>
அல்லாமா இக்பால் புலமைப் பரிசில் திட்டத்தில் பாகிஸ்தான் சென்று இலவசமாக கல்வி பயில்வதற்கு 1000 பேர்களுக்கு சந்தர்ப்பம் இருக்கின்ற நிலையில் 380 பேர்கள் அளவிலேயே சென்ற வருடம் தெரிவாகியிருந்தனர். புலமைப்பரிசில் குறித்த போதிய தௌிவு இல்லாமை இந்த நிலைக்கு காரணமாக அமையலாம்,.
அந்த அடிப்படையில் அல்லாமா இக்பால் புலமைப் பரிசில் திட்டத்திற்காக விண்ணப்பம் சமர்ப்பிப்பது முதல் பல்கலைக்கழகம் ஒன்றினைப் பெற்றுக்கொள்வது வரையிலான செயற்பாடுகள் குறித்த முழு விளக்கத்தினை இந்தக் கட்டுரை ஊடாக தருவதற்கு முயற்சிக்கின்றோம்.
அல்லாமா இக்பால் புலமைப் பரிசில் திட்டம் என்பது. பாகிஸ்தான் அரசின் உயர் கல்வி ஆணைக்குழுவினால் செயற்படுத்தப்படுகின்ற புலமைப் பரிசில் செயற்திட்டம் ஒன்றாகும். இந்தத் திட்டத்தின் கீழ் இலங்கை மாணவர்கள் 1000 பேர்களுக்கு பாகிஸ்தான் சென்று அங்கிருக்கும் பல பல்கலைக்கழகங்களில் மருத்துவம் பொறியியல் மற்றும் 50 மேற்பட்ட துறைகளில் பட்டம் பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.
01 பாடநெறிக் கட்டணம் - மாணவர்கள் தெரிவு செய்கின்ற மருத்துவம் பொறியியல் உட்பட அனைத்து பாடநெறிகளுக்கான பல்கலைக்கழகங்களுக்கான வருடாந்தக் கட்டணங்கள் புலமைப் பரிசில் ஊடாக செலுத்தப்படும். எனவே பிலமைப் பரிசில் பெறுகின்ற மாணவர்கள் அனைத்துப் பாடநெறிகளையும் பல்கலைக்கழகங்களில் இலவசமாக பயிலலாம்.
02.தங்குமிட வசதிகள் - பாகிஸ்தான் செல்கின்ற மாணவர்களுக்கு தான் கல்வி பயில்கின்ற பல்கலைக்கழகத்தில் தங்குமிட வசதிகள் இலவசமாக செய்து தரப்படும்.
03. படிப்பதற்கான கொடுப்பனவு. - பாடநெறிகளைப் பயில்வதற்காக அவ்வப்போது ஏற்படுகின்ற சிறு சிறு செலுவகளுக்ககாக ஒரு தொகைப் பணம் மாதாந்தம் கிடைக்கப்பெறும்.
04.புத்தகக் கொடுப்பனவு. - பாடநெறிக்கு தேவையான புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கான கொடுப்பனவு ஒன்றும் தேவைகளுக்கு ஏற்ப கிடைக்கப்பெறும்.
05. கல்விக்காக பாகிஸ்தான் செல்வதற்கும் கல்வியை முடித்துக்கொண்டு வீடு திரும்புவதற்கும் என்ற அடிப்படையில் விமான டிக்கட் இலவசமாக வழங்கப்படும்.
இந்தக் கொடுப்பனவுகள் பாடநெறி ஆரம்பிக்கப்பட்டது முதல் இறுதி வரை வழங்கப்படும்.
அல்லமாக இக்பால் புலமைப் பரிசிலுக்காக பட்டப்படிப்பு, பட்டப் பின் படிப்பு என்ற இரண்டு அடிப்படைகளில் மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படுகின்றனர்.
