அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை : 12/2005(IX) - ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் அக்ரஹார காப்புறுதித் திட்டத்தின் குறித்த சுற்றுநிருபம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்து.விபரம் பெற கீழுள்ள லிங்கில் கிளி்க் செய்யவும்.
பின்னனி.
இது தொடர்பான மேலதிக விபரம் அவசியப்படுகின்றவர்கள் கீழ் வரும் லிங்கில் கிளிக் செய்து அக்ரஹார குறித்து எழுதப்பட்ட விளக்கக் கட்டுரையின் ஊடாக தெரிந்துகொள்ளலாம்.
2017.10. 30 ஆம் திகதி வௌியிடப்பட்ட 12/2005 (VII) ஆம் இலக்க சுற்று நிருபத்தனைப் பார்வையிடவும் பதிவிறக்கம் செய்யவும் கீழுள்ள லிங்கில் கிளிக் செய்யவும்
அக்ரஹார திட்டம் குறித்து ஓய்வூதியத் திணைக்கள் விடுக்கும் அறிவித்தல்.
குறித்த விண்ணப்பத்தின் தமிழ் மூலப் பிரதியை PDF வடிவில் பெற்றுக்கொள்ள கீழ்வரும் லிங்கில் கிளிக் செய்யவும்.
ஓய்வூதியத் திணைக்களத்தின் 04/2021 ஆம் இலக்க சுற்று நிறுகம் சிங்கள மொழியில் மாத்திரமே வௌியாகியுள்ளது அதன் விபரங்கள் இந்தப் பதிவில் தரப்பட்டுள்ளது சிங்கள மொழியிலான சுற்றுநிருபத்தினை கீழுள்ள லிங்கில் பார்வையிடலாம்
01. தனியார் மருத்துவமனை ஒன்றில் தங்கியிருந்து சிகிச்சை பெறல்.
• அறைக் கட்டணமாக ரூபா.30,000/-
(தினமொன்றிற்கு ரூபா.3,000/- என்ற வீதம் அதிகபட்சம் 10 நாட்களுக்கு)
• மருந்துகள், அறுவைச் சிகிச்சை மற்றும் தாதியர் செலவுகள் ரூபா.50,000/-
• மருத்துவக் கட்டணம் ரூபா.20,000/-
* மருத்துவப் பரிசோதனைகளுக்கு ரூபா.20,000/-
பெற்றுக் கொள்ளக்கூடிய நலன்கள் அதி கூடிய பெறுமதி 120,000/- (ஒரு நிகழ்வுக்கு)
02. தனியார் ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது
• அறைக் கட்டணமாக ரூபா.10,000/- (தினமொன்றிற்கு ரூபா.1,000/- என்றவீதம்
அதிகபட்சம் 10 நாட்களுக்கு)
• மருந்துகள், அறுவைச் சிகிச்சை மற்றும் தாதியர் செலவுகள் ரூபா.35,000/-
• மருத்துவக் கட்டணம் ரூபா.15,000/-
• மருத்துவப் பரிசோதனைகளுக்கு ரூபா.15,000/-
வருடம் ஒன்றிற்கு பெற்றுக்கொள்ள முடியுமான ஆகக் கூடிய அளவு ரூபா. 75,000/-
(தனியார் ஆயுர்வேத மருத்துவமனை சுதேச மருத்துவத்திற்கு பொறுப்பான அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும். தனியார் ஆயுர்வேத நிறுவனங்களிலிருந்து எடுக்கப்பட்ட சிகிச்சைகளுக்கு செலுத்தப்படுவதில்லை.)
03. அரசாங்க மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெறப்படுமாயின் (ஒரு தடவைக்கு அதிகபட்சம் 10 நாட்களுக்காக தினமொன்றிற்கு)
ரூபா.500/- என்ற விகிதத்தில் (வருடமொன்றிற்கு அதிகபட்சம் 20 நாட்களுக்கு மாத்திரம்) என்ற அடிப்படையில் வருடத்திற்கு 5,000/- வரை இழப்பீடு பெறலாம்.
(தங்கியிருந்த காலப்பகுதிக்கு உரித்தாக மாத்திரம் விலைப் பட்டியல் மீள்நிரப்பப்படும் என்பதோடு, அதற்காக மருத்துவ பரிந்துரைகள் மற்றும் விலைப் பட்டியலின் மூலப் பிரதிகள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.)
