கிராம சேவை உத்தியோகத்தர் பதவிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த நிலையில் அதற்காக விண்ணப்பிக்கின்றவர்கள் சில சந்தேகங்களை முன்வைக்கின்றனர். அவ்வாறு முன்வைக்கப்படுகின்ற வினாக்களையும் அதற்கான பதில்களையும் தருகின்றறோம்.
அரச சேவைக்காக விண்ணப்பிக்கும் போது விண்ணப்பங்கள் உரிய முறையில் பூரத்தி செய்யப்படாத போது அவை நிராகரிக்கப்படலாம். விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ளவேண்டிய விடயங்கள் குறித்து பல தகவல்கள் தரப்பட்டுள்ளன அதனைக் கீழுள்ள லிங்கில் வாசிக்கவும்.
01. கிரம சேவையாளர் பதவிக்காக ஒன்லைனில் விண்ணப்பிக்கலாம?
இந்தப் பதவிக்காக உரிய விண்ணப்பத்தை வர்த்தமானி அறிவித்தலுக்கு ஏற்ப தயாரித்து அதனை உரிய முறையில் பூர்த்தி செய்து கையொப்பமிட்டு, கையொப்பம் உங்கலால் இடப்பட்டது என்பது உறுதிப்படுதிய கையொப்பமும் இட்டு 28.06.2021 ஆம் திகதிக்கு முன்னர் உரிய முகவரிக்கு தபாலில் அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனவும். பரீட்சைக் கட்டணம் தபால் காரியாலயத்தில் செலுத்திய பற்றுச் சீட்டும் அதனுடன் இணைக்கப்பட வேண்டும் என்பதாகவும குறிப்பிடப்பட்டுள்ளது எனவே விண்ணப்பங்கள் தபால் மூலம் மாத்திரமே அனுப்ப வேண்டும்.
கிராம சேவை உத்தியோகத்தர் பதவிக்கான விண்ணப்பம் மற்றும் வர்த்தமானி அறிவித்தலை கீழுள்ள லிங்கில் பதிவிறக்கலாம் .
02. கணிதத்தில் S சித்திதான் இருக்கின்றது என்னால் இதற்கு விண்ணப்பிக்க முடியுமா?
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான தகைமைகள் தௌிவாக வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கணிதப் பாடத்தில் திறமைச்சித்தி மற்றும் மொழிப் பாடத்திற்கு திறமைச் சித்தி இருப்பவர்கள் மாத்திரமே விண்ணப்பிக்கலாம்.
03. எனக்கு தாய் மொழி தமிழில் சாதாரண தரச் சித்திதான் இருக்கின்றது அத்துடன் இரண்டாம் மொழி சிங்களத்தில் திறமைச் சித்தி இருக்கின்றது. சிங்களம் அல்லது தமிழ் பாடத்தில் திறமைச்சித்தி கேட்டிருப்பதால் இரண்டாம் மொழியில் சித்தி இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாமா?/
இங்கு மொழி என்பது முதலாம் மொழியைக் குறிக்கின்றது. சிங்கள மொழி மூலம் பரீட்சை எழுதியவர்களுக்கு முதலாவது மொழி சிங்களமாகும், தமிழ் மொழி மூலம் பரீட்சை எழுதியவர்களுக்கு தமிழ் மொழியே முதன்மை மொழியாகும். இங்கு முதலாவது மொழித் தகைமையே கேட்கப்பட்டுள்ளதே தவிர இரண்டாம் மொழித் தகைமையல்ல.. எனவே முதலாம் மொழியில் திறமைச் சித்தி இருப்பவர்கள் மாத்திரமே விண்ணப்பிக்கலாம்.
04. ஒரே தடவையில் தகைமைகள் பெற்றிருக்க வேண்டும் என்பதன் விளக்கம் என்ன?
கணிதம் மற்றும் மொழி உட்பட 4 படங்களில் திறமைச் சித்தியுடன் 6 பாடங்கள் சித்தியடைந்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்படுகின்றது. அந்த அடிப்படையில் முதலாது இரண்டாவது மூன்றாவது அமர்வு என்பதில் பிரச்சினை இல்லை இந்த தகைமைகள் முழுவதும் ஒரு பெறுபேற்று அட்டையில் இருக்க வேண்டும்.
05. எனக்கு NVQ மட்டம் 4 தகைமை இருக்கின்றது இது உயர் தரம சித்திக்கு சமமாகுமா?
NVQ மட்டம் 4 என்பது உயர் தரத்திற்கு சமமானது என்பதாக அரச நிர்வாக சுற்றிறிக்கை குறிப்பிடுகின்றது. பொதுவாக விண்ணப்பங்கள் கோரப்படும் போது உயர் தரத்தில் சித்தி பெற்றிருத்தல் அல்லது அதற்குச் சமமான தகையைினைப் பெற்றிருத்தல் என்பதாக குறிப்பிடப்படுமாயின் NVQ மட்டம் 4 தகைமை இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆனால் கிராம உத்தியோகத்தர் சேவைக்கான விண்ணப்பம் கோரும் அறிவித்தலில் உயர் தரத்தில் சித்தியடைந்திருக்க வேண்டும் என்பதாக மாத்ரதிரமே குறிப்பிடப்பட்டிருக்கின்றது. எனவே ஏனைய தகைமைகள் ஏற்றுக்கொள்ளப்படுவது குறித்து இங்கு குறிப்பிடப்படவில்லை.
