பாடசாலையில் பதவியேற்கும் நாளில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளும், அன்று முதல் உங்களது சுயவிபரக் கோவையில் (Personal File) பேணப்பட வேண்டிய ஆவணங்களும் உங்கள் முழுச் சேவைக் காலத்திற்கும் ஓய்வூதியத்திற்கும் மிக முக்கியமானவை.
சுயவிபரக் கோவையின் மூலக் கோவை வலயக் கல்வி அலுவலகத்திலும், பிரதிக் கோவை பாடசாலை அதிபரின் பொறுப்பிலும் பேணப்படும். இதில் பின்வரும் ஆவணங்கள் கட்டாயம் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்:
| இல | ஆவணம் | படிவ இலக்கம் / விபரம் | முக்கியத்துவம் |
|---|---|---|---|
| 01 | நியமனக் கடிதம் | Appointment Letter | சேவை ஆரம்பத் திகதி மற்றும் தரத்திற்கான அடிப்படை ஆதாரம். |
| 02 | பதவியேற்புக் கடிதம் | அதிபர் உறுதிப்படுத்திய கடிதம் | சம்பளம் மற்றும் ஓய்வூதியக் காலக் கணக்கீட்டிற்கான ஆதாரம். |
| 03 | சேவை ஒப்பந்தம் | பொது 160 (General 160) | அரச சேவை நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட சட்டபூர்வ ஆவணம். |
| 04 | சத்தியப் பிரமாணம் | பொது 278 (General 278) | பொது 278 & அரசியலமைப்பின் 6ஆவது திருத்த உறுதிமொழி. |
| 05 | மருத்துவ அறிக்கை | பொது 169 / சுகாதாரம் 169 | நிரந்தர ஓய்வூதிய சேவைக்கு உடற்தகுதிச் சான்றிதழ். |
| 06 | வரலாற்றுப் பதிவேடு | பொது 226 / 234 / 53A (History Sheet) | பதவி உயர்வுகள், இடமாற்றங்கள், சம்பள ஏற்றங்கள் பதியப்படும். |
| 07 | தனிப்பட்ட சான்றிதழ்கள் | பிறப்பு, NIC, திருமணச் சான்றிதழ் | ஓய்வு வயது கணக்கீடு மற்றும் W&OP உரித்துக்களுக்கு அவசியம். |
| 08 | கல்விச் சான்றிதழ்கள் | பட்டம், டிப்ளோமா, PGDE | சம்பளப் படிநிலை மற்றும் பதவி உயர்வுகளுக்கான ஆதாரம். |
| 09 | W&OP இலக்கக் கடிதம் | ஓய்வூதியத் திணைக்களக் கடிதம் | W&OP பதிவை உறுதிப்படுத்தும் உத்தியோகபூர்வ இலக்கம். |
இலங்கை அரச சேவை & கல்வி வழிகாட்டிகளை உடனுக்குடன் பெற இணைந்திடுங்கள்!
WhatsApp Channel-இல் இணைய WhatsApp குழுமத்தில் இணைய
0 Comments