>

ad

O/L, A/L பெறுபேறுகள் குறித்த பொதுவான சந்தேகங்கள்



⚠️️A/L  பரீட்சைக்கு மூன்று தடவைகளுக்கு மேல் (03 Shy களுக்கு மேல்) தோற்றலாமா?

⛔ தோற்றலாம்.

தனிப்பட்ட விண்ணப்பதாரராக எத்தனை தடவை வேண்டுமானாலும் உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றலாம். எனினும் அரசாங்க பல்கலைக்கழகங்களில் உள்வாரியாக பயில்வதற்கு A/L  பரீட்சையினை மூன்று தடவைகளுக்குள் சித்தியடைந்திருக்கவேண்டும். நான்காவது முறையாக பரீட்சைக்குத் தோற்றிய சான்றிதழின் ஊடாக தொழில்களுக்கான தகைமையாகப் பயன்படுத்தலாம். அத்துடன் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் ஏனைய பாடநெறிகளுக்கு இந்த தகைமைகள் பயன்படும். 

⚠️A/L பரீட்சைக்கு விண்ணப்பித்து பரீட்சைக்குத் தோற்ற முடியாமல் போனால் குறித்த Shy பயன்படுத்தப்பட்டதாகுமா?

⛔ இல்லை

உயர் தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்து பிரதான பாடங்கள் மூன்றுடன் ஏனைய பாடங்களை சாதாரண ஆங்கிலம், பொது பரீட்சை போன்ற எந்தப் பாடத்துக்கும் பரீட்சை எழுதாவிட்டால் குறித் Shy பயன்படுத்தப்பட்டதாக கணிக்கப்படாது..

⚠️O/L பரீட்சையில் ஒரு பாடத்தையோ அல்லது சில பாடங்களையோ இரண்டாவது அல்லது மூன்றாவது தடவை செய்தால் ஏற்றுக்கொள்ளப்படுமா?

⛔ ஆம்.

எனினும் தற்போது பெரும்பாலான அரச உத்தியோகங்களுக்கு தழிழ்/கணிதம் உள்ளடங்களாக 4 பாடங்களுக்கு திறமைச் சித்தியும் இன்னும் 2 பாடங்களுக்கு  சாதாரண சித்திகளும் பெற்று க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ஒரே தடவையில் சித்தியடைந்திருக்க வேண்டும் என்பதாக கேட்கப்படுகின்றது. அதாவது 4 திறமைச் சித்திகளுடன் 6 பாடங்கள் ஒரே தடவையில் சித்தியடைந்திருக்க வேண்டும் என்பது இதன் பொருளாகும். 

⚠️மாணவர் செயலாற்றுகைப் படிவம் (Leaving certificate), மாணவர் நடத்தை தொடர்பான சான்றிதழ் (character certificate)  என்பன இரண்டு வகையான சான்றிதழ்களா?

⛔ ஆம் அவை வெவ்வேறு வகையான இரண்டு சான்றிதழ்களாகும்.

மாணவர் செயலாற்றுகைப் படிவம் என்பது நீங்கள் கற்ற பாடசாலைகள் மற்றும் எந்த தரம் வரை கற்றுள்ளீர்கள் என்பது குறித்த விபரங்களை உள்ளடிக்கதாகும்.
நடத்தை தொடர்பான சான்றிதழ் என்பது பாடசாலைக் காலங்களில் உங்களின் நடத்தை சிறந்ததா அல்லது மோசமானதா என்பது குறித்த விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

⚠️️மாணவர் செயலாற்றுகைப் படிவம் (leaving certificate) காணாமல் போனால் திரும்ப பெற்றுக்கொள்ள முடியுமா?

⛔ ஆம்.

