ad

15 common questions regarding college of education interview 2023






2019, 2020 ஆம் ஆண்டுகளில் க.பொ.த (உ/த) மாணவர்களை கல்வியியல் கல்லூரி நேர்முகப் பரீட்சைக்கான கடிதங்கள் எப்போது கிடைக்கப்பெறும் என்பதாக பலரும் வினவுகின்றனர்.

2019 /2020 ஆண்டுகளில் க'பொ.த (உ/த) பரீட்சைக்குத் தோற்றி கல்வியியல் கல்லூரிக்கு விண்ணப்பித்த மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகப் பரீட்சைகளுக்கான கடிதங்கள் தற்போது தபாலிடப்பட்டுக்கொண்டிருக்கின்றது. இந்த வருடம் கல்வியியல் கல்லூரிக்கு இரண்டு வகுப்புக்களுக்கான மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட இருக்கின்றனர்.  உங்களிடம் கல்வியியல் கல்லூரி குறித்து பலவிதமான வினாக்கள் காணப்படலாம் அவைகளுக்கு விடைகளைத் தேடிப் பெறுவதற்கு முன்னர் சில விடயங்களைப் பரிந்துகொள்ள முயற்சியுங்கள். 

நீங்கள் தற்போது க.பொ.த உயர்தப் பரீட்சையில் சித்தியடைந்த நிலையிலேயே தற்போது கல்வியியல் கல்லூரிக்கு விண்ணப்பித்திருக்கின்றீர்கள். அந்த வகையில் உங்களது அறிவு மட்டமானது ஓரளவு விருத்திடைந்திருக்கின்றது என்பதனைப் பரிந்துகொள்ளுங்கள். கல்வியியல் கல்லூரிக்கு விண்ணப்பம் கோருவதற்காக வௌியிடப்பட்ட 2022.07.22 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலினை வாசிப்பீர்களானால் உங்களிடுமுள்ள பெரம்பாலான ஐயங்களுக்கு நீங்களாகவே விடைகளைத் தேடிப்பெற்றுக்கொள்ளலாம். பெண்களுக்கு மாத்திரம் என கல்வியியல் கல்லூரிகள் காணப்படுகின்ற நிலையில் அந்தக் கல்லூரிக்கு விண்ணப்பித்த ஒரு ஆண்டு தனக்கு அந்தக் கல்லூரிக்கான நுழைவு கிடைக்குமா என்பது போன்ற கேள்விகள் சிறுபிள்ளைத் தனமானது என்பதனைப் புரிந்துகொள்ளுங்கள். 

அத்துடன் நீங்கள் மேற்படி வர்த்தமானி அறிவித்தலுக்கு இணங்கள் சரியான முறையில் உங்களது விண்ணப்பங்களை சமர்ப்பித்திருப்பின் நீங்கள் விண்ணப்பித்த பாடநெறிகளுக்கான தகைமையினைப் பெற்றிருப்பீர்களாயின் உங்களுக்கான அழைப்புக்கடிதங்கள் வந்து சேரும். 

அத்துடன் நீங்கள் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படுவீர்களானால் உங்களது கல்விச் சான்றிதழ்கள் மற்றும் ஏனைய ஆவணங்கள் பல பாடசாலைகளில்  பெற்று சமர்ப்பிக் வேண்டும். எதிர்காலங்களில் 2022 உயர் தரப் பரீட்சைக்காக பாடசாவைகளுக்கு லீவு வழங்கப்பட இருப்பதனால் இப்போதே பாடசாலைகளில் அந்தந்த சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள முயற்சியுங்கள். 

தேவையான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் போன்ற விபரங்கள் என்ன என்பதனை அறிந்துகொள்வதற்கு  இங்கு கிளிக் செய்யவும்.

அத்துடன் விண்ணப்பித்த அனைவருக்மே நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படுவதில்லை என்பதனால் உங்களுக்கு நேர்முகப் பரீட்சைக்கான அழைப்புக் கடிதங்கள் கிடைக்கப்பெறாவிடின் நீங்கள் தெரிவு செய்யப்படவில்லை என்பதனைப் புரிந்துகொள்ளுங்கள். 

கல்வியியல் கல்லூரி விண்ணப்பம் தொடர்பாக பொதுவாக கேட்கப்படுகின்ற வினாக்களுக்கான பதில்களைத் தருகின்றோம். 



இந்த சந்தர்ப்பத்தில் கல்வியியல் கல்லூரிக்கு விண்ணப்பித்த பலரும் கேட்கின்ற பொதுவான கேள்விகள் சிலவற்றுக்கு பதில்களை இங்கு தருகின்றோம்.

