ad

கல்வியில் கல்லூரி நேர்முகத் ​தேர்வு 2022 (2023)


01. கீழ்க்குறிப்பிடப்படுகின்ற ஆவணங்களின் மூலப் பிரதிகளும் அவற்றின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட போட்டோகொபி பிரதிகளும் நேர்முகப் பரீட்சையின் போது சமர்ப்பிக்கப்படவேண்டும். 

1. நேர்முகப் பரீட்சைக்கான அழைப்புக் கடிதம். 

2. பிறப்புச் சான்றிதழ் ( பதிவாளர் நாயகத்தினால் வழங்கப்படுகின்ற மூலப் பிரதியின் நிழற் பிரதிகள் ஏற்புடையதாகாது)

3. தேசிய அடையாள அட்டை

4. கல்விச் சான்றிதழ்கள் 

பரீட்சைக்குத் தோற்றுகின்ற ஒவ்வொரு தடவைக்குமான பரீட்சை சான்றிதழ்கள் அதிபர்/ பரீட்சை ஆணையாளர் ஆகியோர் வழங்குகின்ற சான்றிதழ்களின் மூலப் பிரதிகளும் அவற்றின் சான்றுறுதிப்படுத்தப்பட்ட நிழற் பிரதிகளும் சமர்ப்பிக்கப்படவேண்டும். 

  • க.பொ.த (சா/த) சான்றிதழ் ( குறித்த பாடசாலையில் இருந்து இந்த சான்றிதழினைப் பெற்றுக்கொள்ளும் போது எத்தனையாவது தடவையாக பரீட்சைக்குத் தோற்றியது என்பது குறிப்பிடப்படவேண்டும்.) 
  •  க.பொ.த (உ/த) z score குறிப்பிடப்பட்ட சான்றிதழ் 
  • க.பொ.த (உ/த) பெறுபேற்றுச் சான்றிதழ் 
  • விசேட தகைமைகளை உறுதிப்படுத்துவதற்கான சான்றிதழ்கள் (கவனத்தில் கொள்க - விண்ணப்பித்திருக்கும் பாடநெறிகளுக்கான விசேட அல்லது மேலதிக தகைமைகளாக வர்த்தானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள தகைமைகளை உறுதிப்படுத்துவதற்கான சான்றிதழ்களைச் சமர்ப்பிக்கவும்)

5. நிரந்தர வதிவினை உறுதிப்படுத்துவதற்காக 2022.07.22 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்கள் மாத்திரம் உங்களுக்கு பொறுத்தமான அடிப்படையில் சமர்ப்பிக்கப்படவேண்டும்.

2022.07.22 ஆம் திகதிவர்த்தமானி அறிவித்தலினை பார்வையிட இங்கு கிளிக் செய்யவும். 

  • குறித்த 3 வருட காலப் பகுதியில் ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்கள் மாத்திரம் தேர்தலுக்காக பதிவு செய்திருப்பின் மீதி இரண்டு / ஒரு வருடங்களுக்காக நிரந்தர வதிவினை உறுதிப் படுத்துவதற்காக ஏற்றுக்கொள்ள முடியுமான வேறு ஆவணங்கள் ( உதாரணமாக நிரந்தர வதிவினையுடைய பகுதியின் கிராம சேவை அலுவலரிடம் பெற்றுக்கொள்கின்ற வதிவு மற்றும் நடத்தை தொடர்பான DS- 04 சான்றிதழ். ஆள் பதிவுத் திணைக்களத்தினால் வௌியிடப்பட்ட தேசிய அடையாள அட்டை போன்றன) 
  • குறித்த பிரதேசத்தில் நீங்கள் பெற்றோரைப் பிரிந்து வேறு ஒரு பாதுகாவளரின் கீழ் நிரந்தர வதிவில் இருப்பதாயின் குறித்த நபரின் பாதுகாப்பில் இருக்கின்ற காலப் பகுதியையும் கிராமசேவை உத்தியோகத்தரினால் வழங்கப்படுகின்ற வதிவு மற்றும் நடத்தை தொடர்பான DS- 04 சான்றிதழின் வேறு விடயங்கள் என்ற பகுதியில் குறிப்பிடப்படபட்டு உறுதி செய்யப்படவேண்டும்.
  • ஏதாவது ஒரு காரணத்தினால் குறித்த மூன்று வருடங்கள் அல்லது அல்லது அவற்றின் பகுதிகளுக்கு வாக்களர் பதிவேட்டில் பதிவு செய்ய முடியாமல் போயிருக்குமாயின் வாக்காளர் பதிவேட்டில் பதிவு செய்ய முடியாமல் போனதற்கான தகுந்த காரணங்களை DS- 04 சான்றிதழின் வேறு விடயங்கள் என்ற பகுதியிரல்குறிப்பிட்டு கிராம சேவை அலுவலரின் கையொப்பம் இடப்பப்பட்டு உறுதிப்படுத்தப்படவேண்டும். 


