>

ad

Sri Lanka Planning Service Tamil Guide 2025




இந்தக் கட்டுரையின் நோக்கம் என்ன? 

இலங்கை திட்டமிடல் சேவை என்பது இலங்கையின் அரச நிறுவனங்களின் திட்டமிடல் பிரிவுகளின் தலைமைப் பொறுப்புக்கான பதவியொன்றாகும். மிக முக்கிய மான போட்டிப் பரீட்சையாகும்.  மிகவும் போட்டித் தன்மையுடைய இந்தப் போட்டிப் பரீட்சையில் சுமார் 100 க்கும் அதிகமான வெற்றிடங்களை நிறப்புவதற்காக வருடாந்தம் விண்ணப்ம் கோரப்படுவதுண்டு. சில காலங்கில் ள் கோரப்பட்டிருக்கின்றன. 

 மற்றயை நாடளாவிய சேவைகளைப் போலன்றி இந்தச் சேவைக்கு திறந்த பரீட்சையின் ஊடாக நுழைவுத் தகைமையாக ஏதாவது வகுப்புடனுனான பட்டம் ஒன்றினைப் பெற்றிருக்க வேண்டும் என்பதால் இந்தப் பதவி முக்கியமான உயர் பதிவியாகக் குறிப்பிடலாம். (மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சைக்கு இந்த நிபந்தனை இல்லை). 

   இலங்கை திட்டமிடல் சேவை என்றால் என்ன என்பது குறித்தும் அதற்காக தயாராக வேண்டிய முறைகள் குறித்தும் விளக்குகின்ற கட்டுரையினை LANKAJOBINFO.COM இணையத்தளம் உங்களுக்காக தயாரித்துத் தருக்கின்றது.

இலங்கை திட்டமிடல் சேவை என்பது யாது?

அரச நிறுவனங்களில் நிறுவனத் தலைவரிம் ஒப்படைக்கப்படுகின்ற பணிகள் தொடர்பான திட்டமில் ஒருங்கமைப்பு செயற்படுத்தல் மற்றும் மூலோபாயங்களை வகுத்தல் இந்தச் சேவையில் இருப்பவர்களின் பிரதான பணியாகும் 

இலங்கை திட்டமிடல்  சேவைக்காக ஆட்கள் எந்த அடிப்படையில் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர்?

பொதுவாக இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நிலவுகின்ற வெற்றிடங்களின் அடிப்படையில் இலங்கை திட்டமிடல் நிர்வாக சேவைக்காக ஆட்கள் சேர்க்கப்படுவதுண்டு. குறித்த சேவைக்கான ஆட் சேர்ப்பு 

01. திறந்த அடிப்படையில் ஆட்களைச் சேர்த்துக்கொள்ளல்
02  மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் ஆட்சேர்ப்புச் செய்தல் 

என்ற அடிப்படையில்  ஆட்கள் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர்.

ஆட்சேர்ப்புக்கான பொதுவான தகைமைகள்.


i. இலங்கைப் பிரசையாக இருத்தல்.
ii. சிறந்த நடத்தையுடையவராக இருத்தல்.
iii. நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலும் பணிபுரிவதற்கும் பதவிக்கான கடமைகளை மேற்கொள்வதற்குமான
போதிய உடல் மற்றும் உளத் தகைமைகளைக் கொண்டிருத்தல்.
iv. ஆட்சேர்ப்புக்கான அனைத்துத் தகைமைகளையும் விண்ணப்பங்கள் கோரப்படும் அறிவித்தல் வர்த்தமானியில்
பிரசுரிக்கப்படும் தினத்தன்று அல்லது அதற்கு முன்னர் பூர்த்தி செய்திருத்தல். 


01. திறந்த போட்டிப் பரீட்சை அடிப்படையில்  


குறித்த பதவிக்காக குறிப்பிட்ட ஏதாவது ஒரு சேவையில் இத்தனை காலம் சேவையாற்றியிருக்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லாமல் உரிய கல்வித் தகுதிகளை பெற்றுள்ளவர்கள் திறந்த அடிப்படையில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.  எனினும் அவர்களின் வயதெல்லை மிகக் குறுகியதாக இருக்கும் . 

