>
2021 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நாளை (22) நடைபெறவுள்ளது. நாளைய தினம் 340,508 மாணவர்கள் பரீட்சைக்காகத் தோறறுகின்றனர். 2,943 நிலையங்களில் பரீட்சை நடைபெறுன்றது. அத்துடன் 108 விசேட பரீட்சை நிலையங்களிலும் பரீட்சை நடைபெறுகின்றது. புலமைப் பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களின் ஆசிரியர்கள் மற்றும் பொற்றோர் போன்றவர்களுக்கான அறிவுறுத்தல்களை வழங்கும் நோக்கில் பரீட்சைத் திணைக்களமா் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் குறிப்பிடப்பட்ட முக்கியமான விடயங்கள் சில இங்கு தரப்படுகின்றது. .
பரீட்சை எழுதும் போது சிறிய விடயங்கள் குறித்து கவனம் செலுத்துங்கள். - பரீட்சை ஆணையாளர் (ஆய்வு மற்றும் அபிவிருத்தி) காயத்ரி அபேசேகர
வினாத்தாளுக்கான நேரம் - முதலாவது வினாத்தாளுக்கு 45 நிமிடங்களும் இரண்டாவது வினாத்தாளுக்கு 1 மணித்தியாலயமும் 15 நிமிடங்களும் என்ற அடிப்படையிலேயே வழங்கப்படும். (சென்ற வருடங்கள் போன்றது பரீட்சைக்கான நேரம் அதிகரிக்கப்படமாட்டாது.)
பரீட்சைக்கு முன்னைய தினம் மாணவர்களை இரவில் அல்லது அதிகாலையில் எழுப்பி படிக்க வைக்கவேண்டாம். அதற்குப் பதிலாக இவற்றை அவர்களுக்கும் சொல்லிக்கொடுங்கள். வினாப்பத்திரத்தை கையில் எடுத்ததும் மாணவர்கள் எழுத ஆரம்பிக்கின்றார்கள். அவ்வாறின்றி வினாப்பத்திரத்தை சரியாக வாசித்துவிட்டு எழுதச் சொல்லுங்கள். இரண்டு வினாப்பத்திரங்களிலும் அந்த வினாப்பத்திரத்திற்கு விடையளிக்கும் முறை குறித்து குறிப்பிடப்படிருக்கின்றது.
முதலாவது வினாத்தாள் 40 பல்தேர்வு வினாக்களைக் கொண்டுள்ளது. அவற்றுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற 3 விடைகளில் ஒன்றைத் தெரிவு செய்து அந்த விடையின் கீழ் கோடிட வேண்டும். ( சில மாணவர்கள் சரியான விடையின் இலக்கத்தில் வட்டம் இடுகின்றனர். இது விடைத்தாள் திருத்தும் போது சிக்கல்களை ஏற்படுத்துகின்றது. )
5 ஆம் ஆண்டு மாணவர்களிடமிருந்து அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப செயற்படும் திறன்கள் எதிர்பார்க்கப்படுகின்றது என்பதனால் இந்த விடயங்களில் கவனம் செலுத்துங்கள்.
முதலாவது வினாத்தாள் நுண்ணறிவினைப் பரிசோதிப்பதற்காக தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 14 நுண்ணறிவுத் திறன்கள். பரிசோதிக்கப்படுகின்றது. அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படுவது என்பது அதில் ஒரு நுண்ணறிவுத் திறனாகும். சிறு வயதிலிருந்தே மாணவர்கள் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப செயற்படவேண்டும் என்பது இங்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
பரீட்சைக்காக சுட்டெண்ணை முதலாவது பக்கத்திலும் இரண்டாவது பக்கத்தலும் என உரிய இரண்டு இடங்களில் எழுத வேண்டும்.
அடுத்து செய்கைகளுக்காக மேலதிக தாள்கள் வழங்கப்படும். விடைகளை ஒழுங்கமைப்பதற்காக இந்த இரண்டு தாள்களையும் பயன்படுத்திக்கொள் மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுங்கள். சில மாணவர்கள் செய்கைக்கான தாள்களை பயன்படுத்தாமலேயே விடையெழுதுகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது.
அடுத்து வினாக்களை நன்கு வாசித்து புரிந்துகொள்ள வேண்டும். வினாக்களை நன்கு வாசித்து விளங்கிக்கொள்ளும் போது மாத்திரமே சிறப்பாக விடை எழுதலாம்.
நாங்கள் சென்ற வருட வினாத்தாளில் ' சூழல் மாசடைவதானது குறைவடைவது... என்பதாக வினா ஒன்றைக் கேட்டிருந்தோம். இந்த மாணவர்களுக்கு பாடசாலையிலும் மேலதிக வகுப்புகளிலும் சூழல் மாசடைவது குறித்து கற்றுக்கொடுக்கப்பட்டிருந்து. ஆனால் சூழல் மாசடைதல் குறைவடைவது குறித்தே இங்கு கேட்டிருந்தேம். அங்கு மூன்று விடைகள் கொடுத்திருந்தோம். அவற்றில் நாங்கள் எதிர்பார்த்த விடை சூரிய மின்களத்தினால் மின்சாரம் பெற்றுக்கொள்வது என்பதாகும்.
