதுவாக ஒவ்வொரு வருடமும் பல்கலைக்கழகங்களுக்கு நுழைவதற்கு தகுதி பெறுகின்ற அநேகமானவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதில்லை, அவர்கள் தற்போது பெற்ற பெறுபேறுகளை விட அதிக பெறுபேறுகளைப் பெறவேண்டும் என்பதற்காக மீண்டும் அடுத்து வருகின்ற உயர் தரப் பரீட்சைக்கு முகம்கொடுப்பார்கள். அடுத்து பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரையில் அங்கு காணப்படும் ஒவ்வொரு பாடநெறிகளுக்காகவும் குறித்த ஒரு தொகையினர் சேர்த்த்துக்கொள்ளப்படுவர். அதாவது உயிரியல் பாடநெறிக்காக ருஹுணு  பல்கலைக்கழகம் 300 பேர்களை உள்வாங்கும் என்றிருந்தால் அந்தப் பாடநெறிக்காக மொத்தத் தெகையான 300 பேர்களை எப்படியும் உள்வாங்குவார்கள். எனினும் முதலாவது முறை குறித்த பாடநெறிக்கான வெட்டுப்புள்ளிகள் வௌியிடப்பட்டதும் இந்த 300 பேர்களும் முதல் முறையிலேயே பூர்திசெய்துகொள்ளப்படுவதில்லை. அதேநேரம் வைத்திய பீடம் பொறியியல் பீடம் சட்ட பீடம் முகாத்துவ பீடம் போன்றன சில வகையான பீடங்களே முதல் முறையிலேயே நிரப்பப்படுகின்றன. காரணம் அந்தப் பீடங்களுக்கு போட்டித் தன்மை அதிகம் என்பதுடன் குறித்த பீடங்கள் கிடைக்கப்பெற்றவர்கள் எப்படியும் அந்தப் பாடநெறிக்கு விண்ணப்பிப்பார்கள் என்பதே அதற்கான காரணமாகும்.  

எனினும் குறைந்த வெட்டுப்புள்ளிகளையுடைய பாடநெறிகளைப் பொறுத்த வரையில் இதுபோன்று ஒரே தடவையில் பாடநெறிக்கான அனைத்து வெற்றிடங்களும் நிரப்பப்படுவதில்லை.  உதாரணமாக பல் மருத்துவ பீடம் கிடைக்கப்பெற்ற ஒருவர் தான் இன்றுமொரு முறை உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் போது  மருத்துவ பீடத்திற்கு தகுதுபெறலாம் என்பதாக எதிர்பார்ப்பாரானால் இந்த வருடம் பல் மருத்துவ பீடத்திற்கு அவர் விண்ணப்பிக்கமாட்டார். எனவே அவருக்கு ஒதுக்கப்பட இடம் வெற்றிடமாகும். அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு அதற்கு அடுத்த தரங்களில் இருக்கின்றவர்கள் இணைக்கப்பட்டு வெற்றிடம் பூரணப்படுத்தப்படும். அந்த அடிப்படையில் குறைந்த Z Score புள்ளிகளைப் பெற்றவர்கள் மீண்டும் பரீட்சைக்கு முகம்கொடுக்கவிருப்பதனால் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்காமலிருத்தல் மற்றும் அதிகளவானவர்கள் குறைத்த வெட்டுப்புள்ளிகளிலான  பாடநெறியினைத் தெரிவுசெய்யாமை மற்றும் வேறு பல காரணங்களினால் முதலாவது சுற்றில் மேற்படி பாடநெறிகளுக்கு போதுமான மாணவர்களின் அளவினை அடைந்துகொள்ள முடியாமல் போகின்றது.


இந்த அடிப்படையில் பாடநெறிகளுக்காக வெற்றிடமாகின்ற மாணவர் தொகையினை Z Score குறைந்த மாணவர்களினால் அடுத்த கட்டமாக நிரப்புவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுவதுண்டு.. வெற்றிடங்களை நிரப்புதல் என்பதாக இந்த செயன்முறையே குறிப்பிடப்படுகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் பாடநெறிகளுக்காக ஆகக்குறைந்த வெட்டுப்புள்ளியாக (CUT OFF MARKS) ஆரம்பத்தில் குறிப்படப்பட்ட அளவிலும் குறைந்த வெட்டுப்புள்ளி இரண்டாவது முறை அறிவிக்கப்படும். இரண்டாவது சுற்றிலும் போதுமான மாணவர் தொகை   இணைத்துக்கொள்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும். இந்த சந்தர்ப்பத்தில் இன்னுமொரு விடயமும் இடம்பெறும்.


