பதவியேற்புக் கடிதம், பொது 160, பொது 169 / சுகாதாரம் 169 மருத்துவ அறிக்கை மற்றும் அரச வங்கிக் கணக்கு விபரங்கள் வலயக் கல்வி அலுவலகத்தில் உரிய நேரத்தில் சமர்ப்பிக்கப்பட்டால், பொதுவாக 1 முதல் 2 மாதங்களுக்குள் (நிலுவைச் சம்பளத்துடன்) கிடைக்கும்.
முதலில் 21 நாட்கள் அமைய விடுமுறையைப் (விகிதாசாரம் கிடையாது) பயன்படுத்தலாம். அதன் பின்னர் பாடசாலைத் தவணைக் காலத்தில் அத்தியாயம் XII பிரிவு 24 இன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவச் சான்றிதழுடன் 01 மாதம் வரை முழுச் சம்பள விடுமுறை பெறலாம். அதற்கு மேலாகவே அரைச் சம்பள அல்லது சம்பளமற்ற விடுமுறையாகும்.
முடியாது. அரசாங்க வைத்தியசாலையில் கடமையாற்றும் அரசாங்க வைத்திய அதிகாரியினால் (GMO / DMO) மட்டுமே பரிசோதிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
சாதாரண வருடாந்த இடமாற்றங்களுக்கு விண்ணப்பிக்க முடியாது. மிக விசேட மருத்துவக் காரணங்கள் அல்லது உயிரச்சுறுத்தல் போன்ற விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் மட்டுமே உரிய அதிகாரியின் விசேட அனுமதியுடன் பரிசீலிக்கப்படும்.
வலயக் கல்வி அலுவலக மூலக் கோவையை நேரடியாகக் கையாள முடியாது. ஆனால், பாடசாலையில் அதிபரின் பொறுப்பில் உள்ள பிரதிக் கோவையில் ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளனவா என்பதை அதிபரின் அனுமதியுடன் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.
3 வருடத் தகுதிகாண் காலம், புதிய வர்த்தமானி 2444/21 EB I பரீட்சை, 18/2020 இரண்டாம் மொழித் தேர்ச்சி & சேவை நிரந்தரமாக்கல் பூரண வழிகாட்டி.
கட்டுரை 02-ஐப் படிக்கவும் »இலங்கை அரச சேவை & கல்வி வழிகாட்டிகளை உடனுக்குடன் பெற இணைந்திடுங்கள்!
WhatsApp Channel-இல் இணைய WhatsApp குழுமத்தில் இணைய
0 Comments