>

ad

அரச பதவி ஒன்றினைப் பெற்றுக் கொள்வதற்கான வழிகாட்டல் - பகுதி 1


லங்கா ஜொப் இன்ஃபோவின் ஊடாக தரப்பட்ட வினைத்திறன் தடைதாண்டல் மற்றும் போட்டிப் பரீட்சைகளுக்கான வழிகாட்டல் என்ற அடிப்படையிலான கட்டுரைகளின் தொகுப்புகள் அனைத்தினதும் விபரத்தினை கீழ்வரும் லிங்கில் காணலம்

https://www.lankajobinfo.com/2021/03/SLTSEBFullGuide.html

அறிமுகம்.

பொதுவாக அரச பதவியொன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் ஆவளும் இன்று எமது நட்டில் பரவலாகக் காண முடிகின்றது.  எனினும் m

01. அரச தெழில் என்றால் என்ன

02. அரச தொழில்களுக்க்காக எவ்வாறு ஆட்கள் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர்

04. நான் அரச தொழிலொன்றைப்  பெற்றுக்கொள்ளப்  பொறுத்தமாவனா?

05.என்னென்ன அரச தொழில்கள் காணப்படுகின்றன?  

06. அவ்வாறான தொழில்களைப் பெற்றுக்கொள்ள என்ன தனைமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்?

 

என்பது போன்ற வினாக்களுக்கு விளக்கங்களைப்  பெற்றுக்கொள்ள முடாமல் பலரும் சிரமப்பட்டு வருகின்றனர் என்பதாகத் தெரிய வருகின்றது.  அரச தொழில் வாய்ப்புக்கள் சமுத்திரம் போன்று அகன்று விரிந்திருக்கும் நிலையில் எந்த வித முன்னேற்பாடுகளுமின்றி தனக்குத் தெரிந்த ஓரிரு  பதவிகளுக்கு மாத்திரம்  விண்ணப்பிப்பதும் பிரதிபலன் காணாமல் கைசேதப்படும் நிலையினைப் பலரும் எதிர்நோக்கிக் கெண்டிருக்கின்றனர். அரச தொழில்கள்  குறித்து பூரணமான  விளக்கத்தினைப் பெற்று  தொழிலை உரிய முறையில் பெற்றுக் கொள்வதற்காக உதவியாக அமைகின்றது. அந்த அடிப்படையில் அரச சேவை குறித்தும், அந்தப் பதவிகளை பெற்றுக் கொள்ன என்னென்ன ஏற்பாடுகளை செய்து  கொள்ள வேண்டும் என்பது குறித்த விரிவான விளக்கம் இந்த தொடரின் ஊடாக வழங்கப்படிகின்றது.

 

அரச பதவிக்கு ஆட்களைச் சேர்த்துக்கொள்ளல்.

 

பொதுவாக ஒவ்வொரு அரச நிறுவனத்திற்கும் தத்தமது நிர்வாக  செயற்பாடுகளை முறையாக மேற்கொள்வதற்கு போதுமான ஆள் வளம் குறித்த தகவல்கள் அடங்கிய  பதிவேடு ஒன்று அந்தந்த நிறுவனங்களில் காணப்படும். இந்தப் பதிவேட்டில் குறித்த​ நிறுவனத்தின் செயற்பாடுளை மேற்கொள்வதற்கு அவசியமான பதவிகளின் எண்ணிக்கை தனித்தனியாக குறிப்பிடப்பட்டிருக்கும். பொது அரசாங்க சேவைகள் ஆணைக்குழு ஊடாக அல்லது மாகாண சேவைகள் ஆணைக்குழுவின் ஊடாக குறித்த பதவிகளுக்கான ஆட்கள் சேர்க்கப்பட்டு வழங்கப்படுவர். இவ்வாறு நியமணம் பெற்று வருகின்றவர்களில் மரணித்தல், 55 அல்லது 60 வயது பூர்த்தியானதன் பின்னர் ஓய்வு பெற்றுச் செல்லல், பதவியிலிருந்து விலகிச் செல்லல் அல்லது வேறுபதவிகளுக்கு மாறுதல் போன்ற  காரணங்களினாலும் மற்றும் வேறு காரணங்களினாலும் சில பதவிகள் வெற்றிடமாகின்றன. அத்துடன் புதிதாக சில சேவைகள் அறிமுகப்படுத்தப்படுத்தல் அல்லது தற்போதுள்ள ஆளணியின் அளவுகள் அதிகரித்தல்போன்ற காரணங்களினாலும் பதவி வெற்றிடங்கள் உருவாகின்றன.

