ad

Bachelor of Education Honours in Primary Education 2023 -OUSL


ஆசிரியர் பதவிகளுக்கு ஆட்கள் சேர்த்துக்கொள்ளும் போது பொதுவாக போட்டிப் பரீட்சை நாடாத்தப்பட்டு அதில் கூடிய புள்ளிகளைப் பெறுகின்றவர்களே பதவிக்காக உள்வாங்கப்படுகின்றனர்.  ஆனால் கல்வியியல் துறையில் பட்டம் பெற்ற ஒருவர் ஆசிரியராக உள்வாங்கப்பட இந்தப் பரீட்சையில் தோற்ற வேண்டிய அவசியமில்லை என்பதாக அசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


அத்துடன் வேறு துறைகளில் பட்டம் பெற்றிருப்பவர்கள் ஆசிரியர் சேவைக்காக உள்வங்கப்படும்போது இலங்கை ஆசிரியர் சேவையின்   3 I (அ) தரத்திற்கே உள்வாங்கப்டுகின்றனர்.  ஆனால்   கல்வியியல் பட்டம் ஒன்றினைப் பெற்றிருக்கின்ற ஒருவர் நேரடியாகவே இலங்கை ஆசிரியர் சேவையின்  2 II எனும் தரத்தில் நியமனத்தினைப் பெற்றுக்கொள்ளலாம். அந்த அடிப்படையில் நீங்கள் ஆசிரியர் தொழில் ஒன்றை பெற்றுக்கொள்வதனை இலக்காகக் கொண்ட ஒருவராக இருப்பீர்களானால் வேறு பட்டங்களை பயில்வதனை விட கல்வியல் பட்டம் ஒன்றினைப் பயில்வது உங்களுக்கு பயனுள்ளதாக அமையும்.  சாதாரண பட்டம் பெற்ற ஒருவரிலும் பார்க்க மூன்று வருடங்கள் முன்னதாகவே அடுத்தடுத்த நிலைகளுக்கு பதவி உயர் பெற்றுச்  சென்றுவிடலாம்.  



Bachelor of Education Honours in Primary Education

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் கல்வியல் சம்பந்தமான பல பாடநெறிகள் காணப்படுகின்றன. இந்த பாடநெறிகளில்  கல்வியல் பட்டம்  (ஆரம்பக்கல்வி ) B.Ed (primary Education) எனும் பாடநெறிக்கு அதிகளவு வரவேற்பு காணப்படுகின்றது.  

கல்வித் தகைமைகள்

இந்த பாடநெறிக்காக விண்ணப்பிப்பதற்கு க.பொ.த (உ/த) பரீட்சையில் 3 சித்திகள் இருப்பது போதுமானதாகும். இவ்வாறு விண்ணப்பிக்கின்ற அனைத்து விண்ணப்பதாரிகளும் ஒரு பரீட்சைக்கு உட்படுத்தப்படுட்டு அந்தப் பரீட்சையில் சித்தியடைக்கின்றவர்கள் பாடநெறிக்காக உள்வாங்கப்படுவர்.

க.பொ.த (உ/த) பரீட்சையில் 3 சித்திகள் இல்லாதவர்களுக்கும் இந்தப் பாடநெறியினைப் பயில்வதற்கான வாய்பொன்று காணப்படுகின்றது. இலங்கை திறந்த பல்கலைக்கழகம் வழங்குகின்ற க.பொ.த (உ/த) தரத்திற்கு சமமான ஏதேனும் ஒரு அடிப்படைப் பாடநெறி (Foundation course) ஒன்றினைப் பூர்த்திசெய்துவிட்டு இந்த பாடநெறியினைத் தொடர்வதற்கான வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளலாம்.  

அலலது

இலங்கை திறந்த பல்கலைக்கழகம் வழங்குகின்ற முன்பள்ளி உயர் தேசிய டிப்லோமா பாடநெறியினைப் பூர்த்திசெயதவர்களுக்கு உள்வாங்குவதற்கான பரீட்சையில் தோற்றாமலேயே இந்த பட்டப்படிப்புப் பாடநெறிக்காக தங்களைப் பதிவு செய்துகொண்டு பாடநெறியினைத் தெடரமுடியும். 

காலம்

BEd (primary Education) பாடநெறியானது ஆரம்ப காலங்களில் இரண்டு வருட டிப்லோமா பாடநெறியாகவே இருந்து வந்தது. அதன் பின்னர் இது 3 வருட டிப்லோமா பாடநெறியாக மாற்றப்பட்டு தற்போது 4 வருட பட்டப்படிப்பு கற்கை நெறியொன்றாக வடிமைக்கப்ட்டுள்ளது.

மொழி மூலம்


இந்தப் பாடநெறியினை ஆங்கிலம்/ சிங்களம்/ தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் பயிலலாம். 

எந்த நிலையங்களில் பயிலலாம்.


கீழ்க்குறிப்பிடப்படுகின்ற கற்றல் நிலையங்களில் குறித்த பாடநெறியினைத் தொடராலம். பாடநெறிக்காக குறித்த தொழிமூலங்களில் சேர்த்துக்கொள்ளப்படவிருக்கும் மாணவர்கள் விபரம் அட்டவணையில் தரப்பட்டுள்ளது. 

கட்டண விபரம். 


Registration Fee Rs. 500.00 
Facilities Fees Rs. 2,500.00 
Library Facility Fee Rs. 100.00 
Start @ OUSL Programme Rs. 8,500.00 
Tuition fee
 - Level 3 & 4 per credit Rs. 1,980.00
 - Level 5 & 6 per credit Rs. 2,320.00 


எப்போது விண்ணப்பம் கோரப்படும் 

15.07.2023 முதல் 15.08.2023 வரை கோரப்படும்.

எவ்வாறு விண்ணப்பிக்கவேண்டும்.

மேலே குறிப்பிடப்பட்ட திகதிகளில் கீழ்க்குறிப்பிடும் லிங்கில் கிளிக் செய்து விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். 


மேலதிக விாரங்களுக்காக 2020/2021 ஆம் ஆண்டு வௌியிடப்பட்ட விபரங்கள் அடங்கிய தொகுதி இணைக்கப்பட்டுள்ளது தேவையானவர்கள் பெற்றுக்கொள்ளலாம்.