 பொதுவான பதவியணியின் கீழ் மாத்திரமே திறந்த போட்டுப் பரீட்சையின் அடிப்படையில் தொரிவு செய்யப்படுகின்றர்.  குறித்த வருடத்தின் பதவி வெற்றிடங்களில்  75p% ஆனவர்கள் திறந்த போட்டிப் பரீட்சை ஊடாகவே தெரிவாகின்றனர்.

02. மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை

ஏற்கனவே இருக்கின்றவர்களுக்கு இந்த சேவையில் இணைவதற்காக அதிக சந்தர்ப்பம் வழங்கும் அடிப்படையில் குறிப்பிட்ட காலம் சேவை அனுபவம் இருக்கின்ற அதே நேரம் போதுமான கல்வித் தகுதகளையும் பெற்றவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை மூலமாக தெரிவு செய்யப்படுவர். 

பொதுவான பதவியணியின் கீழ்  வருடத்தின் பதவி வெற்றிடங்களில்  25% ஆனவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சையின் அடிப்படையில்  தெரிவாகின்றனர்.


03. சேவை மூப்பின் அடிப்படையில் போட்டிப் பரீட்சை 

சேவை மூப்பின் அடிப்டையில் இந்தப் பதவிக்கு ஆட்கள் சேர்க்கப்படுவதில்லை.



வருடத்தில் எத்தனை பதவி வெற்றிடங்கள் உருவாகின்றன.

இந்த சேவையிலிருந்து  ஓய்வு பெறுகின்றவர்கள் மற்றும் சேவைக்காலத்தில் மரணிக்கின்றவர்கள் சேவையினை விட்டுச் செல்கின்றவர்கள் என வெற்றிடமாகும் பதவிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் வெற்றிடங்கள் உருவாகின்றன. 

ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் ஒரு முறைறை வெற்றிடமாகின்ற பதவிகளின் எண்ணிக்கைக்கு ஆட்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்தை வெற்றிடங்களின் இத்தனைதான் என்றுசொல்ல முடியாது என்றபோதிலும் கடந்த காலங்களில் 100 முதல் 200 வரையான வெற்றிடங்களுக்காக ஆ்ட்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கின்றனர்.

2021 ஆம் ஆண்டு 139 பதவி வெற்றிடயங்கள் காணப்படுகின்றன.

இலங்கை திட்டமிடல் சேவையின் சம்பள அளவு என்ன? 

இலங்கை திட்டமிடல் சேவையின் சம்பள திட்டமாக 82,150 - 10 X 2,400 - 8 X 2,940 - 17 X 3,900  195,970 என்பதாகக் குறிப்பிடப்படுகின்றது. இலங்கை திட்டமிடல் சேவையில் முதலாவது நியமனம் பெறுகின்ற ஒருவர் பெறுகின்ற சம்பளத்தினை அரச நிர்வாக சுற்றுநிருபத்தின் பிரகாரம் கீழ் வரும் விதத்தில் குறிப்பிடலாம். இந்த சுற்றுநிருபத்தின் பிரகாரம் 2025.04.01, 2026.01.01, 2027.01.01 ஆகிய தினங்களில் ஆரம்பச் சம்பளம் மாற்றமடையும். அத்துடன் அடுத்த கொடுப்பனவுகள் இங்கு குறிப்பிட்ட அடிப்படையில் வழங்கப்படும். 
வா.செ. கொடுப்பனவு 17,800.00
விசேட கொடுப்பனவு 25,000.00
 தொலைபேசி கொடுப்னவு 2,500


ஆரம்ப சம்பளம் - 
2025.04.01 ஆம் திகதிக்கு - 66,726
2026.01.01 ஆம் திகதிக்கு -74,438
2027.01.01 ஆம் திகதிக்கு - 82,150

மேற்படி  கொடுப்பனவுகள் ஆரம்பச் சம்பளம் என்பவற்றுடன் இணைத்து   கீழ்வரும் திகதிகளில் புதிய நியமனம்  பெறுவோர் அடிப்படைச் சம்பளம் பெறுவர். 