01. Medical (MBBS) இந்தப் பாடநெறிகளில் முதன்மையான பாடநெறியாக மருத்துவத்துறையினைக் குறிப்பிடலாம், இது இலங்கைப் பல்கலைக்கழகம் ஒன்றில் மருத்தும் படிக்கின்ற அதே அந்தஸ்தினையுடைய பாடநெறியாகும் இந்தப் பாடநெறியினை நிறைவு செய்துவிடுமிடத்து இலங்கையில் மருத்துவராக பணியாற்றுவதற்கான வாய்ப்புக் கிடைக்கின்றது.
02. Engineering (Mechanical, Electrical etc.) பொறியியல் பிரிவின் கீழ் காணப்படுகின்ற இலத்திரணியல் பொறியியல், இயந்திரவியல் பொறியில் என பல துறைகளிலான பாடநெறிகளை இந்தத் துறை உள்ளடக்கியுள்ளது.
03.. General Science (Physics, Biology, Chemistry etc.) பொது விஞ்ஞானம் என்ற பகுதியில் இரசாயனவியல், விலங்கியல். பௌதீகவியல் என்ற அடிப்படையில் பலவிதமான பாடநெறிகளுக்காக விண்ணப்பிக்கின்ற வாய்ப்புக் கிடைக்கப் பெறுகின்றது.
04.Social Sciences, Arts, and Humanities - சமூக விஞ்ஞானம், கலை, போன்ற துறைகளில் ஆங்கிலம், உளவியல், வரலாறு சட்டம். பொருளியல் என இன்னும் பலவிதமான பாடநெறிகள் உள்ளடக்கப்படுகின்றன.
05.Computer Science - இவை தவிர கணனித்துறையில் கணனித் தொழில் நுட்பம் தொடர்பான பல பாடநெறிகள் காணப்படுகின்றன.
பட்டப்பின் படிப்பு (Masters) பாடநெறியின் பின்வரும் துறைகள் உள்ளடக்கப்படுகின்றன.
இங்கு பாடநெறிகளுக்கான தகைமைகளாக உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் கருதப்படுகின்றன. அத்துடன் நீங்கள் உயர் தரத்தில் பெறுகின்ற பெறுபேறுகளை பாகிஸ்தான் உயர் கல்வி ஆணைக்குழுவின் விசேட புள்ளிவழங்கல் திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு சித்திகளுக்கும் புள்ளியிட்டு அந்தப் புள்களின் விகிதாசாரத்தின் அடிப்படையில் தகைமைகள் பரிசோதிக்கப் படவேண்டும்.
இங்கு சென்ற வருடம் தான் உயர் தரம் செய்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை 22 வயதுக்கு உட்பட்ட நிலையில் எந்த வருடமேனும் உயர் தரப் பரீ்சை எமுதி பெறுபேறு காணபடுகின்ற எவருக்கும் பட்டப் படிப்புக்கான இந்தப் புலரமப் பரிசிலுக்காக விண்ணப்பிக்கலாம்.
நீங்கள் பெற்றுக்கொள்கின்ற பெறுபேறுகளை மதிப்பீடு செய்வதற்காக பாகிஸ்தான உயர் கல்வி ஆணைக்குழு புள்ளித் திட்டம் ஒன்றினை உருவாக்கியிருனக்கின்றது. வழங்குகின்ற புள்ளித் திட்ட விபரங்கள் கீழே தரப்படுகின்றது.
Distinction (விசேட சித்தி) A - 85 புள்ளிகள்
Very Good Pass (மிகத் திறைமைச் சித்தி B - 70
Credit (திறமைச் சித்தி) C - 57
Ordinary Pass (சாதாரண சித்தி) S 45
Failure (சித்தியில்லை) F Zero
மேற்படி புள்ளிகளுடன் உங்களது உயர் தரப் பரீட்சைப் பெறுபேற்றினை ஒப்பிட்டு அதற்கான புள்ளிகளை வழங்கி உங்களது புள்ளி வீதம் என்ன என்பதனை கணித்துக் கொள்ள வேண்ணடும்.
01. முதல் கட்டமாக உங்களது பெறுபேற்றினைக் குறித்து அதன் பக்கத்தில் மேற்படி புள்ளிகளை இடுங்கள்.
