>

ad

ஆசிரியர்களுக்கான (மொடியூல்) வினைதிறன் தடை தாண்டால் பயிற்சி தொடர்பான வழிகாட்டல்

ஆசிரியர்களுக்கான (மொடியூல்) வினைதிறன் தடை தாண்டால் பயிற்சி தொடர்பாக ஆசிரியர்கள் மத்தியில் எழுகின்ற  பொவான கேள்விகளும் அவற்றுக்கான பதில்களும்.



லங்கா ஜொப் இன்ஃபோவின் ஊடாக தரப்பட்ட வினைத்திறன் தடைதாண்டல் மற்றும் போட்டிப் பரீட்சைகளுக்கான வழிகாட்டல் என்ற அடிப்படையிலான கட்டுரைகளின் தொகுப்புகள் அனைத்தினதும் விபரத்தினை கீழ்வரும் லிங்கில் காணலம்

https://www.lankajobinfo.com/2021/03/SLTSEBFullGuide.html



01) PGDE பட்டப் பின்படிப்பை பூர்த்தி செய்தவர்களும் மொடியூல்களை பூரணப்படுத்த வேண்டுமா?

விடை : ஆம்


02) BA அல்லது MPhil கற்கைநெறிகளை பூரணப்படுத்தியவர்கள் மொடியூல்களை பூரணப்படுத்த வேண்டுமா?

விடை : ஆம்

03) ஆசிரியர் கலாசாலை பயிற்சிகளைப் பெற்றுக்கொண்டு அதே நேரம் பட்டம் ஒன்றைம்  பெற்றுக்கொண்டுள்ள ஆசிரியர்கள் மொடியூல்களை பூரணப்படுத்த வேண்டுமா?

விடை : ஆம்

04) மொடியூல்கள் தொடர்பான பாடநெறிகளுக்காக வலயக் கல்விக் காரியாலயத்தின் ஊடாக அழைப்புக் கடிதம் அனுப்பப்படுமா?

விடை : இல்லை

05) மொடியூல்களுக்கான பயிற்சிகள் ஆசிரியர் மத்திய நிலையங்களில் ஊடாக மாத்திரமா வழ்கப்படுகின்றன? 

விடை : ஆம்

மொடியூல்கள் தொடர்பாக பயிற்சி வழங்குவதற்கு அல்லது சான்றிதழ் வழங்குவதற்கு ஆசிரியர்  வள மத்திய நிலையங்கள் ( ஆசிரியர் தொழில் மேம்பாட்டு நிலையங்கள்) தவிர்ந்த வேறு எதாவது நிறுவனங்களுக்கு அல்லது தனிநபர்களுக்கு  அனுமதி வழங்கப்படவில்லை. மொடியூல் தொடர்பிலான சட்டபூர்வமான உரிமை கல்வி அமைசு மற்றும் ஆசிரியர் மத்திய நிலையங்கள் என்பவற்றின் வசமே உள்ளது. 


6) மற்றும் 07 ஆம் இலக்கங்களில் குறிப்பிடப்பட்ட விடயம் கட்டுரைஆசிரியலரால் நீக்கப்பட்டுள்ளது என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். நீக்கப்பட்டவிடயங்கள் இந்த ஆக்கத்தின் கீழேகுறிப்பிடப்பட்டுள்ளுது



08) மொடியூல் பயிற்சிகளை பூரணப்படுத்த வேண்டிய கால எல்லையை எவ்வாறு மதிப்படுவது?

நீங்கள் இலங்கை ஆசிரியர் சேவையின் 3-1 தரத்தினை உடையவராயின்
 உங்களது நியமனத் திகதியிலிருந்து மூன்று வருடங்களைச் சேர்க்கும் போது வருகின்ற திகதியாகும்.

உதாரணமாக 2018.10.23 ஆம் திகதி உங்களது நியமனத் திகதியாயின் அதனுடன் மூன்று வருடங்களைச் சேர்க்கும் போது 2021.10.23 என்பதாக விடை கிடைக்கும். நீங்கள் இந்தத் திகதிக்கு முன்னர் மொடியூலைப் பூரணப் படுத்த வேண்டும்.