இப்போது  நீங்கள் பேராதனை பல்கலைக்கழகத்தின் இரசாயன விஞ்ஞானப் பாடநெறிக்கு (Z=1.5) தெரிவு செய்யப்பட்டிருக்கின்றீர்கள் என வைத்துக்கொள்வோம். அத்துன் இன்னுமொருவர் கொழும்பு பல்கலைக்கழத்தில் உயிரியல் பாடநெறிக்கு (Z=1.6) தெரிவாயிருக்கின்றார் என்று வைத்துக்கொள்வோம். இந்த நபர் மீண்டும் உயர் தரம் எழுதி மருத்துவ பீடத்திற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் பாடநெறிக்கு பதிவுசெய்துகொள்ளமல் இருந்துவிடுகின்றார். இந்த நிலையில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிரியல் விஞ்ஞான பாடநெறிக்கு தேவையான மாணவர் தொகையில் ஒருவருடைய இடம் வெற்றிடமாகுகின்றது. அதன் பின்னர் UGC மூலமாக இரண்டாவது  சுற்றில் பாடநெறிக்கான ஆகக் குறைந்த வெட்டுப்புள்ளி வௌியிடப்படுகின்றது. இப்போது உங்களைப் போன்றவர்களின் விண்ணப்பங்களில் Uni-Codes பட்டியல் பரிசோத்திக்கப்படும். நீங்கள் கொழுப்பு பல்கலைக்கழகத்தின் உயிரியல் விஞ்ஞானப் பாடநெறியினைத் தெரிவு செய்திருந்தால் அந்தப் பாடநெறி பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நீங்கள் தெரிவு செய்த பாடநெறி ( உங்களது விண்ணப்பத்தில் தெரிவு படிமுறையில்) குறிப்பிடப்பட்ட இடத்திற்கு மேலே இருக்குமாயின் நீங்கள் கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிரியல் பாடத்திற்கு தெரிவு செய்யப்படுவீர்கள். 

UNI CODE என்றால் என்ன என்பது குறித்தும் விண்ணப்பங்களை நிரப்பும் போது விடுகின்ற தவறுகள் குறித்து விளக்கக் கட்டுரையை கீழுள்ள லிங்கில் கிளிக் செய்து சாசிக்கலாம்.


இவ்வாறு நீங்கள் கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படுவதன் காரணமாக பேராதெனிய பல்கலைக்கழகத்தில் நீங்கள் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டிருந்த பாடநெறிக்கு ஒரு வெற்றிடம் ஏற்படுகின்றது. அந்த இடத்திற்கு உங்களது Z Score குறைந்த ஒருவருக்கு அவகாசம் கிடைக்கின்றது. அது not selected எள்பதாகக் குறிப்பிடப்பட்ட ஒருவர் கூட இவ்வாறு தெரிசெய்யப்படலாம். 

இவ்வாறு 7 அல்லது 8 முறைகள் வெற்றிடங்கள் நிரப்பும் செயன்முறை நடைபெறும்.  இந்த வெற்றிடம் நிறப்பும் செயன்முறையானது நீங்கள் உங்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட  Uni- Codes ஒழுங்குமுறையில் நீங்கள் தெரிவு செய்யப்பட்ட பாடநெறிக்கு முன்னால் இருக்கின்ற பாடநெறிகளுக்காகவே இடம் பெறும். நீங்கள் தெரிவு செய்யப்பட்ட  Uni- Codes இற்கு கீழால் உள்ள பாடநெறிகள் கவனத்தில் கொள்ளப்படமாட்டாது என்பதனைக் கவனத்தில்கொள்ளவும். அவ்வாறு உங்களது விண்ணப்பத்தில் நீங்கள் குறிப்பிட்ட  Uni- Codes வரிசையில் நீங்கள் தெரிவு செய்த பாடத்திற்கு அடுத்து வருகின்ற பாடங்களுக்கு நீங்கள் செல்ல விரும்புமிடத்து அதற்காக மேன்முறையீட்டு விண்ணபம் ஊடாகவே கோரவேண்டும்.

மேன்முறையீடு ஒன்றினை சரியாக எவ்வாறு பூர்த்தி செய்ய வேண்டும் என்பது குறித்து அடுத்த பதிவில் பார்க்கலாம்.

இந்தக் கட்டுரையின் உரிமை lankajobinfo.com இணையத்தளத்துக்குரியது.