>
அரச ஊழியர்களது ஒழுக்கம் சம்பந்தமாக தாபன விதிக் கோவையின் இண்டாவது பகுதியில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அரச ஊமியர்கள் என்ற வகையில் கடைபிடித்து ஒழுகவேண்டிய அடிப்படைகள் குறித்தும் செய்யக்கூடாத விடயங்கள் குறித்தும் அந்தப்பகுதியில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு அசர ஊழியர் ஒழுக்காற்று விடங்களை செய்யும் போது அவருக்கு எதிராக விசாரணைகள் நடாத்தப்படும். இது குறித்த விசாரணைகள் தொடர்பான விளக்கத்தொகுப்பின் முதல் பகுதிகும். குற்றப்பத்திரம் வழங்குதல் தொடர்பான விடங்களை அடுத்த பதிவில் காணலாம்.
ஆரம்பப் புலனாய்வு விசாரணை
கீழ்க்கிறிப்பிடப்படும் சம்பவத்தை வாசித்து கேட்கப்படும் வினாக்களுக்கு விடை தருக.
வினைத் திறனற்ற நிர்வாக செயற்பாடுகள் காரணமாக கடந்த பல வருடங்களாக
வீழ்ச்சியடைந்து செல்லும் அம்பகஹ கோரலே பிதேச சபையின் கணக்கீட்டுப் பிரிவில் நிதி மோசடி நடந்திருப்பதாக கணக்காய்வு அறிக்கை
ஒன்றின் ஊடாக தெரிய வந்துள்ளது. இந்திலையில்
அண்மைக் காலத்தின் ஏற்பட்டவெள்ள அணர்தத்மொன்றின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்ககாக கிடைத்திருந்த பொருட்களின் பெரும் பகுதி காணாமல் போயிருந்தது. இது
காணாமல் போவதற்கு காரணமானவர்கள் யார் என்பதனைக்
கண்டறிவதற்காக ஆரம்பப் புலனாய்வு விசாரணை
ஒன்றை அவசரமாக நடாத்துவதற்கு ஒழுக்காற்று அதிகாரியினால் கட்டளை
பிரப்பிக்கப்பட்டிருந்தது. அதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரி ஆரமப்பப் புலனாய்வு விசாரணையை மேற்
கொள்கின்ற நிலையில் அந்த விசாரணையில் நடிக்ைகயானது கீழ்க் குறிப்பிடப்படுகின்ற நிலைமைகள் அவதாணிக்க முடிந்தது.
· ஆரம்பப் புலனாய்வு விசாரணை நடாத்தி முடிப்பதற்கு வழங்கப்பட்டிருந்த காலம் போதாமையால் குறித்த காலப் பகுதியினை நீடித்துக் கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.
·
ஆரம்பப்
புலனாய்வு விசாரணை அதிகாரி தனது உத்தியோகப் பதவிக்குரிய கட்மைகளில் இருந்து தன்னை இந்த விசாணையை
நடாத்துவதற்காக விடுவித்துக் கொள்ள முடியாமை காரணமாக ஆரம்பப் புலனாய்வு விசாரணையை
தொடர்ந்து நடாத்துவதில் இடைஞ்சல் ஏற்பட்டிருந்தது.
· குறித்த காரியாலயத்தில் பல மோசடிகள் இடம் பெற்றிருந்த நிலையில் ஒரே ஒரு ஆரம்பப் புலனாய்வு அதிகாரி மாத்திரம் நியமிக்கப்பட்டிருந்தார்.
·
சந்தேகத்துக்கு
இடமானவர்களிடம் சாட்சியங்களைப் பெற்றுக் கொள்ளும் போது முகவர்கள் அருகில் இருந்தனர்.
· நிவாரணப் பொருட்ளின் அளவுகளைச் சரிபார்க்கும் போது சந்தேக நபர்கள் அருகில் இருத்தனர்.
· பொருட்களைப் பரிசீலிப்பதற்கு இரண்டு அதிகாரிகள் கொண்ட குழு நியமிக்கப்பட்டிருந்தனர்.
·
புலனாய்வு அதிகாரி தன்னை விட சிரேஷ்ட அளவில்
குறைந்தவர் என சந்த்தேக நபர்கள் குறிப்பிடுகின்றனர்.
