Passport ஒன்றினை சரியானதும் இலகுவானதுமான முறையில் பெற்றுக் கொள்வதற்கு இந்தப் பதிவு உங்களுக்கு உதவியாக அமையும்.
கடவுச்சீட்டை எங்கு பெற்றுக் கொள்ளலாம்?
கடவுச்சீட்டு பெற்றுக் கொள்கின்ற நடவடிக்கைக்காக கொழும்பு பத்தரமுல்லையில் அமைந்துள்ள Passport Office இற்கு மாத்திரம் தான் செல்ல வேண்டும் என்பதில்லை. வவுனியா, கண்டி, குருணாகலை, மாத்தறை ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள Passport Office காரியாலயங்களிலும் உங்களது கடவுச் சீட்டுக்களை விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம். தற்போது One day Service பத்தரமுல்லையில் அமைந்துள்ள பிரதான காரியாலயம் மற்றும் பிரதேச காரியாலயங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
⭐உதாரணமாக நீங்கள் மாதத்றையில் வசிக்கின்றீர்கள் என்பதாக வைத்துக்கொள்வோம். அப்படியாயின் உங்களுக்கு கடவுச் சீட்டுக்கான விண்ணப்பத்தினை மாத்தறையில் அமைந்துள்ள காரியாலத்தின் ஊடாக சமர்ப்பிக்கலாம். நீங்கள் கொழும்பில் பணி புரிகின்றீர்களாயின் நீங்கள் பத்தரமுல்லையில் அமைந்துள்ள காரியாலத்தில் சமர்ப்பிக்கவும் முடியும்.
ஒரு நாள் சேவையின் ஊடாக நீங்கள் கடவுச் சீட்டைப் பெற்றுக் கொள்வதற்கான கட்டணம் ரூபா 15000 ஆகும்.
சாதரண சேவையின் ஊடாக பெறுவதற்கான கட்டணம் ரூபா 3500 ஆகும். (சாதாரண சேவையில் விண்ணப்பிக்கும் கடவுச் சீட்டுகள் சுமார் இரண்டு வாரங்களில் உங்களது வீட்டுக்கு வந்து சேரும். எனினும் தற்போது காணப்படுகின்ற அதிகளவிலான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறுகின்றமை காரணமாக ஒரு மாதம், இரண்டு மாதம் அல்லது மூன்று மாதங்களிலும் அதிகமான காலம் எடுக்கலாம். சில போது ஒரு வருட காலம் கூட எடுத்துக்கலாம் என்ற நிலையே காணப்படுகின்றது. )
Department of Immigration and Emigration
"Suhurupaya", Sri Subhuthipura Road, Battaramulla.
Hotline : 1962
Phone : 94-11-5329000 Hunting Line
Fax : 94-11-2885358
E-Mail : controller[at]immigration.gov.lk
Web Site: www.immigration.gov.lk
Matara : 9, Sri Vijaya Building, Rahula Road, Matara, Sri Lanka
Vavuniya : JC 23, Outer Circle Road, Vavuniya, Sri Lanka
Phone
+94-25-5676345
Fax
+94-24-2226731
Kurunegala : No. 95, Negombo Road, Kurunegala, Sri Lanka
Phone
+94-37-5550562, +94-37-5550563
Fax
+94-37-2225001
கடவுச்சீட்டை பெறுவதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்
நீங்கள் முதலாவதாக கீழ்க்குறிப்பிடும் லிங்கில் சென்று உங்களுக்கு வசதியான தினம் ஒன்றினை ஒதுக்கி Appointment ஒன்றினைப் பெற்றுக்கொள்ளவேண்டும். நீங்கள் Appointment ஒன்றினைப்பெறுகின்றபோது நீங்கள் கடவுச் சீட்டுக்கான புகைப்படத்தினைப் பெறவில்லை எனில் , Photo Acknowledgement No என்று குறிப்பிடப்பட்டுள்ளதற்கு நேராக இருக்கும் கட்டத்தினை வெற்றிடமாக வைத்து Appointment இனை Submit செய்யவும். புகைப்படம் எடுத்துக் கொண்டிருப்பின் அதற்கான இலக்கத்தினை வழங்கவும்.
