>

ad

Bachelor of Education Programmes by OUSL (in tamil)

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் கல்வியில் பட்டப்படிப்பு  தொடர்பாக அறிந்ததும் அறியாததும்.



 ஆசிரியர் பதவிகளுக்கு ஆட்கள் சேர்த்துக்கொள்ளும் போது பொதுவாக போட்டிப் பரீட்சை நாடாத்தப்பட்டு அதில் கூடிய புள்ளிகளைப் பெறுகின்றவர்களே பதவிக்காக உள்வாங்கப்படுகின்றனர்.  ஆனால் கல்வியியல் துறையில் பட்டம் பெற்ற ஒருவர் ஆசிரியராக உள்வாங்கப்பட இந்தப் பரீட்சையில் தோற்ற வேண்டிய அவசியமில்லை என்பதாக அசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


அத்துடன் வேறு துறைகளில் பட்டம் பெற்றிருப்பவர்கள் ஆசிரியர் சேவைக்காக உள்வங்கப்படும்போது இலங்கை ஆசிரியர் சேவையின்   3 I (அ) தரத்திற்கே உள்வாங்கப்டுகின்றனர்.  ஆனால்   கல்வியியல் பட்டம் ஒன்றினைப் பெற்றிருக்கின்ற ஒருவர் நேரடியாகவே இலங்கை ஆசிரியர் சேவையின்  2 II எனும் தரத்தில் நியமனத்தினைப் பெற்றுக்கொள்ளலாம். அந்த அடிப்படையில் நீங்கள் ஆசிரியர் தொழில் ஒன்றை பெற்றுக்கொள்வதனை இலக்காகக் கொண்ட ஒருவராக இருப்பீர்களானால் வேறு பட்டங்களை பயில்வதனை விட கல்வியல் பட்டம் ஒன்றினைப் பயில்வது உங்களுக்கு பயனுள்ளதாக அமையும்.  சாதாரண பட்டம் பெற்ற ஒருவரிலும் பார்க்க மூன்று வருடங்கள் முன்னதாகவே அடுத்தடுத்த நிலைகளுக்கு பதவி உயர் பெற்றுச்  சென்றுவிடலாம்.  


அந்த அடிப்படையில் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படுகின்ற நான்கு வகையான  கல்வியியல் பட்டப்படிப்பு பாடநெறிகள் தொடர்பாக தகவல்களை lanakjobinfo.com இணையத்தளம் உங்களுக்காககத் தொகுத்துத்தருகின்றது. 

Bachelor of Education Honours in Primary Education

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் கல்வியல் சம்பந்தமான பல பாடநெறிகள் காணப்படுகின்றன. இந்த பாடநெறிகளில்  கல்வியல் பட்டம்  (ஆரம்பக்கல்வி ) B.Ed (primary Education) எனும் பாடநெறிக்கு அதிகளவு வரவேற்பு காணப்படுகின்றது. இந்த பாடநெறிக்காக விண்ணப்பிப்பதற்கு க.பொ.த (உ/த) பரீட்சையில் 3 சித்திகள் இருப்பது போதுமானதாகும். இவ்வாறு விண்ணப்பிக்கின்ற அனைத்து விண்ணப்பதாரிகளும் ஒரு பரீட்சைக்கு உட்படுத்தப்படுட்டு அந்தப் பரீட்சையில் சித்தியடைக்கின்றவர்கள் பாடநெறிக்காக உள்வாங்கப்படுவர். 

க.பொ.த (உ/த) பரீட்சையில் 3 சித்திகள் இல்லாதவர்களுக்கும் இந்தப் பாடநெறியினைப் பயில்வதற்கான வாய்பொன்று காணப்படுகின்றது. இலங்கை திறந்த பல்கலைக்கழகம் வழங்குகின்ற க.பொ.த (உ/த) தரத்திற்கு சமமான ஏதேனும் ஒரு அடிப்படைப் பாடநெறி (Foundation course) ஒன்றினைப் பூர்த்திசெய்துவிட்டு இந்த பாடநெறியினைத் தொடர்வதற்கான வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளலாம்.  

