>

ad

ஆசிரியர்களுக்கு தற்காலிக இடமாற்றம் சாத்தியமா?




அரச பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தற்காலிக இடமாற்றம் வழங்குவது தொடர்பான விதிமுறைகளை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. குறித்த விதிமுறைகளை நோக்கும்போது அது சாதாரண இடமாற்றத்தின் சாயலிலேயே இருப்பதாக தெரிகின்றது. இந்த நிலையில் ஆசிரியர்கள் இந்த இரமாற்றம் பெறுவது எந்த வகையில் சாத்தியமானதாக அமையும் என்பது குறித்து லங்கா ஜொப் இன்ஃபோ பதிவிடுகின்றது.

மாற்றீடு இல்லாமல் தற்காலிக இடமாற்றத்திற்கு பரிந்துரை வழங்குதல்.


பொதுவாக எந்தப் பாடசாலையிலும் குறித்த ஆளணி எண்ணிக்கைக்கு அதிகமானவர் இருப்பது என்பது சாத்தியமான ஒன்றல்ல. அவ்வாறு ஆளணியிலும் அதிகமானவர்களை வைத்திருப்பது என்பது அரச வளங்களை வீணாக்குகின்ற செயற்பாடாக கருதப்படும். எனவே எந்த ஒரு பாடசாலையும் தனது ஆளணியிலும் அதிகமான அளவில் ஆசிரியர்களை வைத்திருப்பது கணக்காய்வு வினாக்களுக்கு உட்பட வாய்ப்பிருப்பதால் அதிபர்கள் முடிந்தளவு இவ்வாறானவர்களை வைத்திருக்காமல் இருக்கவே முயற்சிப்பர். அந்த வகையில் இடமாற்றம் கோரும் ஆசிரியர்கள் எப்படியும் இந்தக் குழுவில் அடங்குவதற்கு  வாய்ப்பில்லை. எனவே மாற்றீடு இல்லாமல் தற்காலிக இடமாற்றத்திற்கு பரிந்துரைக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவு/

 ஒத்துமாறல்


மேற்படி விடயத்துக்கு அமைய ஒத்துமாறல் அடிப்படையில் ஒருவரைத் தேடிப்பிடித்து இடமாற்றம் பெறுகின்ற நடவடிக்கையே சாத்தியமாக அமையலாம். அதிலும் ஒரு சிக்கல் இருக்கின்றது. இந்த இடமாற்றம் பொதுவான இடமாற்றம் போன்று இடம்பெறுவதாக குறிப்பிடப்படுகின்றது. அந்த வகையில் மாற்றீட்டு (ஒத்துமாறல்) அடிப்படையில் இடமாற்றம் அமைய வேண்டுமானால் தனது நியமனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாடத்தையே நியமனமாகப் பெற்ற ஒருவரையே தேடிப்பிடித்தாக வேண்டி ஏற்படும். அதுவும் தான் சேவையாற்றும் பாடசாலைக்கு அருகாமையில் வசிப்பவராகவும் இருக்கவேண்டும். அது மாத்திரமல்ல தனது வசிப்பிடத்திற்கு அருகாமையில் இருக்கும் பாடசாலை ஒன்றில் அவர் கடமையாற்றுகின்ற ஒருவராக இருக்கவும் வேண்டும்,. அவ்வாறு ஒருவரைத் தேடிப்படித்தால் மாத்திரமே தனக்கு தனது இருப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள பாடசாலைக்கு இடமாற்றம் பெற முடியுமாக அமையும்.   இப்படியான ஒருவரை தேடிப்பிடிப்பது போராட்டமாகவே அமையலாம்.

நியமனக் கடிதத்தில் பொது என்ற அடிப்படையில் நியமனம் பெற்றவர்கள்.


தனது நியமனத்தில் பொது என்று குறிப்பிடப்பட்டவர்களுக்கு மேலே குறிப்பிட்ட பிரச்சினைகள் குறைவு என்றாலும். பொது என்ற நியமனம் பட்டதாரிகளுக்கு மாத்திரமே வழங்கப்படுவதுண்டு. பொது என்று குறிப்பிடப்பட்ட நியமனத்தை உடையவர்கள் தங்களது பட்டப்படிப்புக்கு சம்பந்தமான பாடங்களை எடுப்பவராக இருப்பார்கள் இன்னும் சிலர் தங்களது பட்டத்துக்கு சம்பந்தம் இல்லாத பாடங்களை எடுப்பவர்களும் இருப்பார்கள். இவ்வாறு பொது எனும் நியமனத்தை உடயவர் தன்னுடன் ஒத்துமாறுகின்வர்கள் கற்பிக்கின்ற பாடத்தை கற்பிக்க முடியுமானவராக இருக்க வேண்டும் என்பதாக அதிபர்கள் எதிர்பார்க்கலாம். எனவே இவ்வாறானவர்கள் நியமனங்களை பெற்றிருக்கின்றவர்களின் நிலையும் கேள்விக்குறியாக அமைய அதிக வாய்ப்பிருக்கின்று.

