>
பகுதி I: தொகுதி (I)
ஒவ்வொரு வினாப்பத்திரத்திலும் 40% க்கும் மேல் மற்றும் மொத்தப் புள்ளிகள் 100 அல்லது அதற்கு மேல் புள்ளிகளைப் பெற்றுக்கொள்ளும் பரீட்சார்த்திகள் மாத்திரம் இரண்டாவது பகுதிக்கு அழைக்கப்படுவார்கள்.
அ) அரசாங்க நிறைவேற்றுநர் வகுதியின் தரம் III இன் வெற்றிடங்களை நிரப்புவதற்காக நடாத்தப்படும் பொதுப் போட்டிப் பரீட்சையின் முதலாம் பகுதி (பொதுப் பகுதி) கீழ்வருமாறு அமைந்திருக்கும்.
நுண்ணறிவுப் பரீட்சையின் பாடவிதானம் : பரீட்சார்த்தியின் தர்க்கிக்கும் ஆற்றல், பிரதியிடல், பொருட்கோடல், தொடர்பு காணல், பெயர்ப்பு, பிரச்சனைகளைத் தீரக்கும் இயலுமை, காரண காரிய தொடர்புகளைப் புரிந்துகொள்ளல், எதிர்வுகூறல், தகவல்களை ஒழுங்கமைத்தல், வடிவங்களை இனங்காணல் மற்றும் ஆலோசனைகளைப் பின்பற்றுதல் போன்ற இயலுமைகளை அளவிடுவதற்காக வடிவமைக்கப்பட்ட பல்தேர்வு வினாக்களைக் கொண்டது.
கிரகித்தல் பரீட்சையின் பாடவிதானம் பரீட்சார்த்தியிடம் காணப்படும் விடயங்களைப் புரிந்துகொள்ளும் இயலுமை, தொடர்பாடல் திறன், சாரம்சப்படுத்தல், விவரித்தல் மற்றும் ஆக்கத்திறன் ஆகிய திறன்களை அளவிட வடிவமைக்கப்பட்ட புறவய வினாக்களைக் கொண்டது.
இது 3 மணித்தியாலங்கள் கொண்டது. இதற்கு 100 புள்ளிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சித்தியடைவதற்கு 40 புள்ளிகள் பெற வேண்டும். இந்த வினாப்பத்திரம் இரண்டு பகுதிகளைக் கொண்டது: பகுதி I இற்கு 60 புள்ளிகளும், பகுதி II இற்கு 40 புள்ளிகளும் வழங்கப்படுகின்றன.
(II) பாட விதானம்
இந்த வினாப்பத்திரம் 02 பகுதிகளைக் கொண்டது. மொத்தம் 08 வினாக்கள் இருக்கும்.
இந்தப் பகுதியில் ஐந்து (05) வினாக்கள் உள்ளன. முதல் வினா கட்டாயமானது. மீதமுள்ள நான்கு (04) வினாக்களில் இருந்து இரண்டை (02) தெரிவு செய்ய வேண்டும்.
அனைத்து வினாக்களுக்கும் சமமான புள்ளிகள் வழங்கப்படும்.
1. கட்டாய வினா: இலங்கை கணக்கீட்டு நியமங்களின் பயன்பாடு தொடர்பில் பரீட்சார்த்திக்குள்ள ஆற்றலை அளவிடுவது இந்த வினாவின் நோக்கம். இதில் 05 உப பகுதிகள் உள்ளன. ஒவ்வொரு பகுதிக்கும் 04 புள்ளிகள் வழங்கப்படும். இந்த வினாவில் பின்வரும் இலங்கைக் கணக்கீட்டு நியமங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும்:
2. நிதிக் கூற்றுக்களுக்கான எண்ணக்கரு சார்ந்த மற்றும் ஒழுங்குமுறைக் கட்டமைப்பு: நிதிக் கூற்றுக்களின் பொதுவான நோக்கம், பயன்படுத்தும் அனுமானங்கள், தரநிலை பண்புகள், மூலங்களை இனங்காணல் மற்றும் அளவிடுதல், மூலதன எண்ணக்கருக்கள் மற்றும் மூலதனப் பராமரித்தல் எண்ணக்கரு. நிறுவனக் கட்டுப்பாடுகள், கம்பனிச் சட்டங்கள் மற்றும் இலங்கை பிணைகள் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் தொடர்பான ஏற்பாடுகள்.