நீங்கள் 2-II அல்லது 2-1 தரத்தில் இருக்கின்ற ஆசிரியராயின் 
தற்போதிருக்கும் தரத்திற்கு தரம் உயர்வு பெற்ற திகதியுடன் நான்கு வருடங்களைக் சேர்க்கின்ற போதுவருகின்ற திகதியாகும்

உதாரணமாக 2017.10.23 ஆம் திகதி என்;பது நீங்கள் குறித்த சேவைகளுக்கு தரம் உயர்த்தப்பட திகதியாக இருப்பின் அதனுடன் நான்கு வருடங்களைச் சேர்;க்கும் போது 2021.10.23 என்பதாக விடை கிடைக்கும். நீங்கள் இந்தத் திகதிக்கு முன்னர் மொடியூலைப் பூரணப் படுத்த வேண்டும்.

09) குறித்த காலப் பகுதிக்குள் மொடியூல்களைப் பூரணப்படுத்துவதற்கு நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

உங்களுக்கான ஆசிரியர் வள மத்திய  நிலையத்தில் உங்களது பெயர்களைப் பதிவு செய்துகொள்ளவும்
நீங்கள் ஆசிரியர் சேவையின் 3-1 தரத்திலான ஆசிரியராயின் உங்களது முதல் நியமனத் திகதி மற்றும் நியமனம் தொடர்பான விபரங்களை வள மத்திய நிலையததிற்கு வழங்குங்கள்
நீங்கள் ஆசிரியர் சேவையின் 2-2 அல்லது 2-1 தரத்திலான ஆசிரியராயின் நீங்கள் தரம் உயர்வு பெற்ற திகதி மற்றும் குறித்த திகதிக்கான உங்களது கல்வித் தகைமை  தொடர்பான விபரங்களை வள மத்திய நிலையததிற்கு வழங்குங்கள்
அவர்களிடமிருந்து உங்களுக்கு அழைப்பு வரும் வரை விழிப்பாக இருந்துகொள்ளுங்கள். அழைப்பு வருவது தாமதமாகின்றதாயின் அது தொடர்பாக மத்திய வள நிலையத்தில் விசாரியுங்கள். 
உங்களால் குறித்த காலப்பகுதி முடிவடைவதற்குள் மொடியூலைப் பூரணப்படுத்த முடியாமல் போகுமாயின் அது தொடர்பிலான  அனைத்து விளைவுகளைகளையும் நீங்களே பொறுப்பேற்க வேண்டி ஏற்படும்.
அந்தப் பொறுப்பினை வலயக் கல்விக் காரியாலயமோ அல்லது வள மத்திய நிலையமோ ஏற்காது. எனவே உங்களது வினைத்திறன் தாண்டல் தகைமைகளைப் பூர்த்தி செய்வது குறித்த தகவல்களை (பயிற்சி ஆரம்பமாகும் திகதிகள் தொடர்பான விபரம்) முறையாக அறிந்துகொண்டு குறித்த பயிற்சிகளில் பங்குகொள்வதற்கு நீங்கள் முயற்சிக்க வேண்டும் என்பதுடன் பயிற்சிகளுக்காக யாரேனும் அழைப்பு விடுப்பார்கள் என்பதாக காத்திருப்பதில் பயன்கள் ஏதும் இருக்கப்போவதில்லை. 

உங்களது தரம் உயர்வு தொடர்பான தகவல்கள் வள நிலையத்துக்கு வேறு எங்கிருந்தும் கிடைக்கப் பெறுவதில்லை என்பதனால் அவற்றை நீங்கள் வழங்க வேண்டியிருக்கின்றது.

வினைத்திறன் தாண்டல் பயற்சிகளை நடாத்துதல் மற்றும் சான்றிழ் வழங்குதல் போன்ற பணிகள் மாத்திரமே வள மத்திய நிலையத்தினால் மேற்கொள்ளப்படுகின்றது. எனவே உங்களது பயிற்சி தொடர்பான தகவல்களை வள மத்திய நிலையங்களில் பெற்றுக்கொள்ளுங்கள்.