அலலது

இலங்கை திறந்த பல்கலைக்கழகம் வழங்குகின்ற முன்பள்ளி உயர் தேசிய டிப்லோமா பாடநெறியினைப் பூர்த்திசெயதவர்களுக்கு உள்வாங்குவதற்கான பரீட்சையில் தோற்றாமலேயே இந்த பட்டப்படிப்புப் பாடநெறிக்காக தங்களைப் பதிவு செய்துகொண்டு பாடநெறியினைத் தெடரமுடியும். 

BEd (primary Education) பாடநெறியானது ஆரம்ப காலங்களில் இரண்டு வருட டிப்லோமா பாடநெறியாகவே இருந்து வந்தது. அதன் பின்னர் இது 3 வருட டிப்லோமா பாடநெறியாக மாற்றப்பட்டு தற்போது 4 வருட பட்டப்படிப்பு கற்கை நெறியொன்றாக வடிமைக்கப்ட்டுள்ளது. 

பாடநெறி தொடர்பான கையேட்டினை பதிவிறக்கம் செய்ய கீழுள்ள படத்தில் கிளிக் செய்யவும். 


Bachelor of Education Honours in Special Needs Education


இலங்கை திறந்த பல்கலைக்கழகம் வழங்குகின்ற அடுத்த கல்வியியல் பட்டப்பப்படிப்பு விசேட தேவையுடையவர்களுக்கான கல்வி தொடர்பான பட்டப்பபாகும் .

இந்த பாடநெறிக்கு உள்வாங்கப்படுவதற்கான தகுதிகள் வருமாறு

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படுகின்ற ஏதாவது இரண்டு வருட டிப்லோமாவில் சிதிதயடைந்திருத்தல் இந்தப் படாநெறியினைப் பயில்வதற்கு போதுமானதாகும்.  

தேசிய கல்வியியல் கல்லூரியில் விசேட கல்வி தொடர்பான கற்பித்தல் டிப்லோமா பாடநெறியினைப் பூர்த்தி வெய்தவர்கள் மேற்படி பட்டப்படிப்பின் 5 வது மட்டத்தில் நேரடியாக பதிவு செய்து கல்வியைத் தொடரலாம். மேற்படி விசேட கல்வி தொடர்பான கற்பித்தல் டிப்லோமா பாடநெறியினைப் பூர்த்தி செய்து அதன் பின்னர் விசேட கல்வி தொடரபில் 3 வருடம் கற்பித்தல் அனுபவம் இருக்குமானால் அவர்கள் நேரடியாக 6 வது மத்தில் (இறுதி ஆண்டு) நேரடியாக பதிவு செய்து கல்வியைத் தொடரலாம்.

Bachelor of Education Honours in Drama and Theatre

நாடகமும் அரங்கியலும் என்ற துறையியில் கல்வியியல் பட்டத்துக்கான கற்கை நெறியானாது இலங்கை திறந்த பல்கலைக்கழகம் வழங்குகின்ற அடுத்த கல்வியல் பட்டப்படிப்பு பாடநெறியாகும் . 

இந்த பட்டப்படிப்புக்காக பதிவு செய்துகொள்வதற்கான தகைமையினைப் பெறுவதற்காக கொழும்பு டவர் மண்டபத்தினால் நடாத்தப்படுகின்ற நாடகமும் அரங்கியலும் என்ற துறையிலான தேசிய உயர் டிப்லோமா பாடநெறியில் சித்தியடைந்திருக்கிவேண்டும். இந்த தகைமையுடன் திறந்த பல்கலைக்கழகத்தில் இரண்டு வருடங்கள் பயின்று பட்டம் பெற்றுக்கொள்ளலாம். 


The Bachelor of Education Honours in Natural Sciences Degree Programme

இலங்கை திறந்த பல்கலைக்கழகம் வழங்குகின்ற அடுத்த பட்டப்படிப்பாக இயற்கை விஞ்ஞான பீடத்தினால் நடாத்தப்படுகின்ற இயங்கை விஞ்ஞானம் தொடர்பான கல்வியல் பட்டப்படிப்பினைக் குறிப்பிலாம். 

