2020 ஆம் ஆண்டு உயர் தரப் பரீட்சைக்கு முன்னைய பரீட்சைகளின் போது மீள் பரிசீலனை செய்யப்பட்ட பெறுபேறுகள் வௌியானதன் பின்னரே வெட்டுப்புள்ளிகள் கணக்கிடப்பட்டு அவற்றின் அடிப்படையில் பல்கலைக்கழக பாடநெறிகளுக்காக மாணவர்கள் உள்வாங்கப்பட்டனர். ஆனால் 2020 ஆம் ஆண்டு முதல் மீள்பரிசீலனைக்கு முன்னர் வெட்டுப்புள்ளிகள் கணக்கிடப்பட்டு அதன் அடிப்படையில் பல்கலைக்கழகத்திற்காக மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில் இப்போது மீள் பரிசீலனை பெறுபேறுகள் வௌியான பின்னர் என்ன நடக்கப்போகின்றது என்ற கேள்வி பல மாணவர்களிடமும் காணப்படுகின்றது. அந்தக் கேள்விகளுக்காக விடைகளை இந்தப் பதிவில் ஆராயலாம்,.
இப்போது நீங்கள் மீள் பரிசீலனைக்காக விண்ணப்பித்து பெறுபேற்றினைப் பெற்றிருக்கின்றீர்கள். அந்த அடிப்படையில் கீழ் வருகின்ற அடிப்படையிலான மாற்றங்களை உங்களது பெறுபேறுகள் அடைந்திருக்க வாய்ப்பிருக்கின்றது.
01. சிலருக்கு அதே பெறுபேறு கிடைக்கப்பெற்றிருக்கலாம்.
02. சிலருக்கு அதனைவிட குறைந்த பெறுபேறு கிடைத்திருக்கலாம்.
03. சிலருக்கு முன்னைய பெறுபேற்றை விட அதிகமான பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றிருக்கும்,
அதே பெறுபேறு கிடைத்தவர்கள்
இந்த அடிப்படையில் பெறுபேறுகள் பெற்றுக்கொண்டவர்களில் அதே பெறுபேறு கிடைத்தவர்கள் செய்ய வேண்டியது ஒன்றுமில்லை அவர்கள் ஏற்கனவே பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டு பாடநெறிகளுக்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து அவர்களுக்கு கிடைத்திருக்கின்ற பாடநெறிகளுக்கு அவர்கள் செல்லலாம் அல்லது பல்கலைக் கழக நுழைவுக்காக தகுதிகளைப் பெற்றிருக்காமையினால் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பின் அவர்கள் இனியும் விண்ணப்பிக்கின்ற தகுதி கிடைக்கப் பெறுவதில்லை எனவே அவர்கள் இன்னுமொரு முறை உயர்தரம் எழுதி அடுத்த வருடத்திற்கான பல்கலைக்கழக நுழைவுக்காக விண்ணப்பிக்கலாம்.
முன்னைய பெறுபேற்றை விட குறைந்த பெறுபேறு கிடைத்தவர்கள் -
இப்போது நீங்கள் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்திருக்கின்றீர்கள் இந்த நிலையில் நீங்கள் ஏதாவது ஒரு பாடநெறிக்கு தெரிவுசெய்யப்பட்டிருந்தால் அந்தப் பாடநெறியில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. எனவே உங்கள் பெறுபேறு குறைந்த விடயத்தை உங்களுடனேயே வைத்துக்கொண்டு உங்களுக்கு கிடைத்திருக்கின்ற பாடநெறியினை தொடருங்கள்.
முன்னைய பெறுபேற்றை விட அதிகமான பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றவர்கள்.
இப்போது நீங்கள் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பித்து ஏதும் பாடநெறிகளுக்கு தெரிவாகி இருக்கும் நிலையில் உங்களால் முன்னர் விண்ணப்பிப்பதற்கு தகுதி போதாமல் ஏதும் பாடங்கள் இருந்திருப்பின் நீங்கள் அதற்காக விண்ணப்பிக்கலாம்.
இப்போது உங்களுக்கு கிடைத்திருக்கின்ற பாடநெறிகள் உங்களுக்கு விருப்பமானது எனில் அதனையே நீங்கள் தொடரலாம்..
உங்களது மீள் திருத்தத்திற்கான பெறுபேற்றுக்கு முன்னைய பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு தகுதி போதுமானதாக இல்லாலிருந்து அதன் காரமாக பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க முடியாமல் இருந்திருந்திருந்தால் இப்போது நீங்கள் புதிதாக விண்ணப்பிப்பதற்கான தகுதியினை நீங்கள் பெற்றுக்கொள்கின்றீர்கள். அதன் அடிப்படையில் இன்னும் சில தினங்களில் நீங்கள் புதிதாக விண்ணப்பிப்பதற்கான ஒன்லைன் படிவத்தினை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்கும் வௌியிடும். அந்த சந்தர்ப்பத்தில் உங்களது விண்ணப்பங்களை ஒன்லைன் ஊடாக சமர்ப்பிக்கலாம்.