· ஆரம்பப் புரனாய்வு அதிகாரியிடம் சாட்சியம் அளிப்பதற்கு காரியாலத்தின் அலுவலர் ஒருவர் மறுத்திருந்தார்.
· ‘ஆரம்பப் புலனாய்வின் போது சந்தேக நபர் குற்றத்தினை ஒப்புக் கொண்டதால் விசாரணையை அத்துடன் நிறுத்திக் கொள்ளப்படுகின்றது.
01. ஆரம்பப் புலனாய்வு விசாரணை என்பது யாது?
எவரேனும் ஒரு அரச அலுவலர் அல்லது பல
அலுவலர்கள் துர்நடத்தை ஒன்றில் ஈடுபட்டதாக சந்தேகத்துக்கு ஆளாகியிருக்கும் போது
அல்லது அதுபற்றிய தகவல்கள் கிடைக்கப் பெற்றதும் அது தொடர்பான உண்மையான
விபரங்களுடன் உரிய காரணங்களைத் தேடுவதும். சந்தேகத்துக்கு இடமான அலுவலருக்கு அல்லது
அலுவலர்களுக்கு எதிராக
குற்றச்சாட்களை பட்டியலிட்டு ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளக் கூடியதான காரணங்களையும் சாட்சிகளையும்தேடிக்கொள்ள முடியுமா என்பதை ஆராய்வதற்காக ஒழுக்காற்று அதிகாரி ஒருவர் / அல்லது அதற்காக அதிகாரம் கொண்ட ஒருவர்
அல்லது ஒரு கமிட்டி அது தெடர்பாக ஆராய்ந்து அறிக்கையிடல் அரம்ப்ப் புலனாய்வாகும்.
02. ஆரம்ப்ப் புலனபய்வு
நடாத்துவதன் நோக்கம் என்ன?
o
03. “குற்றங்களை நிரூபிப்பதற்கான சாட்சிகளை கண்டறிதல்” ஆரம்பப் புலனாய்வு நடாத்துவதற்கான ஒரு நோக்கமாகும்.
இதற்கமைக பெற்றுக் கொள்ளும் சாட்சி வகைகள் யாவை?
04. “வாய்மொழிமூல சாட்சி” என்பது யாது?
o
வாய்மொழிமூல
சாட்சிகள் கண்ணால் பார்த்த சாட்சி சம்பவ
சாட்சிகள் என இருவகைப்படும். புலனாய்வுக்கு உட்பட்ட காரணி ஒன்றைத், தான் கண்ணால்
பார்த்த்தாக அல்லது பார்த்த ஒருவர் தன்னிடம் கூறியதாக குறிப்பிடும் சாட்சி கண்ணால்
பார்த்த சாட்சியாக கருதப்படும்.
உ+ம். விமாலா கசு
எடுத்ததை நான் பார்த்தேன்.
ஏதாவது ஒரு காரணி
தொடர்பாக ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய சம்பங்களை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கூறுகின்ற நிலையில் அவற்றை ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்திப் பார்க்கும் போது அது ஒரு பலமான
சாட்சியாக அமையுமாயின் அது சம்பவ சாட்சியாக கருதப்படும்
05. ஆரம்ப்ப் புலனாய்வு நடாத்துவற்கான அடிப்படை என்ன?
o
அலுவலர் ஒருவர்
அல்லது பல அலவர்கள் துர்நடத்தையில் ஈடுபட்டதாக சந்தேகிக்தல் அல்லது தகவல்
கிடைத்தல் ஆரம்ப்ப் புலனபய்வு நடாத்துவற்கான அடிப்படையாகும்.
06. பத்திரிகை அல்லது இலத்திரனியல் ஊடகமொன்றின் ஊடாக வெளியாகும் காரணி
ஒன்று தொடர்பில் ஆரம்பப் புலனபய்வு நடாத்த முடியுமா?
மேற்படி ஊடகங்கள் ஊடகங்களின் ஊடாக வெளியாகும் காரணி தொடர்பில்
ஆரம்பப் புலனாய்வு நடாத்துவதற்கான அவசியம் ஏற்படுமிடத்து பொருத்தமான நடவடிக்கை
எடுக்க ஒழுக்காற்று அதிகாரியால் தீர்மானம் எடுக்க முடியும்.