 இவ்வாறு ஒவ்வொரு நிறுவனங்களிலும் வெற்றிடமாகின்ற பதவிகளுக்காக ஆட்களைச் சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கை மத்திய அரசாங்கத்தினால் அல்லது மாகாண சபைகளினால் மேற்கொள்ளப்படுகின்றது. திணைக்களங்கள் கூட்டுத்தாபனங்கள் என்பவற்றுக்கும் ஆட்சேர்க்கும் முறையும் இவ்வாறுதான் இடம்பெறுகின்றது.

  அரச பதவிகளின் வகைகள்

 ஒவ்வொரு நிறுவனத்திற்கும் அவசியமான பதவிகள் என்னென்ன எனவும் அந்த பதவிகளின் எத்தனை எண்ணிக்கை இருக்க வேண்டும் என்பது குறித்தும் அந்தந்த நிறுவனங்களிடம் ஒருபதிவு காரணப்படும் என்பதாக மேலே குறிப்பிட்டிருநதேன். இந்த பதிவேட்டில் இடம்பெறுகின்ற அத்தனை பதவிகளையும் பொதுவாக மூன்று வகைகளில் அடக்கிவிடலாம்.

அவையாவன.

01.     நாடலாவிய சேவை

02.     இணைந்த சேவை

03.     ஏனைய சேவைகள்


நாடலாவிய சேவை;-

 

அரச சேவையைப் பெறுத்த வரையில் மிக உயரிய பதவிகளை அடக்கிய சேவைத்தொகுதியாக இந்த நாடலாவிய சேவையினைக்  குறிப்பிடலாம். சம்பளம் சலுகைகள் என்ற வகையில் அதி கூடிய அளவில் இந்த சேவைப்பிரிவுக்கு வழங்கப்படுகின்றது. இந்த சேவைப் பிரிவில் இருப்பவர்களுக்கு சம்பளத்துக்கு மேலதிகமாக ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை வரி விலக்களிக்கும்  கையிலான வாகனப் பேர்மிட்டுகள் வழங்கப்படுவதுடன் பதவிகளின் அடிப்படையில்  உத்தியோகபூர்வ வாகனங்கள், எரிபொருள் செலவுக்கான கொடுப்பனவு, சாரதிக்கான கொடுப்பனவு, தொலைபேசிக் கட்டணங்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் வேறு வகையான கொடுப்பனவுகள் என பல கொடுப்பனவுகளுக்கு இந்த சேவைத் தொகுயில் இருப்பவர்கள் உரித்துடையவராகின்றனர்.

01.     இலங்கை நிர்வாக சேவை

02.     இலங்கை பொறியியல் சேவை

03.     இலங்கை கணக்காளர் சேவை

04.     இலங்கை திட்டமிடல் சேவை

05.     இலங்கை திட்டமிடல் சேவை

06.     இலங்கை விஞ்ஞான சேவை

07.     இலங்கை கட்டிடநிர்மாண சேவை

என்பன அரச நிர்வாக அமைச்சின் கீழ்வருகின்ற நாடலாவியசேவை என்பதாக வரையறுக்கப்ட்டு இருப்பதுடன் வைத்தியர் சேவை, வெளிநாட்டு தூதுவர் சேவை, நீதிபதிகள், சுங்க திணைக்களத்தில் வழங்கப்படுகின்றசில  சேவைகள், இலங்கை கல்வி நிர்வாக சேவை என்பன இந்த சேவையைப் போன்று உயர்தரத்திலான சேவைகளாக்க் குறிப்பிடலாம். ( இந்த சேவைகள் குறித்து தனித்தனியாக பின்னர் விளக்கப்படும்)