கவனத்தில் கொள்க 

நிரந்தப் பதிவு தொடர்பிலான தகவல்கள் வாக்காளர் பதிவேட்டில் ஒன்லைன் ஊடாக பரிசோதிப்பதனால் தேர்தல் காரியாலயத்திலிருந்து சான்றிதழ் பெற்றுச் சமர்ப்பிப்பது அவசியமில்லை.


02. ஏனைய ஆவணங்கள்

1. இறுதியாக கல்வி பயின்ற பாடசாலை அதிபர் வழங்குகின்ற நட்சான்றுப் பத்திரம்.

2. கிராம சேவை உத்தியோகத்தரிடம் 6 மாத காலத்துக்குள் பெற்றுக்கொண்ட் வதிவினை உறுதிப் படுத்தும்  சான்றிதழ் DS- 04

3.பாடசாலையிலிருந்து விலகியதற்கான சான்றிதழ் (Leaving certificate)

4. பாடநெறியியுடன் தொடர்புடைய தகைமைகளை உறுதிப்படுத்தும் சான்றிதழ்கள்

5.வர்த்தமானி அறிவித்தலின் 9.7 பிரிவின் பிரகாரம் க.பொ.த (உ/த) பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு இணைத்துக்கொள்ளப்படுகின்ற "அரசின் இலவசக் கல்விச் சலுகையின் அடிப்படையில் இயங்குகின்ற உயர்கல்வி நிறுவனங்களில் தொழில் பயிற்சி பாடநெறி/ டிப்லோமா பாடநெறி/ உயர் டிப்லோமா பாடநெறி ஒன்றிற்கான முழு நேர மாணவராக பதிவு செய்திருப்பின் அது தொடர்பான ஆவணங்கள்.

6. ஒன்லைன் ஊடாக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் அச்சுப் பிரதி (PDF )

கவனத்தில் கொள்க -

விண்ணப்பத்தினை சமர்க்கின்ற சந்தர்ப்பத்தில் அவற்றில் மாற்றங்கள் செய்கின்ற சந்தர்ப்பத்தில் பல்வேறுபட்ட தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக PDF பெற்றுக்கொள்ள முடியாமல் போகுமாயின் குறித்த பிரதி இல்லாமலேயே நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றலாம். எனவே தங்களிடம் குறித்த விண்ணப்பத்தின் அச்சுப் பரதி இல்லை என்பது குறித்து கல்வி அமைச்சில் அல்லது தேசிய கல்வியியல் கல்லூரியி் வினவ வேண்டாம்.

03. விண்ணப்பதாரர் சமர்ப்பிக்க வேண்டிய இதர ஆவணங்கள்.

1. சுய விவர படிவம் Bio Data

2. விவாகமாகாதவர் என்பதனை உறுதிப்படுத்தல் (கல்வியல் கல்லூரிக்கு விண்ணப்பிக்கும் போது / நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றும் போது திருமணப் பதிவு செய்துகொள்ளவோ விவாகரத்துப் பெறவோ இல்லை என்பதான உறுதிமொழி)

3. அரச மானியம் பெறுகின்ற, அல்லது அரச அங்கீகாரம் பெற்ற வேறு பாடநொலைகளில் ஆசிரியர் நியமனம் பெறவில்லை அல்லது நியமனத்திற்காக தெரிவு செய்யப்படவில்லை என்பதான உறுதி மொழி

4. தேசிய கல்வியியல் கல்லூரியின் பாடநெறி  ஒன்றினைப் பயின்று கொண்டிருக்கும் போது விட்டுச் செல்லவில்லை என்பதாகவும் வேறு ஏதும் காரணங்களுக்காக கல்லூரியினால் வௌியேற்றப்படவில்லை என்பதாகவும் உறுதிமொழி

5. அரசின் பல்கலைக்கழகம் ஒன்றில்  க.பொ.த (உ/த) பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு இணைத்துக்கொள்ளப்படுகின்ற பாடநெறி ஒன்றிற்காக  "அரசின் இலவசக் கல்விச் சலுகையின் அடிப்படையில்  பாடநெறி ஒன்றிற்கான முழு நேர மாணவராக படநெறி ஒன்றினைப் பயின்றதில்லை என்பதாகவும் அவ்வாறு பதிவு செய்து வர்த்தமானி அறிவித்தல் வௌியானதன் பின்னர் பதிவினை இரத்துச்செய்யவில்லை என்பதாக உறுதிமொழி


மேற்படி உறுதிமொழிகளை தயாரித்து கையொப்பமிடுவதன் சமாதான நீதவான் ஒருவரின் உறுதிப்படுத்தலும் பெற்றுக்கொணடு சமர்ப்பிக்கப்படவேண்டும். 