எனினும் டீசல் பெட்ரல் என்பவற்றின் மூலமாக வாகனம் செலுத்துதல் என்ற விடையினையே பலரும் தெரிவு செய்திருந்தார்கள். குறைப்பதற்று காரணமாகின்ற என்ற விடயத்தின் மீது மாணவர்களின் அவதானம் செலுத்தபாடாமையே இதற்கான காரணமாகும். எனவே வினாக்களை சரியான முறையில் வாசித்துப் பரிந்துகொண்டால் மாத்திரமே தெரிந்த பதில்களை சரியாக எழுதமுடியுமாக அமையும்.
அடுத்த வினாவானது மின்களம் மின்குமிழ் என்பவற்றின் கட்டமைப்பு ஒன்றின் படத்தை வழங்கி எரிகின்ற அல்லது எரியாத தொகுதி குறித்தே வினாக்கள் கேட்போம். சென்ற வருடம் எரியாத தொகுதி குறித்தே விடையாகக் கேட்டிருந்தோம் ஆனால் பல மாணவர்கள் எரிகின்ற தொகுதியையே விடையாக வழங்கியிருந்தனர்.
முதலாவது வினாப்பத்திரம் விடைகளின் கீழ் கோடிடும் அடிப்படையில் நுண்ணறிவு வினாக்கள் 40 இனைக் கொண்டுள்ளது. இரண்டாது வினாத்தாளானது தரம் 3,4,5 ஆகிய வகுப்புக்களின் பாடப்புத்தகங்களின் அடிப்படையில் தயாரிக்கப்படுகின்றது. அதில் சுற்றாடல் சம்பந்தமான பல்தேர்வு வினாக்கள் 30 உள்ளடக்கப்பட்டுள்ளது. அத்துடன் தாய்மொழி, இரண்டாம் மொழி, ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடஙகளைத் தழுவிய புள்ளிக் கோடுகளின் மீது விடையெழுதக் கூடிய வினாக்களையும் உள்ளடக்கியுள்ளது.
இங்கு உரிய விடைகளை புள்ளிக் கோடிகளின் மீது எழுத வேண்டும். இரண்டாது வினாத்தாளில் கிரகித்தலை மதிப்பீடு செய்வதற்காக பந்தி ஒன்றினை வழங்குகின்றோம். இங்கு நாங்கள் பாடப்புத்தகத்தில் உள்ள பந்தி ஒன்றை வழங்குவதில்லை புதிய பந்தி ஒன்றினையே வழங்குகின்றோம். எனவே பாடப்புத்தகத்தை மனப்பாடம் செய்து இந்த வினாவுக்கு விடையளிபக்க முடியாது.
அடுத்து தகவல்களை ஒழுங்குபடுத்துவதில் சிலருக்கு சிக்கல்கள் காணப்படுவதுண்டு. நாங்கள் சில வயதுகளை வழங்கி மூத்தவர் யார் என்பதாக கேட்போம். அல்லது உயரங்கள் சிலவற்றை வழங்கி மிகவும் உயர்ந்தவர் யார் எனக் கேட்போம் இவ்வாறான வினாக்களின் போது தகவல்களை ஒழுங்குபடுத்திக்கொள்வதற்காகவே செய்முறைக்கான தாள்களை வழங்குகின்றோம். இந்தத் தாள்களைப் பயன்படுத்த சொல்லிக்கொடுங்கள்.
அடுத்து தாய்மொழிப் பகுதியில் எழுவாய் பயனிலை மற்றும் வாக்கிய அமைப்பு போன்ற விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.
கட்டுரை எனும்போது மூன்று வாக்கியங்கள் எழுத வேண்டும் என்பதாக எதிர்பார்க்கின்றோம். இங்கு சில மாணவர்கள் பேச்சு மொழியிலும் எழுதுவதுண்டும். இங்கு இலக்கண அடிப்படையில் எழுதும் போது மாத்திரமே புள்ளிகள் கிடைக்கப்பெறும். அடுத்தாக எழுத்துப் பிழையின்றி எழுதுவது முக்கியமானது. எழுவாய் பயணிலை என்பனவும் இங்கு முக்கியமானாது . ஒரு வாக்கியத்தில் இரண்டு பிழைகள் இருக்குமானால் புள்ளிகள் கிடைக்காது,.
சென்ற வருட பரீட்சைகளில் 27% ஆனவர்கள் எழுவாய் பயனிலையில் பிழைவிட்டுந்தனர். 16% எழுத்துப்பிழை இலக்கணப்பிழை விட்டிருந்தனர். அடுத்து இந்த வாக்கியத்தில் குறைந்தது 5 சொற்காளேனும் இருக்க வேண்டும் என்பது அவசியமானதாகும். சென்ற வருடம் 5% இனர் இந்த ஆகக்குறைந்த சொற்களை எழுதியிருக்கவில்லை. குறைந்தது 5 சொற்கள் ஒரு வாக்கியத்தில் இல்லாதிருப்பின் புள்ளிகள் கிடைப்பதில்லை. கமா, முற்றுப்புள்ளி என்பவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும்.