 

இடமாற்றம் மேற்கொள்ளும் அதிகாரம்.


பொதுவாக இடமாற்ற விண்ணப்பம் எனும்போது வருடாந்த இடமாற்றங்கள் அதிபர்களின் நிலைப்பாடு கருத்தில்கொள்ளாத அடிப்படையில் வலயக்கல்விக் காரியாலயத்தில் அல்லது கல்வித் திணைக்களம் கல்வி அமைச்சு என்பவற்றின் தலையீடுகளுடன் இடம்பெற வாய்ப்புக்கள் இருக்கின்றன (உதாரணம் 5 வருடம் அல்லது 8 வருடம் ஒரே பாடசாலையில் கடமையாற்றியவர்களது இடமாற்றம்). ஆனால் இந்த தற்காலிக இடமாற்றம் அதிபரின் அங்கீகாரத்துடன் இடம்பெறவேண்டும் என்பதனால் சில இடமாற்றங்கள் அதிபர்களின் எழுத்துமூல ஒப்புதல் இன்மையினால் தடைப்பட வாய்ப்பிருக்கின்றது.

அதிபரின் அங்கீகாரம்


அதிபரின் ஒப்புதல் பாடசாலைகளைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு அதிபருக்கும் தனது பாடசாலை குறித்த மாதாந்த வருடாந்த இலக்குகள் காணப்படும். தனது பாடசாலையில் இருந்து செல்கின்ற ஆசிரியருக்கு பதிலாக வருகின்ற ஆசிரியர்கள் குறித்து மிகுந்த கவனம் செலுத்த வாய்ப்பிருக்கின்றது. அந்த வகையில் வருகின்ற ஆசிரியர்கள் குறித்து விசாரித்துப்பார்ப்பதற்கு அதிபருக்கு ஓரிரு வாரங்கள் தேவைப்படலாம். அந்த ஓரிரு வாரங்களின் பின்னர் குறித்த நபர் தனது பாடசாலைக்கு பொறுத்தமில்லாதவர் என்பதாக அதிபர் அடையாலம் காண்பதற்கான வாய்ப்பிருக்கின்றது. அவ்வாறு விசாரித்துப் பார்த்ததன் பின்னர் வருகின்றவர் குறித்து அதிபருக்கு திருப்தியில்லாதபோது இன்னுமொவரை தேடிக்கொள்ள வேண்டிய நிலை இடமாற்றம் கோரும் ஆசிரியர்களுக்கு ஏற்படலாம். அவர் குறித்து இதே நடைமுறை இன்னுமொரு முறை ஏற்பட வாய்ப்பிருக்கின்றது.

விண்ணப்பங்களின் தொகை

அதிபர்கள் இருவரினதும் எழுத்து மூல ஒப்புதல்களைப் பெற்றுக்கொண்டு வலயக் கல்விக் காரியாலயத்திற்கு சென்றால் உடனே இடமாற்றத்தைப் பெற்றுக்கொள்ளலாமா என்றால். அதிலும் சில சிக்கல்கள் இருப்பதாகத் தெரிகின்றது. இன்று எல்லா ஊர்களிலும் உள்ள பாடசாலைகளை நோக்கும்போது வெளி ஊர்களில் இருந்து வந்து கற்பிக்கின் ஆசிரியர்களே அதிகமான. பாடசாலைகளில் காணப்படுகின்றனர். ஒரு பாடசாலையில் 50 ஆசிரியர்கள் இருப்பார்களானால் அவர்களில் 25 பேர்களாவது இடமாற்றம் கோரி விண்ணிப்பிப்பதற்கான வாய்ப்புக்களே காணப்படுகின்றது. இந்த நிலையில் தனது வசிப்பிடத்திலிருந்து. 2 அல்லது 3 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பவர்களும் நடைதூரத்தில் இருக்கின்ற பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெறவேண்டும் என முயற்சிப்பார்களானால் இடமாற்றம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் மொத்த ஆசிரியர் தொகையில் 75% இலும் அதிகரக்க  வாய்ப்புள்ளது. எனவே விண்ணப்பங்களைச் சமாளிப்பதில் வலயக் காரியாலயங்கள் பாரிய நெருக்கடியினை எதிர்நோக்க வாய்ப்பிருக்கின்றது.