10) வினைத்திறன் தாண்டல் பயிற்சிகள் பூரணப்படுத்திய பின்னர் பதவி உயர்வினை எவ்வாறு பெற்றுகொள்ளலாம்?

விடை  : ​ 

குறித்த வினைத்திறன் தாண்டல் பயிற்சிக்காக சான்றிதழ்களுடன் பதவி உயர்வுக்கான விண்ணப்பப்படிவத்தினை உங்களது அதிபர் ஊடாக வலயக் கல்விக் காரியாலயத்தில் கையளிக்கவேண்டும்
.
ஆக்கம்:  பிரியங்கனி டீ சில்வா
மொழிபெயர்ப்பு lankajobinfo.com

ஆசிரியர் சேவை சார்ந்த இது போன்ற தகவல்களை உடனடியாக பெற்றுக்கொள்வதற்காக எமது முகநூல் பக்கத்திற்கு லைக் இடுங்கள்.



கீழ் குழுள்ள லிங்கின் ஊடாக எமது வட்சப் குழுமத்தில் இணைந்துகொள்ளலாம்.




இந்த ஆக்கத்தில்  6 மற்றும் 7 எனும் இலக்கங்களில் குறிப்பிடப்பட்டிருந்த விடயம் கட்டுரை ஆசிரியரின் பதிவிலிருந்து நீக்கப்பட்டுள்ளது என்பதனை அறியத்தருகின்றோம்.

நீக்கப்பட்ட விடயங்கள் கீழே சிவப்பு நிறத்தில் தரப்பட்டுள்ளது.


06) மொடியூல் பூர்த்திசெய்ய அவிசியமில்லை எனும் பிரிவுக்குள் அடங்குவோர் யார்?


விடை  : ​ கீழே றிப்பிடப்படுகின்ற திகதிகளில் ஆசிரியர் சேவையின் அடுத்த தரங்களுக்கு தரம் உயர்வு பெற்ற ஆசிரியர்கள் மொடியூல் பூர்த்தி செய்வது அவசியமில்லை.

 2021.10.22 ஆம் திகதிக்கு இலங்கை ஆசிரியர் சேவை 1 ஆம் தரத்திற்கு பதவி உயர்வு பெற இருப்பவர்கள்.
❋ 2021.10.22 ஆம் திகதி ஆகும் போது இலங்கை ஆசிரியர் சேவை 2-1 தரத்திற்கு தரம் உயவு பெற்று நான்கு வருடங்கள் பூர்த்தியாகியிருப்போர். (அதாவது 2017.10.22 ஆம் தகதியாகும் போது இலங்கை ஆசிரியர் சேவை 2-1 தரத்திற்கு தரம் உயர்த்தப்பட்டவர்கள்.

07)  இந்த பயிற்சியினைப் பெற்றுக் கொள்ளவேண்டியவர்கள் யார்?

விடை  : ​ கீழே றிப்பிடப்படுகின்ற திகதிகளில் ஆசிரியர் சேவையிக்நியமனம் பெற்றவர்கள் மற்றும் அடுத்த தரங்களுக்கு தரம் உயர்வு பெற்ற ஆசிரியர்கள் குறித்த கால எல்லைக்குள் மொடியூல்களைப் பூர்த்தி செய்தல்வேண்டும்
2018.10.23 ஆம் திகதி அல்லது அன்றைய தினத்தின் பின்னர் இ;.ஆ.சே 3-1 ஆம் தரத்தினை அடைந்தவர்கள். 
2017.10.23 ஆம் திகதி  அல்லது அந்ததிகதியின் பின்னர் யின் பின்னர் இ.ஆ.சே 2-ii ஆம் தரத்திற்கு தரமுயர்வு பெற்றவர்கள்
2017.10.23 ஆம் திகதி அல்லது அந்த திகதியின் பின்னர் இ.ஆ.சே.2-1 இற்கு தரம் உயர்த்தப்பட்டவர்கள்