 

இணைந்த சேவை

அரச சேவைகளில் அடுத்த பிரிவாக குறிப்பிடப்படுகின்ற இந்த சேவைத் தொகுதியானது மொத்த அரச சேவையிலும் பார்க்கும் போது எண்ணிக்கையில் மிக அதிகமானவர்கள்  இணைத்துக் கொள்ளப்படுகின்ற சேவைத் தொகுதியாக ​இது காணப்படுகின்றது.

1.        இலங்கை தொடர்பாடல் தொழிநுட்ப சேவை

2.        அரசாங்க மொழிபெயர்ப்பாளர் சேவை

3.        இலங்கை நூலகர் சேவை

4.        அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை

5.        முகாமைத்துவ  உத்தியோகத்தர் சேவை

6.        இணைந்த சாரதிகள் சேவை

7.        இணைந்த அலுவலக உதவியாளர் சேவை

என்ற அடிப்படையில் அரச நிர்வாக அமைச்சின் கீழ்வருகின்ற இணைணந்த சேவை என்பதாக வரையறுக்கப்ட்டிருப்பதுடன் அதிபர் சேவை ஆசிரியர்  சேவை என இன்னும்  பல சேவைகளும் இந்தப் பிரிவிற்கு சமாந்தரமாக காணப்படுகின்றன.

மேற்படி இணைந்த சேவைகள் மூன்றாம் நிலை சேவைகள், இரண்டாம்  நிலை சேவைகள், ஆரம்பநிலை சேவைகள் என்ற அடிப்படையில் பல படிநிலைகளாக பிரிக்கபடுகின்றது.

மூன்றாம் நிலை சேவைகள்-

1.        இலங்கை தொடர்பாடல் தொழிநுட்ப சேவை

2.        அரசாங்க மொழிபெயர்ப்பாளர் சேவை

3.        இலங்கை நூலகர் சேவை​

 

இவற்றைத்தவர பொது நிர்வாக  அமைச்சின் கட்டுப்பாட்டில் வராத அதிபர் சேவை போன்ற பல சேவைகள் இந்தச் சேவைக்கு  சமாந்த சேவையாக்க்  குறிப்பிடப்படுகின்றன.

இரண்டாம்  நிலை சேவைகள்

1.        அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை

2.        முகமைத்துவ  உத்தியோகத்தர் சேவை

இவற்றைத்தவர பொது நிர்வாக  அமைச்சின் கட்டுப்பாட்டில் வராத ஆசிரியர் சேவை  போன்ற பல சேவைகள் இந்தச் சேவைக்கு  சமாந்த சேவையாக்க்  குறிப்பிடப்படுகின்றன

 

ஆரம்பநிலை சேவைகள்

1.        இணைந்த சாரதிகள் சேவை

2.        இணைந்த அலுவலக உதவியாளர் சேவை

இவை தவிர சிற்றூழியர் சேவை, காவலாளர் சேவை, தோட்ட  பராமரிப்பாளர் சேவை, பங்களா பராமரிப்பாளர் சேவை, சமையல்கார்ர்கள் சேவை என்பதாக பலவிதமான சேவைகள் இந்தப் பிரிவில் அடங்குகின்றன. 

இவைகள் தவிர வேறு சேவைகள் என்ற பிரிவின் கீழ் தொழில்நுட்ப அடிப்படையிலான சேவைப் பிரிகளும் காணப்படுகின்றன.


தொடரும்...

ராஃபி சரிப்தீன்

அரச  மொழி பெயர்ப்பாளர்.


தொடர்ந்து தகவல்களைப்  பெற்றுக் கொள்ள எமது முகநூல் பக்கத்திற்குலைக் இடவும்