3. திரட்டிய நிதிக் கூற்றுக்கள் உள்ளிட்ட வரையறுக்கப்பட்ட கம்பனிகளின் நிதிக் கூற்றுக்கள்: வரையறுக்கப்பட்ட பொறுப்புக் கம்பனியொன்றில் காணப்படும் நிதி மூலங்களை அடையாளங் காணல், பங்குகள் மற்றும் தொகுதிக் கடன் பத்திரங்களை வழங்குதல் மற்றும் மீட்டல் தொடர்பான பேரேட்டுக் கணக்குகளைத் தயாரித்தல், முகாமைத்துவ மற்றும் வெளியீட்டு நோக்கங்களுக்காக நிதிக் கூற்றுக்களைத் தயாரித்தல்.
4. இலாபமீட்டாத அமைப்புக்களுக்கான நிதிக் கூற்றுக்களைத் தயாரித்தல்
5. நிதிக் கூற்றுக்களின் பகுப்பாய்வு: நிதிப்பெறுபேறுகளின் வரைவிலக்கணம், தொடர்பாடல், நிதியல்லாத அறிக்கையிடல்.
இந்தப் பகுதி, பின்வரும் விடயங்களை அடிப்படையாகக் கொண்ட 03 வினாக்களைக் கொண்டிருக்கும். அவற்றில் 02 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். ஒவ்வொரு வினாவுக்கும் சமமான புள்ளிகள் வழங்கப்படும்.
1. கிரய கணக்கீட்டு அம்சங்கள்:
கிரயங்களை வகைப்படுத்தல், கிரயங்களின் நடத்தை, மதிப்பீடு செய்தல், மூலப்பொருட்கள் மற்றும் இருப்பு கட்டுப்பாடு, உழைப்புக் கிரயம், குறிப்பிட்ட மற்றும் தொடர்ச்சியான கட்டளை கிரயவியல்.
2. கிரயக் கணக்கீட்டு முறைகள்:
உள்ளீட்டு கிரயவியல் மற்றும் எல்லை கிரயவியல், செயற்பாட்டு அடிப்படையிலான கிரயவியல், செயன்முறை கிரயவியல், உற்பத்திக் கணக்கீடு (Throughput Accounting) மற்றும் தற்கால முகாமைத்துவக் கணக்கீடு.
3. வியாபாரத்திற்கான நிதிக் கணிதம் மற்றும் கருத்திட்ட மதிப்பீட்டு அடிப்படைகள், கூட்டுதல், தள்ளுபடி செய்தல்.
4. நியமக் கிரயவியலும் முரண்கள் பகுப்பாய்வும்
5. வியாபாரச் செயற்பாடுகளுக்கான கணிதம்
6. வரவு செலவுத் திட்டமும் எதிர்வு கூறுதலும்: வரவு செலவுத் திட்டம், வரவு செலவுத் திட்டத் தயாரிப்பு மற்றும் வரவு செலவுத் திட்டக் கட்டுப்பாடுகள்.
7. குறுகிய கால மற்றும் நீண்ட கால தீர்மானங்களை எடுப்பதற்கான தகவல்: கிரயம், அளவு, இலாபப் பகுப்பாய்வு, மேலதிக செயன்முறை விலையிடல் (Further Processing Cost) மற்றும் பல்வேறு நிதிக் கட்டுப்பாடுகளுக்கான முடிவுகளை எடுத்தல் (Multi-Constraint decision making).
8. தொழிற்படு மூலதன முகாமைத்துவம்
இது 3 மணித்தியாலங்கள் கொண்டது. இதற்கு 100 புள்ளிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சித்தியடைவதற்கு 40 புள்ளிகள் பெற வேண்டும். இந்த வினாப்பத்திரமும் இரண்டு பகுதிகளைக் கொண்டது: பகுதி I இற்கு 60 புள்ளிகளும், பகுதி II இற்கு 40 புள்ளிகளும் வழங்கப்படுகின்றன.
(II) பாட விதானம்
இந்த வினாப்பத்திரம் 02 பகுதிகளைக் கொண்டது. மொத்தம் 08 வினாக்கள் இருக்கும்.
