தற்போது நாட்டில் நிலவும் நெருக்கடி நிலமையில் ஆசிரியர்களுக்கு சலுகை வழங்குவது தொடர்பான சுற்றுநிருபம் ஒன்றினை 2022.06.16 ஆம் திகதி கல்வி அமைச்சு வௌியிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் ஆசிரியர்களுக்கு கிட்டிய பாடசாலைகளுக்கு தற்காலிகமாக இணைப்புச் செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு குறித்த சுற்றுநிருபம் ஊடாக ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
நடவடிக்கைகள் வருமாறு.
01. ஒரே மாகாணத்திற்தில் அமைந்துள்ள தேசிய பாடசாலைகளுக்கு இடையிலும் தேசிய பாடசாலையில் இருந்து மாகாணப் பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை இணைப்புச் செய்வது தொடர்பான அதிகாரம் மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.
02. இரண்டு மாகாணங்களில் அமைந்திருக்கின்ற மாகாணப் பாடசாலைகளுக்கிடையில் ஆசிரியர்களை இணைப்புச் செய்வதல், மாகாண மாகாண சபைகளின் அரச சேவை ஆணைக்குழுவினதும் செயலாளரினதும்
அனுமதியுடன் நடைமுறைப்படுத்தப்பகின்றது.
03. தேசிய பாடசாலைகள் தொடர்பில் மாகாணங்களுக்கிடையில் ஆசிரியர்களின் இணைப்பு கல்வி அமைச்சின் ஆசிரியர் இடமாற்றக் கிளையின் பணிப்பாளர் ஊடாக நடைமுறைப்படுத்தப்பகின்றது.
மேற்படி இணைப்புச் செய்கின்ற நடவடிக்கையானது மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாத அடிப்படையில் அமைய வேண்டும் என்பதுடன் குறித்த இரண்டு பாடசாலை அதிபர்களினதும் எழுத்து மூலமான ஒப்தலுடன் நடைபெறவேண்டும்
இணைப்புச் செய்வதற்கான நிபந்தனைகள்
1. இணைப்புக் கோருகின்ற ஆசிரியர் குறித்த பாடசாலையில் ஆளணி எண்ணிக்கையை விட மேலதிகமானவராக இருப்பாராயின் அவருக்காக பதில் ஆசிரியர் தேவையில்லை
2. இணைப்புக் கோருகின்ற ஆசிரியர் பாடசாலையில் ஆளணி எண்ணிக்கையை விட மேலதிகமானவராக இல்லாமலிருப்பாரானால் பொருத்தமான பதில் ஆசிரியர் இணைப்புச் செய்யப்படவேண்டும்
3. அதிபர்களின் இணக்கத்துடன் ஒத்துமாறல் இடம்பெறுகின்ற அடிப்படையில் இடமாற்றங்கள் கோரப்படுமாயின் அது ஒத்துமாறல் இடம்பெறுகின்ற இடமாற்ற நடைமுறைகளின் அடிப்படையில் நடைபெறுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
4. கர்ப்பிணிகள் மற்றும் வைத்திய காரணங்களினால் இடமாற்றம் கோரபவர்கள் உரிய வைத்திய சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் ( இது தொடர்பாக 2007/20 சுற்று நிருபம் கருத்தில்கொள்ளப்படவேண்டும்.)
5. மாகாணக் கல்விப் பணிப்பாளரின் தேசிய பாடசாலைகள் தொடர்பில் வழங்குகின்ற இடமாற்றங்கள் குறித்து கல்வி அமைச்சின் ஆசிரியர் இடமாற்றக் கிளையின் பணிப்பாளருக்கு தெரியப்படுத்தவேண்டும்.
5. இந்த இணைப்புக்கள் 2022.12.31 வரை மாத்திரமே செல்லுபடியாகும்
6. இந்த தற்காவலிக இடமாற்றமானது நிரந்த இடமாற்றம் பெற்றுக் கொள்வதற்கான தகைமை ஒன்றாகக் கணிக்கப்படாது என்பதுடன் குறிப்பிட்ட இணைப்புக்காலத்தில் சம்பளங்கள் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் என்பன நிரந்தர நியமனத்திற்கு உரிய பாடசாலைகளின் ஊடாகவே வழங்கப்படும்.
சிங்கள சுற்று நிருபத்தினைப் பார்வையிட கீழே உள்ள லிங்கில் கிளிக் செய்யவும்.
0 Comments