2025.04.01 ஆம் திகதி -  112025
2026.01.01 ஆம் திகதி -  119738
2027.01.01 ஆம் திகதி -  127450

 இந்த சம்பளத்துடன் ஒவ்வொரு வருடமும் 2,400 என்ற அடிப்படையில் சம்பளம் அதிகரிக்கப்படும். இந்த மொத்த சம்பளத் தெகையிலிருந்து ஆரம்ப சம்பளத்தில் (66,726) 8% விதவைகள் தபூதாரர் அனாதைகள் நிதியத்திற்கு கழிக்கப்படும்.

இவை தவிர தீர்வையற்ற வாகனம் வாங்குவதற்கான சலுகைகள் (இது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது),  போக்குவரத்து சலுகைகள் என பல சலுகைகள்வழங்கப்படும்.

அத்துடன் பட்டப்பின் படிப்புகளுக்காக அரச செலவில் சம்பள விடுமுறையுடன் வௌிநாடு செல்வதற்கான வாய்ப்புக்களும் வழங்கப்படும்.


விண்ணப்பங்கள் எவ்வாறு கோரப்படுகின்றன?

பரீட்சைக்குத் தோற்றுவதற்கான விண்ணப்பப்படிவ்களும் பரீட்சைக்கான நிபந்தனைகளும் அரச வர்த்தமானி அறிவித்தல் ஊடாக பிரசுரிக்கப்படும். அத்துடன் இணையத்தளத்திலும் பிரசுரிக்கப்படும்.

பரீட்சைக்கான வயதெல்லை என்ன?

 
  • திறந்த போட்டிப் பரீட்சைக்காக விண்ணப்பம் கோரப்படும் திகதிக்கு  22 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும் 28 வயதிலும் குறைந்தவர்களாக இருக்கவேண்டும்.
  • மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்காக வயதெல்லை என்ன என்பது குறித்து  சேவைப் பரிமாணக் குறிப்பிலோ அல்லது வர்த்தமானி அறிவித்தலிலோ குறிப்பிடப்படவில்லை. 

இந்தப் பரீட்சைக்காக எத்தனை முறை தோற்றலாம்?

ஒரு பரீட்சார்த்தி திறந்த அடிப்படையில்  2 முறை மாத்திரமே பங்குபற்றலாம்.
.
மடடுப்பத்தப்பட்ட அடிப்படையில்  2 முறை மாத்திரமே பங்குபற்றலாம்.  (இவ்வாறு விண்ணப்பிப்பவர்கள் எந்த ஒரு அடிப்படையிலும் 4 தடவைகளுக்கு மேல் விண்ணப்பிக் முடியது. )



திறந்த போட்டிப் பரீட்சை அடிப்படையில் ஆட்சேர்த்தல் 


திறந்த போட்டிப் பரீட்சைக்கான கல்வித் தகைமை என்ன?


(i) முதலாம்வகுப்பு அல்லது இரண்டாம் வகுப்பு சித்தியுடனான பட்டம் ஒன்றைப் பெற்றிருத்தல்.
அல்லது
(ii) பட்டம் ஒன்றுடன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றிலிருந்து அல்லது பாராளுமன்ற சட்டமொன்றினால் தாபிக்கப்பட்டுள்ள பயிற்சி நிறுவனமொன்றினால் வழங்கப்பட்ட குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்குக் குறையாத பாடநெறி  கால எல்லை கொண்ட பட்டப்பின் படிப்பு டிப்ளோமா ஒன்றைப் பெற்றிருத்தல். 

ஆட்சேர்ப்பு முறை எவ்வாறு அமையும்?

எழுத்து மூலப்பரீட்சையில் தகைமை பெறுவோர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படுவர். நேர்முகப் பரீட்சையில் சான்றிதழ்கள் பரிசோதிப்பதற்காகவே நடாத்தப்படும். நேர்முகப் பரீட்சைக்ககு புள்ளிகள் வழங்ப்படுவதில்லை . 

எழுத்துப்பரீட்சை  எவ்வாறு அமையும்?

எழுத்துப் பரீட்சை இரண்டு கட்டங்களாக நடைபெறும். 

