>
சிறுவர்களின் மனிதில் தோன்றும் அழகான எண்ணங்க ஓவியமாக வரைந்து கொமர்ஷல் வங்கிக்கு அனுப்புங்கள். கொமர்ஷல் வங்கியின் அருணலு சித்திரம் சிறுவர் சித்திரப்போட்டி மூலம் அந்த ஓவியங்களுக்கு பரிசுகளைத் தர கொமர்ஷல் வங்கி தயாராக உள்ளது.
பிரிவு |
கருப்பொருள் |
கடதாசியின் அளவு
|
முன் ஆரம்பப் பள்ளிப் பிரிவு |
தாம் விரும்பிய தலைப்பு |
A3 |
ஆரம்ப பள்ளிப் பிரிவு |
தாம் விரும்பிய தலைப்பு |
A3 |
பின் ஆரம்ப பள்ளிப் பிரிவு |
தாம் விரும்பிய தலைப்பு |
A3 |
கனிஷ்ட பிரிவு |
எமது வாழ்க்கை முறை |
14 அங். x 18 அங். |
சிரேஷ்ட பிரிவு |
இயற்கையின் கொடை |
14 அங். x 18 அங். |
2023 ஆகஸ்ட் 01 ஆம் திகதி முதல் 2023 செப்தம்பர் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் www.arunalum.lksiththa எனும் இணையத்தளத்திற்குள் பிரவேசித்து உங்களால் வரைந்து முடிக்கப்பட்ட சித்திரங்களின் ஸ்கேன் (Scan) பிரதி மற்றும் அதன் விபரங்களை உள்ளடக்குவதன் மூலம் போட்டியில் கலந்துகொள்ளலாம். ஸ்கேன் செய்யப்பட்ட சித்திரங்கள் உள்ளடக்கப்படவேண்டியது jpeg மாதிரியில் என்பதுடன் அதன் அளவு மெகாபைட் 5 (5mb) இற்கு மேற்படக்கூடாது. இணையத்தளத்தில் உள்ள படிவத்தில் போட்டியாளரின் பெயர், பிறந்த தினம், முகவரி, மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி இலக்கம் (கையடக்க), தாய்/தந்தை/பாதுகாவலரின் பெயர், பாடசாலை மற்றும் அதன் முகவரியை குறிப்பிட்டு அனுப்புதல்வேண்டும்.
முன் ஆரம்ப பள்ளிப் பிரிவில் 25 சிறப்பு ஆக்கங்களுக்காக ரூபா பத்தாயிரம் வீதம் (ரூ. 10,000/-) பணப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
மேலும் 50 திறமையாளர்களுக்கு சான்றிதழ் பத்திரங்கள் வழங்கப்படும்.
ஏனைய போட்டிகளுக்கு முதலாவது, இரண்டாவது, மூன்றாவது இடங்களுக்கு முறையே ரூபா ஒரு லட்சம் (ரூ. 100,000/-), ரூபா எழுபத்தையாயிரம் (ரூ. 75,000/-), ரூபா ஐம்பதாயிரம் (ரூ. 50,000/-) வீதம் பணப் பரிசுகள் மற்றும் சான்றுப்பத்திரங்கள், சிறப்பு திறமைப் பரிசுகள் 25 இற்காக ரூபா பத்தாயிரம் (ரூ. 10,000/-) வீதம் பணப் பரிசுகள் மற்றும் சான்றுப்பத்திரங்கள் மேலும் திறமைப் பரிசுகள் 50 இற்காக சான்றுப்பத்திரங்களும் வழங்கப்படும். அனைத்து பணப் பரிசுகளும் கொமர்ஷல் வங்கியின் அருணலு சிறுவர் சேமிப்புக் கணக்கில் வைப்புச் செய்யப்படும்.
மேலதிக விபரங்கள் 0112 353 353
1 Comments
good
ReplyDelete