நீங்கள் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக ஒன்லைன் ஊடாக பதிவு செய்ய முயற்சிக்கும்போது பலவகையான errors கள் கிடைத்திருக்கும். இவ்வாறு கிடைக்கப் பெறுகின்ற error களை சரி செய்துகொள்வதற்காக இந்த பதிவினை வாசித்துக் கொள்ளுங்கள்.
திவுக்கு செல்வதற்கு முன்னால் ஒன்றை மனதில் பதித்துக் கொள்ளுங்கள். இம்மாதம் 21 ஆம் திகதி முதலிலே உங்களுக்கான எரிபொருள் விநியோகிக்கப்பட இருக்கின்றது. ஆகவே குறைந்தது இன்னும் இரண்டு நாட்கள் பதிவு செய்வதற்கான நேரம் இருக்கின்றது. அத்துடன் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக ஒருவருக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. உங்களுக்கான எரிபொருளினை எப்படியும் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். எனவே பொறுமையாக நேரம் எடுத்து உங்களது பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.
பதிவு செய்வதற்கான வழிகாட்டல்கள் அவசியப்படாது என்பதாகக் கருதி பதிவு செய்யும்போது வருகின்ற error massage கள் தோன்றுவதற்கான காரணம் குறித்தும் அவற்றுக்கான தீர்வுகளை கீழே குறிப்பிடுகிறேன்.
நீங்கள் பதிவு செய்ததற்காக கீழ் குறிப்பிடும் லிங்கில் சென்று இருப்பீர்கள்
Register http://fuelpass.gov.lk/
இந்த லிங்கின் ஊடாக சென்று பதிவு செய்யும்போது உங்களில் பலருக்கு கீழ் குறிப்பிடப்படும் errors கிடைத்திருக்கலாம் .
- Unexpected Error
- Chassis Number is Different
- Time Out
- Server Error
- QR Code Undefined (no number)
ஏதாவது ஒரு மென்பொருள் புதிதாக உருவாக்கப்படும் போது பலவகையான errors உருவாவது சாதாரண விடயமாகும். மென்பொருள்களை உருவாக்குகின்றவர்கள் இவ்வாறான error களை சரி செய்வதற்காக தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருப்பார்கள். அத்துடன் இவ்வாறான errors தோன்றுவதற்கு Traffic எனும் விடயமும் பங்கு வகிக்கத்தான் செய்கின்றது. எரிபொருள் தொடர்பான இந்த இணையதளத்தில் அதிகளவான error தோன்றுவதற்கான traffic என்பது காரணமாக அமைந்திருக்கின்றது.
குறித்த இணையதளத்ததில் அதன் பயனாளர்கள் குறித்த லிங்கின் ஊடாக உள்நுழைவதனையே traffic என்பதாக அழைக்கப்படுகின்றது. பொருள் இணையத்தளத்திற்கு நாட்டின் பல பக்கங்களிலிருந்தும் பயனாளர்கள் உள்நுழைய முயற்சிக்கும்போது அந்த அனைத்து பயனாளிகளுக்கும் உரிய Response இனை வழங்குவதற்கு சிறிது அதிகமாகவே நேரம் எடுத்துக் கொள்ளவேண்டிய நிலை ஏற்படுவதுண்டு .(ஒரு நுழைவாயிலின் ஊடாக சுமார் 1000 பேரளவில் ஒரேநேரத்தில் உள்நுழைய முயற்சிக்கும்போது ஏற்படுகின்ற நிலை தான் இங்கும் ஏற்படுகின்றது) இவ்வாறான சந்தர்ப்பங்களில் அதிக அளவான error massage காண்பிக்கப்பட வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றது.
நீங்கள் குறித்த இணையத்தளத்தில் உங்களது தகவல்களை உள்ளீடு செய்யும் போது கீழ் குறிப்பிடுகின்ற முறைகள் குறித்து கவனம் செலுத்துங்கள்.
- நீங்கள் உட்செலுத்திய chassis Number சரியான முறையில் உட்படுத்தப்பட்ட போதிலும்நீங்கள் வழங்கிய இலக்கம் பொருந்தவில்லை என்பதாக error messages கிடைக்குமானால் அதனைப் பொருட்படுத்தாமல் Back. சென்று மீண்டும் Next என்பதில் கிளிக் செய்து மீண்டும் பதிவுசெய்யவும்.
Chassis Number இல் (-) என்பது இருக்குமானால் உட்செலுத்தும் பொழுது அதனை உட் செலுத்துங்கள் . (-) இல்லையாயின் அந்த இலக்கங்களுடன் (-) என்பதனை சேர்க்க வேண்டாம் . ஆங்கில Capital எழுத்துக்களுடன்அதில் உள்ள இலக்கங்களை type செய்து உள்ளீடு செய்யவும். இந்த இரண்டு முறைகளும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்பதாக பலர் குறிப்பிடுகின்றனர்.
இவ்வாறு உட்செலுத்தும் போதும் errors வருமானால் அதனைப் பொருட்படுத்தாது சரியான இக்க்கத்தை மீண்டும் மீண்டும் உட்செலுத்தி முயற்சியுங்கள்.
நீங்கள் உங்களது பதிவு செயற்பாட்டினை மேற்கொள்ளும்போது குறித்த இணைய தளத்திலிருந்து error என்பதாக காட்டிய போதிலும் உங்களது தொலைபேசிக்கு registration successful" என்பதாக massage கிடைக்கப்பெறும். இவ்வாறு massage கிடைக்கப்பெறுமாயின் உங்களது பதிவு நடவடிக்கை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது என்று பொருள்.
மீண்டும் log ஆகும்போது QR Code ஆனது Undefined என்பதாக error massage வருமாயின் அதனையும் பொருட்படுத்தாது மீண்டும் இரண்டு மூன்று முறை log ஆவதற்கு முயற்சி செய்யுங்கள். அதுவும் வெற்றியளிக்கவில்லை எனில் அடுத்த நாள் மீண்டும் முயற்சி செய்யலாம். எப்படியும் உங்களுக்கான Code கிடைக்கப்பெறும். அந்த நேரத்தில் அதனை save செய்து கொள்ளுங்கள்
இது ஒரு தேசிய ரீதியில் நடைபெறுகின்ற சென்முறை என்பதுடன் நாட்டில் அனைவருக்குமே எரிபொருள் தேவை காணப்படுவதனால் போட்டித்தன்மை காணப்படுகின்றது. ஒரேநேரத்தில் அனைவராலும் பதிவு செய்து கொள்ள முடியாமல் போகும் என்ற போதிலும் உங்களுக்கான ஒரு நேரத்தில் எப்படியும் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் முயற்சி செய்து பாருங்கள். பின்னிரவு நேரங்களில் அல்லது அதிகாலை நேரங்களில் முயற்சிப்பது இலகுவாக பதிவினை மேற்கொள்ள வாய்ப்பாக அமையும்.
எனவே பொறுமையாகபதிவு நடவடிக்கைகளை மேற்கொண்டு உங்களுக்கான எரிபொருளை பெற்றுக் கொள்ள முயற்சிக்கலாம் .
முறையாக பதிவு செய்துகொண்டு உங்களுக்கு உங்களுக்கு வாராந்தம் கிடைக்கப் பெறுகின்ற எரிபொருளின் அளவு என்ன என்பதை அறிந்து கொள்வதற்கான முறையினை அறிந்து கொள்ள கீழ்வரும் லிங்கில் கிளிக் செய்யுங்கள்
நன்றி.