07. ஆரம்ப்ப் புலனபய்வு நடாத்துவதற்கான கட்டளை பிறப்பிக்க முடிந்த
அதிகாரிகள் யார?
08. ஆரம்பப் புலனாய்வு நடாத்துவதற்காக நியமிக்கப்படும் அதிகாரிகளிடம்
இருக்க வேண்டிய குணாதிசயங்கள் யாவை?
09. ஆரம்பப் புலனாய்வு அதிகாரியின் கடமைகள் யாவை?
10. ஆரம்பப் புலனாய்வுக்காக கால அளவு வழங்கப்படுமா? அப்படியாயின் அக்காலப்பகுதியில்
ஆரம்பப் புலனாய்வு நடத்தி முடிக்க முடியாத போது கால நீடிப்பு பெற முடியுமா?
o ஆரம்பப் புலனய்வொன்றைக் கட்டளையிடும் அதிகாரி ஒருவர் அந்தந்த நிகழ்வுகளின் தன்மைகளைக் கருத்தில் கொண்டு சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு ஆரம்பப் புலனாய்வு முடிவுறுத்தப்படவேண்டிய காலத்தை விதிக்கலாம். எனவே குறிப்பிட்ட காலம் என்றொன்று இல்லை. முடிந்த அளவு குறுகிய காலத்தில் விசாரணையை முடிப்பது அடுத்த கட்டங்களை செயற்படுத்த வசதியாக அமையும். தவிர்க்க முடியாத தடைகள் ஏற்படும் போது ஏற்படுமிடத்து காலத்தை இன்னும் அதிகரித்துக் கொள்ளலாம்.
1111. மேற்படி ஆரம்பப் புலானய்வின் போது “ விசாரணை அதிகாரி அதிகாரி தனது உத்தியோக பூர்வ பதவியிலிருந்து விடுவித்துக் கொள்ள முடியாமை காரணமாக ஆரம்பப் புலனாய்வு விசாரணையை தொடர்ந்து நடாத்துவதில் இடைஞ்சல் ஏற்பட்டிருப்தால் குறித்த நேரத்தில் விசாரணைக்கு முடிவுக்கு கொடண்டுவர முடியாமை குறித்து உங்களது அபிப்பிராயம் யாது?
o ஆரம்ப்ப் புலானாய்வொன்றுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகாரி ஒருவரினால் நியமிக்கப்பட்ட அலுவலர் ஒருவர் அப்பணியை உரிய முறையில் முமு நேரகாலமாகத் தொடர்ந்து செய்யக் கூடியதாக அவரின் நிறுவனத் தலைவர் நிரந்தர அரச பணியிலிருந்து விடுவிக்க வேண்டும்.
12. ஒரு நிகழ்வு அல்லது நிகழ்வுத் தொடர் சம்பந்தமாக ஆரம்பப் புலனாய்வு ஒன்றுக்காக சுயாதீன அலுவலர்கள் கொண்ட புலனாய்வுக் குழுவென்றை மாத்திரமே நியமிக்கலாம்.இது குறித்து ஆராய்க
o ஒரு நிகழ்வு அல்லது நிகழ்வுத் தொடர் சம்பந்தமாக ஆரம்பப் புலனாய்வு ஒன்றுக்காக சுயாதீன புலனாய்வென்றை நடாத்துவதற்கு அலுவலர்கள் பலரை அல்லது குழுவென்றை நியமிக்கலாம்.
13. சந்தேக நபரிடம் கூற்றுக்களைப் பதிவு செய்யும் போது பிரதிநிதி ஒருவருக்கு அவ்விடத்தில் இருக்க முடியுமா?
o
எந்த ஒரு
பிரதிநிதிக்கும் அவ்விடத்தில் தங்கியிருக்கு அனுமதிக்க முடியாது.