காரியால ஊழியர்கள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றமை.


பொதுவாக இடம்பெறுகின்ற இடமாற்ற விண்ணப்பங்கள் தொடர்பில் பணியாற்றுவதற்கு ஒரு முகாமை சேவை உத்தியோகத்த காணப்படுவார். பொதுவாக இடம்​பெறுகின்ற  இடமாற்றங்கள் தொடர்பில் விண்ணப்பங்கள் கோரப்பட்டு இடமாற்றம் வழங்குகின்ற செயற்பாடுகளுக்கு ஒரு மாதத்திலும் அதிகமான காலம் எடுத்துகெள்ள வேண்டிய நிலை ஏற்படும்.. எனினும் ஒத்துமாறல் தொடர்பான விண்ணப்பங்கள் ஒரு வார காலத்துக்குள் முடிவைக் காண முடிகின்ற நிலை இருந்த போதிலும் அதிகளவான விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறும் போது இது எந்தளவில் சாத்தியப்படும் என்ற கேள்வி எழுகின்றது.  அந்த அடிப்படையில் மடங்குகளாகக் கிடைக்கப் பெறுகின்ற விண்ணப்பங்கள்  முறையாக ஆவணப்படுத்தப்பட்டு உரியவர்களிடம் அனுமதிக் கையொப்பங்கள் பெற்று இடமாற்றம் செயற்படுத்துகின்ற நடவடிக்கைக்கு சாதாராண இடமாற்றத்திற்கு எடுக்கின்ற காலத்திலும் கூடிய காலம் எடுத்துகொள்ள வாய்ப்பிருக்கின்றது.அதிலும் இந்த இரண்டு வாரங்கள் காரியாலயங்களில் உத்தியோகத்தர்கள் மட்டுப்படுத்தப்பட்டு வாரத்தில் இரண்டு நாட்களே பணிக்கு அழைக்கப்படுகின்றர். இந்த நிலை தொடருமானால் இடமாற்றம். தொடர்பான காரியால செயற்பாடுகள் முறையாக அமைவதில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பிருக்கின்றது.

ஆவணப்படுத்தல்


தற்காலிக இடமாற்றங்கள் வழங்கும்போது தற்காலிக இடமாற்றம் பெற்றுச் செல்கின்ற இடங்களில் இருக்கும் காலங்களில் சம்பளம் பெறுவது நிரந்தர சேவைத் தளத்தில் என்பதால் குறித்த ஆசிரியர் சரியாக சேவைக்கு வருகின்றார் என்பது உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படையிலேயே சம்பளம் வழங்கப்படவேண்டும்.. அத்துடன் தரக்கணிப்பீட்டு படிவத்தில் தற்காலிக சேவைக்காலம் குறித்த தரக்கணிப்பீடு தற்காலிகப் பாடசாலை அதிபரே மேற்கொள்ளவேண்டும். தற்போதைய இடமாற்றத்தில் அனைத்து பாடசாலைகளிலும் அதிகளவான ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்றுச் செல்வார்களானால்  சம்பளம் வழங்கிய பின்னர் சம்பளப் பட்டியலுடன் வலயக் காரியாலயத்துக்குச் சமர்ப்பின்ற  நிறுவன அறிக்கைகளை அமைப்பதில்  அதிபர்கள் பாரிய நிர்வாக சிக்கல்களை எதிர்நோக்க வாய்ப்பிருக்கின்றது. தனது பாடசாலை அதிபர் 10 பாடசாலைகளில் பணியாற்றுவாராயின் அந்த பத்து பாடசாலைகளிலிருந்தும் அறிக்கை  பெறவேண்டி நிலை ஏற்படலாம். இது குறித்த அறிவுறுத்தல்கள் இதுவரையில் வௌியாகவில்லை என்பதுடன் எதிர்காலங்களில் இதற்கான மாற்றுமுறைகள் அறிமுகப்படுத்தப்படலாம்.)

