எரிபொருள் வினியோகம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட புதிய தீர்மானம்
எதிர்வரும் 21ஆம் திகதி QR code இன் அடிப்படையில் எரிபொருள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட இருக்கின்றது . அவ்வாறு எரிபொருள் விநியோகிக்கும் போது வாகன இலக்கத் தட்டில் காணப்படுகின்ற இறுதி இலக்கத்தின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டு இருக்கின்ற தினங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார் .
அதனடிப்படையில்
0,1,2 ஆகிய இலக்கங்களுக்காக செவ்வாய் மற்றும் சனி
3,4,5 ஆகிய இலக்கங்களுக்காக வியாழன் மற்றும் ஞாயிறு
6,7,8,9 ஆகிய இலக்கங்களுக்காக திங்கள் ,புதன் மற்றும் வெள்ளி
என்ற அடிப்படையில் தினங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது
அத்துடன் ஜூலை 21 முதல் 24 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கொழும்பின் சில குறிப்பிட்ட பகுதிகளில் QR Code பரிசோதிக்கப்பட உள்ளது என்பதாகவும் குறிப்பிடப்பட்டது.
எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக ஒன்லைனில் பதிவு செய்யும்போது...
0 Comments