(ஆ) அரசாங்க மருத்துவமனை (கட்டணம் செலுத்தும் வாட்டுக்களுக்கு)
- அறைக் கட்டணம் ரூபா.10,000/-
- மருந்துகள், அறுவைச் சிகிச்சை மற்றும் தாதியர் செலவுகள் ரூபா.35,000/-
- மருத்துவக் கட்டணம் ரூபா.15,000/-
- மருத்துவப் பரிசோதனைகளுக்கு ரூபா.15,000/-
04 அரசாங்க ஆயுர்வேத மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெறப்படுமாயின் (ஒரு நாளுக்கு ரூபா.500/- என்ற விகிதத்தில் அதிகபட்சம் 10 நாட்களுக்கு ) 5,000/-
(வருடமொன்றிற்கு அதிகபட்சம் 20 நாட்களுக்கு மாத்திரம் இழப்பீடு வழங்கப்படும்)
05 கண்புரை அறுவை சிகிச்சை (லென்ஸ் செலவுகள் உட்பட) 25,000/-
குறிப்பு: மேலே 01 தொடக்கம் 05 வரையான நிகழ்வுகளுக்கான உச்ச எல்லைகளுக்கு அமைய காப்புறுதி உறுப்பினரின் உரிமைகோரல் எல்லை ஆண்டுக்கு அதிகபட்சம் ரூபா.150,000/- ஆகும்.
இவை தவிர கீழ் வரும் இழப்பீடுகள் ஆயுள் காலத்தில் ஒரு முறை மாத்திரம் மீள்நிரப்பக்கூடிய விசேட நலன்கள் வழங்கப்படுகின்றது.
- Critical Heart Surgeries (including by-pass and angioplasty) இதயத்துடன் தொடர்பான பிற சத்திர சிகிச்சைகளுக்கு 500,000/-
- Implanting pacemaker - Single 150,000/-
- Implanting pacemaker - Double 300,000/-
- RF Ablation 225,000/-
- சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு 500,000/-
- மூளை அறுவைச் சிகிச்சைக்கு 500,000/-
- கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்கு 500,000/-
மேற்படி அறுவைச் சிகிச்சைகள் தவிர்ந்த ஒரு தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் அறுவைச் சிகிச்சைகளுக்கான செலவுகளை செலுத்துவதில் நலன் காப்புறுதித் திட்ட இலக்கம் 01 இற்கு ஏற்ப மீள்நிரப்பப்படும்.
- புற்று நோய்க்காக 200,000/-
- செவிப்புலன் கருவிகளுக்கு 50,000/-
(ஆயுட்காலத்திற்கும் ஒரு தடவை மாத்திரம்)
மேற்படி நலன்கள் அனைத்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் போது மாத்திரமே வழங்கப்படுவதுண்டு என்பதனைக் கருத்தில்கொள்ளவும்.
திருத்தியமைக்கப்பட்ட அக்ரஹார பராமரிப்பு ஓய்வூதியக் காப்றுதித் திட்டத்திற்கு உரித்தான நிபந்தனைகளும் நியதிகளும் என்பதாக குறித்த சுற்று நிருபத்தில் கீழ் வருமாறு குறிப்பிடப்படுகின்றது.
1. அரச மற்றும் மாகாண அரச சேவைக்குரிய சகல ஓய்வூதியம் பெறுநர்களுக்கும் இக்காப்புதிறுத் திட்டம் உரித்துடயதாகும்.
2. திருத்தியமைக்கப்பட்ட இக்காப்புறுதித் திட்டத்தின் மூலம் 70 வயதுக்குக் குறைந்த ஓய்வூதியம் பெறுநர்களுக்கு மாதாந்த தவணைக் கட்டணமாக ரூபா.400/-ம், 70 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியம் பெறுநர்களுக்கு மாதாந்த தவணைக் கட்டணமாக ரூபா.600/- என்ற வகையில் நடைமுறைப்படுத்தல்.
3. ஓய்வூதியம் பெறுநர்களின் ஆயுட்காலம் பூராகவும் இக்காப்புறுதி நலன்கள் உரித்தாகும்.
4. ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர்களின் பங்களிப்புத் தொகை ஓய்வூதியத் திணைக்களத்தினால் அறவிடப்பட்டு மாதாந்தம் தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்துக்கு வழங்கப்படும்.
5. ஓய்வூதியம் பெறுநர்களுக்கு மாத்திரம் இக்காப்புறுதி திட்டத்தின் கீழ் நன்மைகள் கிடைக்கப்பெறும் என்பதோடு, அவர்களின் வாழ்க்கைத் துணைக்கு, அநாதைகளுக்கு அல்லது அங்கவீன பிள்ளைகளுக்கு நலன்கள் உரித்தாவதில்லை.