02. அந்தப் புள்ளிகளைக் கூட்டிங்கள்.
03. நீங்கள் சித்தியடைந்த பாடங்களின் எண்ணிக்கையினால் குறித்த புள்ளிகளை வகுக்கவும்.
04. அவ்வாறு கிடைக்கப் பெறுகின்ற புள்ளிகளின் சராசரி உங்களுக்கான புள்ளி வீதமாக கருதப்படும்.
இந்த செயன்முறையினை பரிந்து கொள்வதற்காக பாகிஸ்தான் உயர் கல்வி ஆணைக்குழு இரண்டு உதாரணங்கள் ஊடாக விளக்கம் தந்திருக்கின்றது.
நீங்கள் உயர்தப் பரீட்சைக்குத் தோற்றி A, B C என பெறுபேறுகளைப் பெற்றிருக்கின்றீர்கள் என வைத்துக்கொள்வோம். இந்த பெறுபேறுகளுக்கான பாகிஸ்தான் உயர் கல்வி நிறுவனம் வழங்குகின்ற புள்ளிகளாக முறையே 85, 70 . 57 என்பதாகக் குறிப்பிட வேண்டும்
இனி இந்த மூன்று புள்ளிகளையும் ஒன்றாகக் கூட்டுங்கள் 85 + 70 + 57 = 212, இவ்வாறு கூட்டும் போது கிடைக்கின்ற விடையினை 3 இனால் வகுக்க வேண்டும். 212/3 = 70.66 இப்போது உங்களுக்கு கிடைக்கின்ற புள்ளி வீதம் 70.66 என்பதாக உறுதி செய்யலாம்.
நீங்கள் உயர்தப் பரீட்சைக்குத் தோற்றி A, A, B என பெறுபேறுகளைப் பெற்றிருக்கின்றீர்கள் என வைத்துக்கொள்வோம். இந்த பெறுபேறுகளுக்கான பாகிஸ்தான் உயர் கல்வி நிறுவனம் வழங்குகின்ற புள்ளிகளாக முறையே 85, 85 . 70 என்பதாகக் குறிப்பிடலாம்
இனி இந்த மூன்று புள்ளிகளைம் ஒன்றாகக் கூட்டுங்கள் 85 +85 + 70 = 24, இவ்வாறு கூட்டும் போது கிடைக்கின்ற விடையினை 3 இனால் வகுக்க வேண்டும். 212/3 = 80.00 இப்போது உங்களுக்கு கிடைக்கின்ற புள்ளி வீதம் 70.66 என்பதாக உறுதி செய்யலாம்.
புள்ளிகளை மதிப்பீடு செய்தல் தொடர்பான விபரம் பதிவறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்
இதன் அடிப்படையில் உங்களது உயர் தரப் பெறுபேற்றுக்கான புள்ளி வீதத்தினை தயாரித்து அதன் அடிப்படையில் கீழே குறிப்பிடப்படுகின்ற தகவல்களுக்கு அமைய நீங்கள் பாடநெறிகளுக்கு தகைமை பெற்றுள்ளீர்களா என்பதனைப் பரிசோததித்துக்கொள்ளலாம்.
நீங்கள் மருத்துவம் பயில்வதாயின் க.பொ.த (உ/த) அல்லது அதற்கு சமமான ஒரு பரீட்சையில் விஞ்ஞானப் பிரிவில் தோற்றியிருக்க வேண்டும் என்பதுடன் அந்தப் பரீட்சையில் பெற்றுக்கொண்ட பெறுபேறுகளை பாகிஸ்தான் உயர் கல்வி ஆணைக்குழுவின் விசேட புள்ளிவழங்கல் திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு சித்திகளுக்கும் புள்ளியிட்டு மொத்தமாக 65% புள்ளிகள் பெற வேண்டும்.