தற்காலிக இடமாற்றம் செல்லுபடியாகின்ற காலம்.


தற்காலிக இடமாற்றங்கள் அனைத்தும் டிசம்பர் மாதம் 31 வரை மாத்திரமே செல்லுபடியாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது நாங்கள் 6 வது மாதத்தின் இறுதிப் பகுதியில் இருக்கின்றோம். வலையத்துக்குள் இடம்பெறுகின்ற தற்காலிக இடமாற்றங்களை ஒரு சில ஆசிரியர்களேனும் பெற்றுக்கொள்ளலாம் என்ற நிலை காணப்பட்டாலும் வலையங்களுக்கு இடையேயான இடமாற்றங்களும் மாகாணங்களுக்கு இடையேயான இடமாற்றங்களும் பெறுவதற்கான முயற்சிகளுக்கு மேற்படி கால எல்லை போதியதாக அமையாமல் இருக்கவும் வாய்ப்பிருக்கின்றது.  

கல்வி அமைச்சின் தீர்மானங்கள் அடிக்கடி மாற்றமடைகின்ற நிலை.


இந்த வாரம் பாடசாலைகளை நடாத்துவது தொடர்பான தீர்மானங்கள் ஒரே நாளில் இரண்டு விடுத்தங்கள் மாற்றம் பெற்றது. தற்காலிக இடமாற்றங்கள் குறித்த சுற்றுநிருபங்கள் கூட அவசரமாக வௌியிடப்பட்ட ஒன்றாகவே காணப்படுகின்றது. அடுத்த வாரங்களில் ஆசிரியர் விண்ணப்பங்களை ஏடுத்துக்கொண்டு வலையக் காரியாலயங்களுக்குச் செல்லும் போது ஏற்படுகின்றின் நிர்வாக ரீதியிலான பிரச்சினைகள் காரணமாக மேற்படி தற்காலிக இடமாற்ற சுற்றுநிருபம் மாற்றம் பெறுவதற்கும் வாய்ப்பிருக்கின்றது.

மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்புக்கள் ஏற்படாத அடிப்படையில் இடமாற்றம் நிகழவேண்டும் என்ற நிபந்தனை

மேற்படி வாசகத்தை கல்வி அமைச்சின் சுற்றுநிருபத்தில் அழுத்தமாகக் குறிப்பிட்டிருக்கின்றனர். இந்த வாசகம் தற்காலிக இடமாற்றம் பெறுவதற்காக முன்வைக்கப்படுகின்ற நியாயமான காரணங்களையும் அப்படியே புரட்டிப்போடுகின்ற அளவுக்கு பலமான வாசகமாகக் காணப்படுகின்றது. 

தற்காலிக இடமாற்றம் குறித்த நிபந்தனைகள் தொடர்பாக கல்வி அமைச்சு வௌியிட்ட சுற்றுநிருபத்தின் விபரம் பெற கீழுள்ள லிங்கில் கிளிக் செய்யவும்.

இறுதியாக...


தற்காலிக இடமாற்றம் என்பது சாத்தியமான ஒன்றல்ல என்பதனை நிருவுவது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல. இடமாற்றம் பெற்றுச் செல்லும்போது இவ்வாறான பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும் என்பதாக தங்களைத் தயார்படுத்திக்கொள்வதற்காகவே இந்த விபரங்கள் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன என்பதனை ஆசிரியர்கள் கவனத்தில் கொள்ளவும்.

அரச தொழில் கல்வி வழிகாட்டல் பதிவுகளைப் பெற்றுக்கொள்ள எமது வட்சப் குழுமத்துடன் இணைந்திருங்கள்.
எமது வட்சப் குழுமம் https://chat.whatsapp.com/D0fb2WqKBHi7u0YmjkM4zw


எப்படியாயினும் இன்றை நெருக்கடியான சூழலில் மிகுந்த சிரமத்துடனேயே தனது கடமைகளை ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான நிலையில் அவர்களது சொந்த வாழ்கையைப் பாதிக்காத அடிப்படையில் அவர்கள் எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் வழங்கப்படவேண்டும் என்பதுடன் கல்வி பயில்கின்ற பிள்ளைகளின் எதிர்காலமும் பாதிக்கப்படாத அடிப்படையில் அமையவேண்டும் என்பதாக பிரார்த்திக்கின்றோம். 

நன்றி 

Post a Comment

0 Comments