தனது செயலாற்றுகைப் படிவம் (leaving certificate) காணமல் போன விடயத்தைக் குறிப்பிட்டு அதற்குப் பதிலாக புதிய செயலாற்றுகைப் படிவம் (leaving certificate) தருமாறு கோரி பாடசாலை அதிபரிடம் கடிதம் மூலம் கோரவேண்டும். அதன் பின்னர் அதிபரின் குறிப்புடன் வலயக் கல்விக் காரியாலயத்தில் குறித்த கடிதத்தைச் சமர்ப்பித்து அங்கிருந்து கிடைக்கின்ற கடிதத்தினை பாடசாலையில் சமர்ப்பித்து செயலாற்றுகைப் படிவதைப் (leaving certificate) பெற்றுக்கொள்ளலாம்.


⚠️A/L பரீட்சையில் முதலாவது முறை பொது ஆங்கிலம் பாடத்தில் சித்தியடைந்து இரண்டாவது முறை அல்லது மூன்றாவது முறை குறித்த பாடத்தில்  சித்திடையாமல் இருந்தால் முதலாவது முறை ஆங்கிலத்தில்  சித்தியடைந்த விபரத்தை இரண்டாவது பெறுபேற்றுடன் இணைத்து தனி பெறுபேறாக அமைத்துக்கொள்ளலாமா? 

⛔ முடியாது. 

நீங்கள் முதலாவது முறை பரீட்சையில் ஆங்கிலப் பாடம் சித்தியடைந்திருந்தால் அதற்கான பெறுபேறு அந்தப் பரீட்சையின் பெறுபேற்றுப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். அடுத்தடுத்தடுத்த தடவைகளுக்கும் அதுபோன்றே பேறுபேற்றுப் பத்திரங்கள் கிடைக்கும். அந்த அடிப்படையில் உங்களிடம் ஒவ்வொரு பரீட்சைக்கும் வெவ்வேறு பெறுபேறுகள் கிடைக்கப்பெறும். இங்கு அதிக கூடிய பாடங்கள் சித்தியடைந்தாக குறிப்பிடப்படும் பெறுபேற்றுப் பத்திரமே பெறுமதியானதாகும். எனவே இரண்டு பரீட்சைகளுக்கான பெறுபேறுகளை இணைத்து ஒரே பெறுபேற்றில் குறிப்பிடுவது தவறாகும்.



⚠️O/L  அல்லது A/L  பரீட்சைகளிகன் உறுதுசெய்யப்பட்ட பெறுபேறுகளை பெற முடியுமா?

⛔ ஆம் முடியும்.

பரீட்சைத் திணைக்களத்தில் இதற்காக ஒரு நாள் சேவை வழங்கப்படுகின்றது. பரீட்சைப் பெறுபேற்றுச் சான்றிதழ் அவசியமான பரீட்சையின் விபரங்களைக் குறிப்பிட்டு விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து அதற்கான கட்டணத்துடன் இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். உரிய விண்ணப்பப்படிவம் கீழே உள்ள இணைப்பில் தரப்பட்டுள்ளது. 

ஆங்கில மற்றும் சிங்கள மொழியிலான விண்ணப்பம்.

தமிழ் மொழியிலான விண்ணப்பம் https://doenets.lk/documents/downloads/certificates-application-forms/OnedayT.pdf


பெறுபேறுகள் உள்நாட்டின் தேவைக்கான பெறப்படுவதாயின் உங்களது விலாசங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அல்லது கையில் பெற்றுக்கொள்ளலாம்.

வௌிநாட்டுத் தேவைகளுக்காக பெறப்படுமாயின் வௌிநாட்டுள அலுவல்கள் அமைச்சுக்கு சான்றிதழ்கள் அனுப்பிவைக்கப்படும். 

தற்போதைய கொவிட் நிலைமை காரணமாக சான்றிதழ் பெறும் நடவடிக்கை ஒன்லைன் மூலம் நடைபெறுகின்றது அதற்கான முழு விபரத்தை கீழுள்ள லிங்கில் பெறலாம்.