01. பொதுப் பரீட்சை முதலாவது பகுதி

 ஒவ்வொரு வினாப்பத்திரத்திற்கும் 40% அல்லது அதனிலும் கூடிய புள்ளிகளைப் பெறுவதுடன் இரண்டு வினாப்பத்திரங்களினதும் மொத்தப் புள்ளிகளின் கூட்டுத்தொகை 100 அல்லது அதனிலும் கூடிய புள்ளிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு புள்ளிகளைப் பெறுகின்ற விண்ணப்பதாரிகள் மாத்திரம் இலங்கை நிர்வாக சேவைகளுக்குரிய பரீட்சையின் இரண்டாம் பகுதிக்கு அழைக்கப்படுவா்

இப்பரீட்சையில் கீழ்க் குறிப்பிடப்படும் இரண்டு பாடங்களைக் கொண்டிருக்கும். 

நுண்ணறிவு - 1 1/2 மணித்தியாலயம் கொண்ட இந்த வினாத்தாளுக்கு 100 புள்ளிகள் வழங்கப்படும். 

பரீட்சார்த்தியிடம் காணப்படும் தர்க்கிக்கும் ஆற்றல், மாற்றீடு, பொருள்கோடல், தொடர்புகளைக் காணல், பெயர்ப்பு, சிக்கல்களைத் தீர்க்கும் ஆற்றல், காரண காரியத் தொடர்புகளைப் புரிந்து கொள்ளல், எதிர்வுகூறல், தகவல் ஒழுங்கமைப்பு, வடிவங்களை இனங்காணல் மற்றும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுதல் போன்ற திறன்களை மதிப்பிடுவதற்காகத் தயாரிக்கப்படும் பல்தேர்வு வகை வினாக்களைக் கொண்டமைந்தது

கிரகித்தல் - 1  மணித்தியாலயம் கொண்ட இந்த வினாத்தாளுக்கு 100 புள்ளிகள் வழங்கப்படும். 

பரீட்சார்த்தியிடம் காணப்படும் விடயங்களைப் புரிந்து கொள்ளும் திறன், தொடர்பாடல் ஆற்றல், சாராம்சப்படுத்தல், விவரித்தல் மற்றும் படைப்பாற்றல் போன்ற ஆற்றல்களை மதிப்பிடுவதற்காகத் தயாரிக்கப்படும் புறவய வினாக்களைக் கொண்டமைந்தது

இரண்டாவது எழுத்துப் பரீட்சையின் கட்டமைப்பு எவ்வாறு அமைந்திருக்கும்?



மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை


கல்வித் தகைமை 

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக மொன்றில் பட்டமொன்றைப் பெற்றிருத்தல்.

தொழில் தகைமை 

தமது நியமனங்களில் நிரந்தரமாக்கப்பட்டுள்ள, விண்ணப்பங்கள் கோரப்படும் அறிவித்தல் வர்த்த மானியில் பிரசுரிக்கப்படும் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னரோ மேற்குறித்த 5.1 இல் குறிப்பிடப்பட்டுள்ள தகைமைகளுடன் அரசாங்க அல்லது மாகாண அரசாங்க சேவையில் அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இலக்கம் 03/2016 இன் சம்பளக் குறியீடு MN - 1 - 2016 அல்லது அதனிலும் கூடிய MN சம்பளக் குறியீட்டின் கீழ் சம்பளம் பெறுகின்ற அல்லது SL - 1 - 2016 சம்பளக் குறியீட்டின் கீழ் சம்பளம் பெறுகின்ற சேவையில்/ பதவியில் ஐந்து வருடங்களுக்குக் குறையாத தொடர்ச்சியான, நிரந்தர மற்றும் திருப்திகரமான சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.  

