போட்டி முடிவுத்திகதி 2021.09.20 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியல் இடம்பெறும் சித்திரப் போட்டியில் கலந்துகொள்வதற்காக We are Water Wise (WaWW) எனும் கருப்பொருளில் sri lanka life saving நிறுவனம் நாட்டில் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றது.
பெறுமதி மிக்க பரிசில்கள் வழங்கப்படவிருப்பதுடன் பங்குபற்றுகின்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
போட்டி தொடர்பிலான அனைத்து விடயங்களும் சுவரொட்டியில் குறிக்கப்பட்டுள்ளது. (மூன்று மொழிகளிலும்)
போட்டி காலப்பகுதி - 25யூலை 2021 - 20 செப்டம்பர். 2021.
போட்டியின் விதிமுறைகளும் நிபந்தனைகளும்:
• அனைத்து ஆக்கங்களும் போட்டி இறுதித் தினத்திற்கு முன்னர் பெயர், வயது, முகவரி, தொலைபேசி இலக்கம் மற்றும் ஆக்கம் தொடர்பிலான சிறு விளக்கத்துடன் வாட்சப் செயலிக்கு அனுப்ப வேண்டும்.
• 16 வயதிற்குட்பட்ட போட்டியாளர்களின் ஆக்கங்களை பெற்றோர்/ பாதுகாவலர் உறுதிப்படுத்தல் வேண்டும்.
• ஆக்கத்தினை மேற்கொள்ளும் போது எடுக்கப்பட்ட காணொளி மற்றும் புகைப்படம் இணைக்கப்படல் வேண்டும்.
• வரைதாள்கள் மற்றும் கன்வஸினை வரைதலுக்கு பயன்படுத்தலாம்.
• டிஜிடல் சித்திரம் - மென்பொருள் மற்றும் ஒன்லைன் செயலிகளைப் பயன்படுத்தலாம். பயன்படுத்திய செயலி விபரங்களை தெரியப்படுத்தவும். ஆக்கங்கள் PDF/Jpeg/PNG ஆகிய முறைகளில் மட்டும் அனுப்ப முடியும்
• ஆக்கங்களை தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து எங்கள் பக்கத்திற்கு குறியிடவும்.
இதுவரை சமர்ப்பிக்கப்பட்ட ஆக்கங்கள் சில sri lanka life saving நிறுவனத்தின் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டிருக்கின்றன.. அவற்றைப் பார்வையிட கீழுள்ள லிங்கில் கிளிக் செய்யவும்.
2 Comments
I like drawings
ReplyDeleteok
ReplyDelete