முன்னைய பெறுபேறுகள் பல்கலைக்கழக பிரவேசத்திற்கு போதுமானதாக இல்லாமல் இருந்து மீள்பரிசீலனையின் பின்னர் தகுதி கிடைத்தவர்கள் என்ன செய்யவேண்டும்?
பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிப்பதற்காக போது வினாப்பத்திரத்திற்கு 30% ற்கு மேல் புள்ளிகளைப் பெற்றிருக்க வேண்டும் என்பதாகவும் ஏனைய மூன்று பாடங்களில் 3 சித்திகளைப் பெற்றிருக்கவேண்டும் என்பதாகவும் பல்கலைக்கழக கைநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில்
01. பொதுப் பரீட்சையில் 30 இலும் குறைந்த புள்ளிகளைப் பெற்றிருந்து மீள்பரிசீலனையின் பின்னர் 30 அல்லது அதற்கு அதிகமான புள்ளிகளைப் பெற்றவர்கள் இப்போது விண்ணப்பிக்கலாம்.
02. இரண்டு சித்திகள் அல்லது அனை விடக் குறைந்த சித்திகளைப் பெற்றிருந்து மீள் பரிசீலனையின் பின்னர் குறைந்தது 3 சித்திகளைப் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
03. சில பாடநெறிகளுக்காக சில தகைமைகள் கேட்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த தகைமைகள் போதுமானதாக இல்லாமையினால் அந்தப் பாடநெறிகளுக்கு விண்ணப்பிக்க முடியாமல் போனதுடன் மீள் பரிசீலனையின் பின்னர் அந்த தகைமைகள் கிடைத்திருக்கும் போது அவர்கள் விண்ணப்பிக்கலாம்
மீள்பரிசீலனைக்கு விண்ணப்பிக்கவில்லை ஆனால் தற்போது பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருக்கின்றேன். மீள் பரிசீலைனை பெறுபேறுகள் என்னைப் பாதிக்குமா?
உங்களது மவாட்ட அல்லது தேசிய நிலைகளில் சிறிய மாற்றங்கள் ஏற்படலாம் அத்துடன் உங்களது Z- score புள்ளிகளின் அளவிலும் மாற்றங்கள் ஏற்படலாம். எனினும் நீங்கள் இப்போது தெரிவாகியிருக்கின்ற பாடநெறிகளிலிருந்து நீக்கப்படமாட்டீர்கள். சிலவேவை வெற்றிடம் நிறப்புகின்ற சுற்றுக்களில் உங்களுக்கு முன்னைய தெரிவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புக்களும் காணப்படுகின்றன்.
Z- score புள்ளிகள் என்றால் என்ன அது? எவ்வாறு கணிப்பிடப்படுகின்றது என்பது குறித்து விளக்கம் உள்ளடக்கிய கட்டுரையினை வாசிக்க கீழுள்ள லிங்கில் கிளிக் செய்யவும்.
நான் மீள் பரிசீலனைக்கு விண்ணப்பிக்வில்லை அத்துடன் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பித்த போதிலும் தெரிவாகவில்லை எனது நிலை என்ன?
உங்களுக்களது நிலைகளிலும் சிற மாற்றங்கள் ஏற்படலாம். எனினும் இந்த மீள்பரிசீலனை பெறுபேறு உங்களுக்கு பல்கலைக்கழகம் நுழையும் வாய்ப்பினைப் பெற்றுத் தரப்போவதில்லை. வெற்றிடங்கள் நிரப்புகின்ற செய்முறையின் போது உங்களுக்கு சிலநேரம் பல்கலைக்கழக பிரவேசம் கிடைக்கலாம்.
.
மீள்பரிசீலனைக்கு பின்னர் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்தல் தொடர்பான பல்கலைக்கழ மானியங்கள் ஆணைக்குழுவின் அறிவித்தல் எவ்வாறு அமையப் போகின்றது.
இந்த அறிவித்தலான 2021 இல் உயர் தர பரீட்சை எழுதிய 2 பிரிவினர்களுக்காக வழங்கப்படவிருக்கின்றது..
01. 2021 ஆம் ஆண்டு உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றி பரீட்சைப் பெறுபேறுகள் பெற்றதன் பின்னர் பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்காக விண்ணப்பித்து அதன் மூலமாகக் கிடைக்கப்பெற்ற பெறுபேறுகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பின் அவர்கள் குறிப்பிடுகின்ற ஒரு திகதிக்கு முன்னர் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிக்கும்.