01. கல்வியல் கல்லூரிக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் நேர்முகப் பரீட்சைக்கான கடிதங்கள் கிடைக்கப்பெறுமா?


பொதுவாக நேர்முகப் பரீட்சைக்காக அழைக்கப்படுவது குறித்த பாடநெறிக்காக காணப்படுகின்ற வெற்றிடங்களின் மூன்று மடங்குகளாகும். குறித்த பாடநெறிக்காக விண்ணப்பித்தவர்களில் மேற்படி மூன்று மடங்கு தொகையினர் அழைக்கப்படுவார்கள். இவ்வாறு அழைக்கப்படுகின்றவர்கள் விண்ணப்பித்த மாணவர்களில் அதிக தகைமைகளைக் கொண்டவர்களாக இருப்பார்கள். அழைக்கப்படுவர். உதாரணமாக ஆரம்பப்பிரிவுக்காக 100 வெற்றிடங்கள் காணப்படுமாயின் அதற்காக விண்ணப்பித்த விண்ணப்பதாரிகளில் அதிக தகைமைகளைக் கொண்ட முதல் 300 பேர்கள் மாத்திரமே நேர்முகப் பரீட்சைக்காக அழைக்கப்படுவர். இங்கு அதி கூடிய தகைமைகள் என்பது z score புள்ளிகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றது. அத்துடன் சாதாரண உயர் தர பரீட்சைப் பெறுபேறுகளும். அவர்கள் பெற்றுள்ள ஏனைய தகைமைகளும் இதில் செல்வாக்குச் செலுத்துகின்றது.

சென்ற வருட வெட்டுப்புள்ளி விபரத்தினை இங்கு பெற்றுக்கொள்ளலாம்.

எனவே கடந்த வருடத்தின் கல்வியியல் கல்லூரியின் z score வெட்டுப்புள்ளிகள் மற்றும் பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் என்பவற்றை அவதானித்து அதன் ஊடாக உங்களது z score இற்கு கல்லூரி அனுமதி கிடைக்குமா என்பதனை ஓரளவில் மதிப்பீடு செய்துகொள்ளலாம். அந்த அடிப்படையில் மிகவும் குறைந்த வெட்டுப்புள்ளிகள் பெற்றுக்கொண்டவர்கள் கல்வியியல் கல்லூரி நுழைவுக்காக காத்திருப்பதற்குப் பதிலாக வேறு பாடநெறிகளைப் பயில்வதில் கவனம் செலுத்தலாம்.

02. நேர்முகப் பரீட்சைக்கான கடிதம் அனுப்புவதற்கான நடைமுறைகள் யாவை?

பொதுவாகவே கல்வியல் கல்லூரிக்கு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற இறுதித் திகதியிலிருந்து 3 மாதங்கள் கழிந்த பின்னரே நேர்முகப் பரீட்சைக்கான அழைப்புக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த வருடம் கல்வியியல் கல்லூரிக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற இறுதித் திகதியா ஆகஸ்ட் மாதம் 19 திகதி அமைந்திருந்தது. அதன் அடிப்படையில் நவம்பர் மாதம் 19 ஆம் திகதிக்கு 3 மாதங்கள் பூரணமாகின்றன.

எனினும் கல்வியியல் கல்லூரிகளில் காணப்படுகின்ற வேலைப்பழு மற்றும் அதிக விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறுதல் போன்ற காரணங்களினால் நேர்முகப்பரீட்சைகளுக்கான அழைப்புக்கடிதங்களை தபாலிடும் நடவடிக்கைகள் இற்த மாதம் 12 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டன. அனைத்து கல்லூரிகளும் ஒரே நேரத்தில் கடிதங்களை அனுப்புவதில்லை என்பதானால் இந்த மாதம் 25 ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து கல்லூரிகளும் தங்களது கடிதங்களை அனுப்பிவைக்கும் என்பதாக எதிர்பார்க்கப்படுகின்றது.



03. தமிழ் மொழி மூல பாடநெறிகளுக்கான கடிதங்கள் வௌியிடப்பட்டுள்ளதா?

தமிழ் மொழி மூலப் பாடநெறிகளுக்கான கடிதங்கள் இன்னும் எவருக்கும் கிடைக்கப்பெறவில்லை. சில கல்லூரிகள் 17, 18 ஆகிய தினங்களில் கடிதங்களைத் தபாலிட இருப்பதாக அறியக் கிடைத்திருக்கின்றது. எப்படியும் 25 ஆம் திகதிக்கு முன்னர் உங்களது கடிதங்கள் உங்கைள வந்து சேர்ந்துவிடும் என்பதாக எதிர்பார்க்கப்படுகின்றது.