6. ஓய்வூதியம் பெறுநரின் வாழ்க்கைத் துணை, தற்போது அரச சேவையில் ஈடுபடுபவராயின் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது ஓய்வூதியம் பெறுநருக்கு மாத்திரம் இக்காப்புறுதித் திட்டத்தின் கீழ் உரிமை கோருதல் ஏற்புடையாகும்.
7. தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஓய்வூதியம் பெறுநர்களுக்கான விண்ணப்பப்படிவம் இக்காப்புறுதி முன்மொழிவுத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுநர்களினால் தமது நலன்களைப் பெறுவதற்கு பயன்படுத்த முடியும் என்பதோடு, அங்கத்தவர்களால் நலன் பெறுவதற்கான விண்ணப்பப்படிவம் உண்மையானதும் சரியானதுமென பிரிவின் கிராம உத்தியோகத்தரின் மூலம் சான்றுப்படுத்தப்பட்டு, மருத்துவமனையிலிருந்து வெளியேறிய தினம் முதல் 90 நாட்களினுள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களுடன் தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்துக்கு அனுப்புதல் வேண்டும்.
(அ) தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெறும் போது
(i) நோய் நிருணய அட்டையின் சான்றுப்படுத்திய பிரதி.
(ii) மருத்துவமனையினால் வழங்கப்பட்ட இறுதி விலைப்பட்டியலின் மூலப் பிரதிகள்.
(iii) பணம் செலுத்தப்பட்டமைக்கான பற்றுச்சீட்டுக்களின் மூலப் பிரதிகள்.
(ஆ) அரச மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெறும் போது
(i) நோய் நிருணய அட்டையின் சான்றுப்படுத்திய பிரதி.
(ii) மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தில் வைத்தியரின் பரிந்துரையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் மருந்துச் செலவுகளுக்கு உரித்தான மருந்து விளக்க விவரப் பட்டியல் (Prescription) மற்றும் பற்றுச்சீட்டின் மூலப் பிரதிகள்.
8. ஒரு தனியார் மருத்துவமனையால் செய்யப்படும் இதயம், மூளை, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் அறுவை சிகிச்சைகளுக்கு பிணை உத்தரவாதக் கடிதம் பெறப்பட்டால், பின்வரும் ஆவணங்களை தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
(i) பயனாளியிடமிருந்து பிணை உத்தரவாதக் கடிதத்தைப் பெறுவதற்காக தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியிலிருந்து கோரிக்கைக் கடிதம்.
(ii) பிரிவின் கிராம உத்தியோகத்தரின் மூலம் சான்றுப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவம்.
(iii) சம்பந்தப்பட்ட வைத்திய அதிகாரியால் சான்றளிக்கப்பட்டு தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட கடிதம் மற்றும் தனியார் மருத்துவமனை வழங்கிய மதிப்பீட்டுக் கடிதம்.
(iv) கிராம உத்தியோகத்தரினால் சான்றுப்படுத்தப்பட்ட ஓய்வூதிய அடையாள அட்டையின் பிரதி.
(v) கிராம உத்தியோகத்தரினால் சான்றுப்படுத்தப்பட்ட தேசிய அடையாள அட்டையின் பிரதி.
(vi) உரித்துடைய பணத்தை நேரடியாக மருத்துவமனைக்கு செலுத்த பயனாளியின் உடன்பாட்டினை தெரிவிக்கும் கடிதம்.
பின் குறிப்பு - அன்புக்கும் மரியாதைக்குமுரிய ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்களே! நீங்கள் எந்த அடிப்படையிலான வாழ்க்ககைத் தரத்தில் இருப்பவராக இருந்த போதிலும் ஓய்வு பெற்றுருக்கின்ற காலங்களில் ஆதரவற்ற நிலையில் ஏற்படுமாயின் மேற்படி திட்டத்தின் ஊடாக கிடைக்கின்ற சலுகைகள் உங்களுக்கு ஆதரவாக அமையுமா என்பது குறித்து சற்று கணக்கிட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள்.
உங்களுக்கு முடிவெடுப்பதற்கு உதவியாக அரச நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய சாரதி ஒருவரின் வாழ்கையில் நடந்த சம்பவத்தினை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.