நீங்கள் பொறியில் துறையில் பயில்வதாயின் க.பொ.த (உ/த) அல்லது அதற்கு சமமான ஒரு பரீட்சையில் கணிதப் பிரிவில் தோற்றியிருக்க வேண்டும் என்பதுடன் அந்தப் பரீட்சையில் பெற்றுக்கொண்ட பெறுபேறுகளை பாகிஸ்தான் உயர் கல்வி ஆணைக்குழுவின் விசேட புள்ளிவழங்கல் திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு சித்திகளுக்கும் புள்ளியிட்டு மொத்தமாக 65% புள்ளிகள் பெற வேண்டும்.
நீங்கள் ஏனைய துறைகளில் பயில்வதற்காக ஏதாவது ஒரு பிரிவில் க.பொ.த (உ/த) அல்லது அதற்கு சமமான ஒரு பரீட்சையில் தோற்றியிருக்க வேண்டும் என்பதுடன் அந்தப் பரீட்சையில் பெற்றுக்கொண்ட பெறுபேறுகளை பாகிஸ்தான் உயர் கல்வி ஆணைக்குழுவின் விசேட புள்ளிவழங்கல் திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு சித்திகளுக்கும் புள்ளியிட்டு மொத்தமாக 60% புள்ளிகள் பெற வேண்டும்.
பட்டப் பின்படிப்பு பயில்வதாயின் பாடசாலைக் கல்வி சகிதம் 16 ஆணடுகள் கல்வி கற்றிருக்க வேண்டும். (பாடசாலைக் கல்வி 13 வருடங்களும் மூன்று வருடங்கள் பட்டப்படிப்பு பயினறிருக்க வேண்டும்) அத்துடன் பட்டப்படிப்புக்காகப் பெற்றுக்கொண்ட சித்திகள் பாகிஸ்தான் உயர் கல்வி ஆணைக்குழுவின் விசேட புள்ளிவழங்கல் திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு சித்திகளுக்கும் புள்ளியிட்டு மொத்தமாக 60% புள்ளிகள் பெற வேண்டும்.
முதுமதனிப் பட்டப் பாடப நெறிகள் பயில்வதாயின் பாடசாலைக் கல்வி, பட்டப் படிப்பு சகிதம் 18 ஆணடுகள் கல்வி கற்றிருக்க வேண்டும். (பாடசாலைக் கல்வி 13 வருடங்களும் மூன்று வருடங்கள் பட்டப்படிப்பும் மேலும் இரணடு வருடங்கள் பட்டப் பின்படிப்பு ஒன்றிபை் யின்றிருக்க வேண்டும்) பட்டப் பின் படுப்பு இறுதிப் பரீட்சையில் CGPA 3.00/4.00 சித்தி பெற்றிருக்க வேண்டும் என்பதுடன் ஆய்வு ஒன்றினையும் மேற்கொண்டிருக்க வேண்டும்.
உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் மேற்படி புள்ளிகள் இடுகின்ற அடிப்படையில் உரிய தகைமையினைப் பெற்றிருப்பீர்களாயின் பட்டப் படிப்புக்காக விண்ணப்பிப்பதற்கும் ஏனைய பட்டப் பின்படிப்புகளுக்கான உரிய புள்ளிகளைப் பெற்றிருப்பீர்களாயின் அவைகளுக்கு விண்ணப்பிப்பதற்கும் கல்வித் தகைமையினைப் பூர்த்தி செய்வீர்கள்.
இந்த நிலையில் நீங்கள் உரிய பாடநெறிகளுக்கான விண்ணப்பத்தினைச் சமர்ப்பிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். எனினும் அவ்வாறு விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்காக பூர்த்தி செய்ய வேண்டிய இன்னும் சில நிபந்தனைகள் காணப்படுகின்றன./ விண்ணபம் சமர்ப்பிப்பதற்கு முன்னர் அவைகள் குறித்தும் கருத்தில்கொள்ளுங்கள்.
விண்ணப்ப முடிவத் திகதி 2023.04.10 ஆகும்.
மேற்படி கல்வித் தகைமைகள் ஏனைய தகைமைகள் என இரண்டையும் பூர்த்தி செய்யுமிடத்து நீங்கள் உங்களது விண்ணப்பங்களை ஒன்லைன் ஊடாக சமர்ப்பிக்கலாம். அல்லாமா இக்பால் புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பங்கள் ஒன்லைன் ஊடாக மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.