நீங்கள் சிறீபாத கல்வியியல் கல்லூரிக்காக விண்ணப்பித்தவர்களாக இருப்பின் உங்களது தந்தை அல்லது தாய் தோட்டத் தொழிலாளர்கள் என்பதனை நிருபிப்பதற்கான சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். தந்தையும் தாயும் தோட்டத்தொழிலாளர்பகளாயின் இருவரும் 5 வருடங்கள் பணிபுரிந்தற்கான சான்றுகள் சம்பளப் பத்திரத்தின் ஊடாக அல்லது தோட்ட நிர்வாகம் ஊடாக நிரூபித்தல். பெற்றோரில் ஒருவர் தோட்டத் தொழிலாளராயின் அவர் 10 வருடங்கள் பணி புரிந்தததற்கான சான்றுகள் சமர்ப்பிக்கப்ட வேண்டும். 


​04. நேர்முகப் பரீட்சைக்கான சமர்க்கப்படவேண்டிய சான்றிதழ்கள், பூரணப்படுத்தவேண்டிய படிவங்கள், உறுதிமொழிகள் நேர்முகப் பரீட்சைத் தினத்திலேயே சமர்ப்பிப்பது கட்டாயமானதாகும். அவ்வாறு அவற்றைச் சமர்ப்பிப்பதற்குத் தவறுமிடத்து நீங்கள் தெரிவு செய்யப்படுகின்ற விடயத்தில் வர்த்தமானி அறிவித்தலின் 7.2 ஆம் பிரிவின் பிரகாரம் கவனம் செலுத்தப்படும்.

2022.07.22 ஆம் திகதிவர்த்தமானி அறிவித்தலினை பார்வையிட இங்கு கிளிக் செய்யவும். 

05.உங்களால் நேர்முகப் பரீட்சைக்காக முன்வைக்கப்படுகின்ற அனைத்து சான்றிதழ்கள் மற்றும் ஏனைய ஆவணங்கள் தொடர்பிலான பட்டியல் ஒன்றினை உங்களது கையெழுத்தில் எழுதி அவற்றை நேர்முகப் பரீட்சையின் போது சமர்க்கப்பட்டது என்பதாக கையொப்பமிட்டு இறுதியில் நேர்முகப் பரீட்சை நடாத்துகின்ற குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்.

06. பிறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டிருக்கின்ற பெயரில் அல்லது சான்றிதழ்களில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களில் வித்தியாசங்கள் இருப்பின் அது குறித்து சத்தியக் கடதாசி ஊடாக உறுதிப்படுத்தப்படவேண்டும். 


07. நீங்கள் சமர்ப்பிக்கின்ற அனைத்து ஆவணங்களினதும் நிழற் பிரதிகளின் கீழ்ப் பகுதியில் 'இது மூல ஆவணத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட உண்மையான பிரதியாகும் என்பதனை சான்றுறுதிப்படுத்துகின்றேன்' என்பதாக உங்களது கையெழுத்தில் தௌிவாக எழுதி உங்களால் கையொப்பமிட்டு உறுதி செய்யப்படவேண்டும். அத்துடன் மூலப் பிரதிகளை வேறாகவும் நிழற் பிரதிகளை வேறாகவும் இரண்டு கோவைகளில் இட்டு நேர்முகப் பரீட்சைக்கு எடுத்து வரவேண்டும். 

08. நீங்கள் ஆசிரிய தொழிலுக்கு பொருத்தமான உடை அணிந்து  நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படுகின்ற தினத்தில் உரிய நேரத்தில் நேர்முகப்பரீட்சைக்கு கட்டாயமாக சமூகமளிக்க வேண்டும். தகுந்த காரணங்களின் அடிப்படையில் உரிய தினத்தில் உங்களால் நேர்முகப் பரீட்சைக்கு சமூகமளிக்க முடியாமல் போகுமிடத்து அது குறித்து உரிய கல்வியியல் கல்லூரிக்கு 'டெலிகிராம் ஊடாக அறிவிக்க வேண்டியது கட்டாயமானதாகும். (இவற்றுக்கு மேலதிகமாக தொலைபேசி அழைப்பொன்றையும் குறித்த கல்வியியல் கல்லூரிக்கு வழங்குவது பொருத்தமானதாகும்). எந்த விதமான முன்னறிவித்தலும் இன்றி நேர்முகப் பரீட்சைக்கு சமூகமளிக்காத விண்ணப்பதார்களுக்கு பதிலாக குறித்த மாவட்டத்தின் பட்டியலில் காணப்படுகின்ற அடுத்த விண்ணப்பதார் அழைக்கப்படுவார் என்பதுடன் சமூகம் தராத விண்ணப்பதாரர் மீண்டும் அழைக்கப்படமாட்டார். அத்துடன் நீங்கள் விண்ணப்பித்திருக்கின்ற படநெறிகள் மற்றும் நீங்கள் விண்ணப்பித்துள்ள மொழி மூலம் எந்தக் காரணம் கொண்டும் மாற்றியமைப்பதற்காக அனுமதிக்கப்படமாட்டாது. 