அவர் அரச சேவையில் இணைந்து 30 வருடம் கடந்து விட்ட நிலையில் ஓய்வு பெறுவதற்கு சில ஆண்டுகளே இருக்கின்ற நிலையில் (இரண்டு வருடங்கள் என நினைக்கின்றேன்.) அக்ரஹார கோல்ட் காப்புறுதித் திட்டத்தில் இணைந்தார். அதற்கான பங்களிப்புத் தொகையாக மாதாந்தம் ரூபா 600 வீதம் மாதாந்தச் சம்பளத்திலிருந்து கழிக்கப்பட்டு வந்தது. சுமார் 6 மாதங்கள் இவ்வாறு கழிக்கப்பட்ட நிலையில் தீடீரென அவருக்கு நெஞ்சில் வலி ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றார். இதயத்திற்குச் செல்கின்ற சில இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டிருப்பதாக மருத்துவ அறிக்கைகள் குறிப்பிடுவதாக மருத்துவர்கள் அவருக்கு அறிவித்தனர். உடனடியாக இரத்தக் குழாய்களுக்கு ஸ்டென்ட் பொறுத்த வேண்டும் என்பதாகவும் குறிப்பிடப்பட்டது. உடனடியாக அவர் தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதித்து குறித்த சிகிச்சையை மேற்கொண்டார். சிகிச்சைக்கான மொத்த செலவு ஒன்பது இலட்சம் ரூபாவை அக்ரஹார நிறுவனம் நேரடியாக வைத்தியசாலைக்குச் செலுத்தியது. அவர் இப்போதும் ஆரோக்கியமாக இருக்கின்றார்.
இந்த காப்புறுதித் திட்டத்தில் இணையாமல் இருந்திருந்திருந்தால் தனக்கு என்ன நிகழ்ந்நிருக்கும் என்பதை அவரால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது என்பதாக அவர் குறிப்பிட்டார்.
ஓய்வு பெற்றவர்கள் என்ற வகையில் உங்களுக்கு 900,000 ரூபா கிடைத்துவிடப்போவதில்லை என்றாலும் இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்காக 500,000 வரையில் கிடைக்கப்பெறும் என்பதாகக் குறிப்பிடப்படுகின்றது. அத்துடன் நீங்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் போது 150,000 ரூபா வரை வருடம் ஒன்றிற்கு இழப்பீடு பெறலாம். அத்துடன் ஆயுளில் ஒரு முறை பெறக்கூடிய பல இழப்பீடுகளையும் பெற்றுக்கொள்ளலாம்.
எனவே குறித்த சுற்று நிருபத்தை திரும்ப வாசித்துப் பாருங்கள். உங்களுக்கு 15 ஆம் திகதி வரையில் கால அவகாசம் இருக்கின்றது. இந்தத் திட்டம் குறித்து அடுத்தவர்கள் என்ன சொல்கின்றார்கள் என்பதனை விட இந்தத் திட்டத்தில் நீங்கள் எவ்வாறு பயன்பெறப்போகின்றீர்கள் என்பதுவே முக்கியமானது. எனவே நீங்களாகவே ஒப்பிட்டு முடிவெடுத்துக்கொள்ளுங்கள்.
இந்தத் திட்டமானது யாரோ ஒரு நோயாளிக்காக எமது பங்களிப்பினை வழங்குகின்றோம் என்பதே எனது கருத்து. அதாவது நாங்கள் செலுத்தின்ற ஒவ்வொரு ரூபாவும் யாரோ ஒரு நோயாளரின் நோயைத் தீர்த்து வைக்கின்றது. அதே நேரம் எதிர்பாராத நிலையில் எனக்கு வருக்கின்ற நோய்க்காக யாரோ பலர் தங்களது மாதச் சம்பளத்தில் பங்களிப்புச் செய்கின்றனர். எனக்கு நோய்கள் ஏதும் ஏற்படாத நிலையில் அல்லது நான் மருத்துவ மனையில் அனுமதிக்காதவரையில் எனக்கு இழப்பீடுகள் கிடைப்பதில்லை. நான் இது வரையில் நோய்வாய்ப்படவில்லை என்பதால் இதுவரையில் எந்த இழப்பீடுகளையும் பெறவில்லை என்பதாக யாராவது கூறுமிடத்து. யாரோ ஒருவரின் அல்லது பலரின் நோயைத் தீர்ப்பதற்கு எனது மாதச் சம்பளத்திலிருந்து ஒரு தொகை செலவிடப்படுவதால் அந்தப் புன்னியம் என்னை நோயில் இருந்து பாதுகாத்திருக்கலாமல்லவா?
அரச சேவையில் நேரம் காலம் பாராமல் நாட்டுக்காக பணியாற்றி ஓய்வில் இருக்கும் உங்களது ஆரோக்கியமான வாழ்வுக்காக என்றும் பிரார்த்திக்கின்றோம்.
(இந்தக் கட்டுரையின் உரிமை www.lankajobinfo.com இணைத்தளத்திற்கு உரியதாகும். தயவு செய்து இந்த ஆக்கத்தை அனுமதியின்றி வேறு இணையத்தளங்களில் பிரசுரிக்கவேண்டாம்.)