04. அழைப்புக்கடிதங்கள் தபாலில் மாத்திரமா கிடைக்கப்பெறும் ?


அழைப்புக்கடிதங்களும் நீங்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களும் உங்களுக்கு தபால் மூலமாக அனுப்பி வைக்கப்படும். அத்துடன் நீங்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தொலைபேசி இலக்கத்திற்கு குறுந்தகவல் மூலமும் அறிவிக்கப்படும். அத்துடன் உங்களது மின்னஞ்சல் முகவரிக்கும் தகவல் அனுப்பபட்டும். எனவே இந்த மூன்று முறைகளிலுமோ அல்லது மூன்று முறைகளில் ஏதாவரு ஒரு முறையில் உங்களுக்கு தகவல் கிடைக்கப்பெறும்.

05. கல்வியியல் கல்லூரிகளின் வட்சப் குழுமங்கள் என ஒரு சில குழுமங்கள் இயங்கி வருகின்றன. இது உத்தியோக பூர்வ குழுக்களா? கல்வியியல் கல்லூரி தெரிவு செய்யும் மாணவர்களை வட்சப் குழுக்களில் இணைக்கின்றனவா?


கல்வியியல் கல்லூரிகளுக்கான உத்தியோக பூர்வ வட்சப் குழுக்கன் என எதுவம் ஆரம்பிக்கபட்டுள்ளதாக அறிவிக்கப்படவில்லை. நீங்கள் ஏதாவது வட்சப் குழுமங்களில் இணைந்திருக்கின்றீர்கள் அல்லது இணைக்கப்பட்டிருக்கின்றீர்கள் எனில் அது தகவல்களைப் பரிமாற்றிக்கொள்வதற்காக யாரோ ஒருவர் உருவாக்கி ஒன்றாகவே காணப்படும்.

06. நான் விண்ணப்பித்த பாடநெறி எந்தெந்த கல்வியில் கல்லூரிகளில் அமைந்துள்ளது என்பதனை எவ்வாறு அறிந்து கொள்வது.

பாடநெறிகளும் அவைகள் காணப்படுகின்ற கல்வியியல் கல்லூரிகளினது பட்டியலினை கீழுள்ள லிங்கில் கிளிக் செய்து பார்வையிடலாம்,.


இந்த விபரம் 2022.07.22 வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2022.07.22 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலினை கீழ்க்குறிப்பிடும் லிங்கில் பர்வையிடலாம்.


07. நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றுகின்ற அனைவரும் கல்லூரியில் இணைத்துக்கொள்ளப்படுவார்களா?

நேர்முகப் பரீட்சையில் கலந்துகொள்கின்ற அனைவருக்கும் கல்லூரி அனுமதி கிடைப்பதில்லை அவர்களில் ஒரு பகுதியினரே தெரிவு செய்யப்படுவர். பொதுவாக நேர்முகப் பரீட்சையில் தோற்றுகின்றவர்களில் மூன்றில் ஒரு பகுதியினரே பாடநெறிகளுக்காக இணைத்துக்கொள்ளப்படுவர். 

08. நேர்முகப் பரீட்சையின் போது மாணவர்கள் தெரிவு செய்வதில் எந்த அடிப்படைகளில் முன்னுரிமை வழங்கப்படுகின்றது?
 நேர்முகப் பரீட்சையின் போது க.பொ.த (சா/த) பரீட்சையில் பெற்றுக்கொண்ட சித்திகளுக்காக (A-B-C-S) புள்ளிகள் வழங்கப்படுகின்றது. தகைமைகளை முதலாவது முறையே பூரித்தி செய்தவர்களுக்கு முன்னுரிமை வமங்கப்படுகின்றது.

09. சான்றிதழ்கள் போலியானதாக இருந்தால் என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

நீங்கள் சமர்ப்பிக்கின்ற கல்விச் சான்றிதழ்கள் பரீட்சைத் திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்டு பரிசோதிக்கப்படும். இவைகள் போலிகளாக கண்டறியப்படுமாயின் இதன் பின்னர் அரச சேவையில் எந்தப் பதவிக்கும் விண்ணப்பிக்கின்ற தகுதியினை இழப்பீர்கள்.

10. எனது Z-score புள்ளிகள் அடுத்தவர்களை விட அதிகமானதாகக் காணப்படுகின்றது. நான் விண்ணப்பித்த பாடநெறிக்கான தகைமையில் சாதாரண தரத்தில் கேட்கப்படும் பாடத்தில் மாத்திம் தகுதி போதாமல் இருக்கின்றது எனக்கு கல்லூரி செல்லும் வாய்ப்புக் கிடைக்குமா?