ஏனைய தகைமைகள்

(i) இப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கத் தேவையான அனைத்துத் தகைமைகளையும் விண்ணப்பங்கள் கோரப்படும் வர்த்தமானி அறிவித்தல் பிரசுரிக்கப்படும் தினத்தன்று அல்லது அதற்கு முன்னர் எல்லா வழிகளிலும் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
(ii) எந்தவொரு மதத்தையும் சேர்ந்த துறவிக்கு இப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கவோ அல்லது தோற்றவோ அனுமதி கிடையாது.
(iii) விண்ணப்பிப்பதற்குரிய தகைமைகளைப் பெறுவதற்கு உடன் முந்திய ஐந்து வருடங்களினுள் உரிய தினங்களில் அனைத்து சம்பளவேற்றங்களையும் பெற்றிருத்தல் வேண்டும்.
(iv) தகைமைகள் பரீட்சிக்கப்படும் தினத்தன்று அரசாங்க சேவைகள் ஆணைக்குழு சுற்றறிக்கை இலக்கம் 01ஃ2020 இல் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகள் மற்றும் அவற்றிற்கு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு அமைவாக ஒழுக்காற்று தண்டனையொன்றிற்கு உள்ளாகியிருத்தல் ஆகாது.
(v) இலங்கை திட்டமிடல் சேவையின் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்கு இரண்டு தடவைகளுக்கு மேல் தோற்றுவதற்கு எந்தவொரு நபருக்கும் அனுமதி கிடையாது.



எழுத்துப் பரீட்சையின் கட்டமைப்பு எவ்வாறு அமைந்திருக்கும்?

மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை 3 பாடங்களைக் கொண்டதாக இருக்கும்
 
1 கிரகித்தல்,  -  (மொத்தமாக 100 புள்ளிக ள் வழங்கப்படும்) 2 மணித்தியாலயம்
2 . விடய ஆய்வு   (மொத்தமாக 100 புள்ளிகள் வழங்கப்படும்) 1 மணித்தியாலயம்
3 திட்டழிடல்.(மொத்தமாக 100 புள்ளிகள் வழங்கப்படும்) 2 மணித்தியாலயம்


பாடங்களின் உள்ளடக்கம் என்ன?



விடய இலக்கம் 01 - கிரகித்தல்

 பரீட்சார்த்திக்கு ஒரு நூலின் பகுதிகள் கொடுக்கப்படும். அத்துடன் சில வாக்கியங்கள் தொடர்பான மாற்றுவகையான பொழிவுகளுள் ஒன்று பகுதியின் வாசகங்களுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும். பரீட்சார்த்தி மிகவும் பொருத்தமான வசனத்தை தெரிவு செய்தல் வேண்டும். ஏனைய வசனங்கள் தொடர்பாக கொடுக்கப்படும் வினாக்கள் எவ்வளவு சிறப்பாக பரீட்சார்த்தி அவற்றின் பொருளைப் புரிந்து கொண்டார் என்பதை பரீட்சித்துப் பார்ப்பதற்காக அமையும். அனைத்து வினாக்களுக்கும் விடையளித்தல் வேண்டும்.

 விடய இலக்கம் 02 - விடய ஆய்வு

 பரீட்சார்த்தியின் சிந்திக்கும் ஆற்றலையும் சிக்கல்களை தீர்த்துவைக்கும் திறன்களையும் பரீட்சித்துப் பார்ப்பதற்காக இந்த வினாப்பத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பரீட்சார்த்திக்கு தற்போதைய இலங்கையின் பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் தொடர்பான புத்தகங்களிலிருந்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சிக்கல்கள் கொடுக்கப்பட்டு அவற்றிற்கான தீர்வுகளை வழங்குமாறு கேட்கப்படுவார். அனைத்து வினாக்களுக்கும் விடையளித்தல் வேண்டும்.


விடய இலக்கம் 03 - திட்டமிடல்
 பரீட்சார்த்தியின் திட்டமிடல் கோட்பாடுகள் மற்றும் திட்டமிடல் உபாயங்களின் அடிப்படை அறிவை பரீட்சித்துப் பார்ப்பதே இவ் வினாத் தாள் வழங்கப்படுவதன் நோக்கமாகும்.

நேர்முகப் பரீட்சைக்கு யார் அழைக்கப்படுவார்கள்?

சாதாரண நேர்முகப் பரீட்சை மாத்திரம் நடாத்தப்படுவதுடன், ஒவ்வொரு எழுத்துமூல வினாப்பத்திரத்திற்கும் உரிய புள்ளிகளில் குறைந்தபட்சம் 40%  அல்லது அதனிலும் கூடிய புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட விண்ணப்பதாரிகளிடையே மொத்தப் புள்ளிகளின் திறன் ஒழுங்கிற்கு அமைய வெற்றிட எண்ணிக்கைக்கு சமமான எண்ணிக்கையானோர் மாத்திரம் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டு அதன் போது அடிப்படைத் தகைமைகள் ப{ர்த்தி செய்யப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்படும் விண்ணப்பதாரிகள் நியமனத்திற்காக தெரிவு செய்யப்படுவர்.

