ad

அரச காரியாலயங்கள் அடுத்த வாரம் முதல் இயல்பு நிலைக்கு.



அரசு காரியங்களின் பணிகள் அடுத்த வாரம் முதல் வழமைபோன்று ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக அரச சேவைகள், மாகாண சபைகள்  உள்ளூராட்சி  அமைச்சின் செயலாளர் ஜேஜே ரத்னசிறி அருணவிற்கு குறிப்பிட்டிருக்கின்றார்.

அரசு சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக சுகாதார பிரிவினருடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படுவதாக செயலாளர் குறிப்பிட்டார்  

கொவிட் தடுப்பூசி வழங்குகின்ற செயற்பாடு வேகமாக நடைபெறுவதால் அடுத்த வாரம் முதல் அரச சேவைகளை வழமையான முறையில் ஆரம்பிப்பதற்கு முடியுமாக அமையும் என்பதாகவும் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் சென்ற மே மாதம் 10ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்று நிருபத்தின் அடிப்படையிலே அரசு காரியாலயங்கள் செயல்படவேண்டும் என்பதாகவும் குறிப்பிட்டார்.

மேற்படி சுற்று நிருப்பத்திற்கு அமைய அரசு காரியாலயங்களில் பணிகளுக்காக ஆகக்குறைந்த ஊழியர்களை அடிப்பதற்காக நிறுவனத் தலைவர்கள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

மறு அறிவித்தல் வரையில் இந்த சுற்று நிறுத்தத்திற்கு அமையவே செயலாற்றப்பட வேண்டும் என்பதாகவும் குறிப்பிட்டார் 

சாமர பல்லேகெதர- அருண.