09. நேர்முகப் பரீட்சைக்கான தினத்தில் அதற்காக முன்னிற்பதற்கு முன்னதாக உங்களுக்கு அனுப்பப்படுகின்ற அழைப்புக் கடித்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்தல் வாக்காளர் பெயர்ப்பட்டியலினை பரிசோதிப்பதற்காக அதற்காக நியமிக்கப்பட்டிருக்கின்ற குழுவிடம் வழங்கி வாக்காளர் பதிவேட்டில் உங்களது பெயர்களை பரிசோதனைக்கு உட்படுத்துவது கட்டாயமானதாகும். 

தேர்தல் வாக்களர் பட்டியல் படிவத்தின் மாதிரியினை பார்வையிடுவதற்கு இங்கு கிளிக் செய்யவும்.  (இது உங்களது அழைப்புக் கடிதத்துடன் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். 


உங்களது தேர்தல் பதிவு தொடர்பான விபரங்களை தேர்தல் திணைக்களத்தின் https://eservices.elections.gov.lk/pages/myVoterRegistrationElection.aspx எனும் இணைய முகவரியில் உங்களது தேசிய அடையாள அட்டை இலகத்தினை வழங்கி பரிசோதித்துக்கொள்ளலாம்.

10. நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கபட்டுள்ளீர்கள் என்ற காரணத்திற்காக மாத்திரம் நீங்கள் பாடநெறிகளுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள் என்பதாகவோ அல்லது அதற்கான தகுதிகளைப் பெற்றுள்ளீர்கள் என்பதாக கருத முடியாது. முதலாவது நேர்முகப் பரீட்சையின் போது உங்களது தகைமைகள் பரிசோதிக்கப்பட்டு அவை போதுமானதாக அமையுமிடத்து இரண்டாவது நேர்முகப் பரீட்சைக்கும் அதன் பின்னர் கல்வியியல் கல்லூரியில் பதிவு செய்வதற்கும் அழைக்கப்படுவீர்கள். எவ்வாறாயினும் மேற்படி எதாவது ஒரு ஆவணம் போலியானது என்பதாகவோ அல்லது மேசடியானது என்பதாக பின்னர் அறியக் கிடைக்குமிடத்து நீங்கள் பயிற்சியிலிருந்து / சேவையிலிருந்து நீங்க்கப்படுவதுடன் அரச சேவையில் எந்த ஒரு நியமனத்திற்கும் தகுதியற்றவராவீர்கள் என்பதனைக் கவனத்தில் கொள்ளவும். 


 11. உங்களுக்கு ஒரு பாடநெறியிலும் அதிகமான பாடநெறிகளுக்கு நேர்முகப் பரீட்சைக்கான அழைப்பு கிடைத்திருந்து அவைகள் அனைத்திற்குமான நேர்முகப் பரீட்சைகளுக்கும் தோற்றுவதாயின் நேர்முகப் பரீட்சைக்கு முன்னர் குறித்த கல்வியியல் கல்லூரிகளுக்கு தொலைபேசி ஊடாக அறிவிக்கவேண்டும். மேலும் ஒரே கல்வியியல் கல்லூரியில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடநெறிகளுக்கான நேர்முகப்பரீட்சைக்கான அழைப்புகள் கிடைத்து அவைகள் அனைத்திலும் தோற்றுவதாயின் அவை ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறாக கோவைகள் சமர்ப்பிக்கப்ட வேண்டும். அவ்வாறு தனித் தனியாக கோவைகள் சமர்ப்பிக்கப்படாத போது ஒரே கல்லூரியில் பல நேர்முகப் பரீட்சைகளுக்குத் தோற்றுவதற்கு வாய்ப்பு வழங்கப்படமாட்டாது. 

எமது வட்சப் குழுமங்களில் இணைந்துகொள்வதற்கு கிழ்க்குறிப்பிடும் படத்தில் கிளிச் செய்யுங்கள்.

தொகுப்பு
lankajobinfo.com