கீழ்க் காட்டப்பட்ட தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ள அரசாங்கப் பாடசாலைகளிலும், அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்டு உதவி வழங்கப்படுகின்ற பாடசாலைகளிலும், பிரிவெனாக்களிலும் சேவையாற்றும் பதவி நிரந்தரமாக்கப்பட்ட ஆசிரியர்கள் / அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள். ஆசிரியர் கல்வியிலாளர் சேவையில் இருப்பவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்குத் தோற்றத் தகுதி பெறுகினறனர்
கல்வித் தகைமை
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக மொன்றில் பட்டமொன்றைப் பெற்றிருத்தல்.
தொழில் தகைமை
தமது நியமனங்களில் நிரந்தரமாக்கப்பட்டுள்ள, விண்ணப்பங்கள் கோரப்படும் அறிவித்தல் வர்த்த மானியில் பிரசுரிக்கப்படும் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னரோ மேற்குறித்த 5.1 இல் குறிப்பிடப்பட்டுள்ள தகைமைகளுடன் அரசாங்க அல்லது மாகாண அரசாங்க சேவையில் அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இலக்கம் 03/2016 இன் சம்பளக் குறியீடு MN - 1 - 2016 அல்லது அதனிலும் கூடிய MN சம்பளக் குறியீட்டின் கீழ் சம்பளம் பெறுகின்ற அல்லது SL - 1 - 2016 சம்பளக் குறியீட்டின் கீழ் சம்பளம் பெறுகின்ற சேவையில்/ பதவியில் ஐந்து வருடங்களுக்குக் குறையாத தொடர்ச்சியான, நிரந்தர மற்றும் திருப்திகரமான சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
0 Comments