>
Lankajobinfo.

ad

  • Home
  • EDU NEWS
  • Exam Papers
  • Teachers Section
  • Jobs & Courses
  • About US
  • Contact Us
  • Privacy policy
HomeGovernment jobLimited Competitive Examination for Recruitment to Grade III of the Sri Lanka Accountants Service - 2021 (Tamil guide)

Limited Competitive Examination for Recruitment to Grade III of the Sri Lanka Accountants Service - 2021 (Tamil guide)

Admin August 05, 2021


இலங்கை கணக்காளர் சேவை என்பது இலங்கையில் நாடளாவிய சேவை என அழைக்கப்படுகின்ற ஒரு சேவைப் பிரிவாகும். இந்த சேவைக்காக திறந்த அடிப்படையிலும் மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையிலும் ஆட்கள் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர். 

அந்த அடிப்படையில்  இலங்கை கணக்காளர் சேவையின் தரம் III பதவிகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் ஆட்சேர்ப்பு
செய்வதற்கான போட்டிப் பரீட்சைக்குத் தகைமையுடைய இலங்கை பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? 


மட்டுப்படுத்தப்படுத்த பரீட்சை ஊடாக இந்தப் பதவிக்காக அரச சேவையில் இருப்பவர்கள் மாத்திரமே விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பிப்பவர்கள் இரண்டு விதமான தகுதிகளைப் பெற்றிருப்பதன் அடிப்படையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் 

01.ஏதாவது ஒரு அரச  சேவையில் 2016 - MN - 1 எனும் சம்பளத் திட்டத்திலும் கூடியா சம்பளத் திட்டத்தில்  10 வருட காலம் சேவையாற்றியிருத்தல் (இங்கு கல்வித் தகைமை கருத்தில் கொள்ளப்படுவதில்லை)


2016 - MN - 1 எனும் சம்பளத்திட்டம்  27140 - 10X300- 11X350 - 10 X 495 - 10X 660 - 45540

இதன் ஆரம்பச் சம்பளம் 27-140 ஆகம். 

2016 - MN - 1 எனும் சம்பளத்திட்டம் என்பது  க.பொ.த (உ/த)  பரீட்சையில் ஒரு பாடம் சித்தியினை அடிப்படைத் தகைமையாகக் கொண்டுள்ள பதவியாகும். இதன் கீழ் காரியாலய உதவியாளர் பதவி மாத்திரமே காணப்படுகின்றது.  அதன் அடிப்படையில்  PL சம்பள மட்டத்தினைப் பெறுகின்றவர்கள் தவிர ஏனைய அனைத்து அரச சேவையில் உள்ள பதவிகள் வகிப்பவர்களும் இந்தப் பதவிக்காக விண்ணப்பிக்கலாம். 

அந்த அடிப்படையில் ஆசிரியர்கள், அதிபர்கள். முகாமை உதவியாளர், கிராம சேவை அலுவலர் என அனைத்து துறையில் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். 

அரச சம்பளம், சம்பளக் குறியீடுகள், கல்வித் தகைமைக்கு ஏற்ப பெற முடியுமான அரச  தொழில்கள்,  கல்வித் தகைமைக்கு ஏற்ப சம்பள அளவு போன்றன குறித்த முழு விபரம் அடங்கி கட்டுரையை வாசித்து உங்களது சம்பளத் திட்டம் குறித்து அறிந்துகொள்ளலாம் 
https://www.lankajobinfo.com/2021/06/blog-post_15.html

02.  ஏதாவது ஒரு அரச சேவையில் 5 வருட காலம் சேவையாற்றிருப்பதுடன் ககல்வித் தகைமையினைப் பெற்றிருத்தல் 

இந்தப் பிரிவுக்கான கல்வித் தகைமையாவது 

1. . பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் வர்த்தகம், முகாமைத்துவம், கணக்கீடு, பொருளியல் போன்ற துறைகளில் பட்டமொன்றைப் பெற்றிருத்தல்;

அல்லது

2.  இலங்கை தொழில்நுட்பக் கல்லூரியின்/இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவகத்தின் கணக்கீடு அல்லது வர்த்தகம் பற்றிய உயர் டிப்ளோமாவைப் பெற்றிருத்தல் அல்லது உயர் தேசிய முகாமைத்துவ டிப்ளோமாவைப் பெற்றிருத்தல் 

அல்லது


3. இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் அல்லது வேறேதும் பொதுநலவாய நாடொன்றின் பட்டயக் கணக்காளர் நிறுவனமொன்றின் தகுதிச் சான்றுடைய II அல்லது இடைநிலைப் பரீட்சை அல்லது கணக்கீடு மற்றும் வியாபார சான்றிதழ் II அல்லது வியாபார படிமுறை பரீட்சை அல்லது நிறுவனம்சார் படிமுறை பரீட்சை அல்லது அதனிலும் உயர் பரீட்சை ஒன்றில் சித்தியடைந்திருத்தல் வேண்டும் 