இலங்கை பரீட்சை திணைக்களத்தின் 2000 ஆம் வருடம் மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளுக்கான க.பொ.த. (சாதாரண தர) மற்றும் க.பொ.த. (உயர் தர) சான்றிதழ்களுக்காக விண்ணப்பித்தல்
.

இலங்கையின் பரீட்சைத் திணைக்களத்தினால் நடத்தப்படும் அடிப்படை பிரிவேனா, பௌத்த தர்மாசிரியர் மற்றும் கத்தோலிக்கர் தர்மாசிரியர் பரீட்சை சான்றிதழ்களுக்காக விண்ணப்பித்தல். வழிமுறைகள்



⚠️️O/L  அல்லது A/L  பரீட்சைகளிகன் சுட்டெண் (Index Number) மறந்து போய்விடுமானால் அதனைத் தேடிக்கொள்ள முடியுமா? 

⛔ ஆம் முடியும்.

பரீட்சைத் திணைக்களத்திற்கு சென்று தேசிய அடையாள அட்டையினைச் சமர்ப்பித்து பரீட்சை எழுதிய வருடத்தினைக் குறிப்பிட்டால் சுட்டென்னைப் பெற்றுக்கொள்ளலாம். அவசியப்படுமிடத்து உரிய படிவத்தினைப் பூரணப்படுத்தி கட்டணத்தினைச் செலுத்தி பெறுபேற்றுப் பத்திரத்தினையும் பெற்றுக்கொள்ளலாம். 

பாடசாலையின் ஊடாகப் பரீட்வைக்குத் தோற்றியிருப்பின் பாடசாலையின் ஊடாகவும் சிட்டெண்ணைப் பெற்றுக்கொள்ளலாம்.

ஒன்லைன் ஊடாக பரீட்சை சுட்டென் பெற்றுக்கொள்ளல். 

1975 முதல் 2019 வரையான ஆண்டுகளில் க.பொ,த (சா/த) ,(உ/த) சுட்டெண்களபை் பெற்றுக்கொள்வபர்களுக்கான பரீட்சைத் திணைக்களத்தின் அறிவித்தல் .


⚠️O/L  அல்லது A/L  பரீட்சைப் பெறுபேறுகளில் பெயர் மாற்றங்கள் இருப்பின் அதனைத் திருத்திக்கொள்ள முடியுமா?

⛔ ஆம். அதற்கான உரிய படிவங்களை பூரணப்படுத்தி அதற்கான கட்டணங்களைச் செலுத்திச் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.

பெறுபேற்றுச் சான்றிதழ்களை வழங்குதல் மற்றும் பெயர் மாற்றங்களைச் செய்தல். வழிமுறைகள்



⚠️A/L S3  சித்திகள் எதிர்கால நடவடிக்கைகளுக்கு போதுமானதா?

⛔ ஆம்
பல பாடநெறிகள் மற்றும் தொழில்வாய்ப்புக்களுக்கான A/L பரதான பாடங்கள் 3 இல் சித்தியடைந்திருக்க வேண்டும் என்பதாகவே குறிப்பிடப்படுகின்றது. 



⚠️A/L சித்தியடையவில்லை எனில் அதற்குப் பதிலாக வேறு பாடநெறிகள் ஊடாக சமப்படுத்திக்கொள்ளலாமா? 

⛔ முடியது.

A/L என்பது Academic Qualifications ஒன்றாகும்.  அத்துடன் ஏனைய பாடநெறிகளில் பெரும்பாலானவை  Professional Qualifications என்ற அடிப்படையானதாகும்.  எனவே இவை இரண்டையும் சமப்படுத்த முடியாது. சில சந்தர்ப்பங்களில் மாத்திரம் உயர் தரத்துக்குப் பதிலாக வேறு பாடநெறிகள் குறிப்பிடப்பட்டாலும் உயர் தரப் பரீட்சைப் பெறுபேறு தனிஇடத்தைப் பிடிக்கின்றது.