06. நான் பட்டம் பெற்றிருக்கின்றேன் எனினும் இந்த தொழில் உயர் தரம் தகைமைக்கானது இதற்கு நான் விண்ணப்பிப்பதில் ஏதும் பலன் உண்டா?
அரச சேவையில் இல்லாத ஒருவர் அரச சேவைக்கி உள்வாங்குவதற்கான வயதெல்லை ஒன்று உள்ளது உயர் தரத் தகைமை உள்ள பதவிகளுக்காக ஆகக் கூடிய வயதெல்லை 30 ஆகும் பட்டம் தகைமையாக ஏற்கப்படும் பதவிகளுக்கான ஆகக் கூடிய வயதெல்லை 35 ஆகும். ஆனால் ஒருவர் அரச சேவையில் இருப்பார்களானால் உயர் பதவிகளுக்கு அவர்களால் விண்ணப்பிக்கலாம். அதற்கான ஆகக் கூடிய வயதெல்லை 45 முதல் 55 வரை காணப்படுகின்றது.
நீங்கள் 35 வயது வரையில் அரச சேவைக்கு இணைய முடியாத நிலையில் ஏதோ ஒரு அரச சேவையில் இருக்கும் போது 55 வயது வரை உயர் பதவிகளுக்காக விண்ணப்பிப்பதற்கு உங்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கினற்து.. எனவே இதனைத் தவற விடாதீர்கள்.
07. 21 வயதிலும் குறைந்தவர்கள் அல்லது 35 வயதிலும் கூடியவர்கள் விண்ணப்பிக்கலாமா?
வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள வயதெல்லைக்குரியவர்கள் மாத்திரமே விண்ணப்பிக்கலாம்.
08. ஒவ்வொரு பாடத்திலும் 40 புள்ளிகள் எடுப்பது போதுமானதா?
இது ஒரு போட்டிப் பரீட்சை இங்கு இரண்டு பாடங்களிலும் அதிக புள்ளிகளைப் பெறுபவர்கள் மாத்திரமே நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படுவார்கள். இந்தப் பரீட்சைக்காக இலட்சக் கணக்கான விண்ணப்பங்கள் கிடைக்ப்பெறும். சென்ற வருட முகமை உதவியாளர் பரீட்சையிவ் 165 புள்ளிகளுக்கு அதிகம் பெற்றவர்களே தெரிவானார்கள். எனவே இந்தப் புள்ளிகளிலும் அதிகமான புள்ளிகளைப் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும்.
09. எத்தனை பதவி வெற்றிடங்கள் காணப்படுகின்றன?
இந்த விண்ணப்பங்கள் எத்தனை பதவி வெற்றிடங்களுக்காக கோரப்டுகின்ற என்பது குறித்து வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்படவில்லை.எனினும்
சில மாதங்களுக்கு முன்னர் 2000 இலும் அதிகமான வெற்றிடங்கள் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டது. அத்துடன் பிரதேச செயலக ரீதியில் எத்தனை வெற்றிடங்கள் காணப்படுகின்றன என்பது குறித்து தெரியவில்லை.
10. இந்த பரீட்சையில் சித்தியடைநத்தால் தூரப் பிரதேசங்களுக்கு சேவைக்கு செல்ல வேண்டி ஏற்படுமா?
நீங்கள் விண்ணப்பிக்கின்ற பிரதேச செயலகத்தில் நிலவுகின்ற வெற்றிடங்களுக்கு மாத்திரமே உங்களது பிரதேசத்திலிருந்து ஆட்கள் எடுத்துக்கொள்ளப்படுவர். அந்த வகையில் உங்களது பிரதேச செயலக எல்லைக்குள் காணப்படுகின்ற ஏதாவது ஒரு கிராம சேவைப் பிரிவிலேயே நியமனம் வழங்கப்படும்.
11. எனக்கு சிங்களம் அவ்வளவாகத் தெரியாது இது பதவிக்கான கடமையைச் செய்ய தடையாக அமையுமா?
நீங்கள் உங்களது தாய் மொழியிலேயே பரீட்சை எழுதி சேவைக்கு இணைகின்றீர்கள். நீங்கள் தெரிவு செய்யப்பட்டால் 3 மாத பயிற்சி நெறி ஒன்றிற்கு நீங்கள் உட்படுத்தப்படுவீர்கள். அத்துடன் நியமனம் பெற்ற பின்னர் அனுபவமுள்ள ஒரு கிராம சேவையாளருடன் இணைந்து பயிற்சி எடுக்கும் விதத்திலேயே நியமனம் வழங்கப்படும். அந்த சந்தர்ப்பத்தில் சிங்கள மொழி உங்களுக்கு பழக்கமாகிவிடும்.
கிராம சேவையாளர் பதவி குறித்த மேலதிக தகவல்கள் கீழுள்ள லிங்கில் தரப்பட்டுள்ளது அதனை வாசித்துக்கொள்ளவம்.
எமது இணையத்தளத்தில் பதியப்படுகின்ற விடயங்களை உடனுக்குடனே பெற்றுக்கொள்வதற்காக எமது முகநூல் பக்கத்திலும் வட்சப் குழுமங்களிலும் இணைந்து கொள்ளுங்கள் அதற்காக கீழே உள்ள லிங்கில் சென்று குறித்த படங்களில் கிளிக் செய்வதன் ஊடாக இணையலாம்.
https://www.lankajobinfo.com/2021/06/our-whatsapp-group-links-lanka-job-info.html