மேற்குறிப்பிட்ட லிங்கில் சென்று Appointment இனைச் சமர்ப்பிக்கும் போது Auto PDF படிவம் ஒன்று Download ஆகும். அந்த PDF இனை பத்திரப் படுத்திக் கொள்ளுங்கள். அத்துடன் உங்களது தொலைபேசிக்கும் ஒரு குருந்தகவல் கிடைக்கப் பெறும். இந்த இரண்டில் ஒன்றினை உங்களது Appointment Date இல் காரியாலயத்துக்குச் செல்லும் போது சமர்ப்பிக்க வேண்டி ஏற்படும்.
இணையத்தளத்தில் தகதிகளைப் திவு செய்வதற்காக மூன்று மாதங்களே காட்டப்பட்டுள்ளது. தற்போது ஆகஸ்ட் மாதம் வரையிலான திகதிகள் அந்த இணையத்தில் காட்ப்பட்டிருந்தபோதிலும் ஒக்டோபர் மாதம் வரையில் Appointment Date அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது எனவே 0707101060 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பெடுத்து Appointment ஒன்றினைப் பதிவு செய்துகொளவது சிறந்ததாகும்.
நீங்கள் பதிவு செய்கின்ற திகத்தில் உரிய நேரத்தில் Passport Office இற்கு செல்ல வேண்டும் என்பதனை மனதில் கொள்ளுங்கள்.
கடவுச்சீட்டு பெறுவதற்கு அவசியமான ஆவணங்களைத் தயார் செய்தல்.
இப்போது நீங்கள் பதிவு செய்த Appointment Date வரும் வரையில் உங்களுக்கு தேவையான ஆவணங்களை தயார் படுத்திக்கொள்ளுங்கள்.
முதல் கட்டமாக இங்கு கீழே குறிப்பிடப்பட்டிருக்கின்ற லிங்கில் சென்று குறித்த
Application Forms இனை Download செய்து கொள்ளுங்கள். இந்த படிவத்தினை அருகில் இருக்கும் கடவுச்சீட்டு காரியாலயங்களிலும் பெற்றுக் கொள்ளலாம். .
Website இன் ஊடாக Dowload செய்ய வேண்டுமாயின் கீழுள்ள லிங்கில் கிளிக் செய்யவும். 👇
அவ்வாறு பதிவிறக்கம் செய்து கொண்ட விண்ணப்பப்படிவத்தினை எவ்வாறு பூர்த்தி செய்யவேண்டும் என்பதற்கான அறிவுறுத்தல்கள் மூன்று மொழிகளிலும் தரப்பட்டுள்ளன. உங்களுக்கு விருப்பமான மொழியிலான வழிகாட்டல் படிவத்தினை பதிவறக்றம் செய்து கொள்ளுங்கள்.. படிவங்களுக்கான லிங்கு கீழே தரப்படுகின்றது.
Online Fill and Printable Travel Document Application Download
மேலே குறிப்பிடப்பட்டுள்ள Travel Document Instructions என்பதில் Sinhala, Tamil, English என நீங்கள் விருப்பிய மொழியில் விண்ணப்பம் பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டல் பத்திரத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
புகைப்படம் எடுத்தல்.
அடுத்த கட்டமாக உங்களது கடவுச்சீட்டுக்கான புகைப்படம் ஒன்றினை எடுக்க வேண்டும். இதற்காக Passport Office இல் பதிவு செய்யப்பட்ட Registered Studio ஒன்றினை தேடிப்பிடிக்க வேண்டும். உங்களுக்கு கிட்டிய அவ்வாறான Registered Studio ஒன்றினை கீழ் வரும் லிங்கில் தேடிக்கொள்ளலாம். 👇
இந்த Registered Studio களில் நீங்கள் படம் எடுக்கும் போது அவர்கள் உங்களது படத்தை Passport Office இற்கு Online ஊடாக e Submit பண்ணுவார்கள்.