பகுதி I - உயர் கணக்காய்வு:
இந்தப் பகுதி, பின்வரும் விடயங்களை அடிப்படையாகக் கொண்ட 05 வினாக்களைக் கொண்டிருக்கும். அவற்றில் 03 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். ஒவ்வொரு வினாவுக்கும் சமமான புள்ளிகள் வழங்கப்படும்.
1. பல்வேறு வகை கணக்காய்வுகளும் அக்கணக்காய்வுகளின் நோக்கங்களும்:
நிதிக் கணக்காய்வு, முறைமை கணக்காய்வு, இணக்கப்பாட்டு கணக்காய்வு, பணத்திற்கான பெறுமதிக் கணக்காய்வு, செயல்திறன் கணக்காய்வு, தடயவியல் கணக்காய்வு, உள்ளகக் கணக்காய்வு, வெளியகக் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் கணக்காய்வு.
2. கணக்காய்வுத் திட்டமிடலும் கட்டுப்பாடும்:
கணக்காய்வு திட்டமிடல், நேரம் குறித்தல், இடைக்கால மற்றும் இறுதிக் கணக்காய்வு, செயற்பாடுகளுக்குரிய பொறுப்புக்களை ஒப்படைத்தல், உள்ளகக் கட்டுப்பாட்டுப் பயன்பாடு, செய்யப்பட்ட வேலைகளைப் பதிவு செய்தல், உள்ளகக் கட்டுப்பாடு மதிப்பீட்டிற்கான வினாக் கொத்துக்களையும் படிவங்களையும் தயாரித்தல்.
3. தொழில்முறை நடத்தைகளும் நெறிமுறைகளும்:
நேர்மை, கணக்காய்வுச் செயற்பாடுகள் தொடர்பான தகவல்களைத் திரட்டுதல், மதிப்பீடு செய்தல் மற்றும் தொடர்பாடல் விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கல், தகவல்களின் இரகசியத்தன்மை, தொழில்முறைக் கடப்பாடுகள், அறிவு, திறமைகள் மற்றும் அனுபவங்களைப் பயன்படுத்துவதற்கான திறன்கள்.
4. சட்ட உரிமைகளும் பொறுப்புகளும்:
கணக்காளர் மற்றும் கணக்காய்வாளரினது சட்டரீதியான பொறுப்புகளும் அதனோடு இணைந்த சட்ட ஏற்பாடுகளும்.
5. இடர் மதிப்பீடும் முகாமைத்துவத்திற்குமான நுட்பங்கள்:
பல்வேறு வகையான இடர்கள், இடர் முகாமைத்துவச் செயல்முறை, இடர்களை முகாமைத்துவம் செய்வதற்கான நுட்பங்கள் மற்றும் சாதனங்களை அடையாளம் காணல்.
6. கணக்காய்வு நியமங்கள்:
சர்வதேச கணக்காய்வு நியமங்கள் (ISAs) மற்றும் இலங்கை கணக்காய்வு நியமங்கள் (SLAuSs).
7. உள்ளகக் கணக்காய்வுக் கடமைகள்:
உள்ளகக் கணக்காய்வுப் பிரிவின் கடமைகளை இனங்காணல், உள்ளகக் கணக்காய்வினது நோக்கங்கள் மற்றும் கணக்காய்வுக் குழுக்கள்.
8. சான்றுகளைச் சேகரித்தல்:
சான்றுகளைச் சேகரிக்கும் வெவ்வேறு முறைகளை அடையாளம் காணல், மற்றும் ஆதாரங்களின் செல்லுபடித்தன்மையை உறுதி செய்தல்.
9. அறிக்கையிடல் தொழிற்பாடுகள்:
அறிக்கைகளின் வகை, அறிக்கையிடும் நியமங்கள், கட்டமைப்பு, அறிக்கையிடும் செயல்முறை, கணக்காய்வு அபிப்பிராயங்கள் மற்றும் பின்தொடர்தல் செயல்முறை.