நேர்முகப் பரீட்சைக்குப் புள்ளிகள் வழங்கப்படமாட்டாது.

 கவனத்திற் கொள்க .- நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றுவதானது நியமனம் வழங்குவதற்கான தகைமைகளைப் பூர்த்தி செய்திருப்பதாகக் கொள்ளப்பட மாட்டாது. 


நிகழ்நிலை (Online) பரீட்சை விண்ணப்பப்படிவத்தை ஆங்கில மொழியில் மாத்திரம் பூர்த்தியாக்குதல் வேண்டும். விண்ணப்பதாரியினால் நிகழ்நிலை மூலம் சமர்ப்பிக்கப்பட்ட மென்பிரதிக்கு மேலதிகமாக அச்சுப் பிரதியொன்றையும் பதிவுத் தபாலில் அனுப்பி வைத்தல் வேண்டும். மென்பிரதி மற்றும் அச்சுப் பிரதி (Printout) ஆகிய இரண்டும் பரீட்சை திணைக்களத்திற்குக் கிடைக்கப்பெற்றதன் பின்னர் உறுதிப்படுத்தும் (Verify) நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன், செல்லுபடியான விண்ணப்பப்படிவமாக திணைக்களத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது/ ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பது பற்றி கையடக்கத் தொலைபேசி இலக்கத்திற்கு குறுஞ் செய்தியொன்றின் (SMS) மூலம் அறிவிக்கப்படும். நிகழ்நிலை விண்ணப்பப்படிவத்தைப் ப{ரணப்படுத்துவதற்கு முன்னர் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள பொது அறிவுறுத்தல் படிவத்தை (Common Instruction) தரவிறக்கம் செய்து கொள்ளவும். விண்ணப்பப்படிவத்தைப் ப{ரணப்படுத்துகையில் இவ் அறிவுறுத்தல்களைக் கட்டாயமாகப் பின்பற்றவும். விண்ணப்பப்படிவத்தின் அச்சுப் பிரதியொன்றைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் அதில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு திருத்தமும் செல்லுபடியான திருத்தமாகக் கவனத்திற் கொள்ளப்பட மாட்டாது. ப{ரணமற்ற விண்ணப்பப்படிவங்கள் எந்தவொரு அறிவித்தலுமின்றி நிராகரிக்கப்படும்.


பரீட்சைக்காக விண்ணப்பித்தல்

திறந்த போட்டிப் பரீட்சைக்கான நாடளாவிய சேவைகளுக்கான பரீட்சைக்கான ஒன்லைன் விண்ணப்ப வெப் தளத்தின் ஊடாக பிரவேசிக்க வேண்டும். 

மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் குறித்த விபரம் மற்றும் வர்த்தமான அறிவித்தல் பார்வையிட கீழ் குறிப்பிடும் லிங்கில் பிரவேசிக்கவும்.



Service Minutes and Related Circulars Sri lanka Accountant Service.


விபரம்திகதிபார்வையிட பதிவிறக்க
 இலங்கை திட்டமிடல் சேவைப் பிரமாணக் குறிப்பு இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதி விசேட வர்த்தமானிப் பத்திரிகை இலக்கம் 1670/322010.09.10View/Download
 01. ஆம் இலக்க திருத்தம் இலக்கம் 1670/32 2012.11.09View/Download
 02. ஆம் இலக்க திருத்தம் இலக்கம் 1670/32 மற்றும் 1783/37 2013.06.28View/Download
03. ஆம் இலக்க திருத்தம் 2016.08.27View/Download
04. ஆம் இலக்க திருத்தம்  வர்த்தமானப் பத்திரிகை இலக்கம். 2070/072019.08.20View/Download
05. ஆம் இலக்க திருத்தம் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை இலக்கம். 2137/662019.09.22View/Download

Post a Comment

0 Comments