Z-score புள்ளிகள் எந்த அளவு கூடியதாக இருந்த போதிலும் பாடநெறிகளுக்கான அடிப்படைத் தகைமைகள் பூரணமாக இல்லாதுவிடின் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படுவதில்லை.

11. நான் சிறிபாத கல்லூரிக்கு விண்ணப்பித்திருக்கின்றேன். ஆனால் எனது பெற்றோர் தோட்டத் தொழிலாளல் அல்ல.. எனக்கு நேர்முகப் பரீட்சைக்கான கடிதம் கிடைக்குமா?

சிறிபாத கல்லூரி என்பது மலையக மாணவர்களுக்கான கல்லூரியாகும். அங்கு தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது. நீங்கள் மலையகப் பிரதேசத்தில் வசிப்பவராக இருந்து மேற்படி கல்லூரிக்கு தோட்டத்தொழிலாளர்களின் பிள்ளைகளை இணைத்துக் கொண்டதன் பின்னர் இன்னும் வெற்றிடங்கள் காணப்படுமாயின் நீங்கள் அழைக்கப்பட வாய்ப்புண்டு. இது குறித்த தீர்மானம் குறித்த அதிகாரிகளினாலே மேற்கொள்ளப்படும் என்பதனால் அது குறித்து சரியான பதிலை வழங்க முடியாது. நீங்கள் அழைக்கப்படாமலிருக்க வாய்ப்புண்டு என்பதுடன் அழைக்கப்படுகின்ற சந்தர்ப்பமும் உண்டு.

12. நேர்முகப் பரீட்சையில் சமர்ப்பிக்க ஈவண்டிய ஆவணங்கள் என்ன?

தேவையான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் போன்ற விபரங்கள் என்ன என்பதனை அறிந்துகொள்வதற்கு  இங்கு கிளிக் செய்யவும்.

13. இரண்டாவது நேர்முகப் பரீட்சை எப்போது நடைபெறும்.?

முதலாவது நேர்முகப் பரீட்சையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றவர்கள் இரண்டாவதாக ஒரு நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படுவது வழக்கமாக காணப்பட்ட போதிலும் இந்த வரும் முதலாவது நேர்முகப் பரீட்சையின் ஊடாக மாத்தரம் மாணவர்கள் தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக அறியக் கிடைக்கின்றது. 

14. நேர்முகப் பரீட்சையின் பின்னர் எப்போது மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படுவர்.

நேர்முகப் பரீட்சைகள் முடிவடைந்த பின்னர் மார்ச் மாதம் 6 ஆம் திகதி முதல் மாணவர்கள் பதிவு செய்கின்ற நடவடிக்கை ஆரம்பிக்கப்படும். 

15. 2021 ஆம் ஆண்டு உயர் தரப் பரீட்சை எழுதியவர்களுக்கான விண்ணப்பங்கள் எப்போது கோரப்படும்?

2021 ஆம் ஆண்டு உயர் தரப் பரீட்சை எழுதியவர்களை தேசிய கல்வியல கல்லூரிக்கு இணைத்துக்கொள்வது தொடர்பான எந்த விதமான தீர்மானத்தையும் இது வரையில் கல்வி அமைச்சு மேற்கொள்ளவில்லை. தற்போது 2019 /20 ஆண்டுகளில் உயர் தரம் எழுதியவர்களை இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளே மேற்கொள்ளப்படுகின்றது. தற்போது கல்வியில் கல்லூரிகளில் ஒரு குழுவினரே காணப்படுகின்றனர் என்ற அடிப்படையில் ஜூன் மாதமளவில் இவரகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படலாம். எனினும் கடந்த வருட செயற்பாடுகளை நோக்கும் போது 2021 உயர்தரம் எழுதியவர்களை இணைத்துக்கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வௌியாவதற்கு இன்றும் இரண்டு வருடங்கள் வரை ஆகலம் எனவும் எதிர்பார்க்பப்டுகின்றது.. எனவே 2021 உயர் தரம் எழுதியவர்கள் தேசிய கல்வியியல் கல்லூரியினை எதிர்பார்ப்பதனை விட இலங்கை திறந்த பல்கலைக்கழகம் அல்லது வேறு கல்வி நிறுவனங்கள் ஊடாக ஏதும் பட்டப்படிப்பு ஒன்றினை தொடர்வதன் ஊடாக காலம் விரயமாவதனைத் தடுத்துக்கொள்ளலாம்.




அடுத்த பதிவில் நேர்முகப் பரீட்சைக்கு மேற்கொள்ள வேண்டிய ஆயத்தங்கள் என்ன என்பது குறித்து ஆராய்வோம். எமது வட்சப் குழுமங்களில் இணைந்துகொள்ளுங்கள்.

தொகுப்பு
lankajobinfo.com