>

ad

Teachers EB Module 01 Tamil

ஆசிரியர்களுக்கான வினைத்திறன் தடை தாண்டல்
மொடியூல் இலக்கம் 01


லங்கா ஜொப் இன்ஃபோவின் ஊடாக தரப்பட்ட வினைத்திறன் தடைதாண்டல் மற்றும் போட்டிப் பரீட்சைகளுக்கான வழிகாட்டல் என்ற அடிப்படையிலான கட்டுரைகளின் தொகுப்புகள் அனைத்தினதும் விபரத்தினை கீழ்வரும் லிங்கில் காணலம்


https://www.lankajobinfo.com/2021/03/SLTSEBFullGuide.html

மொடியூல் கட்டமைப்பு 

01.மொடியூலின் பெயர்:-


தாபன விதிக்வையில் காணப்படுகின்ற ஆசிரியர்கள் குறித்த பிரதான விடயங்கள், அரச ஊழியர் ஒருவர் தெரிந்துகொள்ள வேண்டிய விடயங்கள், நிதிப் பிரமானத்தின் பொதுவான விடயங்கள்.

2. நோக்கம்.

அ) அரச ஊழியர் என்ற வகையில் ஆசிரியர்களின் உரிமைகள், கடமைகள், சலுகைகள், பொறுப்புகள் குறித்த தெளிவினை வழங்குதல்
ஆ) தானவிதிக் கோவையிலுள்ள ஆசிரியர்களுக்கான பல்வேறுபட்ட விதிமுறைகள் குறித்த தெளிவினை வழங்குதல்.
ஆ நிதிப்பிரமாணத்திலுள்ள ஆசிரியர்களுக்கு பயனளிக்கக்கூடிய பல்வேறுபட்ட விதிமுறைகள் குறித்து அறிவினை வழங்குதல்

3.எதிர்பார்க்கும் அடைவுமட்டம்.

அரச ஊழியர் ஒருவர் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய நிர்வாகச் சட்டங்கள், விதிமுறைகள், நிதிப்பிரமாணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் என்பன தெடர்பிலான அறிவினை மேம்படுத்தல் ஊடாக இந்தபாடநெறியில் பங்குபற்றுபவர்களின் தொழில் ரீதியான ஓழுக்கத்தை உறுதிசெய்தல். மற்றும் அதனூடாக அவர்களது தெழில் பாதுகாப்பினை உறுதிசெய்தல் என்பதாகும் 

4. உள்ளடக்கம்

அ) அரச ஊழியர் ஒருவர் தனக்குரிய தொழில் ரீதியிலான உரிமைகள், சலுகைள், பொறுப்புக்கள் தொடர்பில் போதுமான தெளிவுடன் செயற்பட வேண்டியதானது சாதாரண விடயமாக் கருதமுடியாத ஒன்றாகும். மாணவர் சமூகத்தினது அறிவுத் திறனை மேம்படுத்துவதனை முதன்மை நோக்கமாக்கொண்டு செயற்படுவது ஆசிரியர்களின் பிரதான பொறுப்பாகும். அந்த வகையில் குறித்த பொறுப்பினை நிறைவேற்றும் போது தான் கட்டுப்பட வேண்டிய நிர்வாக சட்டங்கள், ஒழுக்காற்று சட்டங்கள், நிதிப் பிரமாணத்தின் விதிமுறைகள் என்பன தொடர்பில் தவுறுகள் நேர்வதனால்  சிரமத்துக்குள்ளாகின்ற சந்தர்ப்பங்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. எனவே அரச ஊழியர்கள் கட்டுப்பட்டு ஒழுகவேண்டிய அரச சேவைகள்  ஆணைக்குழுவின்  சட்டத்திட்டங்கள், தாபனக்கோவை விதிமுறைகள், நிதிப்பிரமாணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள், ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பின் ஏற்பாடுகள் என்பவற்றின் அடிப்படையில் ஆசிரியர்களது அன்றாட தொழில் நடவடிக்கையுடன் தொடர்புடைய விடயங்கள் இந்த மொடியூலில்; உள்ளடக்கப்பட்டுள்ளது.  

இந்த மொடியூலில் கீழ்க்குறிப்பிடப்படும் விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படுகின்றன. 

அ) ஆசிரியர் சேவையில் பதவிகளுக்கு ஆட்களைச் சேர்த்தல், நியமனம்  வழங்குதல், பதவி உயர்வு வழங்குதல், போன்ற பிரதான நிர்வாக விதிமுறைகள். 

ஆ) அரச ஊழியர் என்றவகையில் ஆசரியர்களுக்கு அமுலாகின்ற ஒழுக்காற்று விதிமுறைகள்.

இ) நிதியினைக் கையாலுகின்ற போது ஆசிரியர்கள் கடைபிடிக்கவேண்டி ஒழுங்குமுறைகள்.


அரச சேவைகள் ஆணைக்கு மற்றும் தாபனவிதிக் கோவையின் ஆறாவது அத்தியாயத்திலிருந்து இறுதி அத்தியாயம் வரையும் உள்ளடங்கியுள்ள விதிமுறைகள் தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கு பெறுந்துவதாக அமைவதுடன் தாபனவிதிக் கோவையின் முதலாவது அத்தியாயம் முதல் இறுதி வரையான விடயங்கள் மாகாண சேவையில் உள்ள ஆசிரியர்களுக்கு பொறுந்துவதாக அமைகின்றது.  அனைத்து அரச ஊழியர்களுக்குமான ஒழுக்க விதிமுறைகள் மற்றும் தாபன விதிக்கோவையின் இரண்டாவது பகுதி என்பன மேற்குறிப்பிட்ட இரண்டு பிரிவினருக்கும் பொதுவானவைகளாகும்.

மெடியூல் இலக்கம் 01.

மொடியூல் இலக்கம் 01  PDF பதிவிறக்க



மேலதிக வாசிப்பு


1. அரச சேவை ஆணைக்குழுவின் விதிமுறைகள் அடங்கிய இல 1589/30 மற்றும் 2009.02.20 திகதியடப்பட்ட விசேட வர்த்மானி அறிவித்தல்
2. இலங்கை ஆசிரியர் சேவையின் சேவைப் பிரமாணக் குறிப்பு
3. தாபண விதிக் கோவை
4. நிதிப் பிரமாணம்.