>

ad

உயர்கல்விக்காக பல்கலைக்கழகம் ஒன்றினைத் தெரிவு செய்யும் போது கவனத்தில் கொள்ளவேண்டிய விடயங்கள்



க.பொ.த (உ/த) பரீட்சையின் பின்னர் மாணவர்களின் உயர்கல்வி குறித்த  கனவினை நனவாக்கிக் கொள்வதற்காக இலங்கையில் பல்வேறு விதமான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. அந்த அடிப்படையில் இலங்கையில் சுமார் 61 அளவில் பல்கலைக்கழகங்கள்  உயர்கல்வியினை வழஙக்கிவருகின்றது. இந்தப் பல்கலைக்கழகங்களில் எமது உயர்கல்விக் கனவினை நனவாக்கிக் கொள்வதற்காக எந்த பல்கலைக்கழகத்தினை தெரிவு செய்ய வேண்டும் என்ற அடிப்படையிலான கேள்விகள் பொதுவாக அனைவரிடமும் காணப்படுவதுண்டு. 

எவ்வாறாயினும் க.பொ.த (உ/த) பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்பவர்களுக்கு எந்த விதக் கட்டணமுமின்றி அரச பல்கலைக்கழகங்களில் கல்வியினைத் தொடர்வதற்கான வாய்ப்பு கிடைத்துவிடுகின்றது. 

எனினும் வெட்டுப்புள்ளியினை அடைந்துகொள்ள முடியாமல் போனவர்கள் அரச அனுசரணை பெறுகின்ற பல்கலைக்கழங்கள் அல்லது ​தனியார் பல்கலைக்கழகங்களை நாடவேண்டி ஏற்படுகின்றது. இதற்காக பாடநெறிக்கட்டணமாக ஒரு குறிப்பிட்ட தொகையினை செலவிட வேண்டியும் ஏற்படுவதுண்டு.

இந்த நிலையில் நாம் தெரிவுசெய்கின்ற பல்கலைக்கழகங்கள் வழங்குகின்ற பட்டங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதி (UGC APPROVED) பெற்றதா என்பது குறித்து கவனம் செலுத்துவது முக்கியமானதாகும்.

இலங்கையில் இயங்குகின்ற அனைத்து அரச பல்கலைக்கழகங்களும் UGC நிறுவனத்தின் அனுமதி பெற்றவைகளாகும். இது தவிர அரசாங்க அனுசரனை பெறுகின்ற அல்லது தனியார் பல்கலைக்கழகங்கள் எனும்போது அந்த பல்கலைக்கழகங்கள் வழங்குகின்ற பட்டங்கள் UGC நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டாதா என்பதனை உறுதிசெய்துகொள்ள வேண்டும்.

அதென்ன UGC APPROVED பல்கலைக்கழகங்கள் என்பது? 


தனது பல்கலைக்கழகங்களின் பெயர்களில் பட்டங்களை வழங்குவதற்கு அனுமதி பெற்ற பல்கலைக்கழகங்கள் UGC APPROVED பல்கலைக்கழகங்கள் என்பதாக அழைக்கப்படும். அந்த அடிப்படையில் இந்தத் தகுதியினைப் பெற்ற சில பல்கலைக்கழகங்கள் எமது நாட்டில் இயங்கிவருகின்றன. 

அப்படியானால் UGC recognized என இன்னுமொரு வகை இருப்பதாகக் குறிப்பிடுகின்றார்களே அது என்ன?


ஏதாவது ஒரு பல்கலைக்கழகம் வேறு ஒரு வௌிநாட்டுப்பல்கலைக்கழகம் ஒன்றின் உதவியுடன் (collaborative degree programmes) ஒன்றிணைந்த செயற்கபடுகளின் ஊடாக சில பட்டப்படிப்புப் பாடநெறிகளை நடாத்துவதுண்டு. இந்த வகையான சில பாடநெறிகளுக்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனுமதிவழங்கியிருக்கின்றது. இவைகளையே நாம் UGC recognized என்பதாக அழைக்கின்றோம்.


இலங்கையில் காணப்படுகின்ற ஏனைய அரச பல்கலைக்கழங்கள் எவை?
இலங்கையின் கல்வி அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இயங்குகின்ற சில பல்கலைக்கழகங்கள் காணப்படுகின்றன. 