இப்போதி உங்களது கடவுச் சீட்டு பெறும் பணியில் பாதி வேளை முடிந்துவிட்டது. இனி உங்களது Appointment இற்கான தினத்தில் எடுத்துச் செல்வமற்கான ஆவணங்களை ஆயத்தம் செய்யவேண்டும்.
அவையாவன 👇
1. Application Form එක.
2. திருமணமானவராயின் விவாகச் சான்றிதழ் மற்றும் அதனது பிரதி වි.
3. தொழில் ஒன்றினை கடவுச்சீட்டில் பதிய வேண்டுமாயின் பணியாற்றும் இடத்திலிருந்து பெற்றுக்கொண்ட கடிதம். மற்றும் அதனது பிரதி்
4. தேசிய அடையால அட்டை மற்றும் அதனது பிரதி .
5. பிறப்புச் சான்றிதழ் மற்றும் அதனது பிரதி .
6. Studio இனால் படம் பிடித்தற்கு அத்தாட்சியாக வழங்கப்படும் ஆவணம்.
🌟 தற்போதிருக்கும் கடவுச் சீட்டினை புதுப்பிப்பதற்காயின் திருமணச் சான்றிதழ், தொழில் சான்றிதழ் என்பன அவசியமில்லை, மற்றை எல்லா ஆவணங்களுடன் பழைய கடவுச்சீட்டும் சமர்ப்பிக்கப்படவேண்டும்.
🌟 Passport காணாமல் போயுள்ளதாயின் முதலாவதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்துக்கு தெரியப்படுத்த வேண்டும். 0115329326 எனும் இலக்கத்திற்கு அழைப்பெடுத்து அல்லது 0112885358 எனும் Fax இலக்கத்திற்கு அறிவிக்கலாம். அரச விடுமுறைகள் சனி ஞாயிறு தவிர்ந்த தினங்களில் காலை 8.30 முதல் மலை 4.00 மணி வரை அறிவிக்கலாம்.
அதன் பின்னர் போலிஸில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொள்ளவேண்டும்.
அதன் பின்னர் போலிசின் ஊடாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்துங்களு உங்களது கடவுச்சீட்டு காணமால் போனது உறுதி செய்யப்படும். அதன் பின்னர் உங்களது கடவுச் சீட்டு இரத்துச் செய்யப்படும்.
காணமல் போன் கடவுச்சீட்டு இரத்துச் செய்யப்பட்ட பின்னர் அது கிடைக்கப் பெறுமானால் அதனை மீண்டு செல்லுபடியானதாக மாற்ற முடியாது.
வௌிநாடொன்றில் கடவுச்சீட்டு காணாமல் போனால்.
காணாமல் போன நாட்டின் போலிசில் இது தொடர்பாக முறைப்பாடு செய்து தூதுவராலய காரியாலயத்திற்கு அந்த முறைப்பாட்டுடன் அறிவிக்கவேண்டும்.
தண்டப்பணம். காணாமல் போகும்போது கடவுச்சீட்டு காலாவதியாகியிருந்தால் தண்டப்பணம் அறவிடப்படுவதில்லை.. காலாவதியாகாத கடவுச் சீட்டு காணாமல் போகுமானால் ரூபா 11,500 தண்டப்பணமாக அறவிடப்படும்.
Oii Facebook Page பக்கத்தில் சிங்களத்தில் பதிவிடப்பட்ட பதிவு lankajobinfo.com தளத்தின் ஊடாக மொழிபெயர்க்கப்பட்டது.
0 Comments