ad

Workshop for National College of Education intake 2022



கல்வியல் கல்லூரி 2022 ஆம் நுழைவுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு.

ஆசிரியர்களாக ஆக வேண்டும் என்ற கனவுடன் இருக்கின்ற பலரது எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கு உதவி புரியும் நோக்கில் இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்படுகின்றது.  இம்மாதம் 29 ஆம் திகதி வௌ்ளியன்று இந்த செயலமர்வினை நடாத்துவதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம். செயலர்வு நடைபெறுகின்ற நேரம் வியாழன் அன்று அறிவிக்கப்படும். அத்துடன் செயலமர்வுக்கான  ZOOM இணைப்பு வட்சப் குழுமங்களில் பகிரப்படவுள்ளது.



கல்வியியல் கல்லூரி என்றால் என்ன?
அதற்காக விண்ணப்பிப்பதற்கு என்ன தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்?
கல்வியியல் கல்லூரியில் காணப்படுகின்ற பாடநெறிகள் என்ன?
பாடநெறிகளுக்காக மேலதிகமாக எதிர்பார்க்ப்படுகின்ற தகைமைகள் என்ன?
ஒவ்வொரு பாடநெறிகளுக்கும் மாவட்ட ரீதியில் எத்தனை பேர்கள் இணைத்துக்கொள்ளப்படுகின்றனர்?
பாடநெறிகளில் நுழைவுக்கு அதிக வாய்ப்புக்கள் கிடைகின்ற பாடநெறிகள் என்ன?
பாடநெறிக்கு மாணவர்கள் இணைத்துக்கொள்ளும்போது வெட்டுப்புள்ளிகள் எவ்வாறு செல்வாக்குச் செலுத்துகின்றது?
மாணவர்கள் தெரிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சையின் கட்டமைப்பு யாது?
சேகரிக்க வேண்டிய ஆவணங்கள் என்ன?
ஒன்லைனில் விண்ணப்பிக்கின்ற முறைகள் என்ன?

போன்ற விடயங்களை இந்த செயலர்வு உள்ளடக்கியதாக அமையப் போகின்றது. இந்தச் செயலமர்வினை உங்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைத்துக்கொள்வதற்கு வளவாளருக்கு உதவியாக உங்களைப் பற்றிய சில தகவல்கள் தேவைப்படுகின்றன. இந்த நோக்கத்திற்காக ஒரு படிவத்தினை இத்துடன் இணைத்திருக்கின்றோம். அதற்கான லிங்கு இந்தப் பதிவின் இறுதியில் தரப்படுக்கின்றது.

 இங்கு நீங்கள் வழங்கும் தகவல்கள் இந்த செயலமர்வின் பயன்பாட்டுக்காக மாத்திரமே பயன்படுத்தப்படும் என்பதனை அறிவித்துக்கொள்கின்றோம். இங்கு நீங்கள் வழங்கும் தகவல்கள் வேறு எந்த நோக்கத்துக்கும் பயன்படுத்தப்படாது என்பதுடன் வளவாளர்களைத் தவிர வேறு யாரிடமும் பகிர்த்துகொள்ளப்படமாட்டாது என்பதாக உறுதியளிக்கின்றோம்.

அத்துடன் உங்களிடம் காணப்படுகின்ற சந்தேகங்களை குறித்த படிவத்தின் ஊடாக எமக்கு அறியப்படுத்துமிடத்து அவைகளைத் தௌிவு படுத்தும் அடிப்படையில் வளவாளர் தனது நிகழ்ச்சியினை அமைத்துக்கொள்வார்.  

இந்த செயலமர்விற்காக ஆரம்பிக்கப்பட்ட வட்சப் குழுமங்களில் அதிகமானவர்கள் இணைந்திருக்கின்றனர். அந்த வகையில் இந்த படிவத்தினைப் பூர்த்தி செய்கின்ற ஒழுங்கில் முன்னுரிமை வழங்குன்ற அடிப்படையில் ZOOM ஊடாக இணைத்துக்கொள்ள முயற்சிக்கின்றோம். தவிர்க்க முடியாத காரணங்களினால் ZOOM இனூடாக இணைந்துகொள்ள முடியாதவர்களுக்கு எமது முகநூல் பக்கத்தின் ஊடாக நேரலையில் ஔிபரப்புவதற்கான ஆயத்தங்களும் மேற்கொள்ளப்படுகின்றது.  எமது முகநூல் பக்கத்தின் link தகவல் பெறுகின்ற படிவம் தரப்படும் பக்கத்தின் இறுதியில் குறிப்பிடப்படும்.. குறித்த முகநூல் பக்கத்தை லைக் செய்வதன் ஊடாக உங்களுக்கு குறித்த நிகழ்ச்சியை நேரலையில் பார்வையிடுவதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக்கொள்ளலாம். 

கல்வியியல் கல்லூரிக்கு விண்ணப்பிக்காதவர்களான பெற்றோர்கள், ஆசிரியர்கள் நலன் விரும்பிகள் என யாரும் இந்த செயலமர்வில் பங்குபற்றலாம். அவ்வாறானவர்கள் கல்வியியல் கல்லூரிக்கு தோற்றுகின்றவர்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். (கல்வியல் கல்லூரிக்கு விண்ணப்பின்ற மாணவர்களுக்கு ZOOM இன் ஊடாக இணைந்துகொள்வதற்கு முன்னுரிமை வழங்கி சற்று நேரம் கழித்து ஏனையவர்கள் இணைந்துகொண்டு உங்களது ஒத்துழைப்பினை வழங்குவீர்கள் என எதிர்பார்க்கின்றோம்.)

உங்களது தகவல்களை வழங்குவதற்கான படிவத்திற்குச் செல்ல இங்கு கிளிக் செய்யவும். 

உங்கள் அனைவரதும் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற வேண்டும் என்பதாகப் பிரார்த்திக்கின்றோம்.