14. “நிவாரணப் பொருட்ளின் அளவுகளை சரிபார்க்கும் போது சந்தேக
நபர்கள் அருகில் இருப்பதற்கு அனுமதித்தல்” இது தொடர்பான உங்கள் கருத்து?
o
சந்தேகத்துக்கு ஆளான
அலுவலரின் அல்லது அலுவலர்களின் பொறுப்பில் உள்ள அரசாங்க ஆவணங்களினதும்
பொருட்களினதும் அளவுகளைக் கணக்கெடுக்கும் சந்தர்ப்பத்தில் சந்தேகத்துக்கு ஆளான
அலுவலருக்கு அல்லது அலுவலர்களுக்கு அவ்விடத்தில் நிற்பதற்கு அனுமதியுண்டு
15. அரசாங்க அலுவலர் ஒருவர் தனது பொறுப்பிலுள்ள அரசாங்கப்
பொருட்கள், ஆவணங்கள், நிதி என்பவற்றைப் பரிசோதிக்க விடாமை அல்லது அல்லது பரிசோதனையிலிருந்து
பின்வாங்குவாராயின் எடுக்கவேண்டிய நடவடிக்கை யாது?
o
அப்படியான
சந்தர்ப்பங்களில் அதிகாரிகள் சிலரைக் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்படவேண்டும்.
தேவைப்படும் சந்தர்ப்பங்களில் சம்பந்தப்பட்ட பண்டகசாலை அறைகள் அலுமாரிகள்,
செருகுபெட்டிகள் அல்லது வேறு பூட்டிடப்பட்டுள்ள இடங்களின் பூட்டுகளை உடைத்து
பரிசோதனைகளை நடாத்தவும் அச்சபைக்கு அதிகாரமுண்டு.
16. “ ஆரம்பப் புலனாய்வு அதிகாரி எப்போதும் குற்றச்
சாட்டப்பட்டவரிலும் சிரேஷ்ட தன்மையில் கூடியவராக இருக்க வேண்டும்” இக் கூற்றை
ஏற்கின்றீரா?
o
இல்லை. குற்றம்
சாட்டப்பட்ட நபரிலும் பார்க்க சிரேஷ்ட தன்மையில் கூடியவராக இருக்கவேண்டிய அவசியமில்லை
எனினும் அவ்வாறிருப்பது வரவேற்கத்தக்கது
17. ஆரம்பப் புலனாய்வு அதிகாரியிடம் வாக்குமூலம் வழங்குவதற்கு மறுக்கின்ற அலுவலருக்கு எதிராக ஏதும் நடவடிக்கை எடிக்க முடியுமா?
o ஆரம்ப்ப் புலனாய்வு அதிகாரயிடம் வாக்குமூலம் வழங்க மறுப்பது பாரிய துர்நடத்தையாகும். அத்தகைய சந்தர்ப்பங்கள் ஆரம்பப் புலனாய்வு அறிக்கையில் இடம்பெறுமிடத்து சம்பந்தப்பட்ட அலுவலருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளலாம்.
18. மேற்குறிப்பிட்ட சம்பவத்தில் ‘ஆரம்பப் புலனாயவின் போது சந்தேக
நபர் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் விசாரணையை அத்துடன் நிறுத்திக்கொண்டு குறித்த
அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக
அபிப்பிராயம் தருக.
o
ஆரம்பப் புலனாய்வு
நடைபெறும் சந்தர்ப்பத்தில் சந்தேகத்துக்கு ஆளானாவர் குறித்த துர்நடத்தை தம்மால்
புரியப்பட்டதாக ஏற்றுக் கொண்டாலும் புலனாய்வை முழுமையாக நடத்தி தனது
அவதானிப்புக்கள் மற்றும் விதப்புறைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சமர்ப்பிப்பது
அரம்ப்ப் புலனாய்வு அதிகாரியின் பொறுப்பாகும்.
19. ஆரம்ப்ப் புலனாய்வு
அதிகாரியின் பொறுப்புக்கள் யாவை?
20 ஆரம்பப் புலனாய்வு அறிக்கையில் அடங்கக் கூடிய விடயங்கள் யாவை?
21. ஆரம்ப்ப் புலனாய்வு நடத்தாது ஒழுக்காற்று நடவடிக்கை எடிக்க
முடியுமான சந்தர்ப்பங்கள் யாவை?
ஆகிய சந்தர்ப்பங்களில் ஆரம்பப் புலனாய்வு விசாரணைகள் இன்றி குற்றப்பத்திரிகை அனுப்பலாம்
எமது முநூல் குழுமம்
.f www.facebook.com/LankaJobinfocom-157301272736519
எ வட்சப் குழுக்கள்
x
0 Comments