பகுதி II - பொருளாதாரப் பகுப்பாய்வு:
இந்தப் பகுதி, பின்வரும் விடயங்களை அடிப்படையாகக் கொண்ட 03 வினாக்களைக் கொண்டிருக்கும். அவற்றில் 02 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். ஒவ்வொரு வினாவுக்கும் சமமான புள்ளிகள் வழங்கப்படும்.
1. பேரண்ட பொருளாதார மாறிகளைப் புரிந்து கொள்ளல்:
பேரண்ட பொருளாதார மாறிகளையும் முன்னணி வகிக்கும் குறியீடுகளையும் அடையாளம் காணல், பேரண்ட பொருளாதார மாறிகளை மதிப்பீடு செய்வதன் நோக்கம், பேரண்ட பொருளாதார மாறிகளிடையே உள்ள தொடர்புகளும் தற்போதைய இலங்கை நிலவரத்தினை அடையாளம் காணலும்.
2. தேசிய வருமான நிர்ணயமும் தேசிய வருமானக் கணக்கீடும்:
தேசிய வருமானத்தை அளவிடும் முறைகள், தேசிய வருமானத்தின் துறைகள் ரீதியான பங்களிப்பு, மூலதன நுகர்வும் மூலதன நுகர்வு மாற்றங்களும், அரச மற்றும் தனியார் நுகர்வுகள், தேசிய உற்பத்திகள் மற்றும் நலனோம்பு மற்றும் இவை தொடர்பிலான தற்போதைய இலங்கையின் நிலவரம்.
3. சர்வதேச வர்த்தகமும் பொருளாதார அபிவிருத்தியும்:
சர்வதேச வர்த்தகக் கோட்பாடுகள், சர்வதேச வர்த்தகம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி, சென்மதி நிலுவை, நாணயமாற்று வீத நடத்தைகள் மற்றும் தற்போதைய இலங்கை நிலவரம்.
4. வெளிநாட்டு நிதி, வெளிநாட்டு நேரடி முதலீடுகள், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் கடன், நிலையான கடன் முகாமைத்துவம் மற்றும் இலங்கையின் தற்போதைய நிலவரம்
5. மூலதனம் மற்றும் நிதிச் சந்தை, நிதி இடைத்தரகர்கள் மற்றும் நிதிக் கருவிகள்
6. நாணயக்கொள்கை
7. அரசிறைக் கொள்கை
இந்தப் பரீட்சை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலம் நடைபெறும்.
பரீட்சார்த்திகள் தாம் விரும்பும் ஒரு மொழியில் பரீட்சைக்குத் தோற்ற முடியும்.
பரீட்சார்த்திகள் இந்தப் பரீட்சையின் அனைத்து வினாப் பத்திரங்களுக்கும் தோற்ற வேண்டும். அதற்காக, ஒரு ஊடக மொழியை மாத்திரம் தெரிவு செய்தல் வேண்டும்.
பரீட்சார்த்தியொருவருக்கு தனது விண்ணப்பத்திலுள்ள பரீட்சைக்கான ஊடக மொழியை மாற்றுவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது.
விபரம் | திகதி | பார்வையிட பதிவிறக்க |
---|---|---|
இலங்கை கணக்காளர் சேவைப் பிரமாணக் குறிப்பு இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை இலக்கம். 1670/33 | 2010.09.10 | View/Download |
01. ஆம் இலக்க திருத்தம் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை இலக்கம். 1695/15 | 2011.03.11 | View/Download |
02. ஆம் இலக்க திருத்தம் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை இலக்கம். 1865/36 | 2014.06.06 | View/Download |
03. ஆம் இலக்க திருத்தம் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை இலக்கம். 1981/99 | 2016.08.27 | View/Download |
04. ஆம் இலக்க திருத்தம் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை இலக்கம். 2070/07 | 2018.05.09 | View/Download |
05. ஆம் இலக்க திருத்தம் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை இலக்கம். 2137/66 |
2019.09.22 | View/Download |
06. ஆம் இலக்க திருத்தம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை இலக்கம். 2225/05 |
2021.04.27 | View/Download |
07. ஆம் இலக்க திருத்தம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை இலக்கம். 2236/05 |
2021.07.12 | View/Download |
08. ஆம் இலக்க திருத்தம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை இலக்கம். 2323/29 |
2023.03.16 | View/Download |
0 Comments