ad

BEd(Education Management)-2021/2022 (SLQF 5 ) Closing date 2021.09.10

-




தேசிய கல்வி நிறுவகத்தின் கல்வித் தலைமைத்துவ அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவ பீடத்தின் கல்வி நிருவாகம் மற்றும் அபிவிருத்தி துறையின் மூலம் நடாத்தப்படும் மேற்படி பாடநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

பாடநெறி நடாத்தப்படும் நிலையம் : கல்வி நிருவாகம் மற்றும் அபிவிருத்திதுறை, கல்வித் தலைமைத்துவ அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவ பீடம் தேசிய கல்வி நிறுவகம், மீப்பே சந்தி, பாதுக்க.


பாடநெறி கால எல்லை - மூன்று வருடங்கள் (வார இறுதி நாட்களிலும் மற்றும் அவசியமேற்படின் வாரநாட்களில் மாலை 6.00 மணிக்குப் பின்னர் விரிவுரைகள் இடம்பெறும்)

மொழி மூலம் - சிங்களம் தமிழ்


பாடநெறிக் கட்டணம் : ரூபா 150,000.00 (மூன்று தவணைக் கட்டணமாக செலுத்த
முடியும்) 

பதிவுக் கட்டணம் ரூபா .1,000.00+பரீட்சைக் கட்டணம்...

நடைபெறும் முறை : கலவை முறை (Blended Leaming)-online/Face to face)

2021 நவம்பரில் பாடநெறி ஆரம்பிக்கப்படவுள்ளது.

விண்ணப்பிப்பதற்கான தகைமைகள்:

(1)| இலங்கை கல்வி நிருவாக சேவை (SLEAS) இலங்கை அதிபர் சேவை
(SLPS) இலங்கை ஆசிரிய ஆலோசகர் சேவை (SLTAS) பதவி ஒன்றை
வகித்தல்

அத்துடன்
(ii) கல்விப் பொது தராதர உயர் தரப் பரீட்சையில் ஆகக் குறைந்தது 03 பாடங்களில் S தரத்தைப் பெற்றிருப்பதுடன் ஆகக் குறைந்தது ஐந்து வருடங்கள் கற்பித்தலில் அனுபவம்

அல்லது

பாடசாலை முகாமைத்துவ டிப்ளோமா (Diploma in School Management) பயின்றிருத்தல்

அனுமதி முறை:
. நேர்முகப் பரீட்சை மூலம் அல்லது நுழைவுப் பரீட்சையுடன் நேர்முகப்பரீட்சையின் மூலம் தெரிவு இடம்பெறும். (நுழைவுப் பரீட்சை 01 மணித்தியால கல்வி பற்றிய பொது விடயங்களைக் கொண்ட எழுத்து மூலப் பரீட்சை)

. விண்ணப்பிக்கப்படும் காலப் பகுதியில் விண்ணப்பதாரி தேசிய கல்வி
நிறுவகத்தில் வேறு எந்தவொரு முழு நேர / பகுதி நேர பாடநெறிகள்
எதுவும் மேற்கொள்ளாதவராயும் வேறு எந்த நிறுவனத்திலும் முழு நேர
பாடநெறி எதையும் மேற்கொள்ளாதவராயும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முறை:
1. தேசிய கல்வி நிறுவகத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமான (www.nie.lk/olcbedapp21.aspx) உள்ள நிகழ்நிலை படிவத்தை (online Form) நிரப்புவதன் மூலம் மற்றும்
2. தேசிய கல்வி நிறுவகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் (www.nie.lk/naddpage.aspx) ஆங்கில மொழியிலுள்ள விண்ணப்பப்படிவத்தில்

நிறுவனத் தலைவரின் சிபாரிசுடன் தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகத்தின் பெயரிலான இலங்கை வங்கிக் கணக்கு 7041168க்கு எந்தவொரு இலங்கை வங்கி கிளையிலும் விண்ணப்பக் கட்டணமாக ரூபா 1,500/- வைப்புச் செய்தல் அவசியம், கட்டண ரசீதை நிரப்பும் போது விண்ணப்பதாரியின் பெயர் மற்றும் BEd. (Education Mgt-2021/2022) எனக் குறிப்பிடப்படல் வேண்டும்.


குறித்த ரசீதை விண்ணப்ப படிவத்துடன் இணைத்து பணிப்பாளர் கல்வி நிருவாகம் மற்றும் அபிவிருத்தி, கல்வித் தலைமைத்துவ அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவப் பீடம் தேசிய கல்வி நிறுவகம் மீப்பே சந்தி, பாதுக்கே எனும் முகவரிக்கு பதிவுத் தபாலில் 2021 செப்டம்பர் மாதம் 10ந் திகதிக்கு முன்னர் அனுப்பிவைத்தல் வேண்டும். விண்ணப்ப பத்திரம் அனுப்பப்படும் கடித உறையின் மேல் இடது பக்க | மூலையில் BEd(Education Mgt) 2021/2022- (சிங்களம் தமிழ்) எனக் குறிப்பிட்டு அனுப்புதல் வேண்டும் . உங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டமைக்காக விண்ணப்பப்படிவ கட்டணம் மீளச் செலுத்தப்பட மாட்டாது.

• மேலதிக விபரங்கள் வாரநாட்களில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரையிலான கால எல்லையில் பின்வரும் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் 

0117601436 

கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன,
பணிப்பாளர் நாயகம்,
தேசிய கல்வி நிறுவகம்
மஹரகம

கல்வியியல் பட்டப்படிப்புகளை இலங்கை திறந்த பல்கலைக்கழகமும் வழங்குகின்றது. அந்த பாடநெறிகள் விபரம் மற்றும் கல்வியியல் பட்டப்பட்டிப்பினைப் பயில்வதன் ஊடாக கிடைக்கின்ற நன்மைகள் குறித்த கட்டுரையினை கீழ் வரும் லிங்கில் படிக்கலாம்