02. இதற்கு முன்னர் பல்கலைக்கழகங்களுக்காக விண்ணப்பிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்ட போது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாமல் போனவர்கள் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியாமல் போனதற்கான காரணங்களைக் குறிப்பிட்டு மேன்முறையீடு செய்திருப்பார்களானல் அவர்களும் குறித்த திகதிக்கு திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
மேன்முறையீ செய்வது தொடர்பான கட்டுரையினை வாசிப்பதற்கு கீழுள்ள லிங்கில் கிளிக் செய்யவும். ( 2020 ஆம் ஆண்டு உயர் தரம் எழுதிய மாணவர்களுக்காக எழுதப்பட்டதாகும்)
மீள் திருத்தங்களுக்குப் பின்னர் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்தற்கான அறிவித்தலினை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வௌியிட்டதன் பின்னர் நீங்கள் https://www.ugc.ac.lk/ எனும் இணைய முவரிக்குள் பிரவேசித்து உங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
2020 ஆம் ஆண்டு உயர் தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்காக மீள் திருத்தத்தின் பின்னர் விண்ணப்பம் சமர்ப்பிப்பது தொடர்பாக எழுதப்பட்ட விளக்கங்களை இங்கு தருகின்றிறோம். இதே நடைமுறைதான் இந்த வருடமும் இடம்பெறுகின்றது என்பதனால் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பது குறித்த தௌிவினை இதன் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும்
அவ்வாறு பிரவேசிக்கும் போது மேலே குறிப்பிட்ட பக்கம் காட்சிப்படும்.
01. நீங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் 2020 பல்கலைக்கழக பிரவேசத்திற்காக இதுவரையில் பதிவு செய்திருக்காவிட்டால் Click here to register என்பதில் கிளிக் செய்யலாம்.
இந்தப் பகுதியில் கேட்கப்படுகின்ற தேசிய அடையாளஅட்டை இலக்கம் பரீட்சை இலக்கம் என்பன அடுத்த பதிவுகளை மேற்கொள்வதற்கு அவசியமானது என்பதால் இங்கு கேட்கப்படும் தகவல்களை சரியாக வழங்கினால் மாத்திரமே அடுத்த பதிவு நடவடிக்கைகளுக்கு உங்களால் பிரவேசிக்கலாம்.
02. நீங்கள் ஏற்கனவே பதிவுசெய்து உங்களிடம் Username, Password என்பன இருக்கின்றது என்றால் Login என்பதில் கிளிக் செய்து பதிவுகளை மேற்கொள்ளலாம்.
பல்கலைக்க ஒன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்க முறைகள் குறித்து படங்களுடன் விளக்கப்பட்டு கட்டுரையினை வாசிக்க கீழ் குறிப்பிடும் லிங்கில்
மீள் பரிசீலனை பெறுபேறு வௌியானதன் பின்னர் பொதுவாகவே உயத் தரம் எழுதிய அனைவரதும் z-score களில் மாற்றம் ஏற்படும். அவைகள் கருத்தில்கொண்டே வெற்றிடங்கள் நிரப்புகின்ற நடவடிக்ைககள் மேற்கொள்ளப்படும். பலடகலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதலில் z-score எந்தத் தாக்கத்தையும் எற்படுத்துவதில்லை என்பதால் நீங்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை... உங்களது பெறுபேறுகளில் மாற்றம் ஏற்பட்டிருப்பின் விண்ணப்பிக்கலாம்.
Naan Ampara district. Enethu zscore 0.1660 , Physical science-ICT Keleniya university kku Ampara district kku waiting le kidaikkum nnu ninakken , enekku waiting le kidaikkuma??? But Matre districts le enne vide குறைந்த zcore kku kidaithirukku , why apdi???
3 Comments
Enathu z.scroe il 0.0228 athikarithu ullathu. Aanaal ippothu ulle cut off adippadayil course maaraathu.
ReplyDeleteBut vetride nireppalin keel course maarum poathu enathu puthiye z.score kawanaththil edukkeppade weandum endraal naan meendum ugc ku register panne weanduma?
மீள் பரிசீலனை பெறுபேறு வௌியானதன் பின்னர் பொதுவாகவே உயத் தரம் எழுதிய அனைவரதும் z-score களில் மாற்றம் ஏற்படும். அவைகள் கருத்தில்கொண்டே வெற்றிடங்கள் நிரப்புகின்ற நடவடிக்ைககள் மேற்கொள்ளப்படும். பலடகலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதலில் z-score எந்தத் தாக்கத்தையும் எற்படுத்துவதில்லை என்பதால் நீங்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை... உங்களது பெறுபேறுகளில் மாற்றம் ஏற்பட்டிருப்பின் விண்ணப்பிக்கலாம்.
DeleteNaan Ampara district. Enethu zscore 0.1660 , Physical science-ICT Keleniya university kku Ampara district kku waiting le kidaikkum nnu ninakken , enekku waiting le kidaikkuma??? But Matre districts le enne vide குறைந்த zcore kku kidaithirukku , why apdi???
ReplyDelete