அடுத்து புள்ளிக்கோடுகளில் விடை எழுதும் போது செற்களுக்கிடையான இடைவௌிவிடுதல் கட்டாயமானது இடைவௌி விட்டெழுத வேண்டிய இரண்டு சொற்களை ஒரே சொல்லாக எழுதினால் புள்ளிகள் வழங்கப்படமாட்டாது. உதாரணமாக பற்து சென்றது என்பது பறந்துசென்றது என எழுதப்பட்டால் புள்ளி வழங்கப்படமாட்டாது.
அடுத்து ஆங்கிலம் பாடத்தில் Playground என்பது Play ground என்பதாக எழுதியிருந்தனர். இதற்கு புள்ளி வழங்கப்படுவதில்லை. Playground என்பது தனிச் சொல்லாகும்.
இவ்வாறான விடயங்களில் கவனம் செலுத்த அவர்களுக்குச் சொல்லிக்கொடுங்கள்
பரீட்சை நிலையங்களை நேர காலத்துடன் அறிந்துகொள்ளுங்கள் - பரீட்சை ஆணையாளர் நாயகம் - எல். எம். டீ. தர்மசேன.
2021 ஆம் ஆண்டில் நடாத்தப்படவிருந்த பரீட்சையே இப்போது 2022 01.22 ஆம் திகதி நடாத்தப்படுகின்றது.
இந்த வருடம் சிங்கள மொழிமூலம் 205,562 மாணவர்களும் தமிழ் மொழி மூலம் 85,446 மாணவர்களும் என மொத்தமாக 340,508 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.
இலங்கை முழுவதும் 2,943 பரீட்சை நிலையங்கள் இயங்குகின்றன. மேலும் 108 பரீட்சை நிலையங்கள் கொவிட் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்காக அமைக்கப்பட்டிருக்கின்றது. இணைப்புக் காரியாலலயங்கள் 486 அமைக்கப்பட்டிருக்கின்றன.
நாளை பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களை அமைதிப்படுத்தி ஓய்வெடுகக்கச் செய்யுங்கள். பரீட்சையில் சித்தியடைய 190 புள்ளிகள் பெற வேண்டும் என்பதாகக் கூறி அதிக பாரங்களை அவர்களது தலைகளில் சுமத்த வேண்டாம். மாணவர்களை சாந்தப்படுத்தி அன்பாக அரவணைப்புடன் பரீட்சை நிலையத்திற்கு அனுப்பி வையுங்கள். இலகுவான உணவுகளை காலை உணவாகக் கொடுத்து அனுப்பி வையுங்கள். அடுத்து இடைவேளையில் உண்பதற்கு ஏதாவது சிற்றுண்டி கொடுத்து அனுப்புங்கள். அத்துடன் தண்ணீர் போத்தல் ஒன்றையும் கொடுத்துவிடுங்கள்.
செனிடய்சர் போத்தல் ஒன்று, பென்சில்கள் 2, இரேசர், கட்டர், அடிமட்டம் என்பவற்றையும் கொடுத்து அனுப்புங்கள் சவர அலகு (பிலேட்) கொடுக்கவேண்டாம். பேனா பாவித்தும் இந்தப் பரீட்சைக்கு பதில் எழுதலாம்.ஏதேனும் பிழையானால் ஒரு கோட்டால் வெட்டிவிடுச் சொல்லுங்கள். அத்துடன் இலத்திரனியல் கடிகாரம் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.
பரீட்சை முடிந்த உடனேயே இலகுவாக இருந்ததா எத்தனை புள்ளிகள் வரும் என்றெல்லாம் அவர்களைக் கேட்க வேண்டாம். பல நாட்டகளால் இறுக்கத்தில் இருந்திருக்கின்றார்கள் அவர்களை விளையாட விடுங்பகள். அதன் பின்னர் பெறுபேறுகள் வந்ததும் அவர்களை மீண்டு இறுக்கத்துக்கு ஆளாக்கவேண்டாம். புள்ளிகள் குறைந்துவிட்டால் இனி எப்படி பாடசாலைக்குப் போவது மானம் போய்விடுமே என்றெல்லாம் கூற வேண்டாம்.
காலை 9.30 க்கு பரீட்சை ஆரம்பமாகும் எனவே முன்கூட்டியே பரீட்சை நிலையம் எது என்பதை அறிந்துகொண்டு நேர காலத்துடனேயே பரீட்சை மண்படபத்துக்கு பிள்ளையை அனுப்பி வையுங்கள். அதாவது காலை 9.00 மணிக்கே பிள்ளைகளை பரீட்சை மண்டப ஆசிரியர்களிடன் ஒப்படையுங்கள் அவர்களை ஆசிரியர் உரிய இடத்தில் அமர்த்துவார்கள். பரீட்சைக்குத் தோற்றுகின்ற அணைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
இது lankajobinfo.com இணையத்தளத்தினால் தொகுக்கப்பட்டது.
2 Comments
9697500
ReplyDelete9697500
ReplyDelete