அல்லது

4. ஐக்கிய இராச்சியத்தின் அல்லது வேறு யாதேனுமொரு பொதுநலவாய நாட்டின் பட்டயம் பெற்ற முகாமைத்துவக் கணக்காளர் நிறுவகமொன்றினால் நடாத்தப்படும் செலவினம் மற்றும் முகாமைத்துவம் பரீட்சையின் I மற்றும் 
II பகுதிகளில் அல்லது இடைநிலைப் பரீட்சையில் அல்லது அதனிலும் உயர் பரீட்சை ஒன்றில் சித்தியடைந்திருத்தல் வேண்டும் CIMA

அல்லது

5. ஐக்கிய இராச்சியத்தின் அல்லது வேறு யாதேனுமொரு பொதுநலவாய நாட்டின் சான்றிதழ் பெற்ற கணக்காளர்களின் கணக்கியல் நிறுவனத்தின் I ஆவது தொழில்சார் மட்டத்தைச் சேர்ந்த அல்லது அதனிலும் உயர் மட்டத்திலான பரீட்சை ஒன்றில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்

அல்லது

6. ஐக்கிய இராச்சியத்தின் அல்லது வேறு யாதேனுமொரு பொதுநலவாய நாட்டின் சான்றிதழ் பெற்ற கணக்காளர்களின் பட்டயச் சங்கத்தின் I மற்றும் II பகுதிகளுக்குரிய பரீட்சையில் அல்லது அதனிலும் உயர் மட்டத்திலான பரீட்சை ஒன்றில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்;

அல்லது

7. ஐக்கிய இராச்சியத்தின் செயலாளர்கள் மற்றும் நிருவாகிகளின் பட்டய நிறுவகத்தின் இறுதிப் பரீட்சையில் சித்தியடைந்திருத்தல் வேண்டும். 

அல்லது

8. இலங்கை சான்றிதழ் பெற்ற முகாமைத்துவ கணக்காளர் நிறுவனத்தின் முகாமைத்துவ மட்ட அல்லது அதனிலும் உயர் மட்டத்திலான பரீட்சை ஒன்றில் சித்தியடைந்திருத்தல் வேண்டும். 

இலங்கை கணக்காளர் சேவை என்றால் என்ன? 
அதன் சம்பள அளவு என்ன?
பரீட்சையின் கட்டமைப்பு என்ன?
பரீட்சைக்கான பாடங்கள் என்ன?
ஆட்கள் தெரிவு செய்யும் முறை என்பன குறித்து கீழுள்ள லிங்கில் உள்ள கட்டுரையினை வாசித்து அறிந்துகொளலாம். (இது திறந்த  போட்டிப் பரீட்சையை இலக்காகக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரை என்ற போதிலும் அனைத்து விடயங்களுமே மட்டுப்படுத்தப்பட்ட சேவைக்கும் பொறுத்தமாக அமைகின்றன)

https://www.lankajobinfo.com/2021/07/slacs-open-exam-guide-in-tamil-2021-sri.html

கணக்காளர் சேவை மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சைக்கான விபரங்களை பதிவிறக்க இங்கு கிளக் செய்யவும். 


 

ஒன்லைன் விண்ணப்பத்திற்கான அறிவுறுத்தல்களை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யலும் 


ஒன்லைன் விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்.

 


Tags:
Government job
  • Facebook
  • Twitter
  • Google+

Post a Comment

0 Comments

ads

Popular Posts

Government Service Guide

3/info/post-list

Tags

  • Course 161
  • Edu-news 135
  • Government job 131
  • info 120
  • news 55
  • Competition 51
  • degree 46
  • gazette 41
  • Results 39
  • A.L 38
  • circular 33
  • free-course 31
  • scholarship 22
  • Aptitude_Test 21
  • exam calendar 21
  • Exam-Paper 16
  • O.L 14
  • Past-papers 13
  • Diploma 11
  • edu_ guide 10
  • SLTS-EB 8
  • transfer application 8
  • fuel 7
  • private job 6
  • Promotion 5
  • list 5
  • Management_assistant 4
  • police 4
  • විද්‍යා පීඨ 4
  • accountant 3
  • jobs 3
  • APPLICATION 2
  • course list 2
  • G.K 1
  • UGC 1
  • aswesuma 1
  • director 1
  • litro Gas 1
  • m 1
  • power cut 1
  • scholership 1
  • translator 1

Jobs Classification

  • A.L 38
  • Management_assistant 4
  • O.L 14
  • degree 46

ads

Footer Menu Widget

  • Home
  • About us
  • Contact Us
Created By SoraTemplates | Shared By Way Template