𝐏𝐮𝐛𝐥𝐢𝐜 𝐀𝐝𝐦𝐢𝐧𝐢𝐬𝐭𝐫𝐚𝐭𝐢𝐨𝐧 𝐂𝐢𝐫𝐜𝐮𝐥𝐚𝐫 : 𝟏𝟐/𝟐𝟎𝟎𝟓(𝐈𝐗) - 𝐄𝐱𝐭𝐞𝐧𝐝𝐢𝐧𝐠 𝐭𝐡𝐞 𝐛𝐞𝐧𝐞𝐟𝐢𝐭𝐬 𝐮𝐧𝐝𝐞𝐫 𝐀𝐠𝐫𝐚𝐡𝐚𝐫𝐚 𝐈𝐧𝐬𝐮𝐫𝐚𝐧𝐜𝐞 𝐒𝐜𝐡𝐞𝐦𝐞, 𝐰𝐡𝐢𝐜𝐡 𝐢𝐬 𝐢𝐦𝐩𝐥𝐞𝐦𝐞𝐧𝐭𝐞𝐝 𝐟𝐨𝐫 𝐭𝐡𝐞 𝐫𝐞𝐭𝐢𝐫𝐞𝐝 𝐏𝐮𝐛𝐥𝐢𝐜 𝐎𝐟𝐟𝐢𝐜𝐞𝐫𝐬
2016.01.01 ஆம் திகதிக்கு முன்னர் ஓய்வு பெற்றுக்கொண்ட அரச உத்தியோகத்தர்களுக்காக அக்ரஹார நலன்களை விரிவு படுத்துவது தொடர்பில் 2021.10.29 ஆம் திகதி வௌியிடப்பட்ட 12/2005 (VIII) அரச நிர்வாக சுற்றுநிருபத்தின் விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக 2021.11.09 ஆம் திகதி வௌியிடப்பட்ட அரச நிர்வாக சுற்றுநிருப இலக்கம் 12/2005 (iX) இன் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அக்ரஹார காப்புறுதித்திட்டத்தின் நலன்கள் ஓய்வு பெற்றவர்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் பல தரப்பினர்களிடமிருந்தும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டதனால் குறித்த தரப்புகளுடன் கலந்தாலோசித்து முடிவொன்றினை இட்டும் வரையில் மேற்படி சுற்று நிருபம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக குறித்த சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.