அதற்காக நீங்கள் http://eportal.hec.gov.pk/paksl எனும் இணைய முகவரியில் பிரவேசிக்க வேண்டும்.
01. மேற்படி இணையத்தளத்தில் பிரவேசித்து உங்களுக்கான கணக்கு ஒன்றினை அமைத்துக்கொள்ள வேண்டும்.
02. நீங்கள் ஆரம்பித்த கணக்கின் username password என்பவற்றின் ஊடாக உங்களாது கணக்கினுல் பிரவேசிக்க வேண்டும்.
03. அடுத்து உங்களது சொந்த தகவல்களை Profile எனும் பகுதியில் பூர்த்தி செய்யவேண்டும்.
04. அடுத்து உங்களது தொடர்பு கொள்வதற்கான விபரங்கள் Contact Details பூர்த்தி செய்ய வேண்டும்.
05.அடுத்து நீங்கள் விண்ணப்பிக்கின்ற பாடநெறிகளுக்கு அமைய கேட்கப்படுகின்ற தகவல்களைப் பூர்த்த செய்வதுடன் தேவையான ஆவணங்களையும் பதிவேற்ற வேண்டும். (ஆவணங்கள் அனைத்தும் ஆங்கில மொழியில் இருப்பது நன்று)
விண்ணப்பங்களை எவ்வாறு பூர்த்தி செய்ய வேண்டும் என்பது குறித்து படங்களுடன் விளக்கம் பாகிஸ்தான் உயர் கல்வி நிறுவனத்தினால் வழங்கப்படட்டுள்ளது அதனைப் பதிவிறக்கம் செய்துகொள்ள இங்கு கிளிக் செய்யவும்.
முறையாக நீங்கள் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து விடுவீர்களானால் அதன் பின்னர் உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டமை தொடர்பில் உறுதி செய்வதற்கான மின்னஞ்சல் கிடைக்கப்பெறும். அதன் பின்னர் அடத்தடுத்த கட்டங்களில் நடைபெறுகின்ற விடயங்கள் குறித்து உங்களுக்கு தொடராக அறியத்தரப்படும். எனவே அடிக்கடி உங்களது மின்னஞ்சலை பரிசோதித்துக்கொள்ளுங்கள்.
உங்களது விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னர் தகுதிகாண் பரீட்சை ஒன்றுக்காக நீங்கள் அழைக்கப்படுவீர்கள்.
சென்ற வருடம் மட்டக்களப்பு (BT/BC/AI Muneera Balika Maha Vidyala Eravur, Batticaloa), கண்டி (Badiudin Mahmud College, Kandy), குறுநாகலை(Zahira College, Kurunegala), கொழும்பு (D.S. Senanayake College, Colombo-7) ஆகிய இடங்களில் நடைபெற்றன. எனவே இந்த முறையும் இதே இடங்களில் நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றது.
தகுதிகாண் பரீட்சையானது ஆங்கில மொழிமூலத்திலேயே இடம்பெறும். நுண்ணறிவு, கணித அறிவு, மொழி அறிவு என்பன இந்தப் பரீட்சையில் பரிசோதிக்கப்படும். அத்துடன் பாகிஸ்தான் குறித்த பொது அறிவுகளும் வினாக்களில் உள்ளடக்கபடப்கட்டிருக்கும். எனவே மேற்படி பாடங்கள் தொடர்பில் ஆயத்தங்களை மேற்கொள்வது உங்களுக்கு அதிக புள்ளிகளைப் பெற்றுக்கொள்ள உதவியாக அமையும்.