இந்த பட்டப்படிப்பிற்கான தகைமையாக க.பொ.த (உ/த) பரீட்சையில் கணிதம் அல்லது விஞ்ஞானத்துறையில் 3 சித்திகளைப் பெற்றிருக்கவேண்டும்.

அல்லது. 
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படுகின்ற விஞ்ஞானம் சம்பந்தமான ஆரம்பமட்ட பாடநெறிகளில் ஒன்றினைப் பூர்த்திநெய்திருத்தல் வேண்டும். 

அத்துடன் விஞ்ஞான கணிதம் தொடர்பாக கல்வியியல் கல்லூரியினால் வழங்கப்படுகின்ற 3 வருட டிப்லோமா பயிற்சிநெறியினை பூர்த்தி செய்தவர்களாயின் 3 வது மற்றும் 4 வது மட்டங்களைப் பூர்த்தி செய்து விட்டு நேரடியாக 6 வது மட்டத்திற்கு பதிவு செய்துகொள்ளலாம். 

அத்துடன் ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தின் இயங்கை விஞ்ஞானம் தொடர்பான பட்டம் பெற்றவர்கள் அல்லது இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான டிப்லோமா பெற்றவர்கள் இந்த பாடநெறியன் 5 வது மட்டத்திற்கு நேரடியாக பதிவு செய்யலாம். 



பாடநெறியின் மட்டம் 3/4 தொடர்பான கையேட்டினை பதிவிறக்கம் செய்ய கீழுள்ள படத்தில் கிளிக் செய்யவும். 
பாடநெறியின் மட்டம் 5/6 தொடர்பான கையேட்டினை பதிவிறக்கம் செய்ய கீழுள்ள படத்தில் கிளிக் செய்யவும்.
கல்வியல் பட்டப்படிப்பு ஒன்றினைப் பூர்த்தி செய்தவர்களுக்கு அவர்கள் பயின்ற துறையில் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபடலாம். இதற்கான அரச மற்றும் தனியார் பாடசாலைகளில் அதிக வாய்ப்புக்கள் காணப்படுக்கினறன. 

கல்வியல் பட்டப்படிப்புகளை கல்வியல் தேசிய கல்வி நிறுவனமும் வழங்குவதுடன் இந்தப் பாடநெறிகளுக்காக பாடசாலை ஆசிரியர்கள் மாத்திரமே விண்ணப்பிக்கலாம் என்ற நிலை காணப்படுகின்றது. அந்த அடிப்படையில் இலங்கை திறந்த பல்கலைக்கழகம் வழங்குகின்ற இந்த கல்வியியல் பட்டப்படிப்பு பாடநெறிகளில் ஆசிரியர்கள் அல்லாதவர்களும் பட்டம் பெறலாம் என்ற அடிப்படையில் இலங்கைத் திறந்த பல்கலைக் கழகத்தின் பாடநெறிகள அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.  



அத்துடன் இலங்கை திறந்த பல்கலைக்கழகம் மாத்திரமன்றி இலங்கைப் பல்கலைக்கழங்க மானியங்கள் அணைக்குழுவின் அங்கீகாரம்/ அனுமதி  aprovel /recognized பெற்ற பல பல்கலைக்கழகங்களும் கல்வியியல் பட்டப்படிப்புகளை வழங்குகின்றாது. மேற்படி எந்த நிறுவனம் வழங்குகின்ற பட்டமானாலும் அதற்காக முன்னர் கூறிய சலுகைகளுக்கு உரித்துடையவையாகும். 


இந்த பாநெறிகளுக்கான. விண்ணப்பங்கள் வருடாந்தம் திறந்த பல்கலைக்கழக இணையத்ததின் ஊடாக கோரப்படும். அப்போது விண்ணப்பிக்கலாம்.

இலங்கைப் பல்கலைக்கழங்க மானியங்கள் அணைக்குழுவின் அங்கீகாரம்/ அனுமதி  aprovel /recognized பெற்ற பல பல்கலைக்கழகங்கள் என்றால் என்ன எனபது தொடரபான முழு விபரங்களையும் அறிந்துகொள்ள கீழுள்ள படத்தை கிளிக் சய்யவும்.