>
திட்டம் ஒன்றிற்கு அமைய கட்டம் கட்டமாக பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் தெரிவித்தார் .
அதற்கமைய ஆகஸ்ட் மாதத்தின் இறுதிப்பகுதியில் அல்லது செப்டம்பர் மாதத்தின் ஆரம்ப பகுதியில் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமைய பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்தார்
நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பொது ஜன பெரமுன தலைமைக் காரியாலயத்தில் இன்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார் .
பாடசாலைகளை ஆரம்பிக்கும் நோக்கில் நாட்டில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும். கல்வா சாரா ஊழியர்களுக்கும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார் .
தடுப்பூசி வழங்குகின்ற திட்டத்திற்கு அமைய ஆகஸ்ட் மாதம்முடிவற்கு முன்னர் இரண்டாவது தடுப்பூசி வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
1 Comments
Best news
ReplyDelete