தகுதிகான் பரீட்சையில் போதிய அளவு புள்ளிகளைப் பெற்றுக்கொண்டவர்கள் நேர்முகப் பரீட்சை ஒன்றுக்காக அழைக்கப்படுவர். இவ்வாறு அழைக்கப்படுகின்றவர்களுக்கு மின்னஞ்சல் ஊடாக அறியத்தரப்படும். அதனை அடுத்து தகுதிகாண் பரீட்சையில் பெற்றுக்கொள்கின்ற புள்ளிகள் 50% கல்வித் தகைமைகளஙக்கான புள்ளிகள் 30% நேர்முகப் பரீட்சையில் பெறுகின்ற புள்ளிகள் 20% என்பவற்றின் கூட்டுத் தொகையின் அடிப்படையில் மாணவர்கள் தரப்படுத்தப்பட்டு கற்கை நெறிகளுக்கான 1000 பேர் தெரிவு செய்யப்படுவர்.
நீங்கள் புலமைப் பரிசிலுக்கான விண்ணபத்தினை சமர்ப்பிப்பதாயின் உங்களுக்கான கடவுச் சீட்டினை பெற்றுக்கொள்வதற்காக குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திற்கு விண்ணப்பிப்பது இறுதி நேரத்தில் ஏற்படும் பல சங்கடங்களைத் தவிர்ந்து கொள்வதற்கு உதவியாக இருக்கும்
கடவுச்சீட்டு ஒன்றினை முறையாகப் பெற்றுக் கொள்வது தொடர்பான கட்டுரையினை வாசிப்பதற்கு இங்கு கிளிக் செய்யவும்.
https://www.lankajobinfo.com/2022/06/how-to-apply-for-passport-in-sri-lanka.html
மேலும் நேர்முகப் பரீட்சையின் பின்னர் நீங்கள் புலமைப் பரிசிலுக்கு தெரிவு செய்யப்படுவீர்களாயின் அது முதல் பாகிஸ்தான் சென்றடையும் வரையில் ஒவ்வொரு கட்டத்திலும் உங்களால் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் குறித்து கட்டம் கட்டமாக உங்களுக்கு மின்னஞ்சல் ஊடாக அறியத்தரப்படும். அவைகளைப் பின்பற்றுமிடத்து வேறு எந்தவிதமான இடைத் தரகர்களும் இன்றி உங்களது விடயங்களை வெற்றிகரமாக நிரைவேற்றிக் கொள்ளலாம்.
பாகிஸ்தான் அல்லாமா இக்பால் புலமைப் பரிசில் திட்டத்தில் எந்த சந்தர்ப்பத்திலும் எந்தவிதமான கட்டணங்களும் அறவிடப்படுவதில்லை என்பதனால் இது தொடர்பில் யாருக்கும் கட்டணங்கள் செலுத்தவோ இடைத்தரகர்கள் நியமிக்கவோ முயற்சிக்க வேண்டாம்.
விரைவில் விண்ணப்பத் திகதிகள் முடிவடையிவிருக்கின்ற வௌிநாட்டுப் புலமைப் பரிசில் விபரங்கள் கீழே தரப்படுகின்றன. அவைகளுக்கும் விண்ணப்பிபப்பதன் ஊடாக வௌிநாட்டுப் புலமைப் பரிசில்களை செவன்றுகொள்ள முயற்சியுங்கள்.
Indian government undergraduate Scholarship Scheme (Fully Funded)
Details https://www.scholarshiphope.com/2023/02/nehru-memorial-scholarship-scheme.html
Indian government Post graduate (masters) Scholarship Scheme (Fully Funded)
Details https://www.scholarshiphope.com/2023/02/nehru-memorial-scholarship-scheme.html
Australian Award Scholarship 2023/ 2024 (Fully Funded)
Details - https://www.scholarshiphope.com/2023/01/australian-award-scholarship-20232024.html
TaiwanICDF Scholarship 2023 (Fully Funded)
https://www.scholarshiphope.com/2023/01/taiwanicdf-scholarship-2023-fully-funded.html
Türkiye Diyanet FOUNDATION SCHOLARSHIP 2023/2024 (Fully Funded)
https://www.scholarshiphope.com/2023/01/turkiye-diyanet-foundation-scholarship.html
King Abdullah University of Science and Technology KAUST Fully Funded Scholarship 2023 - 2024
https://www.scholarshiphope.com/2023/01/postgraduate-diploma-postgraduate.html
0 Comments