Open University

என பல்வேறு வகையான நிறுவனங்கள் காணப்படுகின்றன. குறித்த நிறுவனங்கள் வழங்குகின்ற பட்டப்படிப்புகள் குறித்த தகவல்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் பார்வையிடலாம்.


ஏதாவது ஒரு அரச அனுரசணை பெறுகின்ற பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறுவதானது அந்தப் பட்டப்படிப்பின் தரத்தில் எந்தவகையிலும் குறைந்ததல்ல என்பதில் துளியளவும் சந்தேகமில்லை. எனினும் இந்த பட்டங்களுக்காக ஒரு தொகைப் பணத்தினை நாங்கள் செலவிட்டே ஆகவேண்டி ஏற்படும். எனவே க.பொ.த (உ/த) பரீட்சையில் முதல் முறை சித்தியயைடவில்லை என்பதற்காக முயற்சியனை கைவிட்டுவிடாதீர்கள். எப்படியும் ஒருவருக்கு மூன்று முறைகள் உயர்தரம் பரீட்சைக்குத் தோற்றக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுவதனால் முடிந்தளவு முயற்சி செய்து அரச பல்கலைக்கழகம் ஒன்றிற்கு உள்வாங்கப்படுவதற்காக முயற்சி செய்துகொள்ளுங்கள்.



UGC recognized degree ஒன்றினைத் தெரிவு செய்வதாயின் குறித்த பல்கலைக்கழகத்தின் World Ranking , Research out put , country rank  என்பவற்றை ஆராய்ந்து பார்த்து தெரிவு செய்துனெகாள்ளுங்கள். இலங்கையில்  collaborative degree partners என்ற அடிப்படையில் உயர்கல்வியானது கீழ்வரும் அடிப்படையில் வழங்க்படுகின்றது. 


*SLIIT - University of Curtin (Australia )
*NIBM - University of Coventry (UK)
            University of Dekain      (Australia )
*NSBM - University of Plymouth (UK)
             University of Dublin (UK)
*IIT     - University of westminster 
*SLTC - University of RMIT (Australia )
           University of Lancaster

இந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு உங்களது உயர்கல்வியினைத் திட்டமிட்டுக்கொள்ள முயற்சியுங்கள் 

உங்களுக்கு உதவியாக உயர்கல்வி வழங்குகின்ற நிறுவனங்களும் அவற்றின் இணையதள முகவரியும் கீழே தரப்படுகின்றது

The Open University of Sri Lanka- www.ou.ac.lk

College of Technology- www.dtet.gov.lk

University Colleges –  www. uca.ac.lk

National Vocational Training Institute- www.vtasl.gov.lk

National Institute of Business Management (NIBM)www.nibm.lk

National Institute of Fisheries & Nautical Engineering (Ocean University) -www.gic.gov.lk

Technology Center- www.nitc.gov.np

Institute of Policy Studies- www.ips.lk

Institute of Bankers of Sri Lanka- www.ibsl.lk

Institute Of Engineers Sri Lanka (IESL) - www.iesl.lk

Institute of Management of Sri Lanka- www.imsl.lk

International Training Institute of Irrigation and Water Management- www.kitiiwm.gov.lk

Sri Lanka Institute of Tourism & Hotel Management- www.slithm.edu.lk

Sri Lanka Institute of Advanced Technological Education- www.sliate.ac.lk

Sri Lanka Institute of Information Technology (SLIIT) - www.sliit.lk

Sri Lanka Institute of Marketing (SLIM) - www.slim.lk

Sri Lanka Institute of Textile and Apparel- www.textile-clothing.lk

Sri Lanka Press Institute- www.slpi.lk

Sri Lanka Media Training Institute- www.slmti.lk

Sri Lanka Institute of Bankers- www.ibsl.lk

Sri Lanka Institute of Training and Development- www.slitad.org.lk

Sri Lanka Foundation- www.slf.lk

Sri Lanka Institute of Architects- www.slia.lk

Sri Lanka School of Agriculture- schoolofagriculturelabuduwagalle.blogspot.com
Sri Lanka Irrigation Training Institute- www.irrigation.gov.lk

lanakajobinfo.com